அத்தியாயம் 7
"பிரபல ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்!" "விரைவில் கைது செய்யப்படுவாரா?", "அரசாங்க ரகசியத்தைத் தனியாருக்குக் கொடுத்தாரா?" என்று பல தமிழ் சேனல்கள் ஒரே நேரத்தில் அலறிக்கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சியைக் கடந்து சென்ற ஒவ்வொருவரும், யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி என்று நின்று கவனித்தனர். "ஐஏஎஸ்ல என்னய்யா பிரபலம் பிரபலம்னுட்டு.. கவர் மெண்ட் ஏவுற வேலையை செய்ற ஆட்கள் தானே அவங்க?" என்று ஒரு சிலர் காதைக் குடைந்து கொண்டே கமெண்ட் செய்யவும் செய்தனர்.
அனுஸ்ரீக்கு அன்று ஒரு முக்கியமான செய்முறைத் தேர்வு இருந்தது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு அவள் தேர்வில் மும்முறமாக இருக்க, டிவியில் ஒளிபரப்பான அந்த செய்தி சமூக ஊடகங்கள் வழியே பரவி அவளது வகுப்பின் வாட்ஸ் அப் குரூப் வரை வந்தது. அன்று பிராக்டிகல் இல்லாததால் வீட்டில் உட்கார்ந்து மொபைலில் நோண்டிக் கொண்டிருந்த ஒருத்தியின் கண்களில் அது பட்டுத் தொலைக்க, விழாமல் விரியாமல் வகுப்பின் அத்தனை பேரும் பார்க்கும் விதமாக அதை ஃபார்வேர்ட் செய்திருந்தாள். அதுவும், 'திஸ் இஸ் அனு ஸ்ரீ'ஸ் ஃபாதர் ஜனார்த்தனன்' என்ற அடைமொழி வேறு.
'வொய்?', 'ஸோ ஸேட்!', 'அனு அப்பா ஐஏஎஸ்ஸா?!, 'இவர் ரொம்ப நல்லவர்னு சொல்லுவாங்களே?!' என்று பல எதிர்வினைகள் வந்திருக்க, அதையெல்லாம் கவனிக்காமல் தன் செய்முறைத் தேர்வில் மூழ்கியிருந்தாள் அனுஸ்ரீ. அவள் வெளியே வந்து மொபைலை இயக்கவும் பிரகல்யா அழைக்கவும் சரியாக இருந்தது. "சொல்லுடீ பிரகல்.. இப்பத் தான் ப்ராக்டிகல் முடிஞ்சுது" என்று துவங்கியவுடனேயே அவளுக்கு விஷயம் தெரியாது என்பதைப் புரிந்து கொண்டாள் பிரகல்யா.
"இங்க பாரு.. ரிலாக்ஸ்டா இரு! ஒன்னும் ஒர்ரி பண்ணாதே.. அரசியல்ல இதெல்லாம் சகஜம். ஓகேவா?" என்று அவளை ஆசுவாசம் செய்ய, விஷயம் என்னவென்று தெரியாமலேயே அனுஸ்ரீயைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
"என்னடி? என்னடி சொல்ற?" என்று அவள் பதற, "இல்ல உங்க அப்பாவை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்கன்னு நியூஸ்ல சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கும் அவ்வளவு தான் தெரியும். அதை இந்த வீணாப் போன வர்ஷா நம்ம கிளாஸ்ல குரூப்ல போட்டு விட்டுடா. ரெண்டு நாளைக்கு இதைப் பத்திப் பேசுவாங்க.. அப்புறம் மறந்துடுவாங்க. நீ தான் சொல்லி இருக்கியே, நேர்மையான அதிகாரிகளுக்கு என்னைக்குமே சிக்கல் மேல சிக்கல் தான்னு.. விடு" என்றாள்.
அவள் சொன்ன செய்தியை ஜீரணிக்கவே சிரமமாக இருந்தது அனுஸ்ரீக்கு. "நானும் உன்னை தினசரி ஆறுதல் படுத்துற மாதிரியே பேச வேண்டாம்னு தான் பார்க்கிறேன், ஆனால் சந்தர்ப்பம் அப்படி அமைஞ்சுடுது. நீ தான் போல்டா இருக்கணும். இன்னையோட பிராக்டிகல் முடிஞ்சுது இல்ல? வேணா ஊருக்குக் கிளம்பிப் போயிட்டு வா.. எக்ஸாம்க்கு இன்னும் நாலஞ்சு நாள் இருக்கே.. உன்னோட ஹெல்ப் இப்ப அம்மாவுக்குத் தேவைப்படும். அப்புறம் நம்ம கோக்குமாக்கு குணா இருக்கானே.. அவன் பேசினான்டி.. அவங்க அப்பா சுப்ரீம் கோர்ட்ல லீடிங் அட்வகேட்டாம். பல டாப் கம்பெனிஸ்க்கு அவரோட ஃபர்ம் லீகல் அட்வைஸ் கொடுத்துக்கிட்டு இருக்குதாம். அதனால முன் ஜாமீன் எதுவும் வேணும்னா ஹெல்ப் பண்றேன்னு சொன்னான்டி. அவன் ஒன்னும் நம்ம நினைச்ச அளவுக்கு மோசம் இல்லையான்னு தோணுது. பாரேன், மத்தவங்க எல்லாம் குரூப்ல பொங்க, அவன் மட்டும் நேர்ல ஹெல்ப் வேணுமான்னு கேட்கிறான். அதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு என் மூலமாக் கேக்குறான்.. அப்படி எதுவும் வேணும்னா நீ அவனை காண்டாக்ட் பண்ணு. உங்க அப்பாவுக்கே நிறைய பேரைத் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் அவர் டென்ஷன்ல இருப்பாரு இல்ல? நீ வேணா சஜஷன் குடு" என்று கூறி வைக்க,
அனுஸ்ரீ "ஓகே டி" என்றாள். இவ்வளவு நாள் தான் பட்ட கவலைகள், வருத்தங்கள் எல்லாம் அர்த்தமற்றவையாகத் தெரிந்தது அவளுக்கு. வாழ்க்கையே இரு கோடுகள் தத்துவம் தானே, இருப்பதை விட பெரிதாக ஒரு பிரச்சனை வரும் பொழுது முந்தையது சிறிதாகத் தெரிவது இயல்பு தானே. நெருக்கடியான நேரங்களில் எல்லா மனிதர்களுக்கு வரும் ஒரு போர்க் குணம் தொற்றிக் கொண்டது. உடனடியாக ஃபோனை எடுத்து அப்பாவை அழைத்தாள். அவரது எண் பிசியாக இருந்தது. அம்மாவுக்குக் கூப்பிட, அம்மாவின் அழுகுரல் தான் கேட்டது. "அம்மா! நான் அடுத்த ஃபிளைட்ல கிளம்பி வரேன். அப்பாவைப் பாத்துக்கோ" என்றவாறு அடுத்து சென்னை பிளைட் எப்போது என்று பார்க்கப் போனாள் அனுஸ்ரீ.
ஃபோனை வைத்த பிரகல்யாவிற்கு அவளுக்குத் துணையாக சென்னை சென்றால் என்ன என்று தோன்றியது. விடுமுறை கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டே அனுஸ்ரீயின் பிரச்சனைக்குத் தான் எப்படி உதவி செய்யலாம் என்று யோசித்தவளுக்கு டக்கென்று ஒன்று தோன்றியது. 'அரசாங்க ரகசியத்தைத் தனியாருக்குக் கொடுத்ததாத் தானே டிவில சொன்னாங்க? கிட்டத்தட்ட இதே மாதிரி விஷயத்தைத் தானே அனுவும் கதையில் எழுதிட்டு வர்றா? ஒருவேளை ரெண்டுக்கும் தொடர்பு இருக்குமோ? அவ தெரிஞ்ச விஷயத்தைத் தான் எழுதுறாளா? அது கனவுங்கிறது பொய்யா? இல்ல, அரைகுறையா தெரிஞ்ச விஷயம் கனவா வருதா? அப்புறம் ஏன் கனவு வரலைன்னா கதையை எப்படிக் கொண்டு போறதுன்னு தெரியாம முழிக்கிறா? இது தெரியாம நான் வேற அந்தக் கதையை சைட்ல அப்லோட் பண்ணிட்டேனே.. இது பத்தி வேற யார்கிட்ட போய் கேக்குறது?' என்று விழித்தாள்
அன்றைய தினம் டிரைவில் அனு பதிவேற்றியிருந்தவற்றை பிரகல்யா இன்னும் படிக்கவில்லை. சரி நாம முதல்ல கிளம்புவோம், போற வழியில அந்த கதையை முதல்ல இருந்து படிச்சுப் பார்ப்போம்.. அப்புறம் யார்கிட்டயாவது கேட்கலாம் என்று முடிவு செய்து சென்னையை நோக்கிக் கிளம்பினாள்.
***
அனுஸ்ரீ முந்தைய தினம் கூகிள் டிரைவில் பதிவு செய்தவை:
"ராசா..உங்க அப்பா போன் பண்ணி எங்க அஜித்தைப் பாத்தியாடா ன்னு ஒரு மாதிரி நக்கலா கேட்டாரு.. இதே மாதிரி பத்து நாள் முன்னாடி போன் பண்ணும் போது தெரியாதுன்னு சொல்லிட்டேன். இப்ப என்னால உண்மையை மறைக்க முடியல.. நீயும் பேரை மாத்தி ஏதேதோ சேட்டை பண்ணிட்டு இருக்கியா.. அதனால உங்க அப்பாகிட்ட நீ இங்கே தான் இருக்கேன்னு சொல்லிட்டேன்.. உன் நம்பர் கேட்டதுக்கு உன் புது நம்பர் எனக்கு தெரியாதுன்னு சொல்லி இருக்கேன்.. அரை மணி நேரத்துல கூப்பிடுறேன் விசாரித்து வைக்கிற அப்படின்னு மிரட்டுற மாதிரி சொன்னாரா.. பேச்சே இடி மாதிரி இருந்துச்சு.. அவரு கைல சிக்கினா என் உடம்பில் உள்ள எலும்பு எல்லாம் எண்ணிடுவார் போல இருக்கு.. நீயா உங்க அப்பா கிட்ட பேசி என் வாழ்க்கையில விளக்கேத்தி வை ராஜா.. அடிவாங்க என் உடம்புல தெம்பில்ல.. அப்புறம் அந்த வேலை.. அதை விட்டுட்டு ஊர் போய் சேருற வழியப் பாரு.. அக்கா கல்யாணத்துக்குக் கொள்ளை வேலை கிடக்குதாம்" என்றான் அஜித்தை திடீரென்று அழைத்த ஒரிஜினல் சரவணன்.
"அது எப்படிடா நான் போறது? அதான் அக்கா கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை எடுத்துட்டு வந்து செலவழிச்சிட்டேனே?" என்று அஜித் இழுக்க, "அதெல்லாம் பிரச்சனை தீர்ந்துடுச்சாம்"
"ஏன் எங்கப்பன் எங்கேயாவது போய் திருடிட்டு வந்துட்டானா?" என்று அப்போதும் விடாமல் அஜித் வாயாட
"அதெல்லாம் ஊருக்குப் போனா தன்னால தெரிஞ்சுகுவே.. இப்ப தயவு செஞ்சு உங்க அப்பாகிட்ட பேசிட்டு இன்னைக்கே கிளம்பு.. இன்னிக்கு சாயங்காலம் நாலு மணி வரை தான் ரூம்ல இருக்கிற உன்னோட திங்ஸ் எல்லாம் எடுக்குறதுக்கு டைம். அதுக்கப்புறம் நானே சாமான்களை வெளியே எடுத்து வச்சிட்டு வேற பூட்டு போட்டுடுவேன்.. இதுக்கு மேல என்னைக் கொலைகாரன் ஆக்காதே" என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தான் சரவணன்.
அன்றைய தினம் பவித்ராவுக்கும் ஒரு வித்தியாசமான செய்தி கிடைத்தது. நீண்ட நாள் கழித்து அவள் தற்போது தங்கியிருக்கும் ஹாஸ்டலில் வந்து அவளை சந்தித்த சரோஜா அக்கா, "தாயி நல்லா இருக்கியா?" என்று கட்டிக் கொண்டார். பதினைந்து நாட்கள் பார்க்காததற்கு இவ்வளவு பாசத்தை பொழிபவர் அநேகமாக உலகிலேயே இவர் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள்,
"சூப்பரா இருக்கேன் கா.. பாத்தீங்கல்ல? நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு, டீயும் வடையுமா உள்ளே தள்ளி ஒரு ரெண்டு கிலோ கூடியிருக்கேன். பாருங்க" என்று ஒரு சுற்று சுற்றி வந்து காண்பித்தவள்,
"அப்புறம் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? போன வாரம் மழை பெஞ்சுதே.. அப்ப உங்களைத் தான் நினைச்சுகிட்டேன்.. படுக்குறதுக்கு என்ன பண்ணுனீங்க? இடம் இருந்திருக்காதே? நம்ம ஹாஸ்டல் கட்டிடத்துல வேற ஏதோ கட்டிடம் கட்டப் போறாங்கன்னு சொன்னீங்களே? வேலை ஆரம்பிச்சுட்டாங்களா?" என்று பவித்ரா கேள்விகளாக அடுக்க,
"அட இரு பாப்பா.. ஒன்னு ஒன்னா கேளு. இப்ப நான் புதுசா ஒரு வேலைக்கு போறேன்" என்றார் சரோஜா.
"புதுசா வேலையா? இதுவரை நீங்க பாக்காத வேலைன்னு ஒன்னு உலகத்துல இருக்கா என்ன? இப்ப என்ன புது வேலை?" என்று பவித்ரா கேட்க,
"எங்க பக்கத்து ஏரியாவுல ஒரு 90 வயசு பாட்டி தனியா இருக்காங்க.. அவங்க கூட போய் துணைக்கு படுக்கணும். அவ்வளவுதான் வேலை. பகல்ல அவங்கள கவனிச்சுக்க வேற ஆள் வருவாங்க. நல்லா நடமாடக் கூடிய பாட்டி தான்" என்றார் சரோஜா.
"அட சும்மா இருக்குறதுக்கு சம்பளமா? சூப்பர் அக்கா சூப்பர்! ஒரு வேளை இந்த ஜாப்பை நீங்க ரிசைன் பண்ற மாதிரி இருந்தா என்னை ரெகமண்ட் பண்ணுங்க"
"பவித்ரா.. அதைத் தான் சொல்ல வந்தேன்.. இப்பயே நீ வேலை பாக்குறியே.. அந்த ஆபீஸ்ல தான் இந்தப் பாட்டியோட மகன் ஏதோ பதவில இருந்தாராம்.. ஏற்கனவே அந்த வீட்டில் எதுவும் மேல் வேலைன்னா கூப்பிடுவாங்க. அப்ப உன்னைப் பத்தி அடிக்கடி சொல்லி இருக்கேன். அதைக் கேட்டுட்டு தான் உனக்கு வேலை கொடுத்தாராம் அந்தப் பெரிய மனுஷன். இந்தப் பாட்டி சொன்னாங்க"
யார் என்று ஒரு நிமிடம் யோசித்த பவித்ரா, தன் அலைபேசியில் திருட்டுத்தனமாக அவர்களது 'ஜர்'ரை எடுத்து வைத்திருந்த ஃபோட்டோவைக் காட்டி இவரா அவங்க மகன் என்க, "ஆமா.. இவரே தான். நல்ல குணம் பாப்பா" என்றார் சரோஜா வாயெல்லாம் பல்லாக.
அடுத்து சரோஜா பேசியது எதற்கும் காதை கொடுக்காமல் சும்மா உம் என்று தலையாட்டிய பவித்ராவின் தலைக்குள் துப்பறியும் செல்கள் முடுக்கி விடப்பட்டன. 'நம்ம ஜர்ரு பாவமா இருக்காருன்னு பார்த்தா நம்மளை விட பயங்கரமா துப்பறியிற வேலை பார்த்து தான் நம்மள செலக்ட் பண்ணி இருக்காரா? அப்ப நமக்கு வந்த ஃபோன் கால்! அதில் நம்ம குரல் மாதிரியே இருந்ததே.. அதுக்கு என்ன காரணம்? அன்னைக்கு சைலன்ட் சண்முகசுந்தரம் கூட சொன்னானே, ஏதோ அவனோடது மாதிரியே மெயில் ஐடியில் இருந்து ஒரு மெயில் வந்ததாவும், அதை ஓபன் பண்ணிப் பார்த்ததாவும் சொன்னானே.. அவனையும் யாராவது ஸ்பை பண்ணி இருப்பாங்களோ? சரவணன் கதை என்ன?' என்று பலவாறாக யோசித்தாள் பவித்ரா.
'கால் ரெகார்ட் பண்ணாம விட்டுட்டேனே! பண்ணியிருந்தா இந்தப் பசங்களுக்குப் போட்டுக் காட்டியிருக்கலாம். அவனுங்க புத்தில ஏதாவது உரைக்குதான்னு கேட்டு இருக்கலாம்.. இந்த இன்வெஸ்டிகேஷன் ப்ராஜெக்டை ஒத்த ஆளா தூக்கி சுமக்கிறேன்.. கொஞ்சமாவது மூளையைக் கசக்குறானுங்களான்னு பாரேன்' என்று நினைத்தவளாக மறுநாள் அலுவலகம் செல்ல, அன்று ஜர்ரிடம் பிடிவாதமாக நின்று வாதாடிக் கொண்டிருந்தான் அஜித்.
"சார் ப்ளீஸ் சார்! ப்ளீஸ் ப்ளீஸ்! லீவ் குடுங்க சார்! ரெண்டு நாள் காப்பி டிபன் சாப்பிடலைன்னா இந்த அக்காவும் அண்ணனும் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டாங்க.. ரெண்டு நாள் கழிச்சு அந்த டெலிவரி வேலையைப் பார்க்கிறேன். என்ன இது பெரிய வேலைன்னு லீவு கூட கொடுக்க மாட்டேங்கறீங்க? ஊருக்குப் போயே ஆகணும் சார்" என்க,
ஒன்றும் பேசாமல் வெளியேறி போனார் ஜர். பவித்ரா அஜித்தை விட்டுவிட்டு அவருடைய நடவடிக்கைகளைத் தான் உற்று கவனித்தாள். 'பெரிய மாஸ்டர் பிளான் போடுற அளவுக்கு ஒன்னும் வொர்த்தா இல்லையே இவரு? அப்படியா ஒரு சின்ன ஆபீஸ் செட் பண்ணி தலைமறைவா வேலை நடத்த முடியும்? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இவரு?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க ஜர்ரின் பாராமுகத்தால் கடுப்பாகிப் போன அஜித், இரண்டு பேரையும் அருகே அழைத்தான்.
"அக்கா, அண்ணா! சொல்றதைக் கேளுங்க. இந்த மர்ம பங்களால இருந்து எப்படியாவது தப்பிச்சுப் போயிடுங்க. நான் இன்னைக்குப் போறேன். ஆனா திரும்பி வரமாட்டேன். போறதுக்கு முன்னாடி ஒரு உண்மையைச் சொல்லிட்டுப் போறேன். இவ்வளவு பழகுன பிறகு மறைக்க மனசு வரல.. என் பேரு சரவணன் இல்ல. அஜித். என் பிரண்டுக்கு வந்த லெட்டர்ல அட்ராக்ட் ஆகித் திறந்து பார்த்தேன். எனக்கு வேலை இல்லாததால சும்மா ட்ரை பண்ணுவோமேன்னு வந்தேன் இப்ப சரவணனும் கடுப்படிக்கிறான். வீட்லயும் கடுப்படிக்கிறாங்க. இந்த வேலை அதைவிட பயங்கர கடுப்பைக் கொடுக்குது. நான் போறேன். நீங்களும் பெரிய பிரச்சனை வர்றதுக்கு முன்னால தப்பிச்சுக்கோங்க. ஒரே ஒரு பாயிண்ட் சொல்றேன். யூஸ் ஆகுமான்னு பாருங்க. அன்னைக்கு வந்த லெட்டர்ல இருக்கிற கையெழுத்து அப்படியே சரவணனோட கையெழுத்து மாதிரி இருந்தது. அதனாலதான் என்னடா அவனுக்கு அவனே லெட்டர் போட்டிருக்கானான்னு ஒரு ஆர்வத்துல அந்தத் தபாலைத் திறந்து பார்த்தேன்.
"ரொம்ப நாளா சொல்லணும்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்க்கா. நேத்து கூட இதைத்தான் சொல்றதுக்கு உங்கள காபி ஷாப் விட்டேன் அப்புறம் நீங்க பேசுறது கேட்டுட்டு டைம் போயிடுச்சு. ஆனா இதை வச்சு வேற எதுவும் சிக்கல்ல மாட்டிக்காதீங்க.. ஜாக்கிரதை! நான் வரேன்" என்று அன்றைய வேலை நேரத்தில் பாதியிலேயே கிளம்பிச் சென்றான் அஜித்.
"நாம ரெண்டு பேரு தான் இருக்கோம் இப்ப. இப்பவாவது ஏதாவது வாயைத் திறந்து பேசுவீங்களா? இல்லை அதே சைலன்ட் சாமியார் வேஷம் தான் போடுற மாதிரி பிளானா?" என்று பவித்ரா சண்முகசுந்தரத்தைப் பார்த்து கையைக் கட்டிக் கொண்டு கேட்க, "நானே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேங்க.. நேத்து எங்க வீட்டுக்கு விசாரணைக்கு போலீஸ் வந்தாங்க!" என்றான் சண்முகசுந்தரம்.
கனவுகள் பூக்கும்

Last edited: