கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாவிசை.. அத்தியாயம் 12.. கதை திரி...

Arjun

Moderator
Staff member
காதலின் மாயவிசை 12...

ஜிங்குவை பார்த்த குழலி கோபத்தோடு அவனை தாக்க முற்பட முக்தா குழலியை தடுத்தாள். முக்தா
இயலாமையோடு ஜிங்குவை பார்க்க ஜிங்கு முக்தாவின் அருகில் வந்தவன் "ஏன் முக்தா இவ்வாறு செய்தாய்..? உன்னை நம்பி தானே எங்களின் ரகசியங்களை உன்னோடு பகிர்ந்து கொண்டேன். உன்னை என் தோழியாக நினைத்தேன். உன்னை முழுமையாக நம்பிய எனக்கு எப்படி உன்னால் துரோகம் செய்ய முடிந்தது".. என்று விழிகளில் வலியோடு கேட்டான்.

முக்தா ஆழமாக மூச்சு வாங்கியவள் "என்னை மன்னித்து விடு ஜிங்கு நான் செய்தது தவறு தான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆயிரக்கணக்கான வீரர்களும் மக்களும் காயம் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்க என்னால் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியவில்லை".. என கூறி தலைகுனிந்தாள்.

ஜிங்குவிற்கு கோபம் இருந்தாலும் தன் தோழியின் நிலையும் புரிந்தது. அவளின் நிலையில் தான் இருந்தால் தன் மக்களுக்காக தானும் இதையே தான் செய்திருப்போம் என்று தோன்றியது. ஆழமாக பெருமூச்சு விட்டவன் "உன் நிலை புரிகிறது முக்தா. ஆனால் என்னால் உன்னை மன்னிக்க முடியாது. துரோகத்தின் வலி மரணத்தை விட கொடியது நீ எனக்கு செய்த துரோகத்தின் பலனை நீயும் அனுபவிப்பாய் துரோகம் எண்ணும் நஞ்சு உன் மனதையும் ஒரு நாள் கொல்லும் அப்போது நான் உணர்ந்த வலியை நீயும் உணர்வாய். எங்கள் இன மக்களின் சொல் கண்டிப்பாக பலிக்கும்.

ஒரு இனத்திற்க்கு தலைமை வகிப்பது என்பது எளிதல்ல பல தியாகங்கள் செய்தே தீர வேண்டும். துரோகங்கள் இழப்புகள் என அனைத்தையும் கடந்து போக வேண்டும். ஆனால் நீ செய்யும் செயல்களின் பலனையும் நீ தான் அனுபவிக்க வேண்டும். நீ என் உயிரை ஒரு முறை காப்பாற்றியுள்ளாய் அதற்க்கு கைமாறாக இங்கிருந்து நீ தப்பிக்க நான் உதவுகிறேன். ஆனால் உன்னாலும் உன் நண்பர்களாலும் இனி எங்கள் கிராமத்திற்கு எந்த ஒரு சிறு பாதிப்பும் உண்டாக கூடாது" என்று கண்டிப்பான குரலில் கூறினான்.

ஜிங்குவின் வார்த்தைகளே கூறியது தான் செய்த செயலால் ஜிங்குவின் மனம் எத்தகைய வலியை அனுபவித்திருக்குமென்று. நிலவு மலரை தான் திருடும் போதே இத்தகைய சூழ்நிலையை எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும் என்றும் முக்தா அறிந்தே இருந்தாள். இருந்தாலும் இந்த தருணம் அவளை அதிகமாக வதைக்க தான் செய்தது. இன்னும் எத்தனை உறவுகளை தன் மக்களுக்காக தான் இழக்க வேண்டும் என்று எண்ணி முக்தாவின் மனம் ஊமையாய் கண்ணீர் வடிக்க அவளின் முகத்திலோ சிறிதும் சலனமில்லை. முக்தாவின் நிலை புரிந்த சித்தார்த் முக்தாவின் கரத்தை தன் கரத்தோடு கோர்த்து அவளை தன்னிலையடைய செய்தான். தன்னவனின் தொடுதலில் அவன் முகம் பார்த்தவள். சித்தார்த் தன் இமை இரண்டையும் மூடி திறந்து அவளின் கரத்திற்கு அழுத்தம் கொடுக்க அந்த அழுத்தத்தில் முக்தாவிற்குள் ஒரு புது வித தைரியம் உண்டானது. அவனின் பார்வையே அவளின் இதயத்தின் காயத்திற்கு மருந்தாக மங்கையவளும் தன்னவனின் கரத்தை அழுத்த பிடித்து கொண்டு ஜிங்குவிடம் பேச ஆரம்பித்தாள்.

முக்தா " ஜிங்கு நான் உனக்கு செய்தது துரோகமே அதை நான் மறுக்கவுமில்லை காரணம் கூறி என்னை நியாயப்படுத்தி கொள்ள விரும்பவுமில்லை. குள்ள இன மக்களின் வாக்கிற்கு அளவில்லா சக்தி உண்டு என்று நான் அறிவேன். நீ சபித்ததை போன்றே கண்டிப்பாக துரோகத்தால் என் இதயம் சுக்குநூறாக போகிறது என்றும் நான் அறிவேன். நான் செய்த தவறுக்கு நீ எனக்கு உன் சாபத்தால் தண்டனை வழங்கிவிட்டாய். உன் உயிரை காப்பற்றியதன் பலனாய் எங்கள் உயிரையும் காப்பாற்றிவிட்டாய். நமது உறவு இதோடு முடிந்தது. தயவுசெய்து எனக்கு உங்கள் மந்திர திரவத்தை நீ எடுத்து கொடுத்தால் அதற்க்கு பிரதிபலனாய் உனக்கு ஆபத்து நேரும் சமயத்தில் என் உயிரை கொடுத்தாவது உனக்கு உதவுவேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறேன்".. என்று தன் வாளால் தன் கட்டைவிரலை கீறி அவள் உதிரம் தரையில் சொட்ட சொட்ட தன் தந்தையை தவிர யாரிடமும் தலைவணங்காதவள் ஜிங்குவின் முன் தலைவணங்கினாள்.

ஜிங்குவோ கடினம் நிறைந்த முகத்தோடு "உன்னை இங்கிருந்து வெளியே அழைத்து சென்று விட்டால் என் நன்றி கடன் தீர்ந்துவிடும். நீ எனக்கு செய்த துரோகத்தின் பலனையும் நீ கண்டிப்பாக அனுபவிக்க தான் போகிறாய். அதனால் நம்மிடையே உள்ள அனைத்தும் கணக்குகளும் முடித்திருக்கலாம். நான் நமது பழைய நட்பிற்கு மரியாதை கொடுக்கிறேன். அதனால் உன் ஒப்பந்தத்தை ஏற்று கொள்கிறேன். ஆனால் உனக்கு எங்களின் மந்திர திரவத்தை என்னால் எடுத்து கொடுக்க முடியாது. அதற்க்கு பதிலாக உனக்கு மந்திர திரவம் இருக்கும் இடத்தை வேண்டுமென்றால் கூறுகிறேன். உனக்கு சம்மதம் என்றால் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒன்றை மறந்துவிடாதே எங்கள் இனத்தில் யாரிடம் ரத்த ஒப்பந்தம் செய்து கொண்டாலும் கண்டிப்பாக அதை நிறைவேற்றியே தீர வேண்டும். ஒப்பந்தத்தை மீற நினைத்தால் உன் ஆன்மா என் தந்தை வைத்திருந்ததை போன்று ராட்சச வவ்வாலாக மாறி மரணமின்றி எங்கள் இனத்திற்கு எப்போதும் சேவை செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை உண்டாகும். இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு ஒப்பந்தந்தை பற்றி யோசி.." என்று கூறி முக்தாவின் முகம் பார்த்தான்.

முக்தாவிற்கு வேறு வழி இல்லாததால் "சரி ஜிங்கு ஒப்பந்தத்திற்க்கு நான் தயார். நீ மந்திர திரவமிருக்கும் இடத்தை கூறினாலே போதும்.." என்று உதிரம் சிந்தும் தன் விரலை ஜிங்குவின் முன் காட்டினாள். அவள் உதிரத்தின் ஒரு துளியை தன் இடுப்பிலிருந்த சிறு கண்ணாடி குடுவையில் சேகரித்தவன் "நம் உதிர ஒப்பந்ததின் படி எனக்கான உதவியை நீ செய்த பிறகு உன் குருதியை சமுத்திரத்தில் கலந்து விடுகிறேன்". என்று கூறி அந்த குடுவையை பத்திரமாக தன் இடுப்பில் சொருகினான்.

ஜிங்கு "இங்கிருந்து நீங்கள் மேற்கு நோக்கி சிறிது தூரம் நடந்து சென்றால் இப்போது உங்களை அடைத்து வைத்திருக்கும் இதே இடத்தை போன்று மரங்களால் சுற்றிலும் வேலி போன்று உருவாக்கப்பட்டு எங்கள் கிராமம் இருப்பதை போன்ற அளவு மிக பெரிய சமவெளி ஒன்று மரங்கள் எதுவுமின்றி வெறும் சமதளமாக இருக்கும்.

அந்த சமவெளியின் நடுவே சிறிய குளம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த குளத்தில் மாய திரவமானது வெள்ளி நிறத்தில் பிரகாசத்தோடு காட்சியளிக்கும். வேலிக்குள் அந்த குளத்தை சுற்றி பெரு இன வகையை சேர்ந்த யாளிகள் பல அந்த குளத்தின் நீரை காவல் காப்பதற்க்காக சுற்றி திரிந்து கொண்டிருக்கும். அந்த யாளிகள் அனைத்தும் எங்கள் இனத்தின் தற்போதைய தலைவருக்கு மட்டுமே அடிபணியும் அவை மிகவும் ஆபத்தானவை, அந்த யாளிகளை வென்று குளத்திலுள்ள திரவத்தை ஒரு குடுவையில் எடுத்து அதில் உங்களின் ஒரு துளி உதிரத்தோடு கலக்க வேண்டும். பின் அந்த உதிரம் கலந்த திரவத்தை எந்த மிருகத்திற்கு கொடுத்தாலும் அந்த மிருகம் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்". என்று கூறினான்.

இதை கேட்ட குழலி "பெரு வகை யாளிகள் எப்படி உங்களுக்கு கட்டுப்படும். அவை மிகவும் ஆபத்தானவை அதை கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்கே கடினமான செயல்" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

குழலியை கோப விழிகளோடு பார்த்துக் கொண்டே தன் இதழை புன்னகை புரிய செய்த ஜிங்கு "ஏன் உங்கள் இனத்து மக்கள் மட்டும்தான் திறமை மிக்கவர்களா ஏன் எங்கள் இனத்து மக்களுக்கு திறமை இருக்காதா. எங்கள் இனத்தை உங்கள் இனத்தை போன்று ஒரே பரம்பரையே வழிவழியாக அரச குடும்பம் என்ற பெயரில் மக்களை ஆள்வதில்லை. எங்கள் கிராமத்தில் சாதாரண குடிகளும் கிராமத்தின் தலைவனாக முடியும். எங்கள் கிராமத்தின் தலைவனாவதற்கு முக்கிய தகுதியே பெரு யாளிகளை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதேயாகும். பல இளைஞர்கள் பங்குப்பெரும் போட்டியில் அந்த சமவெளியிலுள்ள பெரு வகை யாளிகளில் யார் மாய நீரின் உதவியினால் அதிக யாளியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனரோ அவரையே எங்கள் இனத்தின் தலைவனாக அனைவரும் முழு மனதோடு ஏற்றுக்கொள்வர். தலைவனாக ஏற்று கொள்ளப்பட்டவரின் சொல்லையே இங்குள்ள பறவைகளும் விலங்குகளும் ஏன் மரங்களும் கூட கேட்க்கும்.."

லியாடோ இதற்க்கு மேலும் பேச்சை வளர்த்து நேரத்தை வீணாக்க விரும்பாமல் "ஜிங்கு பேசவதற்கு எங்களிடம் நேரமில்லை. அதனால் இங்கிருந்து நாங்கள் எப்படி வெளிய செல்வது என்பதை வேகமாக கூறு.." என்று கேட்க ஜிங்குவோ "நான் எப்பொழுதோ உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிட்டேன்.." என்று கூறி கொண்டிருக்கும் போதே சிவியும் பருவியும் தன் மீது படர்ந்திருந்த வேர்கள் அனைத்தையும் துண்டு துண்டாக பிய்த்து எறிந்து கொண்டு எழுந்து இவர்கள் அருகில் வந்தன.

லியாடோ சுற்றி பார்த்தவன் சிவியும் பருவியும் வேரிலிருந்து எழுந்தும் சுற்றி இருந்த மரங்கள் எதுவும் அசையாமல் இருக்க லியாடோ ஜிங்குவிடம் "எப்படி இந்த மரங்கள் இன்னும் உயிர் வந்து சிவியையும் பருவியையும் தாக்காமல் இருக்கின்றன.." என்று யோசனையோடு கேட்டான்.

ஜிங்கு "நிலவு மலர் களவாட பட்டதால் மதிகெட்டான் சோலைக்குள் பரிகார பூஜைகள் நடக்கின்றன. அதற்காக இங்கிருக்கும் நிலவு மலரை பறித்து எடுத்து சென்று மதிகெட்டான் சோலைக்குள் உள்ள நிலவு மலர் கொடியின் மீது வைத்து பூஜைகள் செய்வார்கள். அங்கிருக்கும் கொடியானது தானாக நிலவு மலரை தன் தண்டோடு இணைத்து அந்த காட்டிற்க்கே ஒளியை கொடுக்கும். அப்போது அங்கிருக்கும் மரங்களுக்கு கொஞ்சம் சக்தி கிடைக்கும். ஆனால் நிலவு மலர் இங்கிருந்து பறிக்கபட்டு விட்டதால் இங்கிருக்கும் மரங்கள் தங்கள் சக்தியை இழந்து சாதாரண மரங்களாக தான் இருக்கும். அதனால் தான் நீங்கள் இன்று இங்கிருந்து தப்பிப்பது எளிது".

சித்தார்த் "எப்படி இங்க இருந்து வெளிய போறது.." என்று கேட்டு கொண்டிருக்க சிவி தன் துதிக்கையால் இவர்களை சுற்றி இருந்த ஒரு மரத்தை வேரோடு புடுங்கி ஏறிந்தது. வெளியே செல்ல பாதை கிடைத்தவுடன் அனைவரும் அந்த கூண்டை விட்டு வேகமாக வெளியே சென்றனர். சித்தார்த் "ஆமா நா பாக்கும் போது சிவியால் அந்த வேருக்கு கீழ கொஞ்சம் கூட அசைய முடியாம படுத்து இருந்துச்சு. ஆனா இப்ப எப்படி சிவி இவ்வளவு சாதாரணமா வேரை பிச்சு போட்டு வெளிய வந்துச்சு.." என்று ஆச்சிரியமாக கேட்டான்.

ஜிங்கு "உங்களை சந்திக்க வரும் முன்பே அந்த வேர்களின் பலவீனமான பகுதிகளை வெட்டி விட்டு தான் இங்கு வந்தேன். அதனால் தான் பருவியாலும் சிவியாலும் எளிதில் வேர்களிலிருந்து விட்டு விடுபட்டு வெளியே வர முடிந்தது.."

ஜிங்கு பேசிக்கொண்டிருக்க "வசமாக மாட்டிக்கொண்டாயே தோழா.." என்று தன் பின்னால் கேட்ட சத்தத்தில் ஜிங்கு திரும்பி பார்த்தான். ஜிங்குவின் பின்னால் லியாடாவின் தோளில் வாளால் குத்திய குள்ள இன வீரன் நின்று கொண்டிருந்தான். "என் முன்பு நீ இவர்களை கைது செய்தபோது நான் கூட உன்னை நம்பிவிட்டேன். ஆனால் நீ நம் வீரர்கள் அனைவர் முன்பும் உன் செல்வாக்கை வளர்த்து கொள்ளவே இவர்களை கைது செய்துள்ளாய். உன்னை போட்டியில் வென்று நான் நம் இனத்தின் தலைவனாவது என்பது இயலாத காரியம். அதனால் தான் நான் உன்னை பல முறை கொல்ல முயன்றேன். ஆனால் இப்போது நீ செய்த துரோகம் உன் தந்தைக்கு தெரிந்தால் அவரே உன்னை நம் மக்களின் முன்னிலையில் கொன்றுவிடுவார். அதன் பின் நானே நம் இனத்தின் அடுத்த தலைவன்.." என்று கூறி விட்டு வவ்வாலின் மீது ஏறி பறந்து செல்ல முயன்றான்.

அந்த குள்ள இன வீரன் வவ்வாலில் பறக்க ஆரம்பித்த அடுத்த நொடி குழலி சத்தமாக "பருவி அவனை பிடி.." என்று கத்த பருவி அவனை துரத்த ஆரம்பித்தது. பருவி துரத்த ஆரம்பித்த நொடி குள்ள இன வீரன் தன் வவ்வாலை வேகமாக செலுத்த ஆரம்பித்தான். அந்த குள்ள இன வீரன் கிராமத்தின் மேல் பறக்க ஆரம்பிக்க பருவியும் முடிந்த அளவு வேகமாக அவனை துரத்த ஆரம்பித்தது. பருவியின் வேகம் கண்டவன் மேலே பறந்தால் தப்பிக்க முடியாது என்று எண்ணி வவ்வாலை தரையை ஒட்டி கிராமத்தின் சிறிய தெருக்களில் வளைந்து நெளிந்து செலுத்த பருவியோ கீழே இறங்க முடியாமல் தவித்தது.

ஒரு கட்டத்தில் அவன் எங்கு சென்றான் என்று அறியாமல் பருவி சுற்றிலும் தேட திடீரென நிலவு மலர் கொடி படர்ந்துள்ள பாறையின் அருகிலுள்ள தெருவிலிருந்து வவ்வாலுடன் வெளிப்பட்டு பாறையின் அடியிலுள்ள துளை வழியாக பாறைக்குள் செல்ல பார்த்தான். அதை கண்ட பருவி விரைந்து சென்று வவ்வாளோடு சேர்த்து அவனையும் ஒரு நொடியில் முழுங்கியது. ஆனால் வேகமாக சென்றதால் தன் வேகத்தை கட்டுபடுத்த முடியாத பருவி நேராக சென்று பாறையை சுற்றி இருந்த மரத்தின் மீது மோத மரத்திலிருந்த வவ்வால்கள் அனைத்தும் பறக்க ஆரம்பித்தன.

அந்த குள்ள இன வீரன் மடிந்ததும் அனைவரும் சற்று நிம்மதியடைய ஜிங்கு"முக்தா அனைவரும் விரைந்து செல்லுங்கள் பறந்து கொண்டிருக்கும் வவ்வால்கள் அனைத்தும் பாறையில் உள்ள துளை வழியாக அந்த உலகத்திற்கு சென்று விடும். அந்த வவ்வால்கள் சென்ற உடனே அங்குள்ள எங்கள் வீரர்கள் இங்கு வர ஆரம்பித்து விடுவார்கள். நான் இங்கு காவலுக்கு இருந்த கொஞ்ச வீரர்களையும் மயங்க வைத்துவிட்டு தான் உங்களை காப்பாற்ற வந்தேன். எங்கள் மக்கள் வரும் முன்பு நானும் என் வீரர்களோடு சேர்ந்து மயங்கி கிடப்பதை போன்று நடித்து கொள்கிறேன்.

என் தந்தை இங்கு வந்து கேட்டாள் இப்போது பருவி கொன்ற அந்த வீரன் தான் உங்களை தப்ப வைத்தான் என்று கூறிவிடுகிறேன். நீங்கள் அவனை இந்த கிராமத்தின் தலைவனாக்குகிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறியதால் அவன் மயக்க மருந்த்தை பயன்படுத்தி எங்களை மயங்க செய்து விட்டு உங்களோடு தப்பித்து சென்று விட்டான் என்று கூறிவிடுகிறேன். அவனது சடலம் கூட மிஞ்சாததால் நான் சொல்வதை தான் மக்கள் அனைவரும் நம்புவார்கள். நீங்களும் வேகமாக எங்கள் இடத்தை விட்டு சென்று விடுங்கள் சூரியன் உதிக்கும் வரை மட்டுமே உங்களுக்கு அவகாசமுள்ளது. சூரியன் உதிக்கும் நேரம் அந்த உலகிலுள்ள நிலவு மலரை இங்கு எடுத்து வந்து இங்குள்ள கொடியில் பொருத்தி விடுவார்கள் அதன் பின் இங்குள்ள மரங்களுக்கு உயிர் வந்துவிடும் மரங்களுக்கு உயிர் வரும் வரை எங்கள் வீரர்கள் மட்டும் தான் உங்களை தாக்குவார்கள் அதற்குள் விரைந்து அந்த திரவத்தை எடுத்து கொண்டு தப்பித்து சென்று விடுங்கள்.."என்று கூறிவிட்டு அருகிலிருந்த தன் வவ்வாலின் மீது ஏறி கொண்டு தன் வீரர்கள் மயங்கி கிடந்த இடத்துக்கு ஜிங்கு பறந்து சென்றான்.

ஜிங்கு எதிர் பார்த்ததை போன்றே வவ்வால்கள் அனைத்தும் பாறையிலுள்ள துளை வழியாக செல்ல ஜிங்கு தன் வீரர்களோடு சென்று மயங்கியதை போன்று நடிக்க ஆரம்பித்தான். முக்தா குழலியிடம் திரும்பி "குழலி நீங்கள் மூன்று பேரும் பருவி இன பறவைகள் இருக்கும் இடத்தை நோக்கி செல்லுங்கள் சரியாக இந்த காட்டை தாண்டி மூன்று மையில் தொலைவில் எனக்காக காத்திருங்கள். நான் பருவியில் சென்று மந்திர திரவத்தை எடுத்து கொண்டு வருகிறேன்" என கூறி விட்டு முக்தா பருவியின் மீது ஏற சென்றாள்.

முக்தா பருவியில் ஏற செல்ல அவளை தடுத்த குழலி வேண்டாம் இளவரசி இது மிகவும் ஆபத்தான வேலை. இந்த வேலையை நான் செய்கிறேன்.."

முக்தா எவ்வளவோ கூறியும் குழலி தன் பிடியில் விடாமல் இருக்க முக்தா கோபத்தோடு "குழலி நீ இவர்களை கூட்டி சென்று பாதுகாப்பான இடத்திலிரு இது உன் இளவரசியின் கட்டளை.." என்று கூற வேறு வழி தெரியாத குழலி அவள் முன் தலை குனிந்து சரி இளவரசி என்று கூறிவிட்டு சிவியின் மீது ஏறினாள்.

லியாடோவும் சிவியின் மீது ஏற சித்தார்த்தின் விழிகள் மட்டும் முக்தாவை கலவையுடன் பார்த்தன. முக்தா சித்தார்த் மட்டும் தயங்குவதை பார்த்தவள்."சித்தார்த் நீங்களும் வேகமாக சென்று சிவியின் மீது ஏறி கொள்ளுங்கள்"..

முக்தா கூறியதை கேட்ட சித்தார்த்தின் கால்கள் அசையாமல் அதே இடத்தில் நின்றன. முக்தா சித்தார்த்தை கேள்வியாக பார்க்க சித்தார்த் முக்தாவிடம் உடைந்த குரலில் "முக்தா தயவுசெஞ்சு நானும் உன்கூட வாரே. உனக்கு ஏதாவதுனா சத்தியமா என்னால தாங்க முடியாது.." என்று கேட்க அவன் அன்பில் உருகியவள் தன்னவனின் கரம் பற்றி "சித்தார்த் பருவி சிறிய பறவை அதனால் ஒருவரின் பாரத்தை மட்டுமே தாங்க முடியும். நீங்கள் கவலை பட வேண்டாம் கண்டிப்பாக உங்களுக்காக நான் பாதுக்காப்பாக திரும்பி வருவேன்.." என்று கூறியவள் அவன் பதிலை எதிர் பாக்காமல் பருவியில் ஏறி மேற்கு திசை நோக்கி பறக்க ஆரம்பித்தாள்.

முக்தா சென்றவுடன் அனைவரும் சிவியின் மீது ஏறிக்கொள்ள வடக்கு திசை நோக்கி பயணித்தவர்கள் அடுத்த ஒரு நாழிகையில் காட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான ஒரு பழைய குகையை வந்தடைந்தனர்.

பாறைக்குள் சென்ற வவ்வால்கள் மதிகெட்டான் சேலையிலுள்ள பாறையின் வழியே வெளியேற அங்கு பரிகார பூஜை செய்து கொண்டிருந்த அனைவரும் தங்கள் கிராமத்தில் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தனர். குள்ள இன தலைவன் தன்னோடு இருந்த வீரர்களில் பாதி பேரை தங்கள் கிராமத்திற்குள் என்ன பிரச்சனை நிகழ்ந்தாலும் வேகமாக சரி செய்யுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு மக்களோடு சேர்ந்து பரிகார பூஜையை தொடர்ந்தார்.

குழலி என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருக்க சித்தார்த்திற்க்கோ முக்தா இல்லாத ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. சிவியின் மீது ஏறிய லியாடோ "குழலி சித்தார்த்தோடு நீ இங்கு பாதுகாப்பாக இரு நான் முக்தாவோடு திரும்பி வருகிறேன்.." என்று கூற குழலி "இல்லை வேண்டாம் இளவரசியின் கட்டளைக்கு நாம் அடிபணிந்தே ஆக வேண்டும்.."

குழலி கூறியதை கேட்டு சிரித்த லியாடோ "முக்தா உனக்கு மட்டுமே இளவரசி எனக்கு இல்லை.." என்று கூறி சிவியை செலுத்த போக சிவியின் முன்னால் வந்து நின்ற சித்தார்த் "லியாடோ உன்னோட நானும் வாரே.." என்று கூறினான்.

லியாடோ இந்த வாய்ப்பை பயன்படுத்தி சித்தார்த் முக்தாவின் மீது கொண்ட காதலை வெளியே கூற வைத்தால் குழலி இதற்க்கு மேலும் தன் மனதில் வீணாக எந்த ஆசையும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பாள் என்று தோன்றியது. எனவே சித்தார்த்திடம் "சித்தார்த் நீ நினைப்பதை போன்று இது ஒன்றும் நீ விரும்பும் சாகச விளையாட்டு அல்ல. நீ ஏதாவது தவறு செய்தால் உன் உயிரோடு சேர்த்து முக்தாவின் உயிரும் போய் விடும். எனக்கு தெரிந்து இப்போது வரை முக்தா உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். கண்டிப்பாக அவள் மடிந்திருக்க வாய்ப்புள்ளது"..

சித்தார்த் கோபத்துடன் "லியாடோ என்னோட முக்தாக்கு எதுவும் ஆகாது. என்னோட முக்தாக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா கண்டிப்பா நானும் உயிரோட இருக்க மாட்டேன்.." என்று கூற அவனின் கண்ணில் தேங்கி இருந்த கண்ணீரே அவன் முக்தா மீது கொண்ட காதலின் ஆழத்தை கூறியது.

சித்தார்த் கூறியதை கேட்ட குழலி தன் இதயத்தை யாரோ வெட்டி எடுப்பதை போன்றதொரு வழியை உணர்ந்தாள். அவளது விழிகள் முதல் முறை ஒரு ஆணுக்காக கலங்கின. சித்தார்த்தின் பதிலில் குழலி அசைவற்று நிற்க்க. லியாடோ இப்போது குழலிக்கு தனிமையே தேவை என்பதை உணர்ந்து சித்தார்த் ஏறியவுடன் லியாடோ சிவியை மாய நீர் இருக்கும் திசை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்.

போன பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
 
Nagubalu

Active member

Superrrrrrrrr sago
 
Top