கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் பின்கதை

இதோ எபிலாக் நண்பர்களே!


எல்லாம் இன்ப மயம்

அதிகாலையிலேயே எழுந்து எல்லாருக்கும் டீ போட்டுக் கொண்டிருந்தாள் அஸ்வினி. அனைவரும் நல்ல உறக்கத்தில். ராஜி மட்டும் மெல்ல நடந்து வந்து, "சீக்கிரமே எழுந்துட்டியா? சரியா தூக்கம் இல்லையோ?" என்றாள்.

"ஆமாக்கா லேட்டா தான் தூங்கினேன்.. சீக்கிரம் முழிப்பு வந்துடுச்சு. நீங்க? ஜெட் லேகா?" என்றாள்.

"நேத்து கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோங்குற நெனப்புல நானும் தூங்கல.. அதனால சில பல விஷயங்கள் கண்ணுல பட்டுச்சு, காதுலயும் விழுந்துச்சு" என்றாள் ராஜி.

என்னவென்று அஸ்வினி அதிர்ச்சியாக பார்க்க, "ம்.. நீ ராத்திரி பூரா உன் புருஷனுக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டே இருந்ததும், அவன் பூனை மாதிரி உள்ளே வந்ததும், நீ எந்திரிச்சு இதே கிச்சன் பக்கம் வந்ததும் எனக்குத் தெரியும்.. இந்த கிச்சனுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு நானும் கேட்க மாட்டேன், நீயும் சொல்லக்கூடாது. ஏன்னா வீ ஆர் டீசன்ட் பீப்பிள் யூ நோ?" என்றாள்.

"அக்கா.." என்று வெட்கத்துடன் சிணுங்கிய அஸ்வினி, "இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் கா.. என் வீட்டுக்காரர் உங்ககிட்ட சிக்கிக்கிட்டு படுற பாடு இருக்கே.." என்றவள் சற்று நிறுத்தி, "பொறாமையா இருக்குக்கா.." என்றாள்.

"ஏன்? உன் புருஷன் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குறோம்னா?"என்று கேட்க,

"சே சே! இல்லைக்கா.. உங்க ஃப்ரண்ட்ஷிப்பைப் பார்த்து நானும் உங்க கூட படிச்சிருக்கலாமேன்னு ஃபீல் பண்றேன்" என்றாள்.

"அடியேய்! நீங்க எங்களை விட அஞ்சாறு வயசு சின்னவடி.. என் கூட எப்படிப் படிக்க முடியும்? வேணும்னா இந்த அஸ்வின் படிப்பு படிப்புன்னு எத்தனை வருஷமா சுத்தி இருக்கான்.. அவன் வந்த உடனே, அவன் கைல குடும்பத்தை ஒப்படைச்சிட்டு வா, நானும் என் வீட்டுக்காரர் கிட்ட அழுது அடம் பிடிச்சு சென்னைக்கு வரேன்‌. மாதாஜி ஏற்கனவே நம்ம எது சொன்னாலும் கேட்பா.. நாம் மூன்று பேரும் சேர்ந்து இந்த ஃபேஷன் டெக்னாலஜி, எம்பிஏ இப்படி ஏதாவது படிக்கப் போலாம்.. ஓகேவா?" என்றாள்.

"சூப்பர் ஐடியாக்கா! செய்யலாம்!"

"ராஜி! இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது? ரொம்ப ஏமாளி உலகம் ராஜி" தன்னை நோக்கியே விரல் நீட்டி ராஜி சொல்ல,

"போங்கக்கா.." என்று சிரித்துக் கொண்டாள் அஸ்வினி. இவர்கள் சத்தத்தில் எழுந்து வந்த ஜெயந்தி, "ராஜி! உன் மச்சான் காலிங்!" என்று சும்மா உதார் விட, ஒரு நொடி அட்டென்ஷனுக்குப் போய் இலகுவான ராஜி, "பார்றா! எங்க புள்ளைப் பூச்சி மாதாஜியே கலாய்க்குது.. ரங்கநாதன் ஸ்ட்ரீட் போகாம ஊர் போக மாட்டேன் டி நானு" என்று ஒற்றை விரல் காட்டி மிரட்ட, "ஹி ஹி! என் ஃபோனும் அடிக்குது.. நான் போறேன்" என்று எஸ்கேப் ஆனாள் ஜெயந்தி.

புதிதாய் ஏற்பாடு செய்திருந்த அந்த இன்னொரு வீட்டில் குழந்தைகள் அனைவரும் அம்மாக்களை விட்டுவிட்டு அப்பாக்களுடன் செட்டிலாகி இருந்தார்கள். முந்தைய நாள் வீட்டுப் புயல் ஓய்ந்து எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம் என்றிருக்கையில், ஹுசைன் வந்து சேர்ந்தார்.

ஒரு பூங்கொத்தைக் கொண்டு வந்தவர், காலை விடிந்ததும் அதை வைதேகியிடம் நீட்டி, "ஷால் ஐ பீ யுவர் டாட்?" என்று கேட்டார். மகிழ்வுடன் வாங்கிக் கொண்டாள் வைதேகி.

"கலிகாலம் டா.. இப்படித்தான் லண்டன்ல குழந்தைகள்ட்ட அப்பா ப்ரபோஸ் பண்ணுவீங்களாடா? என்ற அஸ்வின், "ஹுசைன் பாஸ்! மண்டை பத்திரம்.. இங்கே மூக்கு புடைப்பா ஒருத்தன் இருக்கான்" என்று ரிப்போர்ட்டர் ரித்தீஷைக் காட்டினான். அவன் ஏற்கனவே ' இதோ இன்னொரு சானியா மிர்ஸா- ஷோயப் மாலிக்.. லண்டனில் மலர்ந்த இந்தியா பாகிஸ்தான் காதல்' என்று தலைப்பு எழுதி வைத்திருந்தான்.

தூக்கக் கலக்கத்தில் அப்பாவை ஒட்டிக்கொண்டு திரிந்த கிருத்திக்,
"அப்பா இதே மாதிரி நீங்களும் எனக்குப் பண்ணுங்க" என்றார்.

'பயபுள்ள நாடு விட்டு நாடு வந்து என்ன மாதிரி ஸ்டண்ட் பண்ணி இருக்கு.. பொக்கேவுக்கு அர்த்தராத்திரியில் எங்க போவேன்?' என்று புலம்பியவன், வைதேகி கையில் இருந்த பொக்கேயிலிருந்து இரண்டொரு பூக்களை உருவி மகனிடம் நீட்டி,

"நான் ஏற்கனவே உனக்கு டாடி தானே?" என்க,

"அப்ப ஃபிரண்டா இருங்கப்பா எனக்கு" என்றான் கிருத்திக்.

"ஆமாடா ஆமா.. ஃப்ரெண்டுங்குற பேர்ல எனக்குக் குழி பறிக்கிறதே வேலையா வச்சிருக்காய்ங்க ரெண்டு பேரே.. அதுல நீயும் சேரப் போறியா?" என்க,

"ஆமாப்பா! அதுக்குத்தான்.. எல்லாரும் உங்களைக் கலாய்க்கும் போது ஜாலியா இருக்குல்லப்பா" என்று சீரியசாகச் சொன்னான் கிருத்திக்.

"வேண்டாம் நான் அழுதுருவேன்" என்று சொல்லி குப்புற படுத்து கொண்டான் அஸ்வின். "யுவர் ஃபேமிலி டோட்டல் டேமேஜ்" தியாகராஜன் இடி இடி என்று சிரிக்க, இங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக ஹுசைன் முயன்றார். "ஐயோ இவர் வேற, க்யா க்யா.. வாட் டஸ் ஹி ஸே?" அப்படின்னு ட்ரான்ஸ்லேஷன் கேப்பாரே.. நான் வரல இந்த ஆட்டைக்கு" என்று போர்வையால் முகத்தை மூடிக்கொண்டான் அஸ்வின்.

காலங்காத்தாலேயே ரித்தீஷ் ஹுசைனை அங்கிங்கு நகரவிடாமல் கேள்விக் கணைகளால் துளைத்தான். நடுநடுவே தன்னுடைய பிரதாபங்களை வேறு அவிழ்த்து விட்டான். "நீ லோக்கல் பீசு.. சாரு இன்டர்நேஷனல் லெவல்.. அடங்குடா! ரொம்ப பீலா விடாதே!" என்று அஸ்வினி சொல்ல,

"சார்! என்னை மாதிரி ஸ்மால் ஸ்கேல்ல ஸ்டார்ட் பண்ணினாத் தான் சார் மாதிரி லார்ஜ் ஸ்கேல்ல வர முடியும்.. இங்க பாருங்க, நேத்து ஏர்போர்ட்ல இந்த ஃபோட்டோ எடுத்தேன்.. இது ரெண்டு பேரும் யாருன்னு சொல்லுங்க.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் அவங்களை நச்சுன்னு நாலு போட்டோ எடுத்திருக்கேன்ல.. நாளைக்குப் பாருங்க.. இந்த நாலு ஃபோட்டோவை வச்சு நாப்பது நியூஸ் எழுதிட மாட்டேன்" என்றான்.

"டேய்! இதுக்கு ஏன்டா நீ ஊர்ஊரா அலையுறே? நெட்லயே ஆயிரம் படம் கிடைக்கும்.. நீ எழுதுற கற்பனைக் கதைக்கெல்லாம் வெளிய அலையனுமா என்ன? வீட்டில் உட்கார்ந்து கண்ணை மூடி கவுந்தடிச்சுப் படுத்தாலே எழுதிடலாமே? நல்லா வச்சுருக்காய்ங்கடா சேனல் பேரு..பிஹைன்ட் டோர்ஸ் னு.. அடுத்தவன் பெட்ரூமுக்குள்ள எட்டிப் பாக்குறது ஒரு பொழைப்பாடா" என்றான் அஸ்வின்.

"ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்னடா" என்று தியாகராஜன் அவனை ஓங்கி அடிக்க,

"எங்க பாஸ் ஓங்கி அடிச்சா.." என்று தியாகராஜனின் அடிப்பொடி அவர் புகழ் பாட ஆரம்பித்தான்.

"தெய்வமே நீ அருள் வழங்கினது போதும்பா.. கொஞ்சம் வாய மூடுறியா"

"ஏன் சார் இந்த சாருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்குன்னவுடனே கேக்கணும்னு நினைச்சேன்.. இந்த மாதிரி தீவிரவாதி சம்மந்தப்பட்ட பெரிய கேஸ் எல்லாம் நீங்க எடுக்குறது இல்லையா?" என்று தியாகராஜனை நோக்கி ரித்தீஷ் தன்னுடைய கேள்விகளைத் திருப்ப,

"வா வா.. உனக்கு இன்னைக்கு பாலிடால் பாயாசத்தைப் போடச் சொல்றேன்" என்றான் அஸ்வின்.

"சார் வேண்டாம் சார்.
ஃப்ரெண்ட் பிக்கப் பண்ண வரேன்னு சொல்லிருக்கான்.. சார் ஆனா என்னோட கார்டை வச்சுக்கோங்க, நம்பர் சேவ் பண்ணி வச்சுக்கோங்க ஏதாவது ஸ்கூப் நியூஸ் இருந்தால் கட்டாயம் என்ன கூப்பிடுங்க சார்" என்று சொல்லிக் கிளம்ப,

"இந்த யுனிவர்சல் ஸ்டார் உதயகுமார் இருக்காரே தம்பி.. ?" என்று தியாகராஜன் அஸ்வினைப் பார்த்துக் கொண்டே கூற, "ஆமா சார்! அவருக்கு என்ன? அவரைப் பத்தி எதுவும் நியூஸ் இருக்கா?" என்று வாசல்வரை போன ரித்தீஷ் திரும்பி வந்து உட்கார்ந்தான்.

அடுத்து ஏதோ சொல்ல வந்த தியாகராஜனின் வாயைப் பாய்ந்து போய் அமுக்கினான் அஸ்வின். "குரு! தெய்வ குரு! என் குலதெய்வமே குடிகாத்த கடவுளே! வாயை மட்டும் திறக்காதீங்க.. இவன் ஏதாவது நியூஸ் போட்டு வச்சான், அப்புறம் என் கேரியர் கோவிந்தா தான்‌ கம்பி எண்ண வச்சாலும் வச்சுருவாங்க.. தெய்வமே!" என்றான் அஸ்வின்.

ராஜியுடன் பேசியது முதல் கணவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது அஸ்வினிக்கு. அவர்களுக்கு டீ கொடுக்கும் சாக்கில் வந்தவள், "ஏங்க மதியத்துக்கு பாயாசம் வைக்கட்டுமா? ஜவ்வரிசி பாயாசம் ஓகேவா, சிறு பருப்பு பாயாசம் வைக்கவா?" என்றாள்.

"ஐயோ பாயாசமா" நான் நாளைக்கு வரேன் அக்கா" என்று சொல்லிவிட்டு கம்பி நீட்டினான் ரித்தீஷ்.

"அப்பா கொசுத்தொல்லை ஓய்ஞ்சுச்சு" என்று சிரித்தான் அஸ்வின்.

"க்யா? வாட் டிட் யூ ஸே?" என்றார் ஹுசைன்.

"குரு! முப்பது நாட்களில் தமிழ் பாஷைன்னு புக் இருந்தா ஆர்டர் போடுங்க குரு! முடியலை" என்றான் அஸ்வின் 😂😂😂
Nice family and friends story so lovely
 
Top