அத்தியாயம் 8
பிரகல்யா மீண்டும் ஒருமுறை அனுவின் கதையை வாசித்து அதிலிருந்து குறிப்புகளை எடுத்தாள். பின் பிரபலமான செய்திப் பத்திரிகைகளை இணையத்தில் தேடி ஜனார்த்தனன் ஐஏஎஸ் பற்றி என்னென்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்வையை ஓட விட்டாள். கடந்த மூன்று மாத காலங்களாக வந்த செய்திகளில் மட்டுமே அவர் மேல் ஏதோ புகார், ஒழுங்கு நடவடிக்கை என்றும் அதற்கு பொதுமக்கள் அதிர்ச்சி என்றும் போடப்பட்டிருந்தது. என்ன குற்றம் அவர் மீது சொல்லப்பட்டது என்று எங்கும் குறிப்பிடவில்லை. Beating around the bush என்று சொல்வதைப் போல மிக நேர்மையானவராக அறியப்பட்டவர் மேல் புகார் கிளம்பியது, கிளம்பியது என்று சொன்னதையே மறுபடி மறுபடி சொல்லியிருந்தார்கள். சமூக வலைதளங்களுக்குச் சென்றால் இன்னும் கண்ணைக் கட்டியது. அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுமாக எதிரெதிரே கம்பு சுத்திக் கொண்டிருந்தார்கள். அதை விட்டுவிட்டுத் தரமான பத்திரிகைகளை நாடினாள். அவளுக்கு முக்கியமானவையாகத் தோன்றியவற்றை குறிப்பெடுத்து வைத்தாள்.
பழைய செய்திகள் அனைத்தும் அவரைப் பற்றிப் மிகப் பெருமையாகவே கூறியிருந்தன. எந்தக் கட்சி சார்பும் இல்லாதவர், நேர்மையின் மறு உருவம், பதினெட்டு வருடங்களில் பணியிட மாறுதல் என்ற பெயரில் 28 துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டவர். எவ்வளவு முக்கியமற்ற துறையாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்து விடுவார், இன்னின்ன துறைகள் முதலில் பெருநஷ்டத்திலிருந்து இவரால் லாபத்தில் இயங்குகின்றன. இப்படியான புகழாரங்கள் தான் நிறைய தென்பட்டன. இத்தனை துறைகளில் எதில் பிரச்சனை வந்திருக்கும் அவருக்கு என்று பிரகல்யாவிற்குத் தெரியவில்லை. அங்கே தானே போகிறோம் நேரில் அவரையே கேட்டு விடுவோம், தன்னால் யோசிக்கவோ துப்பறியவோ முடியாது என்று நினைத்தவள் தன் குறிப்பு அட்டையை அப்படியே முடி வைத்தாள்.
சென்னைக்கு ஏற்கனவே சென்றுவிட்ட அனுவிடம் அவளது அப்பா பொறுமையாக எதுவும் பேசவில்லை. வந்தாயா, சாப்பிட்டாயா, எத்தனை நாள் விடுமுறை என்பதுடன் நிறுத்திக் கொண்டவர், ஒன்று ரூமிலேயே அடைந்து கிடந்தார் அல்லது வீட்டு வீட்டை விட்டு வெளியே போனால் நேரம் காலம் இல்லாமல் வந்தார். அம்மாவின் புலம்பல்களுக்கும் பூஜை புனஸ்காரங்களுக்கும் ஈடு கொடுத்தே அனுஸ்ரீக்கு அலுப்பாகிப் போனது. பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்த ஒரு நாள் மிக நீண்டதாக மாறிப் போய்விட்டதாக உணர்ந்தாள்.
ட்ரெயினில் வந்ததால் அனுஸ்ரீயை விட ஒரு நாள் தாமதமாகவே பிரகல்யா அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வந்தவுடன் அனுவின் முகத்தில் அந்த ஒரு நாளில் அவள் முகத்தில் ஏற்பட்டிருந்த களைப்பு தெளிவாகத் தெரிந்தது. "ஹேய் ஏன் டி இவ்வளவு சோகமாக மூஞ்சி மெயின்டெயின் பண்ற? அனேகமாக உனக்கு பெப் டாக் (pep talk) குடுத்தே என்னோட வாழ்க்கையில பாதி கழிஞ்சிடும் போல.. சும்மா சும்மா மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு இருந்தேன்னா ஒரு கட்டத்துக்கு மேல எல்லாருக்குமே வெறுப்பாயிடும். பாத்துக்கோ" என்று அவளைத் தீவிரமாகவே கடிந்து கொண்டாள் பிரகல்யா.
'என்னை உனக்குப் பிடிக்கலையா' என்று அதற்கும் சோக ட்யூன் ஒன்றை வாசிக்க வாயெடுத்தாள் அனு. 'உனக்காக முக்கியமான ட்ரைனிங் அப்ப லீவெடுத்து இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கா.. பிடிக்காமலா செய்வா' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு தோழிக்குப் பிடித்த உணவுகளை அம்மாவிடம் சொல்லி செய்யச் சொல்வதற்காக விரைந்தாள். ஜனார்த்தனன் பிரகல்யாவைப் பார்த்து, "வாம்மா!" என்றவர், என்ன இந்தப் பெண் இங்கே என்பது போல் ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் நிறுத்திக் கொண்டார். அன்று அவரின் நீண்ட நாள் நண்பரும் உதவியாளருமான காசிராஜன் வந்திருந்தார்.
"எங்களை விட காசி அங்கிளைத் தான் உங்களுக்குப் பிடிக்கும் இல்லப்பா?" என்று அனுஸ்ரீ அடிக்கடி அப்பாவைக் கேட்பாள். அப்படி அவள் கேட்கும் போதெல்லாம் ஜனார்த்தனன் அவளது அம்மா பூரணியைப் பார்த்து முறைப்பார். 'நீ சொல்றதைத் தான் பிள்ளை கேட்டுட்டு வந்து அது பேசுது' என்பது போல் அவருடைய பார்வை இருக்கும். அனுவுக்குத் தெரிந்து ஜனார்த்தனன் தன்னுடைய சுய லாபத்திற்காக அதிகாரத்தை பயன்படுத்தியது, அதுவும் அடிக்கடி பயன்படுத்தியது காசிநாதன் விஷயத்தில் மட்டும்தான். அவருக்கு காசிநாதன் இல்லையென்றால் கையும் ஓடாது, காலும் ஓடாது. அவர் மாறுதலாகிப் போகும் பிரிவுகளுக்கெல்லாம் காசிநாதனுக்கும் டிரான்ஸ்பர் வாங்க கடும் முயற்சி எடுப்பார்.
ஐஏஎஸ் அதிகாரியைத் தூக்கி வேறு துறைகளில் போடுவது பெரிய விஷயம் இல்லை. ஒரு தட்டச்சரை, எழுத்தரை, அலுவலக உதவியாளரைப் பணி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது அரசு அலுவலகங்களை மிகக் கடினம் என்று பூரணி அனுவுக்குச் சொல்லி இருக்கிறார். கல்லூரியில் சேர்ந்து கொஞ்சம் உலகநடப்பு தெரிந்த பின்பு ஓரிரு முறை, "அப்பா எப்படியும் ஆறு மாசத்துல இந்த டிபார்ட்மெண்ட்டை விட்டு உங்களை மாத்திடுவாங்க. வீணா காசி அங்கிளையும் உங்க கூட இழுத்துக்கிட்டே போறீங்க. அவருக்கு புது இடம், புது ஆபீஸ்னு அலையுறதும், போய் வேலை பழகுறதும் கஷ்டம்ல?" என்பாள் அனுஸ்ரீ.
"அதெல்லாம் உனக்கு எதுக்கு" என்று புன்னகையுடன் கடந்து விடுவார் ஜனார்த்தனன். காசிநாதனும் அவரும் அலுவலக அறைக்குள் சென்று மறைவதைப் பார்க்க அனுஸ்ரீக்கு இந்தப் பிரச்சனையின் அடிநாதம் முழுவதையும் அப்பாவிடம் கேட்பதைவிட இந்த அங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. பிரகல்யாவுக்கு அதே சமயம் ஏனோ காசிராஜனைப் பார்த்தவுடன் பவித்ரா கதையில் வந்த மேனேஜர் செல்லப்பாவின் ஞாபகம் திடீரென வந்து போனது.
முந்தைய நாள் இருந்த கவலையிலும் பரபரப்பிலும் அனுஸ்ரீ எங்கே கதை எழுதியிருக்கப் போகிறாள் என்று பிரகல்யா நினைத்திருக்க, "ப்ரகல், வா வந்து சாப்பிடு.. சாப்பிட்டுட்டு நேத்து கொஞ்சம் எழுதியிருக்கேன். அதைப் பாரு.. என்னிக்கு அந்த காம்பெடிஷன் முடியுது. எத்தனை நாள் இருக்கு?" என்று கேட்டாள் அனுஸ்ரீ.
அவளை ஆச்சரியமாகப் பார்த்து வாய் பிளந்தாள் பிரகல்யா. 'அச்சச்சோ! போட்டிக்கா? இந்தக் கதையா? ஏண்டி இப்படிப் பண்ற? இதை ஏன் அனுப்பினே? பேசாம வித்ட்ரா பண்ணிக்கலாமா? எனக்குக் கதைல மேற்கொண்டு ஒண்ணுமே தோண மாட்டேங்குது.. இது தொடர்பா கனவும் வர மாட்டேங்குது' என்று கடந்து சில நாட்களாக புலம்பியவள் இதென்ன இப்படிப் பேசுகிறாள். அவள் உடம்பிற்குள் ஆவி கீவி புகுந்து விட்டதா என்று அவள் வினோதமாகப் பார்க்க,
"டோர் லாக்!" என்று சொல்லி திறந்த வாயை மூடு என்பது போல் சைகை காட்டினாள் அனுஸ்ரீ. பரபரவென பிரகல்யா அனுஸ்ரீ தன்னுடன் பகிர்ந்திருந்த கூகுள் டிரைவின் பக்கங்களைத் திறந்து பார்த்தாள்.
அனுஸ்ரீ பின்னர் கூகிள் டிரைவில் எழுதிய அடுத்த பதிவுகள்:
அது ஒரு அரசுப் பொது நூலகம். பவித்ரா ஆர்வத்துடன் அமர்ந்திருக்க, ஒரு பேப்பரை எடுத்து வைத்துக் கொண்டு அவளுக்குத் தன்னுடைய கண்டுபிடிப்புகளை ஒரு ஆசிரியை அருகில் நிற்கும் மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பது போல் ஒவ்வொன்றாக எழுதிக்கொண்டே சொல்லத் துவங்கினாள் வினோதா. அவள் பவித்ராவுடைய நீண்ட காலத் தோழி. ஃப்ரீ லான்சராகப் பல பத்திரிகைகளுக்கு செய்திகள் தரும் பத்திரிக்கையாளர். கல்லூரியில் படிக்கும் பொழுதே விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவள். அவளின் தோழி நான் என்று கூறிக் கொள்வதில் பவித்ராவுக்கு அலாதிப் பெருமை.
பவித்ராவிடம் இருந்த அவளது லேப்டாப்பைத் திரும்ப வாங்குவதற்காக வினோதா வந்திருக்க, அவளைப் பிடித்துக் கொண்டாள் பவித்ரா. தான் துப்பறிந்து சேர்த்து வைத்திருக்கும் குறிப்புகளைக் காட்ட இவள் தான் சரியான ஆள். இவளை விட்டால் வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்றெண்ணி புதிய வேலை தொடர்பாக அனைத்தையும் சொல்லி அவள் கருத்தைக் கேட்டாள். வினோதாவுக்கும் அப்போது முக்கியமான வேலைகள் எதுவும் இல்லை." நாளைக்கு உனக்கு லீவு தானே? நாம ரெண்டு பேரும் அந்த பப்ளிக் லைப்ரரில உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணலாம்" என்றாள் அவள். சொன்னதைப் போலவே இதோ இப்போது அரசு நூலகத்தில் இருக்கின்றனர்.
இவர்கள் பிள்ளையார் சுழி போட்டு பவித்ராவை வேலைக்கு அழைப்பு விடுத்த தேதியை எழுதத் தொடங்கிய நேரம், பவித்ராவின் ஃபோனில் ஒரு வீடியோ கால் வந்தது. அஜித்குமார் ஊரிலிருந்து அழைத்திருந்தான். "அக்கா! எப்படி இருக்கீங்க.. எங்க ஊருக்கு வந்ததிலிருந்து நம்ம ஆபீஸ் நினைப்பாவே இருக்குக்கா.. நேரமே ஓட மாட்டேங்குது. அங்கே அவ்வளவு பிஸியா இருந்துட்டு இங்க வந்து சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குறதுக்கு என்னமோ மாதிரி இருக்குக்கா" என்றான்.
"டேய் இங்கே? வேலை பார்த்த? நீ?" என்று பவித்ரா சலிக்க,
சற்றுத் தள்ளி வந்த அஜித், "ஹிஹி! அது ஒண்ணுமில்லைக்கா.. பக்கத்துல பிரெண்ட்ஸ் இருந்தாங்க அதான் சும்மா பில்டப் கொடுத்தேன்" என்று குரலைத் தழைத்துக் கொண்டு கூறியவன், "அக்கா இங்கே நான் நினைச்ச மாதிரி எந்த பிரச்சனையும் இல்ல.. எங்க அக்காவோட கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தைத் தூக்கிட்டு ஓடி வந்தேன்னு சொன்னேன்ல.. அப்பா வந்தவுடனே விறகுக் கட்டையால சாத்தப் போறாருன்னு நினைச்சுக்கிட்டே இருந்தா, இங்கே பணம் ரெடி ஆயிடுச்சாம். எப்படி ரெடியாயிருக்கு தெரியுமா? என் ஃபிரெண்ட்ஸ்ங்க சேர்ந்து அவங்க வச்சிருந்த காசைக் கலெக்ட் பண்ணிக் கொண்டு வந்து அப்பாட்ட குடுத்துட்டாங்க.. அடுத்த மாசம் கல்யாணம். இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம் இருக்கு. முடிச்சிட்டு வந்துருவேன் அக்கா. இவனுங்களையா விட்டுட்டு ஓடி வந்தேன்னு ஒரே பீலிங்க்ஸா போச்சுக்கா.. அப்புறம் அங்க வேற என்ன விசேஷம்?" என்று பேச்சை நீட்டிக் கொண்டே போக,
"டேய் நான் வெளியே ஒரு வேலையா வந்திருக்கேன். இதோ என் ஃப்ரெண்ட் பக்கத்துல உக்காந்திருக்கா.. அவ ஒரு ரிப்போர்ட்டர்" என்றபடி அலைபேசியில் வினோதாவைக் காட்டினாள் பவித்ரா.
"எனக்குக் கூட ரிப்போர்ட்டர் கிட்ட பேசணும் பழகணும்னு ரொம்ப ஆசை. அவங்க கிட்ட கேக்குறதுக்கு நான் நிறைய டவுட் வச்சிருக்கேன். கொஞ்சம் நல்லா போனைக் காட்டுங்க" என்றவன் வினோதாவின் முகம் திரையில் நன்றாகத் தெரிந்தவுடன்,
"ஹாய் ரிப்போர்ட்டர் அக்கா! நல்லா இருக்கீங்களா? நான் ஊருக்கு வர வரைக்கும் சென்னையிலேயே இருங்க. நான் உங்களை சந்திக்கணும். நிறைய டவுட் இருக்கு" என்றான்.
"ஹாய்! யாரைப் பார்த்தாலும் அக்கான்னு ஈசியா ஒட்டிக்கிறியே.. பரவாயில்லையே.. அப்படி என்ன டவுட் உனக்கு?"
"அதான்.. இந்த பிரபலங்கள், நடிகர் நடிகைகள் அவங்களோட வாழ்க்கையைப் பத்தி வர நியூஸ்.. அதெல்லாம் உண்மையா பொய்யான்னு உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்"
"ஹே தம்பி.. நான் கிசுகிசு ரிப்போர்ட்டர் இல்லைடா.. இது வேற மாதிரி" என்று கூறிவிட்டுத் தன் குறிப்பேட்டில் வினோதா ஆழ்ந்து விட,
தன்னை நோக்கி அலைபேசித் திரையைத் திருப்பிய பவித்ரா, "நம்மளோட ஆபீஸ் சீக்ரெட் பத்தி தான் நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்.. தொந்தரவு பண்ணாதே.. சாயங்காலமா கூப்பிடுறேன்" என்றாள்.
"அப்ப நான் நினைச்ச மாதிரியே சக்சஸ்ஃபுல்லா நாலு பேர் ஆயிட்டோம்" என்றான் அஜித்குமார்.
"என்னடா சொல்ற?" என்று பவித்ரா கேட்க
"அக்கா! நல்லா யோசிச்சுப் பாருங்க. எல்லா சினிமா, எல்லா கதைகள் இதுல எந்த ஒரு காரியமானாலும் நாலு பிரண்ட்ஸ் தான் முன்னாடி நிப்பாங்க. நாம மூணு பேரு தான் இருந்தோம். நாலாவது யாரை சேர்த்துக்கலாம்னு நெனச்சேன். இப்ப இந்த அக்கா வந்துட்டாங்க. நல்ல வெயிட்டா டிஸ்கஸ் பண்ணுங்கக்கா.. நான் வரும்போது நிறைய தகவல் எனக்காக வெச்சிருக்கணும் சொல்லிட்டேன். அப்புறம் நம்ம பப்ளிமாஸ் அண்ணனை கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க. நான் இல்லாம 10, 20 கிலோ குறைஞ்சிட போறார்" என்றவன் நினைப்பே துண்டிக்கும் முன் "அக்கா முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே! நம்ம சரவணன் பயலைத் தேடி போலிஸ் இங்க வந்திருக்காங்க.. அவன் என்ன வேலை பார்க்கிறான், அவன் மேல எதுவும் கேஸ் இருக்கா, அம்மா அப்பா மேல எதுவும் கேஸ் இருக்கா இப்படி எல்லாம் விசாரிச்சிருக்காங்க. ஒருவேளை எனக்கு வைக்கப்பட்ட ஆப்பா இருக்குமோ?" என்று கேட்டான்.
"இருக்கும்டா" என்ற பவித்ரா சண்முகசுந்தரம் வீட்டிற்குப் போலீஸ் வந்ததைச் சொல்லவில்லை.
வினோதாவிடம், "வினோ நான் சொன்னேன்ல எங்க கூட ஒர்க் பண்ற சண்முகசுந்தரம் வீட்டுக்கு போலீஸ் வந்தாங்கன்னு.. அதே மாதிரி இவனையும் தேடிப் போயிருக்காங்க. ஆக்சுவலா இவன் ஃப்ரண்டோட பேரைச் சொல்லிட்டு இங்க வேலை செய்துட்டு இருக்கான்.. அதனால அந்த ஃப்ரண்டு வீட்ல போய் சும்மா பேசிக்கா விசாரிச்சிருக்காங்க.. சண்முகசுந்தரம் கிட்டயும் என்ன ஒர்க் பண்றீங்க பேரன்ட்ஸ் எங்க இருக்காங்க அந்த மாதிரி கேட்டாங்களாம்.. இப்ப என்ன வேலைன்னு கேட்டதுக்கு இவன் குறிப்பா இந்த மாதிரி செக்கரட்டெரியேட்ல வேலைக்குப் போறேன்னு சொல்லாம ஃப்ரீலான்ஸா ப்ராஜெக்ட் வேலை பண்றேன் அது எதுன்னு ஏதோ சொல்லி சமாளிச்சு இருக்கான். அடுத்ததா என்னைத் தேடி எப்ப போலீஸ் வரப் போறாங்களோ?" என்றாள் பவித்ரா.
"அப்ப, நாம வேகமா துப்பறிய வேண்டிய டைம் வந்துடுச்சு.. வா வா நம்ம வேலையை பாப்போம். இந்த லைப்ரரியன் நம்ம ஃப்ரண்டு தான். அதனால அவர்கிட்ட பெர்மிஷன் வாங்கி தமிழின் நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கை, நம்பர் டூ, நம்பர் த்ரீ பத்திரிக்கை இத்தனை கட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று ஒரு பண்டிலைக் காட்டினாள். "இதெல்லாம் வேகமாக ஒரு கிளான்ஸ் பாரு.. நமக்கு யூஸ் ஆகுறதை புக் மார்க் வச்சு வை" என்றாள்.
இணையத்தில் எவை எவை ஹாட் நியூஸ் என்று தேடி தொகுத்தாள் வினோதா. பவித்ரா ஏற்கெனவே யாருக்கும் சொல்லாமல் ஒரு காரியம் செய்திருந்தாள். தான் தட்டச்சு செய்த நூற்றுக்கணக்கான பைல்களில் முக்கியமானவை என்று தனக்குத் தோன்றியவற்றை தன்னுடைய மெயிலுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தாள். பல நாட்களாய் ஒரு மெயில் கூட வராமல் காய்ந்து வரண்ட குளம் போல் கிடந்த அவளுடைய ஈமெயில் இன்பாக்ஸ் அந்த மெயில்களின் வரவால் நிறைந்து போய்க் கிடந்தது. அவற்றையும் நேற்றே மொத்தமாக வினோதாவுக்கு அனுப்பி இருந்தாள் பவித்ரா.
பவித்ராவை விடவும் வினோதா வேலையில் ஒரு படி மேல். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' கேட்டகரி தான். சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அந்த வேலைக்குள் மூழ்கி விடுவாள். அப்படி அவள் அந்த நூற்றுக்கும் மேற்பட்ட மெயில்களை வாசித்ததில் வளுக்கு ஒன்று பிடிபட்டது. இந்த 100 மெயில்களையும் மூன்று பிரிவுகளுக்குக் கீழ் அடக்கி விடலாம் என்பது தான் அது. தனித்தனியே மூன்று போல்டர்களை உருவாக்கி விதவிதமாக அனைத்தையும் பிரித்து வைத்திருந்தாள்.
நான்கைந்து மணி நேரம் இருவரும் செய்திகளை அலசி முடித்தவுடன் அவளிடம், "இந்த மூணு ஃபோல்டரையும் பாரு.. ஒன்னு போல இருக்குற ஃபைல்ஸை பிரிச்சுப் போட்டு வச்சிருக்கேன்.. முதல்ல இருக்குறது முழுக்க முழுக்க தமிழ்நாட்டுல கடந்த பத்து வருஷமா நடந்த சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பானது. இரண்டாவது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கின விஷயம். மூணாவது தான் ரொம்ப ரொம்ப சர்ப்ரைசிங்கான அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னன்னு சொல்லு பாப்போம்" என்று சொல்லிவிட்டு அவள் ஒரு நிமிடம் நிறுத்த..
"எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை.. சீக்கிரம் நீயே சொல்லிரு" என்றாள் பவித்ரா.
"சில வருஷங்களுக்கு முன்னால தமிழ் மக்கள் முழுக்க முழுக்க இதைப் பத்தி தான் பேசினாங்க. அந்த விஷயம் தான்" என்றாள் வினோதா.
"கொரோனாவா? அதைப் பத்தி தான் எல்லாரும் பேசினோம்"
"அது தமிழ் மக்கள் மட்டுமா, உலக மக்கள் எல்லாருமே தானே பேசினாங்க"
"வேற என்னடி? பொறுமையை சோதிக்கிற நீ" என்று பவித்ரா கூற,
வினோதா சொன்னதைக் கேட்டு தலை சுற்றி மயக்கமே வந்தது பவித்ராவுக்கு.
கனவுகள் பூக்கும்

Last edited: