Malini Sundar
Member
" அம்மா......" என ராகவ் கத்தவும் , அனைவரும் கூடிவிட , கையில் பென்சிலுடன் தலை கவிழ்ந்து அவள் அமர்ந்திருக்க , தன் வலியையும் தாண்டி அவளை பார்த்தது ராகவின் சின்ன கண்கள்.
அதற்குள் ஆசிரியர் வந்துவிட, மாணவர்கள் அனைவரும் நடந்ததை ஆசிரியரிடம் கூறிவிட்டனர்.
குச்சியை எடுத்து கையை நீட்டச்சொல்லி ஒரு அடி வைத்தார் விளையாட்டு ஆசிரியர். அப்போதும் அவள் அமைதியாக வாங்கிக்கொண்டாளே தவிர கத்தவோ எதிர்க்கவோ அழவோ இல்லை. இரண்டாவது அடி அடிப்பதற்கு குச்சியை ஓங்கும் போது ராகவ்
" சார். விடுங்க . எனக்கு இப்போ ரொம்ப வலிக்கல " என்றான்.
பட்டென அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையை தொங்கவிட்டாள். மாணவர்கள் அனைவரும் நேரமானதால் வகுப்பிற்கு செல்ல ராகவும் தொடையில் வந்த சிறிது ரத்தத்தை தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு இரண்டு அடி எடுத்து வைத்து மறுபடியும் திரும்பி பார்த்தான். அவள் வருவதாக தெரியவில்லை. திரும்பி நடந்தான் வகுப்பிற்கு.
டிங் டிங் டிங் டிங் என இறுதி மணி அடிக்கவும் ," ஏ......." என்ற கத்தலுடன் அனைத்து மாணவர்களும் வகுப்பில் இருந்து வெளி கேட்டை நோக்கி ஓடினர். தன் பையை மாட்டிய ராகவ்
" வீட்டுக்கு போல... இங்க கொஞ்ச நேரத்துல பேய்லாம் வருமாம் " என கூறினான். ஒன்றும் பதில் இல்லை. ஏதேற்சியாக அவள் கை பென்சிலை தொட , ராகவ் மனதிற்குள்
" ஆத்தீ... மறுபடியுமா " என நான்கு அடி பின்னால் நகர்ந்தான்.
" இரு இரு எங்க அம்மாட்ட சொல்றேன் உன்ன... " என சீண்டினான் , அப்படியாவது அவள் வாயை திறப்பாள் என. ம்ம்ம்ஹீம்ம்ம். அவனது அனைத்து முயற்சிகளும் வீணாயின. மெதுவாக எழுந்தவள் காலை போல் பையை நெஞ்சோடு இறுக்கி பிடித்தவண்ணம் கேட்டை நோக்கி நடந்தாள்.
ராகவின் ரிக்ஷா வராததால் , அவன் காத்திருக்க , அவளும் தன் பாட்டி கற்பகத்திற்காக காத்திருந்தாள். ஓட்டமும் நடையுமாக ஒரு பக்கம் கற்பகம் வர , மறுபக்கம் ரிக்ஷா வந்தது.
கற்பகத்தை பார்த்து அவள் செய்ததை பற்றி ஆசிரியர் விவரம் கூற , அங்கேயே விழுந்தது தலையில் ஓர் அடி. இதை ரிக்ஷாகாரனிடமும் கூறி ராகவ் வீட்டில் தகவல் சொல்லுமாரு கூறினார் ஆசிரியர். ரிக்ஷாகாரனின் கையை பிடித்தவண்ணம் ராகவ் ஒரு திசையில் நடக்க , அவளை கற்பகம் மறு திசையில் திட்டியபடி தரதரவென இழுத்து சென்றார். ராகவ் திரும்பி பார்க்க , அவளும் அவனை பார்த்துக்கொண்டே நடப்பது தெரிந்தது.
" பை " என்பது போல் இவன் கையாட்ட, பதில் ஒன்றும் இல்லை. அதே கண்ணீர் சிந்தாத பார்வை மட்டும் நிலைத்திருந்தது ராகவின் மேல்.
வீட்டிற்கு வந்ததும் ரிக்ஷாகாரரிடம்
" நா சொல்லிக்குறேன் அம்மாகிட்ட. நீங்க போங்க " என கூறி அனுப்பினான்.
" சரி தம்பி. ஆனா கண்டிப்பா சொல்லீரு.. என்னா " என அவர் கிளம்பினார்.
" அம்மா..." என கூப்பிட்டுக்கொண்டே அவன் வரவும் அடுப்படியில் இருந்து கையில் காப்பியுடன் ராகவின் அம்மா சுமதியும் வந்தார்.
" வா தங்கோ.. கை கால் கழுவிட்டு வா.. காபி குடி "
" ம்ம்ம். சரி மா " என ஓடினான் ராகவ். அவன் வருவதற்குள் சுமதி மீண்டும் அடுப்படிக்கு சென்று இன்னும் இரண்டு காபியுடன் வந்தமர்ந்தார். ராகவ் முகம் கழுவி , உடை மாற்றி வரவும் , ரஞ்சனி க்ருஷ்ணா ராகவின் அக்கா பள்ளியில் இருந்து
வரவும் சரியாக இருந்தது. ராகவிடம் சொன்ன அதையே ரஞ்சனியிடம் சொன்னார் சுமதி. மூவரும் காபி அருந்தி அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
ரஞ்சனி - ராகவை விட ஐந்து வயது மூத்தவள்.ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ரொம்ப சாது, அதிர்ந்து பேச மாட்டாள்.தன் வீட்டுப்பாடத்தை முடிக்க சென்றாள்.
சுமதி க்ருஷ்ணா, ரஞ்சனி- ராகவின் செல்ல அம்மா. மிகவும் அன்பானவர்,பிள்ளைகளை அடித்து வளர்க்காமல் அன்பாய் சொல்லி வளர்ப்பவர். அதற்காக செல்லம் கொடுத்து கெடுப்பது போன்றில்லை. பிள்ளைகளின் மீது அதீத பாசம் கொண்டவர். வீட்டு நிர்வாகம் , குழந்தைகளின் படிப்பு என எதையும் முகம் சுளிக்காமல் செய்யும் அர்மார்க் இல்லத்தரசி.
ராஜன் க்ருஷ்ணா - இந்த அழகிய கூட்டின் ராஜா. அரசு பொதுப்பணித்துறையில் இருப்பவர். இவருக்கும் பிள்ளைகள் மீது எக்கச்செக்கமாய் பாசம். இருப்பினும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்புடன் இருப்பார்.
வீட்டின் கடைக்குட்டி ராகவ்.. படு வாலானவன். நண்பர்கள் குழு ஒன்றை வைத்திருந்தான் இப்போதே .பெரிய தாதா என நினைப்பு அவனுக்கு. நண்பர்களுடன் சேர்ந்து கெத்து காட்டி திரிவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் வம்புக்கும் அவனாக போக மாட்டான். வரும் வம்பை விடவும் மாட்டான்.புதிதாக சேர்ந்த பெண்ணுடன் அவன் இவ்வாறு இருப்பது அவன் குழுவிற்கும் , ஏன் அவனுக்குமே ஆச்சரியம் தான். இதே வேறு யாராவது குத்தி இருந்தால் இவன் இரண்டாக திருப்பி கொடுத்திருப்பான். இப்போது காபியை குடித்துவிட்டு தனது முக்கியமான வேலையான நண்பர்களுடன் விளையாட சென்றுவிட்டான்.
மாலை மங்கிய நேரத்தில் ராஜன் வீடு திரும்ப , அவருக்காக அனைவரும் காத்திருந்தனர். அன்றும் எப்போதும் போல் அவரிடமிருந்து மது வாடை வந்தது. அவரிடம் பல முறை சுமதி கூறியும் அவர் அதை விடுவதாக தெரியவில்லை. அளவாக அருந்துவதால் இவரும் நாளடைவில் விட்டுவிட்டார். அவர் தினம் வாங்கி வரும் தின்பண்டத்திற்காக ரஞ்சனியும் , ராகவும் காத்திருப்பர். அவர் வந்ததும் அனைவரும் கதை பேசி உணவு உண்பர். இது அவர்கள் வீட்டில் எழுதப்படாத பாசச்சட்டம். இரவு மணி ஏழரையை தொட வீடு திரும்பினர் ராஜனும் ராகவும்.
" அப்பா....." என ரஞ்சனியும் ராகவும் அவரை சூழ்ந்துகொள்ள
" கண்ணுங்களா " என அணைத்துக்கொண்டார்.
" திங்க என்ன வாங்கிட்டு வந்த பா " என ராகவ் கேட்க
" என்ன சொல்லு பாக்கலாம் "
" தெரீல பா.. நீயே சொல்லு "
" சரி இரு. முகம் கழுவிட்டு வரேன். சாப்டலாம்.சுமதி சாப்பாடு எடுத்துவை மா "
என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலுடன் பிள்ளைகள் காத்திருக்க , அவர் வந்ததும் அனைவரும் அமர்ந்து கதைத்துக்கொண்டே வாங்கி வந்த சிக்கன் பகோடாவை இரவு உணவுடன் சாப்பிட்டனர். சட்டென ராகவின் தொடையை பார்த்த சுமதி
" என்ன இது ??"
" அதுவா. ஒன்னுமில்ல மா "
அதற்குள் ராஜன் " ராகவ் என்ன வம்பு பண்ணின " என்றார் சற்று உயர்ந்த குரலில்
" நா ஒன்னும் செய்யலப்பா "
" அப்றம் ??"
" எங்க க்ளாசுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்துருக்கு . அவ தான் பென்சில வெச்சு குத்திட்டா "
" நீ என்ன செஞ்ச "
" நா விளையாட கூப்டேன். அவ குத்திட்டா "
" நம்புற மாறி சொல்லு "
" என்னங்க சாப்டும் போது புள்ளைய அதட்டிட்டு "
" இல்லப்பா .நிஜமாதான் .. அம்மா நீ வெணா ரிக்ஷா ஆங்கில்ட கேளு "
" ம்ம்ம்ம் சரி .இப்போ சாப்டுங்க "
" பா.. அந்த பொண்ணு இன்னிக்கு முழுக்க ஒரு வார்த்த கூட பேசலப்பா "
" அப்டியா..."
" ஆமா பா " என கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கினான். இவ்வாறு அந்த நாள் முடிய , அடுத்த நாள் பள்ளி சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் அன்று பள்ளிக்கு வரவில்லை. அடுத்த நாளும் வராமல் போனது சிறுவனான ராகவிற்கு பெரிதாக தெரியவில்லை என்றாலும் தன் பக்கத்து இடத்தை பார்க்கும் போதெல்லாம் அவள் கடைசியாக அவனை பார்த்தது நினைவில் வந்து சென்றது..
வளரும்...