"சரி! அவருக்கு தெரியாம இவ போய் பாத்துட்டு வரதுல என்ன பிரச்சனை?" தினு கேட்டான்.
"நம்பர் ஒன், அவளுக்கு பிடிக்கலன்னாலும் அவங்கப்பா சொல்றதுக்கு மாறா இவ எதுவும் செய்ய மாட்டா! நம்பர் டூ, அவளுக்கு அந்த ஹாஸ்பிடலுக்கு வழி தெரியாது." என்றான் முகி.
அவர்களிருவருக்கும் கொறிப்பதற்கு அப்போது செய்த சூடான முந்திரி பக்கோடாவை எடுத்து வந்து கொடுத்தாள் ரேவதி.
"என்ன? சென்னையில இருந்துகிட்டு அந்த பிரபலமான ஹாஸ்பிடலுக்கு வழி தெரியாதா? வாட் நான்சென்ஸ்!" என்றான் தினு.
"அவ சென்னையில பிறந்திருந்தாலும் ஊட்டி ஹாஸ்டல்லயே வளர்ந்தவடா! யூஜி பிஜி ரெண்டும் கூட கோயமுத்தூர்லதான் முடிச்சிருக்கா! இப்பதான் சென்னை வந்திருக்கா. படிக்கறப்ப சம்மர் வெகேஷனுக்கு சென்னை வந்தாலும் ரொம்ப ஊர் சுத்தினதில்லயாம்!" என்று அவளைப் பற்றி விவரங்கள் கூறினாள் ரேவதி.
"ஓ!" என்ற தினு எதோ யோசனை செய்தபடி எழுந்து போனான்.
ஷிவன்யா தன்னுடைய அறையில் வருத்தமாக அமர்ந்திருந்தாள்.
"எங்கியாவது போகணும்னா சும்மா பர்மிஷன்லாம் கேட்டுகிட்டு உக்கார்ந்திருக்க கூடாது. சட்டுன்னு கிளம்பிடணும்!" என்றான்.
"ஆனா எனக்குதான் வழி தெரியாதே!?" என்றாள் மெல்லிய குரலில்.
"நீ என்ன படிக்காத பட்டிகாடா? படிக்காத பொண்ணு கூட தைரியமா இது என்ன பஸ்ஸு.. இது எந்த ஊருக்கு போகுதுன்னு கேட்டு கேட்டு போய்ட்டு வந்துடுவா.. நீ என்னடான்னா.. இப்டி மக்கு மாதிரி உக்கார்ந்திருக்க?" என்று ஏளனமாகக் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் ஷிவன்யாவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது.
"நா ஒண்ணும் மக்கு இல்ல!" என்று ரோஷத்துடன் கூறினாள்.
"நீ மக்கில்லன்னா தைரியமா போய் உங்கப்பாவ பாத்துட்டு வாயேன் பாக்கலாம்!" என்றான்.
"அது.." என்று அவள் தயங்கினாள். தன் தந்தையின் பேச்சை மீறினால் அவர் தன்னைத் தானே தண்டித்துக் கொள்வாரே என்று நினைத்தே தயங்கினாள்.
அவள் அதற்குத்தான் தயங்குகிறாள் என்று புரிந்தும் தினு அவளை வேண்டுமன்றே ஏற்றி விட்டான்.
"என்னை என்னமோ பெரிசா சாதிச்சி காட்டுன்னு நக்கலடிச்ச! இப்ப நீ தயங்கி நிக்கற.. தலைவலியும் சங்கடமும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்.." என்று ஏளனமாகக் கூறினான்.
"ஹூம்.. நா ஒண்ணும் உன்ன மாதிரியில்ல.." என்று கூறி விட்டு தன் கைபேசியை எடுத்துக் கொண்டாள். நேராக முகேஷிடம் சென்றாள்.
அவள் தன் அண்ணனிடம் செல்வதைப் பார்த்த தினு, அவனைப் பார்த்து பேசாமல் இருக்குமாறு சைகை செய்துவிட்டு, அவளைப் பார்த்து,
"என்ன? துட்டு எதுவும் வேணுமா?" என்று மேலும் நக்கலடித்தான்.
அவனைப் பார்த்து முறைத்தவள் முகேஷைப் பார்த்து,
"அந்த ஹாஸ்பிடல்க்கு எப்டி போகணும்? வழி சொல்லு?!" என்று கேட்டாள்.
"ஐய.. உங்கப்பா எந்த ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? நல்லா இருக்கு! ரொம்ப நல்லா இருக்கு! நீல்லாம் படிச்சவன்னு சொல்லிட்டு திரியற.." என்று மேலும் மேலும் அவளை வம்புக்கு இழுத்தான் தினு.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி ஷிவன்யாவின் உதவிக்கு வர, அவளையும் தன் சைகையால் தடுத்தான் தினு.
முகேஷும் ரேவதியும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர்.
"ஏய்! இங்க பார்! நா உன் கிட்ட கேக்கல! சும்மா சும்மா ஏன் என்னையே வம்பு பண்ற?" என்று தினுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள் ஷிவன்யா.
"சரி.. சரி.. வுட்டா அழுதுடுவா போலிருக்கு.. போனா போகட்டும்.. அந்த ஹாஸ்பிடலுக்கு வழி சொல்லுடா.." என்றான் தினு.
"ஹூம்.." என்று அவனை மீண்டும் முறைத்தாள் ஷிவன்யா.
"என்னைய முறைச்சது போதும். அவன் வழி சொல்றான். கவனமா கேட்டுக்க.. இல்லன்னா வழி தெரியாம எங்கியாவது தொலைஞ்சிடப் போற!" என்று சொல்லி சிரித்தான் தினு.
"நானே கூட்டிட்டு போறேன்!" என்று கூறினான் முகி.
"வேணாம். வழி மட்டும் சொல்லு!" என்றாள்.
ஷிவன்யாவுக்குக் கோபமாக வந்தாலும் முகேஷிடம் தன் தந்தை அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியை கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
அவன் கூறியபடியே பேருந்தில் பயணம் செய்து குறிப்பிட்ட மருத்துவமனையை அடைந்தாள் ஷிவன்யா.
அங்கு சென்று தன் தந்தை இருக்கும் அறைக்குள் ஆவலாகச் சென்றவளை ராகவன் அதிர்ச்சியுடன் பார்க்க, அவளுடைய அப்பா கோபமாகப் பார்த்து, பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்.
"உன்ன நா இங்க வர சொல்லவேயில்லயே! எதுக்கு வந்த? அப்ப என் வார்த்தைக்கு என்ன மரியாதை?" என்று அவர் கத்தத் தொடங்க, ஷிவன்யாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
"அங்கிள்! அங்கிள்! பாவம் அவளத் திட்டாதீங்க! அவ என் உதவிக்குதான் வந்தா!" என்று கூறிக் கொண்டே கையில் பெரிய கட்டுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் தினு.
"நீ யாருப்பா? கையில என்ன கட்டு?" என்று கேட்டார் தேவராஜ்.
என்ன பெரியப்பா.. நீங்களாவது அங்கிளுக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சிருக்கணும்.. என்னமோ போங்க..
சரி.. இப்ப உடம்பு எப்டி இருக்கு அங்கிள். டாக்டர் என்ன சொன்னார். எப்ப வீட்டுக்கு போலாம்னு சொன்னார்.
இங்க இருக்கற பெரிய டாக்டரோட சன் என்னோட க்ளாஸ் மேட் தான். நா போய் அவர் கிட்ட உரிமையோட பேசுவேன்.. இங்க ஏதாவது வசதி குறைவுன்னா சொல்லுங்க அங்கிள்.. நா அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா எல்லா பிரச்சனையும் டக்கு டக்குன்னு சரி செய்துடுவார்.." என்று பேசிக் கொண்டே போனான் தினு.
ஷிவன்யா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள். ராகவன் அவனை விநோதமாகப் பார்த்தார். தேவராஜ் அவனை அதிசயமாகப் பார்த்தார்.
அவரால் பதில் பேச முடியாதபடி, பதில் பேச இடமே கொடுக்காதபடி தினு பேசியது தேவராஜுக்கு அதிசயமாகவும் கொஞ்சம் சிரிப்பாகவும் கூட இருந்தது.
"சரி.. சரி.. கொஞ்சம் மூச்சு விட்டுக்கப்பா.. அவள நா ஒண்ணும் கேக்கல போதுமா.. ஷிவா! இப்டி வா! அவங்க வீடு உனக்கு சௌகரியமா இருக்கா? அங்க இந்த பையனோட அம்மாவுக்கு உதவி செய்யறியா? இவங்கண்ணன் கிட்ட கம்பெனி பத்தி படிச்சிக்க சொன்னேனே.. படிச்சிகிட்டியா?" என்று இப்போது தேவராஜ் மகளிடம் கேள்விகளை அடுக்கினார்.
ஷிவன்யாவுக்கு தலை மீண்டும் சுற்றத் தொடங்கியது.
இதைப் பார்த்த தினுவுக்கு சிரிப்பாக வந்தது.
முகி சொன்ன மாதிரி இந்தாளு சரியான லூசுதான்.. என்று நினைத்துக் கொண்டான்.
"ஐயோ அங்கிள்! நீங்க இப்டி கேள்வி கேட்டா எனக்கே உதறுது.. பாவம் அவ.. அவ என்ன எங்க வீட்டுக்கு பிக்னிக்குக்கா வந்திருக்கா.. பாவம்.. உங்கள நெனச்சு நெனச்சி கவலப்பட்டுகிட்டு உக்கார்ந்திருக்கறவளப் போய்.. நீங்க வேற அவள பாக்க வரக் கூடாதுன்னு சொல்றீங்க.. அப்றம் எப்டி அவளால நிம்மதியா கம்பெனி பத்திலாம் படிக்க முடியும்.." என்று கேள்வி கேட்டான்.
"சரிமா.. எனக்கு ஒண்ணும் இல்ல.. நா இங்க இருக்கற வரைக்கும் நீ என்ன ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பாத்துட்டு போ.. ஆனா கம்பெனி பத்தி படிச்சிக்க மறந்துடாத.. சரியா.." என்றார் தேவா.
ராகவனுக்கும் ஷிவன்யாவுக்கும் வியப்போ வியப்பு.
"ரொம்ப தேங்க்ஸ்ப்பா. நா கண்டிப்பா படிச்சிக்கறேன் ப்பா.." என்று சொல்லி அவரிடம் செல்லம் கொஞ்சத் தொடங்கினாள்.
அவள் தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் ராகவனும் தினுவும் அறைக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.
அவள் தன் தந்தையிடமும் ராகவனிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
"பை அங்கிள். டேக் கேர்! பை பெரிப்பா!" என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தினுவும் கிளம்பினான்.
இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் அவனைப் பார்த்து,
"ரொம்ப தேங்க்ஸ்!" என்றாள் ஷிவன்யா.
"ம்.. ம்.." என்று பிகு செய்து கொண்டே தன் கையிலிருந்த கட்டை அவிழ்த்தான்.
"எப்டி கரெக்ட்டா வந்த?" கேட்டாள்.
"உங்கப்பா பெரிய அப்பா டக்கருன்னு எங்கண்ணன் சொன்னான்.. அதான்.. அவரு எப்டியிருப்பாருன்னு பாக்க வந்தேன்.. அவன் சொன்ன மாதிரி அவ்ளோல்லாம் வொர்த் இல்ல.." என்றான் சின்னச் சிரிப்புடன்.
"யூ.. யூ.." என்று அவனை எரிப்பது போலப் பார்த்துவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரம் நடந்தவளின் அருகில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை மோதுவது போல கொண்டு வந்து நிறுத்தினான் தினு. நிறுத்தியதோடல்லாமல்,
"ம். ஏறு!" என்று கட்டளை வேறு இட்டான்.
"தனியா வந்த எனக்கு தனியாவே வீட்டுக்கு போக வழி தெரியும். நீ போ!" என்று கோபமாகச் சொன்னாள்.
"நா சொன்னேன்.. எங்கம்மாதான் நம்பல.." என்றபடியே அவள் முகத்தை குறுகுறுவென்று குறும்புடன் பார்த்தான்.
"ஹூம்.." என்று அவள் கோபமாகப் பெருமூச்சு விட்டுவிட்டு நகர்ந்து நடக்கத் தொடங்கினாள்.
"ஐய.. இப்ப நீ ஏன் நம்பலன்னு கேக்கணும்.. இது கூட உனக்கு தெரீலயே! என்ன பொண்ணோ நீ?" என்று கூறிக் கொண்டே பின்னாலேயே மெதுவாக வந்தான்.
அவள் கண்டு கொள்ளவில்லை.
"சரி! போ! நானே சொல்றேன்! நீ ஒரு பயந்தாங்கொள்ளி. என் பின்னால பைக்ல உக்கார்ந்து வர மாட்டன்னு எங்கம்மாட்ட சொல்லிட்டுதான் வந்தேன்.. ஆனா அவங்கதான் நம்பல.. நீ ஒரு பெரிய வீராங்கனை.. அதனால அவ உன் பைக்ல தைரியமா வருவான்னு சொன்னாங்க.. இப்ப நா தனியா போய் இறங்குவேன்.. எங்கம்மா செம்ம பல்பு வாங்கப் போறாங்க.. ஹா.. ஹா.." என்று கூறி பெரிய குரலில் சிரித்தான்.
அவன் சிரிப்பதை கடுப்புடன் அவள் பார்த்தாள்.
"என்ன? நீ வீராங்கனைன்னா என் பின்னால ஏறு.. இல்ல கோழைதான்னு நெனச்சா பஸ்ல வந்துக்க!" என்றான்.
அவளுடைய ரோஷம் மீண்டும் தூண்டப்பட,
"நீ என்ன புலியா சிங்கமா? உன்னப் பாத்து நா ஏன் பயப்படணும்?" என்று கூறிக் கொண்டே அவனுடைய பைக்கில் அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவன் அவளறியாமல் நமுட்டுச் சிரிப்புடன் வண்டியை எடுத்தான்.
சில அடிகள் சென்றதும் வேண்டுமென்றே சடன் பிரேக் போட அவள் கொஞ்சம் பயந்தாலும் அவன் இப்படிதான் எதையாவது செய்வான் என்று எதிர்பார்த்தாளோ என்னவோ, சுதாரித்துக் கொண்டு அவன் மேல் சாயாமல் இருந்தாள்.
"ம்.. பரவால்ல.. நீ தைரியசாலின்னு ஒத்துக்கறேன்.." என்றான் அவன்.
"மூஞ்சியப் பாரு.." என்று அவள் முணுமுணுத்தது அவன் காதில் தெளிவாய் விழுந்தது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.
அவனும் அவளும் ஒன்றாக வண்டியில் வந்து இறங்குவதைக் கண்ட முகேஷும் ரேவதியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.