அத்தியாயம் 19
காலையில் எட்டரைக்கே அன்றைக்குக் கிளம்பிவிட்டாள் காவேரி.
முன் தினம் ஜீவா வந்து சத்தமிட்டு சென்றதற்குப்பின் வீட்டில் அது குறித்து யாரும் பேசாமல் மௌனம் காத்தனர். அனைவருக்குமே ஏதோ ஒரு விதத்தில் எங்கோ எதுவோ சரியில்லை என்பது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அது எது என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.
ஈஸ்வர் மட்டும் கடைசியில் காவேரியைப் பார்த்து, "இதோ பார், நமக்கு திருமணம் பேசியிருக்கிறார்கள் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ஆனாலும் யோசித்துப் பார். எந்தவித சாட்சியோ, இல்லை ஆதாரமோ இல்லாமல் அவன் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? நம் ஆசிரமத்தில்தான் இது நடந்தது என்பதற்கு அவன் ஒரு ருசு கொடுத்தால் கூட போதும். அனைத்தையும் நான் மூடி விடுவேன். மேலும், நம் ஆசிரமத்திற்கு வெளியே நடக்கும் எந்தவித நிகழ்வுக்கும் நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? எப்படியோ அவன் புரிந்துகொண்டால் சரி. எதிரிகள் அனைவருக்கும் உண்டு.. அதில் யார் யாரைக் குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள் என்பது அவரவர் தான் யோசித்து முடிவுக்கு வர வேண்டும்!..", என்று சொல்லிவிட்டு நிதானமாக டைனிங் டேபிளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஆப்பிளை எடுத்து துண்டங்களாக நறுக்கியவன் , அதன் மேல் உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி பழங்கள் எடுக்கும் ஃபோர்க்கால் குத்தி நாசூக்காய் உண்ணத் தொடங்கினான்.
"குருஜி.அப்போ அவன் சொல்வதெல்லாம் பொய் என்கிறீங்களா?..", என்று படபடப்பாய்க் கேட்டாள் காவேரி.
"அப்படியும் நான் சொல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் இது பழிபோடும் முயற்சியாய்க் கூட இருக்கலாமே.. முதலில், சில வருடங்களாக நாம் அங்கே போகிறோம், வருகிறோம். நீயும் ஒரு பெண் தானே? உனக்குப் பாதுகாப்பு இல்லை என்று தோன்றுகிறதா? யோசித்துவிட்டுச் சொல்லு. அடுத்து என் பெயரை கொஞ்சம் நாசம் செய்யலாமே என்று கூடத் தோன்றியிருக்கக் கூடும்? எனக்கு இதனாலெல்லாம் வருத்தமில்லை. எப்போதும் காய்த்த மரம் தானே கல்லடி படும். போகட்டும். நான் என் கடமையைச் செய்கிறேன். பலன் விதி விட்ட வழி. அந்த சர்வேசன் எனக்கு என்ன கிடைக்கவேண்டும் என்று வைத்திருக்கிறானோ அதுதானே கிட்டும்? நீ பத்திரமாக இரு. இதை உன்னுடைய உறவினனாக சொல்கிறேன். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட வேண்டாம்..”, என்று சொல்லிவிட்டு ஆப்பிள் தீர்ந்ததும் தன் கடமை முடிந்தது என்பது போல் அங்கிருந்து அகன்று சென்றுவிட்டான்.
இரவு முழுதும் தூக்கம் வராமல் மனதை உழப்பியபடி படுக்கையில் கிடந்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தலை பாரம் அதிகமாகி கண்கள் வலிப்பது போல் ஆகவும், இறுகக் கண்களை மூடிக்கொண்டு, அப்படியே தூங்கியும் போனாள்.
காலையில் எழுந்து வழமைபோல் தன்னுடைய கைப்பேசியில் குறுஞ்செய்திகளைப் பார்க்கத் தொடங்கினாள். கார்த்திக் அன்றைக்குக் காலையில் ஓரிடத்திற்கு வரச் சொல்லியிருந்ததைப் பார்த்தவள், சீக்கிரம் தயாராகத் தொடங்கி கிளம்பியும் விட்டாள்.
வியப்பாய்ப் பார்த்த அன்னையிடம், ஒன்றும் சொல்லாமல் முறுவலித்தவள், "இன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு மாம்..”, என்றவள், காலை உணவை வேண்டாம் என்று மறுத்துவிட்டு வெறும் ஒரு கிளாஸ் பாலை அருந்திவிட்டுக் கிளம்பிவிட்டாள் தன்னுடைய காரில்.
இப்போதெல்லாம் அதிகம் அவள் ஸ்கூட்டியில் செல்ல அவள் தந்தை அனுமதிப்பதில்லை. அன்றைக்கு ஜீவா, டிராப் செய்ய வந்ததே அவருக்குப் பிடிக்காதது போல் தோன்றியது அவளுக்கு.
அவள் வீட்டிலிருந்து சற்றே எதிர் திசையில் சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் பீச்சருகே அமையப் பெற்று இருந்த அந்த உணவகத்தில் ஓர் ஓரத்தில் இருந்த மேஜையில் அமர்ந்திருந்தான் கார்த்திக், கூடவே சுரபியும் தான்.
"ஹாய் சுரபி. ஹாய் கார்த்திக். சாரி ஒரு ரெண்டு நிமிஷம் லேட் ஆகிடுச்சு..", என்றாள் மென்மையாய்.
அந்த நேரத்திலும் நேர்த்தியாய் அலுங்காமல், கொஞ்சமும் தன் அந்தஸ்து, அழகு குறித்த கர்வம் இல்லாமல் சாதாரணமாக எளிமையாய் இருந்த தன் தோழியைப் பெருமையாய்ப் பார்த்த சுரபி,
"அதெல்லாம் ஒன்றுமில்லைடி. வா. சூடா இங்கே பொங்கல், வடை, சாம்பார் இருக்கும். இங்கே ரொம்ப ஃபேமஸ். சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..”, என்று அவளை அமரச் சொன்னாள் சுரபி.
சுரபி சொன்னது போல் அமிர்தமாய் வாயில் கரைந்தது வெண்பொங்கல். கூடவே சிதம்பரம் கொத்சுவும்தான்.
எப்போதும் மேட்டுக்குடியினர் செல்லும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு சென்று, பலவிதமான உணவுவகைகளை உண்டு பழகியவளுக்கு, அந்தச் சின்ன உணவிடமும், அதன், உணவின் தரமும் மிகவும் பிடித்துப் போனது .
"சூப்பர்டி சுரபி. இந்தமாதிரி வெண்பொங்கல் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..”, என்று சிலாகித்தவளை அன்புடன் பார்த்த சுரபி,
"இங்கே எல்லாமே அப்படித்தான் இருக்கும். நானுமே முதலில் வரும்போது இந்த இடத்தைப் பார்த்துத் தயங்கினேந்தான், ஆனால் இங்கே வந்து சாப்பிட்ட பின்னாலோ, அடிக்கடி இங்கே வரத் தொடங்கிவிட்டேன் கார்த்திக்கோடு..”, என்று சொல்லிவிட்டு கார்த்திக்குக்கு ஹைஃபை கொடுத்தாள்.
"ம்ம். இனி நானும் வருவேன் அடிக்கடி. அது சரி, சாப்பாட்டை விடு. என்ன கார்த்திக் வரச் சொல்லிவிட்டு, இப்படி பொங்கலைப் போட்டு வாயை மூடிவிடலாம்னு நினைக்கிறீங்களா? சொல்லுங்க என்ன விஷயம்?..", என்று ஊக்கினாள்.
அவளை ஒரு முறை நன்றாய் பார்த்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாய், "இதோ பாருங்க காவேரி, நான் சொல்லறதை நீங்க முழுதும் நம்பினாலும் நம்பாட்டாலும் எனக்கு கவலை இல்லைன்னு சொல்லமாட்டேன், ஏன்னா சுரபிக்கு நீங்க பெஸ்ட் ஃப்ரெண்ட். உங்க நலன்ல அவளுக்கு நிச்சயம் அக்கறை உண்டு. அதனால் எந்தவிதமான தப்பான விவரமும் அவ நிச்சயம் உங்களுக்குச் சொல்ல மாட்டாங்கிறதை நம்பணும்..", என்று ஆரம்பித்தான் பீடிகையோடு.
சுரபியும் கொஞ்சம் தீவிரமாகி, "ஆமாம் காவி, இவர் சொல்லறதை நம்பணும். உன் நல்லதுக்குத் தான் சொல்லறேன். எனக்கு உங்க ஈஸ்வர் அத்தானின் சில நீக்குப்போக்கான கொள்கைகள் சரின்னு தோணலை. இவருக்கும் அப்படித்தான். அதுனால தான் வேலையை விட்டுட்டார்..”
தோழியின் கூற்றில் லேசாய் மனம் விதிர்த்தாலும் காட்டிக்கொள்ளாமல், "சுரபி உன்னைப் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும், அத்தானையும் தெரியும், எனக்கே சில சமயங்களில் கொஞ்சம் சிலதெல்லாம் பிடிக்காமத் தான் இருக்கு..", என்றாள் காவேரி.
"அதே தான் சிஸ்டர், எனக்கும் தோன்றியது. சிலசமயம் மருத்துவப் பரிசோதனைகளுக்குன்னு வாலண்டியர்கள் போறது எல்லா இடத்திலேயும் உண்டுதான். ஆனால் ஆசிரமத்தில், தங்கி இருந்து வாழ்வியல் முறைகளை பயிலும் சில மத்தியதர வகுப்பினரை மட்டும் அனுப்புவது ஏன்? இதே பணபலம் படைத்தவர்களிடம் ஆசிரமத்தின் அணுகுமுறையே வேறு.. இன்னமும் நிறைய உண்டு, உணவிலிருந்து, அனைத்திலும் தர வேறுபாடு இருக்கிறது. சிலதெல்லாம் கண்கூடாகப் பார்க்கும்போது மட்டுமே உணர முடியும். இல்லாவிட்டால் இதெல்லாம் புத்திக்கோ அறிவிற்கோ புலப்படாது. மேற்பார்வை, கணக்குவழக்கெல்லாம் பார்த்ததால் நிறைய வேறுபாடுகள் புரிந்தது. ஆனால்..", என்று இழுத்தான்.
கார்த்திக் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், "ஏன் இதெல்லாம் ஈஸ்வர்ஜியிடம் சொல்லவில்லையா?..", என்று மட்டும் கேட்டாள்.
கிண்டலாக சிரித்த கார்த்திக். "ஈஸ்வர்ஜிக்கு அதற்கெல்லாம் நேரம் இருந்தால் தானே? எப்போதும் தன்னுடைய பேரும் புகழும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்று கணக்குப் போடவே அவருக்கு நேரம் பத்தவில்லை. போதாதற்கு இப்போது அவர் சகோதரன் அங்கே வந்த பிறகு சுத்த மோசம். அடிக்கடி, நிறைய ஃபாரீன் கார்கள் வந்து குவிகின்றன. வருகிறவங்களைப் பார்த்தால் முக்காலே மூணுவீதம் எல்லாம் பரட்டைத் தலை, குடுமி போட்ட ஹிப்பி கூட்டம். அதுவும் வெளிநாட்டுக்காரங்க.
லோக்கல் என்றால் பிரச்சனை என்பதால், ஏதோ கோவா பீச்சிலிருந்து அள்ளிக் கொண்டுவந்தது போல் இவனுங்க திரிகிறானுங்க. எவனைப் பார்த்தாலும், வெள்ளையும் சொள்ளையுமாகப் பைஜாமா குர்த்தா, கழுத்தில் கொட்டை நெற்றியில் சந்தனப் பட்டை என்று அட்டகாசமாய்த் தான் இருக்காங்க. ஈஸ்வர்ஜியின் உரைகளைக் கேட்க அவ்வளவு ஆர்வம். சொல்லக்கூடாது.. ஈஸ்வர்ஜியும் வஞ்சனையில்லாமல் தன்னுடைய வாழ்வியல் தத்துவ உரைகளை அள்ளிகொடுக்கிறார். அவர் அதை செயல்படுத்துகிறார் என்பதும் கூட உண்மையாகத் தான் இருக்கு. அவர் சொல்வது, நல்லா வாழு, வாழ விடு. உன்னால் முடிந்தவரை நல்லாச் சம்பாதி, அதைச் செலவழி, அன்பை அள்ளிக் கொடு, நல்ல எண்ணம், செயல், சொல் என்று எல்லாவற்றிலும் உண்மையாக எல்லோருக்கும் இருக்கும்படியும், தானும் தனக்கு உண்மையாக இருக்குமாறும் சொல்வதெல்லாம் வேற லெவல் தான். ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு செயல்படுத்தறாங்க அவரோட சிஷ்யகோடிகள் என்பதுதான் புரியலை. ஒரு சிலர் கண்ணில் கல்மிஷம் கட்டாயம் இருக்கு என்பதை அவர் ஏன் உணரலை? வெளுத்தது எல்லாம் பாலுன்னு நம்பவா முடியும்?..", என்று நிறுத்தினான்.
அவனையே பார்த்துகொண்டிருந்த காவேரி, "நீங்க சொல்வது புரியுது. எனக்குமே சிலசமயம் இந்தக் கூட்டங்களின் மேல் நம்பிக்கை இல்லை தான். ஏதோ ஒரு பேருக்காக, இந்தமாதிரி உரையாற்றல்களில் பங்கேற்பது பெருமை என்பது போல் தான் தோணுது. ஆனால் ஒரு சிலர் நிச்சயம் உண்மையானவர்களும் இருக்காங்க.. எது இருந்தாலும், திருடனே சொன்னாலும் கூட வேதம் வேதம் தானே. அதன் புனிதத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாதே. ஈஷ்வர்ஜி நிச்சயம் நல்ல தத்துவங்களைத் தான் போதிக்கிறார். முடிந்தவரை சந்தோஷமாக எப்படி வாழ்வது என்று சொல்லிக் கொடுக்கிறார். அவ்வளவே. மற்றபடி கூட இருக்கும் கூட்டம் கொஞ்சம் சரியில்லை என்பது எனக்குமே தோணுது தான். ஆனால் எல்லாத்தையும் அவரே செய்ய முடியாதே..”
"அது சரிதான் காவேரி. ஆனால். ஒரு சில விஷயங்கள் முடிவு செய்யும்போது நிச்சயம் பிரச்சனை என்னும் போது, அதற்கெல்லாம் சட்சியோ ஆதாரமோ கேட்டுக்கொண்டிருக்க முடியாது. நம் மனதின் சொற்படிதான் இயங்க வேண்டும்.."
"அதென்ன அப்படிப்பட்ட விஷயம்?"
"ம்ம்.உங்க இன்னொரு அத்தான் சங்கரின் சினேகிதன் ஒருவன், பெரிய இடம், பொறுப்பான தொழிலும் கூட, எப்போதும் ஆசிரமத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பான். அவன் பேரில் சில பாலியல் புகார்கள் இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனால் காசு பணம் இருக்குன்னு செஞ்சதையே மறைச்ச அயோக்கியன் அவன். இது நிச்சயம் உன் அத்தான் சங்கருக்குத் தெரியும். நானும் சொல்லிப் பார்த்தேன் உங்க ஈஷ்வர்ஜியிடம். ஆனால் அவர் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே யோசிக்கலை. ஒருவன் எப்பவும் கெட்டவனாகவே இருக்க முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனால் அந்த அயோக்கியன் எப்பவும் உங்க ஸ்கூல் பயிற்சிக்கூடம் பக்கம் சுத்திகிட்டே இருப்பான். இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. வேண்டாம்னு ஒதுங்கிட்டேன்..”, என்று சொல்லிமுடித்தான்.
"இதில் பாதிக்கப்பட்ட அந்த நபர் உங்களுக்கு வேண்டப்பட்டவரா? ஏன் கேக்கறேன்னா, இவ்வளவு நீங்க சொல்லறீங்கன்னா நிச்சயம் அதன் வீரியம் பெருசாத்தான் இருக்கணும்..", என்று சரியாக பாய்ண்ட்டைப் பிடித்தாள் காவேரி.
"ம்ம். என் ஃப்ரெண்டின் தங்கையைத் தான் ஃபேஸ்புக் வழியே மடக்கித் தொந்தரவு கொடுத்தான் அந்த ராஸ்கல். நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். அவன் பேர் ரஞ்சித். அவன் ஒரு டாக்டர் கூட. சிலருக்கு கவுன்சலிங்க் கொடுக்க வருவான். போதாதற்கு இந்த ஆசிரமத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரின் மகன். இன்ஃபேக்ட் ஜீவா சார் இதில் முதலீடு செய்யாததற்குக் காரணமே அவனுடைய குடும்பத்தினர் இதில் முதலீடு செய்வதனால் தான். அவருமே அவங்க குடும்பத்துக்கு குளோஸ் ஃப்ரண்டு தான். ஆனா அவருக்கு ரஞ்சித்தின் நடவடிக்கைகள் பிடிக்காது. எதிர்காலத்தில் ரஞ்சித் இதில் தலையிடாமல் இருக்க மாட்டான், அவனோடு வீண் மனஸ்தாபம் வேண்டாம்னு ஜீவா, இதிலிருந்து ஒதுங்கிவிட்டார்னு கேள்வி."
காவேரிக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
‘இவன் சொல்லுவதைப் பார்த்தால். இதில் ஆசிரமத்தின் பங்கும் இருக்கக் கூடுமோ?. அதெப்படி.. ஜீவா நிச்சயம் இங்கே தான் ஏதோ பிரச்சனை என்று சொல்கிறான். ஈஸ்வர் மறுக்கிறார். ஆனால் கார்த்திக் கொடுத்த புள்ளிகளை கோர்த்துப் பார்த்தால், எப்படி? இருக்குமோ?’ என்று பல கேள்விகள் மனதில் தொக்கி நின்றன.
ஆனால் எதையும் அப்போது காட்டிக் கொள்ளாமல்,
"நீங்க சொல்வதெல்லாம் ஓ.கே.தான். ஆனால். நம் ஆசிரமத்தில் அந்தமாதிரி எதுவும் அவனால் பாதிப்பு நேர்ந்ததை நீங்க பார்த்தீங்களா?.." என்று கேட்டே விட்டாள்.
ஒரு கணம் கண்மூடித் திறந்தவன், "நேரடியாக இல்லை. ஆனால், சிலசமயம், கவுன்சலிங்க் போது நிறைய நேரம் எடுப்பான்..”, என்றான் சங்கடமாய்.
மீண்டும் தலை கிர்ரென்று வந்தது. இவளே சில குழந்தைகளையும் பெண்களையும், மெடிகல் செக்கப்புக்கு ஆசிரமத்துக்கு அனுப்பி வைப்பாள். ஏன் தரணியைக் கூட சிலமாதங்களுக்கு முன் அனுப்பியிருந்தாள் தியானப் பயிற்சிக்கு!
அப்போது எதுவும் இருக்குமோ?
அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல், அவர்களிடமிருந்து விடைபெற்றவள், இலக்கின்றிச் சுற்றிவிட்டு வீடு திரும்ப, அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவளுக்கு.