அத்தியாயம் 17
‘குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்’, என்று அவனும், ‘குழப்பவாதியாக இருக்கிறானே’, என்று இவளும், எண்ணியபடியே தத்தம் வேலையை பார்ப்பதில் முனைந்தனர்.
நாட்கள் மெல்ல உருண்டு இரண்டு மாத காலம் முடிவுற்றிருந்தது. தரணியின் மண்டலா பயிற்சியும் முடிவுற்று சில நாட்கள் ஆகியிருந்ததால், ஜீவா ஆசிரமம் பக்கம் வருவது ஏறக்குறைய நின்று போன நிலைதான்.
நடுவே ஆசிரமத்தின் ஆண்டுவிழா வேறு வந்து சென்றது. அவள் பயிற்சிக்கூடத்திற்கும் தான். அதிலேயே நிறைய நேரம் கழிந்தது காவேரிக்கு.
பிள்ளைகள் வரைந்த ஓவியங்களை வாழ்த்து அட்டைகளாக்குதல், மற்றும் பலதரப்பட்ட கைவேலைகள், என்று சுற்றுச் சூழல் காப்பதற்கு என்று சாலைகளில் பெரிது பெரிதான சுவர்களின் படம் வரைவது என்று ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
சமூக ஆர்வலர்கள் துணையுடன், அனைத்தும் நல்லவிதமாய் நடைபெற்றன.
ஒரு சீராக வாழ்க்கை உருண்டு செல்வது போலத் தோன்றியது காவேரிக்கு.
அன்றைய வாக்குவாதத்திற்குப் பிறகு அவள் தந்தையும் மணந்து கொள் என்று அவளை நெருக்கவில்லை. இரண்டு மாதம் கெடு முடிந்தும் யாரும் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவ்வப்போது அவர் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு சர்வநிச்சயமாய் இருக்கிறது என்பது காவேரியின் அனுமானம்.
ஈஸ்வரின் தந்தை வழி முறைப்பெண் மணிமேகலை குறித்துப் பின்னர் எந்தப் பேச்சு வார்த்தையும் எழவில்லை. அவர்கள் வருவதும் ஏனோ தள்ளிப் போனது. ஊரில் வேலை இருப்பதாகவும், பிறகு வருவதாகவும், அதன் பின்னர் மணிமேகலையின் திருமணம் குறித்து பேசலாம் என்று தகவல் மட்டும் வந்தது.
எல்லாம் ஹேமாவால் என்று ஈஸ்வரின் தந்தை கோபால் மாத்திரம் புலம்பிக் கொண்டிருந்தார். நல்ல வரன் கை நழுவிகிறதோ என்ற கவலை அவருக்கு.. ஈஸ்வர் தான் தங்களுக்கு மருமகனாய் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாய் திட்டவட்டமாக அந்தப் பக்கத்தில் சொல்லிவிட, காவேரியின் ஒதுக்கமின்மையால், இவருக்குத் தான் இருப்பு கொள்ளவில்லை. தன் மனைவி ஹேமாவை விடாமல் திட்டிக் கொண்டிருந்தார்.
அப்படியிருக்க ஒரு நாள் காலையிலேயே காவேரியின் நண்பி சுரபியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
"ஏய் காவி, வீட்டில் இருக்கியாடி. உங்க வீட்டுக்கு இன்னிக்கு நானும் என் ஃபியான்சேவும் வரலாம்னு இருக்கோம். பத்திரிகை வைக்கணும். அப்பா அம்மாவும் வருவாங்க கூட. உன் பேரண்ட்சும் இருப்பாங்க இல்லையா?.."
வெகுநாட்கள் கழித்து வந்த சினேகிதியின் அழைப்பில் நிஜமாகவே சந்தோஷித்த காவேரி,
"ஓ. என்னடி இப்பத்தான் வழி தெரிஞ்சிச்சா எங்க வீட்டுக்கு வர? சரி சரி. வீட்டுக்கு வா நான் காத்திருக்கிறேன்..", என்று சொன்னவள் வெளியே புல்வெளியில் அமர்ந்திருந்த தாய் தந்தையிடம் விவரம் சொல்லிவிட்டு அவளும் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டிவிட்டு புல்தரை ஜில்லென்று காலில் படுமாறு தரையில் கால் பதித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அன்றைக்கு ஏதோ அரசு விடுமுறை நாளாதலால் அவள் பயிற்சிக்கூடத்திற்கும் விடுமுறை நாள். ஈஸ்வர் காலையிலேயே எழுந்து எங்கோ உரையாற்றச் சென்றிருந்தான்.
அன்றைக்கு அமிர்தா அவனிடம் ‘நீ யார் மத்தவங்களை இப்படி வாழு, அப்படி வாழு என்று சொல்ல’ என்றுக் கேட்டபின் அவன் சில பல நாட்களாக அமிர்தாவுடன் பேசுவதை அறவே தவிர்த்து வந்தான்.
ஆனால் அவள் காதுக்கு எட்டும்படியாய் ஒரு சில விஷயங்களை சொல்லவும் தான் செய்தான்.
‘தான் யாரையும் அங்கே வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்று அழைக்கவில்லை’ என்றும், ‘கூடவே எவருக்கு நிம்மதியின்மையோ ஏதேனும் பிரச்சனையோ படுத்துகிறதோ அவர்கள் தான் அவனைத் தேடி தாமாகவே ஒரு வழி கேட்டு வருகிறார்கள். மேலும் அவன் தானென்ன கடவுளா மக்களின் குறைதீர்க்க?, தனக்கு தெரிந்த விதத்தில் மனச் சாந்திக்காகச் சிலவற்றைச் செய் என்று கீதை வழியில் உபதேசிப்பதாகவும்,"பிடித்திருந்தால் எடுத்துக் கொள்வார்கள், இல்லையெனில் அவரவர் பாடு. இதில் தன்னை எதற்கு எகத்தாளம் செய்ய வேண்டும்?" என்று நேரடியாகவே காதில் படும்படி சொல்லிவிட்டான்.
காவேரியை எந்த விதத்திலும் தான் கட்டாயப்படுத்தவில்லை, மேலும் அவளுக்குமே அந்த உடன்படிக்கை சரியாக இருப்பதால் தான் அங்கே அந்தப் பயிற்சிக்கூடத்தை ஆரம்பித்திருக்கிறாள். மற்றபடி தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் விட்டேத்தியாய்க் கழன்று கொண்டான்.
சில காலமாக அவன் தம்பி சங்கரையும் உடன் அழைத்துச் சென்று கொண்டிருந்தான் ஆசிரமத்திற்கு.
அதுவே காவேரியைக் கொஞ்சம் ஒதுக்குவது போல் தோன்றியது தாத்தா ஹரிசந்திரனுக்கு. விட்டுப் பிடிக்கலாம் என்று அவருமே சற்றே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்.
"என்னடா குட்டிம்மா? சுரபி வரளா?, கூடவே அவ அப்பாவும் அம்மாவும்னு சொன்ன மாதிரி இருந்துச்சு?..", என்று கேட்டபடியே தாத்தாவும் வந்தமர்ந்தார்.
"ஆமாம் தாத்தா, கல்யாணத்துக்கு அழைக்க வராங்களாம்..”, என்றாள் சுருக்கமாக.
"வரட்டும் நல்லது நல்லது. கைலாசத்தைப் பார்த்து கொஞ்ச நாளாகிடுச்சு தான். பார்வதி நம்மூர்காரப் பிள்ளை. பாட்டிக்குக் கொஞ்சம் தூரத்து சொந்தம்னு கூடச் சொல்லலாம்..", என்று சுரபியின் தாயைப் பற்றி ஏதோ பேசினார் தாத்தா.
எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை காவேரி. அதற்கும் ஒரு காரணமிருந்தது.
அனைவரும் வந்துவிட, காலையிலேயே அந்த வீடு கலகலவென்று சந்தோஷமாய் இருந்தது வெகுநாட்களுக்குப் பிறகு.
வருணும் தருணும் கூட, சுரபியை வம்பிழுத்தபடி இருந்தனர். சுரபியின் வருங்காலக் கணவன் கார்த்திக்கும் வந்திருந்தான். கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக ஈஸ்வரின் ஆசிரம நிவாகத்தில் நல்ல ஒரு நிலையில் இருந்தான்.
கார்த்திக் சற்று சுமாரான பின்னணியிலிருந்து வந்தவன் என்றாலும் ஒரே ஊர் ஜாதி என்று கைலாசம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் காதலை அங்கீகரித்திருந்தார். அடுத்து ஒரே மகளான சுரபியை வெளியே அனுப்ப மனமில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாய் அவனைப் பேசி வைத்திருந்தார். கொஞ்சம் இருக்கப்பட்ட பின்னணி என்றால் அதற்கெல்லாம் உடன்படுவானா என்ன?
அனைவரும் கூடியிருந்த சபையில், தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம், பரிசுப்பொருள், பத்திரிக்கை என்று பாங்காய்த் திருமண அழைப்பிதழ் வைத்தனர் சுரபி வீட்டினர்.
பெரிய வெள்ளிக் கிண்ணத்தில், முந்திரி பாதாம் என்று வைத்துக் கொடுத்தனர் தாத்தாவிடம்.
தம்பதியராய்க் கொடுத்து வணங்கியவர்களை வாழ்த்தி பத்திரிகையைப் பெற்றுகொண்டனர் இவ்வீட்டினர்.
வெளியே தோட்டத்தில் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் இளையவர்கள்,
வருண் தான், "ஏய் காவி.உனக்கிருக்கும் கொஞ்சம் சுமாரான ஃப்ரெண்டு இவ தான். இப்போ இவளும் லிஸ்டில் கட். ரொம்ப போர் இனிமேல். சைட்டடிக்கக் கூட ஒரு வழியில்லாமல் செஞ்சிட்டியே. சே சே மோசம்..", என்று அலுத்துக் கொண்டவன், சுரபியிடம்,
"சுரபி இனி, உங்க வீட்டில் இன்னமும் எத்தனை டிக்கெட் இருக்கு? கொஞ்சம் முன் கூட்டியே சொல்லிட்டா நான் அதுக்கேத்த மாதிரி ரெடியாகி வருவேன்?..", என்று சுரபியிடம் துப்புக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"டேய் போதுண்டா. ரொம்ப வழியுது. ஜொள்ளு. அதெல்லாம் வேற இடத்தில் பாரு தம்பி. என்னோட கசின் சிஸ்டர்சை பாதுகாக்கும் அண்ணனாக் காவலனாக என்னோட கார்த்திக் வந்துட்டார்..”, என்று கார்த்திக்கை வம்பிழுத்தாள் சுரபி.
"அய்யோ அண்ணனா? என்னடி சொல்லறே. இப்படியெல்லாம் நான் ஒத்துக்கவே இல்லையே? வீட்டோடு மாப்பிள்ளை இல்ல சொன்னீங்க. நானும் என்னென்னவோ பிளான் போட்டேன். கடைசியிலே இப்படி ஊர்க்காவலன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டியே..", என்று தலையில் பொய்யாய்க் கை வைத்துக் கொள்ள,
"யோவ் மாப்பு உனக்கும் வச்சிட்டாளாய்யா ஆப்பூ..", என்று வருண் கலகலத்தான்.
"டேய் கொஞ்ச நாளா ஆசிரமத்துக்குப் போக வந்துட்டிருக்க, இன்னுமா உனக்கு அடக்கம் பணிவு, இதெல்லாம் வரலை. நம்ம சங்கர் அண்ணனைப் பார். விட்டா இப்பவே காவி போட்டுப்பான் ஈஸ்வருக்கு அடுத்தபடியா!.”
"என்னது காவியா? விடு ஜூட். சுரபி, உன் ஆளு தான் ஆசிரமத்தில் அட்மினில் இருக்காரு. பார்த்து, பத்திரம் உன்னையும் சாமியாரினி
ஆக்கிடப் போறாங்க..”, என்று கிண்டலடித்தான் வருண்.
ஒருகணம் அங்கே சட்டென்று சிரிப்பு நின்றது. ஒரு சங்கடமானப் பார்வையை காவேரியை நோக்கி வீசி கார்த்திக், "காவேரி உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே? நான் அங்கே இருந்து விலகிப் பத்து நாளாச்சு. சங்கர் அந்த பொசிஷனை பார்த்துக்கறார் இப்போ..", என்றான்.
காவேரிக்கும் அது ஒரு செய்தி தான். ஏனெனில் அவளுமே கொஞ்ச காலமாக அந்தப் பக்கம் அதிகம் போகாமல் ஒதுங்கித் தான் இருந்தாள். அன்றைக்கு பாதுகாப்பு பற்றி ஜீவா பேசிச் சென்றதுமே, முடிந்தவரை அவள் பயிற்சிக்கூடத்தில் புழங்கும் இடங்களையெல்லாம் சி சி டி வி கேமிராவில் தன்னுடைய நிர்வாக அறையிலிருந்து கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறாள் அவள். அதனாலேயே அதிகம் எங்கும் நகர்வதில்லை.
ஏதோ ஒரு விதத்தில் அவள் மனம், அந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒருவிதத்தில் நிலைகொள்ளாமல் தான் இருந்தது. அதனாலேயே அவளுக்கு ஆசிரம நிர்வாகத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் அதிகம் தெரியவில்லை. அதிலும் சங்கர் இப்போது கார்த்திக்கின் வேலையைப் பார்க்கிறான் என்பதும் புதுத் தகவல் தான்.
"ஓஹ், எனக்குத் தெரியாது கார்த்திக். ஏன் திடீர்னு விட்டுட்டீங்க? சொல்லலாம்னா சொல்லுங்க..", என்றவளைப் பார்த்து ஒருவித இனம்புரியா பாவத்துடன் தலையசைத்த கார்த்திக்,
"பெருசா ஒண்ணும் இல்லை. இங்கே சுரபி அப்பாவோட கம்பெனியில் ஜாயின் செஞ்சிட்டேன். அவ்வளவு தான்..", என்றவன் சட்டென்று வேறு பேசத் தொடங்கினான்.
'அவன் ஏதோ மறைக்கிறானோ?' என்று லேசான சந்தேகம் காவேரியின் மனதில் ஓடியது.
"ஓ, நல்ல வாய்ப்பு வந்தாத் தயங்காம எடுத்துக்கணும். அதைத் தான் ஈஸ்வர்ஜீயும் விரும்புவார். உங்களை மாதிரி திறமையான ஆட்கள் கிடைக்கிறது கஷ்டம்தான். ஆனாலும் உங்க எதிர்காலத்தையும் நீங்க நிச்சயம் யோசிச்சிருப்பீங்க..”, என்றாள் தன்மையாய்.
சட்டென்று யாரும் பார்க்குமுன், "அப்புறம்" என்பது போல் குறிப்புக் கொடுத்தவன், அடுத்த இரண்டு நாட்களில் அவளை சந்தித்துச் சில விஷயங்களைப் பகிர்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினான் பின்னர்.
ஆனால் அதெற்கெல்லாம் வேலை வைக்காமல் இன்னமும் சில விஷயங்களும் நடந்தேறின.