Malini Sundar
Member
மஹியை அழைத்து வர , அனைவரும் மருத்துவமனை செல்ல, டாக்டர் ராகவை அழைத்தார்.
" ஹலோ ஆங்க்ரி யங்க் மேன். கொஞ்சம் எங்கூட வாங்க "
" ம்ம்ம்ம் "
" உக்காருங்க "
" என்ன ராகவ்னே கூப்பிடலா... அதான் என் பேரு "
" ஆல்ரைட் ராகவ்.. நா உங்கள எதுக்கு வர சொன்னேன்னா , மஹல்சாகிட்ட டைம் கிடைக்கும் போதெல்லாம் பேசுங்க "
" ஓகே டாக்டர். சாரி அன்னைக்கு...."
" தட்ஸ் ஓகே.. என்ன படிக்கறீங்க.."
" ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் "
" க்ரேட்.. ஆல்ரைட் தென். இன்னிக்கு நீங்க கூட்டிட்டு போலாம் ராகவ். எனி ஹெல்ப், எனி டைம் கால் மீ ..ஓகே. டோன்ட் ஹெசிடேட் "
" ஓகே டாக்டர் " என அவரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான். மஹியை அனுமதித்திருந்த அறைக்கு சென்றவன்
" மஹி.. நம்ம வீட்டுக்கு போக போறோம். நீ சீக்கிரம் முன்ன மாறி எங்கூட மொக்கை போட தான் போற , நா ம்ம்ம்ம்னு கேக்கபோறேன்.. போலாமா " என பேசிக்கொண்டிருந்தான்.
சுமதிக்கும் ராஜனுக்கும் மனம் மிகுந்த வருத்தத்தில் இருந்தது என்னவோ உண்மை என்றாலும் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்கள். வீட்டிற்கு வந்து மஹியை அவள் அறையில் படுக்க வைத்தவன், கூட வந்த செவிலிக்கு உதவினான்.அவர் இவர்களுக்கு பின்பற்றவேண்டிய அனைத்து அறிவுறைகளையும் கூறிவிட்டு கிளம்பினாள்.
" மா... பா... ரெண்டு பேரும் கொஞ்சம் இங்க வாங்க " - ராகவ்..
வயதின் முதிர்ச்சி முகத்தில் தெரிவதை அப்போது தான் அவன் கவனித்தான்.
" அம்மா.. மஹிய நம்ம எப்படியாது மீட்டு கொண்டு வரணும் "
" என் பொண்ணு இப்படி இருக்காளே ராகவ்" என அழுதார் சுமதி.
" அம்மா ..மொத அழுவறத நிறுத்து. மொதல்ல நம்ம தைரியமா இருக்கனும். அப்போ தான் அவள சரி பண்ண முடியும். அம்மா அவ என்ன தைரியமா இருன்னு சொல்லிட்டு போய்ருக்கா.. நிச்சயம் சரி ஆகிடுவா. நீ தேவை இல்லாம அழாத.அப்பா அம்மாக்கு சொல்லி புரிய வைங்க . அப்றம் டாக்டர் அவை கிட்ட நிறைய பேச சொல்லிருக்கார். சரியா. "
" சரி தங்கோ.."
அன்று முதல் அது வாடிக்கை ஆனது.
சுமதி அனைவரையும் அனுப்பிவிட்டு முழு நேரமும் மஹியுடன் செலவிட்டார்.
" மஹி.. இன்னைக்கு நா என்ன செஞ்சிருக்கேன் தெரியுமா... உனக்கு பிடிச்ச காளான் குருமா.. ஒரு வாய் சாப்பிடுமா " எனும் போதே உடையும் குரலை, அம்மா நீ மொதல்ல அழாத என பின் மண்டையில் ஒலிக்கும் ராகவின் குரல் சரி செய்யும். சட்டென ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு
" நீ சீக்கிரம் வா.. நா உனக்கு நல்லா காரசாரமா செஞ்சு தரேன் டீ தங்கோ " என்பார்.
மஹிக்கு செடி வளர்ப்பதில் அலாதி பிரியம். தோட்டத்தில் எக்கச்செக்கமாக செடி நட்டு வளர்த்திருந்தாள். அதோடு பேசுவது , அது வாடினால் ராகவிடம் புலம்புவது என அனைத்து வித்தியாசமான வேளைகளையும் செய்வாள். அதை இப்போது சுமதி செய்து கொண்டிருந்தார்.
" மஹி.. நீ வெச்ச தர்பூசணி காய் விட்டுருக்கு மா "
" அந்த செவ்வரளி செடி பூக்க ஆரம்பிச்சிடுச்சு..."
" அன்னைக்கு அழுகின வெங்காயத்த போட்டியே , அது கூட வளந்திருக்கு . வெங்காய பூவ நான் இப்போதான் பாக்கறேன்..சின்ன சின்னதா அழகா இருக்கு "
" அந்த அவர கொடி படர ஆரம்பிச்சிருக்கு " என நாளுக்கு ஒன்றாய் சொல்வார். மஹியிடம் இருந்து எப்பொதும் வரும்,
" செம்ம மா.. அடுத்து நம்ம காய்யெல்லாம் போடலாம் " என்ற பதில் மட்டும் வரவே இல்லை.
ராஜனும் தன் பங்கிற்கு வேலை முடித்து வந்ததும் மஹியை பார்க்க சென்று விடுவார்.
" மஹி... நா அப்பா மா.. நல்லா இருக்கியா.. இப்போவும் நீ உனக்கு பிடிச்சததா செய்யறியா.. எல்லாரும் சிரிங்கன்னு அடிக்கடி சொல்லுவியே , இப்டி இருந்தா நாங்க எப்படி சிரிக்குறது."
ஒன்றும் பதில் இருக்காது.
இப்போதெல்லாம் இவர்கள் சாப்பிடுவது மஹி அறையில் தான். அவளுக்கு தான் ராகவிடம் இருந்து அபேஸ் பண்ணி சாப்பிட ரொம்ப பிடிக்கும். சுமதியுடன் சமையலில் உதவி செய்வது அவளுக்கு பிடித்த ஒன்று. அவள் செய்யும் மீன் வருவலுக்கு அனைவரும் அடிமைகள்.ராகவை சொல்லவே வேண்டாம். முக்கால்வாசி அவன் தான் சாப்பிட்டிருப்பான். அதே போல் மஹியின் ஃபில்டர் காஃபிக்கு அனைவரும் தினமும் காத்திருப்பர். ராகவிற்கு சமையல் பற்றி தெரிந்தது டீ, காஃபி , அப்றம் ஆம்லேட். இதை தவிர நன்றாக சாப்பிடத் தெரியும். சுமதி பூரி போடும் போது கிட்சன் மேடை மேலேயே அமர்ந்து முதல் சுற்று சாப்பாட்டை முடித்துக்கொள்வான். நடுவில் கிண்டல் செய்ய வரும் மஹியின் வாயையும் ஒரு வாய் பூரியை வைத்து அடைத்துவிடுவான். இப்போது இவை அனைத்தும் நினைவுகள் மட்டுமே..எல்லாம் இருக்கிறது, மஹியும், வீட்டை அதிரவைக்கும் அவளின் சிரிப்பை தவிர.
ரஞ்சனி படிப்பு மருத்துவமனை என இருந்தாலும், நடுவில் கிடைக்கும் நேரம் எல்லாம் அவளை வந்து பார்த்து செல்வாள்.
ராகவ் காலையில் எழுந்ததும் முதல் குட் மார்னிங் மஹிக்கு தான். நாளின் கடைசி வார்த்தையும் அவளுக்கு தான். கல்லூரி சென்ற நேரம் போக மீதி நேரம் எல்லாம் மஹியை தன் பார்வையிலேயே வைத்துக் கொண்டான். அவளுக்கென்று தூங்குவதற்கு முன் இரண்டு மணி நேரம் ஒதுக்கினான், பழைய கதைகளை அசைபோட. ஒன்றிரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், ராகவிற்கு ஒரு நாள் அதீத வறுத்தத்தில் குடிக்க, வீடு திரும்பும் போது மஹியை பார்த்த டாக்டர் இவனை பார்த்து விட, அவன் நிலையில் இல்லததால், வீட்டில் வந்து விட்டுச்சென்றார். அடுத்த நாள் தன்னை வந்து சந்திக்க சொல்லும்படி. அவன் குடித்துவிட்டு வந்தது ராஜன் , சுமதி இருவருமே அதிர்ச்சியானாலும் அவனிடம் ஏதும் கேட்கும் நிலைமையில் அவர்கள் இல்லை. பதில் சொல்லும் நிலைமையில் அவனும் இல்லை. அன்று ராஜனுடன் அவனை இருத்திவிட்டு , மஹி அறைக்கு சுமதி சென்று படுத்துக்கொண்டார்.
காலை விடிந்ததும் தான் ராகவ் தான் உறங்கிய இடம் தெரிய எழுந்து , மஹியை பார்த்துவிட்டு , குளித்து கல்லூரிக்கு கிளம்பினான்.
" ராகவ்.."
" என்ன மா..."
" காலேஜ் முடிச்சிட்டு மஹிய பாக்குற. டாக்டர போய் பாத்துட்டு வா "
" அவர எதுக்கு இப்போ பாக்கனும் "
" அவரு தான் நேத்து உன்ன விட்டுட்டு போனாரு "
" சரி.. பாக்கறேன் மா "
மாலை கல்லூரி முடிந்து அவரை பார்க்க சென்று காத்திருந்தான். காத்திருக்கும் சமயத்தில் தன் மொபைலில் உள்ள புத்தகளில் ஒன்றை படித்தவண்ணம் இருந்தவனை , தன்னை கூப்பிடும் சத்தத்தில் மூடி வைத்தான்.
" மிஸ்டர் ராகவ் "
" நா தான் "
" டாக்டர் கூப்பட்றாரு "
" தோ வரேன்."
" வாங்க ராகவ் "
" தேங்க் யூ டாக்டர் "
" ம்ம்ம்ம்.."
இருவரும் சற்று அமைதியாகவே இருக்க , டாக்டரே ஆரம்பித்தார்.
" இதுக்கு தான் நான் அவங்கள பாத்துக்கறது ஈசி இல்லைன்னு சொன்னேன் "
" புரியல "
" நேத்து நீங்க இருந்த நிலைமைய பாத்துருக்கனும் "
" ம்ம்ம்ம்"
" என்ன ராகவ்க்கு பேச வரலியா இப்போ.. அதிசயமா இருக்கே "
" அப்டி இல்ல டாக்டர் "
" பின்ன எப்டி " அவனிடம் பதில் இல்லை.
" சரி. என் ட்யூடி டைம் முடிஞ்சிடுச்சு . வாங்க வெளிய போய் பேசலாம் "
" ம்ம்ம் "
" தம் அடிப்பீங்களா ராகவ் "
" ம்ம்ம்ம் "
" சரி வாங்க " என தான் வழமையாக போகும் பெட்டிக்கடைக்கு சென்று
" கோல்டு ஃப்ளேக் கிங்ஸ் ரெண்டு "
கடைக்காரர் எடுத்துக்குடுக்க , ஒன்றை தானெடுத்துக்கொண்டு மற்றொன்றை ராகவிற்கு கொடுத்தார். வத்திப்பெட்டி வாங்கி பத்தவைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டு
" சொல்லுங்க ராகவ் "
" என்ன சொல்ல "
" நீங்க இப்டி பேசுறது தா எனக்கு ரொம்ப பிடிக்குது "
மெல்லியதாக சிரித்தான் ராகவ்.
" மஹி எப்டி இருக்காங்க .தினம் பேசறீங்களா "
" ம்ம்ம்ம "
" ம்ம்ம உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தயா "
" மஹியும் இப்டி தான் கேப்பா "
" ஓ.. ஆனா அவங்கள குணப்படுத்த நீங்க சின்சியர் எஃப்போர்ட்ஸ் போடுற மாறி தெரீலயே "
அமைதியாய் ஒரு முறை சிகரெட்டை இழுத்தவன் புகையை வெளியே ஊதிவிட்டு
" அப்டி இல்ல டாக்டர். மஹிய மொத மொதல்ல பாத்தபோ இருந்த மாறி இருக்கா. அப்போ கூட அவ பேசலனாலும், அவ கண்ணு பேசும். அவள இப்டி என்னால பாக்க முடியல. நா எல்லாரையும் தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு , என்னாலயே அப்டி இருக்க முடியல "
" ம்ம்ம்ம். சரி மஹிகிட்ட பேசறீங்களா "
" ம்ம்ம்ம் "
" நீங்க என்ன பேசரீங்கன்னு நா கேக்க மாட்டேன். ஆனா நீங்க பேசுறது அவங்க நியாபகங்கள தூண்டர மாறி இருக்கட்டும். அவங்க ரொம்ப ரசிச்ச , சிரிச்ச நினைவுகள். அவங்க தைரியமா எதையாவது ஃபேஸ் பண்ண மொமென்ட்ஸ், அவங்க ஜெயிச்ச நினைவுகள்.. இந்த மாறி நியாபக படுத்துங்க.
நிச்சயம் ரெஸ்பான்ஸ் வரும் .உடனே இல்லைன்னாலும் நிச்சயம் வரும் "
"தேங்க்ஸ் டாக்டர் " தம்மை முடித்துவிட்டு இருவரும் தத்தம் வீடு நோக்கி பயணித்தனர். ராகவ் மனதில் பல எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தான்.
" வா தங்கோ. என்ன டயர்டா இருக்க.. டீ தரவா " என சுமதி கேட்டார்.
" ம்ம்ம. உனக்கும் போட்டுட்டு மேல எடுத்துட்டு வரியா "
" சரி தங்கோ "
ரூமிற்கு சென்றவன் முகம் கழுவி, அடுத்த நாள் சனி என்பதால் வேலைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தான். பின் மஹி ரூமிற்கு வந்தவன், அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். மஹியை பார்த்த முதல் நாள் முதல் அன்று அவள் அழுதது வரை பல நினைவுகள் வர, இவை அனைத்தையும் அவளுக்கும் நினைவு கொணர தான் செய்யப்போவதாக முடிவு செய்தான். அதன் முதல் முயற்சியாக இன்று வெறுப்பேற்றும் படலம்.
சுமதி இஞ்சி டீ போட்டு எடுத்து வர , அதை வாங்கிக்கொண்டு மஹி அருகில் அமர்ந்தவன், ஒரு மிடரு அருந்தி விட்டு
" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...மா... டீ செம்ம மா.. இந்த மஹி பாரு இத மிஸ் பண்றா "
" என்ன தங்கோ பண்ற "
" நிஜமா தா மா. டீ இன்னிக்கு செம்ம. மஹி போடுற டீலாம் ஒரு டீயா "
ஒன்றும் விளங்காமல் ராகவை பார்த்தார் சுமதி. டீ குடித்து முடித்தவன்
" மா.. நைட்டுக்கு சப்பாத்தியும் , காளான் குருமாவும் பண்றியா நல்லா காரமா ?"
" சரி தங்கோ " என தன் வேலையை பார்க்க சென்றார்.
மஹியை எப்படியேனும் எழுப்ப வேண்டும் என்ற ஒரு முடிவோடு அடுத்து செய்ய வேண்டியவைகளை முடிவுசெய்தான் ராகவ் ...
( வளரும் ...)