Malini Sundar
Member
" ஐய்யய்யோ...என கற்பகம் அலறியதில் அக்கம் பக்கம் அனைவரும் திரண்டனர்.
நிகழ்வுக்கு வந்தவருக்கு உடம்பில் அந்த நடுக்கம் இருந்தது.
" பாவி மக.. அப்டி செய்வான்னு நா நினைக்கவே இல்லம்மா. எலி மருந்த சோத்துல கலந்து அவளும் சாப்டு, அவனுக்கும் குடுத்துட்டா "
" ஐயயோ..."
" என்னத்த மா சொல்ல.காலைல எழுந்திரிச்சு எனக்கு தூக்கிவாரி போட்டுடிச்சி. நா கத்துன கத்தல்ல இந்த புள்ளயும் எழுந்து அம்மா அம்மான்னு கத்த, எனக்கு இவள என்ன சொல்லி தேத்துறதுன்னே தெரியல "
" அவனுக்கு மட்டும் விஷத்த குடுத்துருந்தா நா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். அன்னைக்கு அமைதியானவ தா மா. இப்படியே ஆகிட்டா என் பேத்தி. என் மக ரொம்ப அழுத்தக்காரி, எங்கிட்ட எதுமே சொல்லாம இருந்துட்டா. என் பொண்ணு எப்டி எல்லாத்தையும் தாங்கினாளோ. நா அவள அந்த பரதேசிக்கு கல்யாணம் பண்ணிவெச்சதால என்னய தண்டிச்சிட்டா. எனக்குமே வயசாகுது மா. அடுப்புகிட்ட நின்னு நின்னு இப்போலாம் மூச்சு திணரல் ஜாஸ்தியா இருக்கு. இவள கரையேத்துற வரைக்கும் ஒன்னும் ஆககூடான்னு வேண்டிகிட்டு இருக்கேன் " என பெரு மூச்சு விட்டார்.
சுமதிக்குமே கண்ணில் நீர் சுரந்தது.
" மஹல்சாவ பாத்ததுலேந்து எனக்கு எதோ ஒரு ஈர்ப்பு இருந்துது. அது ஏன்னு இப்போ தான் புரியுது. என் சுகன் எனக்கு திரும்ப கிடைச்சமாறி இருக்கு " கற்பகத்திற்கு ஏனோ மனம் சற்று சாந்தமானது.
" சரி இருங்க .சமைச்சிடறேன். சாப்டு போகலாம் "
" இல்ல பரவால்ல மா "
" சுகன் வீட்ல சாப்ட மாட்டீங்களா. இருங்க சாப்டு தா போகனும் " என சமையலில் இறங்கினார் சுமதி. சமையலை முடித்து மேலே ரூமிற்கு சென்ற சுமதி
" ரஞ்சனி , ராகவ் கீழ போங்க .பாட்டிகிட்ட பேசிட்டு இருங்க.நா இப்போ வந்துடறேன்."
" ஓய்.." என ராகவ் அழைக்க தலை நிமிர்த்தியவள்
" என் பேரு மஹல்சா "
" அப்டியா . நா இப்டி தா கூப்பிடுவேன்"
" ராகவ் வம்பு வளக்காம போ " அவன் கீழிறங்கி போனதை பார்த்தவர்
" சொல்லு மா. அன்னைக்கு எதோ சொல்ல வந்தியே "
" அது .எனக்கு அம்மா நியாபகமா இருக்கு."
" அதுக்கு ?"
" நா... நா உங்கள .."
" அம்மான்னே கூப்பிடு " கண்கள் விரித்து உள்ளமெல்லாம் பூரிப்பாக இருந்தது அவளுக்கு. ஓடி வந்து அணைத்து முத்தமிட்டாள்.
" சுகன் அதா உங்க அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் "
" அம்மாவ உங்களுக்கு தெரியுமா.. ஏன் என்ன விட்டுட்டு போனாங்க "
" அதெல்லாம் விடு. இனி நீ என்ன அம்மான்னே கூப்பிடு சரியா. சந்தோஷமா இருக்கனும்.உனக்கு எதுனாலும் எங்கிட்ட கேளு சரியா "
" சரி மா "
" சரி வா. இப்போ சாப்டலாம் "
இருவரும் கீழே இறங்கி வர , அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
" சரி நாங்க கிளம்பறோம் மா "
" அடிக்கடி வந்து போங்க "
" பாக்குறேன் மா.இப்போ வீடு பக்கத்துல இருக்கு. அவன் ஓனர் பய வீட காலி பண்ண சொல்லிட்டான். வீடு தள்ளி கிடைச்சா கஷ்டம் "
" ஓ..."
ராகவ் சுமதியை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுத்தான். பின் கற்பகத்திடம் திரும்பி
" இங்க பாருங்க பாட்டி, யாரையும் அனாவசியமா அடிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க. அதும் தலைல அடிக்கவே கூடாது. இனிமே என் மஹிய அடிச்சீங்க , அப்றம் எனக்கு கோவம் வரும். சொல்லிடேன்."
" ராகவ். பெரியவங்ககிட்ட அப்டிலாம் பேச கூடாது."
" தப்பு யார் செஞ்சாலும் தப்புதான்னு நீ தானே மா சொல்லிருக்க "
" பரவல்ல சுமதி மா. தம்பி கரெக்ட்டா தான் பேசுது." ராகவிடம் திரும்பி
" இனி அனாவசியமா அடிக்கமாட்டேன் தம்பி. சரியா "
" ம்ம்ம்ம்..பாக்கலாம் " அனைவரிடமும் விடை பெற்று வெளியே வர , மீண்டும் சுமதி
" உங்க நம்பர் குடுத்துட்டு போங்க மா "
" ரஞ்சனி நம்பர் நோட் பண்ணிக்கோ "
நம்பர் கொடுத்துவிட்டு , புறப்பட ராகவை திரும்பி பார்த்த மஹல்சா மீண்டும் அவனிடம் வந்து
" மஹி நல்லா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு . அப்டியே கூப்பிடறியா" உடனே ஒத்துக்கொண்டால் அது ராகவ் இல்லயே
" ம்ம்ம். பாக்கறேன் ".
சாப்பிட்டு மாலை விளையாடி பின் வீட்டிற்கு வரவும் , ராஜன் வரவும் சரியாக இருந்தது.அனைவரும் ஒன்றாக அமர்ந்து ராஜன் வாங்கி வந்த முந்திரி பிஸ்கெட்டை சாப்பிட்ட வண்ணம் கதைபேசினர்.
" அப்பா. இன்னைக்கு மஹி நம்ம வீட்டிக்கு வந்தா பா "
" அது யாரு. புது ஃப்ரெண்டா "
" ஆமா பா. அன்னைக்கு சொன்னேன் ல. "
" அன்னைக்கு மஹல்சான்னு ல சொன்ன "
" ஐயோ அப்பா. மஹல்சாவ தா சுறுக்கி மஹின்னு சொல்றேன். நீ இன்னும் வளரனும் பா "
" நா வளரனுமா பா. சரிப்பா " என்றதும் அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.வேலைகளை முடித்து ராகவும் ரஞ்சனியும் தூங்கிவிட்டார்களா என பார்த்திவிட்டு, கீழே இரைத்திருந்த பொம்மைகளை எடுத்து வைத்துவிட்டு , தங்களறைக்கு வந்தார் சுமதி.ராஜன் விழித்திருப்பதை பார்த்து
" உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் "
" சொல்லுமா "
" இன்னைக்கு சுகன் அம்மாவ மார்கெட்ல பாத்தேன் "
" எந்த சுகன் "
" என் உயிர காப்பாத்தினாளே அந்த சுகன்." ராஜனுக்குமே கண்கள் விரிந்தன.
" எங்க எப்டி பாத்த. அவங்க , சுகன் எல்லாரும் இங்கயா இருக்காங்க ? "
" அம்மா இருக்காங்க. சுகன் இல்ல " என கூறும் போதே குரல் கம்மியது.
" ஹே.. என்னமா ஆச்சு. என்ன இது அழுதுகிட்டு "
" அந்த பொண்ணு மஹல்சா சுகனோட பொண்ணு. ஆனா இப்போ சுகன் உயிரோட இல்ல. என்ன காப்பாத்தினவ இன்னிக்கு உயிரோட இல்ல. உயிரோட இல்லைங்குறத விட தற்கொலை பண்ணிகிட்டான்னு நினைக்கும் போது தா இன்னும் வருத்தமா இருக்கு " கற்பகம் கூறியவற்றை ராஜனிடம் கூற அவருக்குமே அது அதிர்ச்சியாக இருந்தது. சுகன்யா அவ்வளவு தைரியசாலி. சுமதியை அவள் காப்பாற்றிய தினம் அவர் கண்முன் வந்தது.
அன்று மாலை ராஜன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம். எப்பொதும் வயல் வழியே வருவது தான் அவரின் வழக்கம் . அன்றும் எப்போதும் போல் நடந்து வந்தவர் , தூரத்தில் கிணற்றின் அருகில் இருந்த கூட்டத்தை பார்த்து அங்கு விரைந்தார்.அங்கு கிணற்றில் விழுந்த சுமதியை எழுப்பிக்கொண்டு இருந்தாள் சுகன்யா.விசாரித்ததில் விளையாட்டு ஸ்வாரஸ்யத்தில் பின்னால் இருந்த கிணற்றை கவனியாமல் தடுக்கிவிழ சிறிதும் யோசிக்காமல் குதித்து மற்ற எவரேனும் வரும் வரை இழுத்துபிடிக்க, யாரும் வருவதாக தெரியாததால், தானே சுமதியை தூக்கிவந்தது தெரியவந்தது. சற்று நேரத்தில் விழித்த சுமதியை பார்த்ததும் தான் மூச்சு சீராக வந்தது சுகன்யாவிற்கும், அவளை காதலித்து சொல்லாமல் இருக்கும் ராஜனுக்கும். மீண்டும் நினைவிலிருந்து மீண்டவர்
" அதா அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு "
" ஆமாங்க.."
" ம்ம்ம்"
" அப்றம் ..." என இழுத்தார்.
" சொல்லுமா "
" வெளிய பூட்டி வெச்சுருக்குற பொர்ஷன அவங்களுக்கு விட்டுடலாமா "
" என்ன திடீர்னு "
" அவங்கள வீட்ட காலி பண்ண சொல்லிடாங்களாம். அவங்க சொன்னாங்க. இதும் பூட்டி தானே இருக்கு. ரஞ்சனி , ராகவ் , எனக்கும் சந்தோஷமா இருக்கும் "
" நீ சொன்னா சரிதா மா " என அன்னாள் நிறைந்தது. அடுத்த நாள் ஞாயிறு என்றாலும் சீக்கிரம் எழுந்த சுமதி , சற்று விடிந்ததும் கற்பகத்திற்கு கால் செய்தார்.
" ஹலோ யாரு "
" ஹலோ . நா சுமதி பேசுறேன் மா "
" சொல்லு மா.. என்ன இவ்ளோ காலைலயே போன் பண்ணிருக்க "
" இல்ல. நீங்க வீடு பத்தி சொல்லிருந்தீங்களே "
" ஆமம்மா.. ஓனர் ரொம்ப கெடுபிடி பண்றான் "
" உங்களுக்கு ஓகேன்னா இங்க ஒரு போராஷன் இருக்கு. ஆனா சின்னது தான். நீங்க இங்க வந்தீங்கன்னா எங்க எல்லருக்கும் சந்தோஷம். எல்லாரும் சேர்ந்தே இருக்கலாம் "
" உங்களுக்கு எதுக்கு மா சிரமம். அதுமில்லாம வாடகைலாம் என்னால கொஞ்சம் தான் குடுக்க முடியும் "
" சிரமம்லாம் இல்லம்மா. இப்போ அது ஸ்டோர் ரூமா தா யூஸ் பண்றோம். பூட்டி தான் இருக்கு. நீங்க எதும் குடுக்கனும்னு இல்ல."
" இல்ல இல்ல. வாடகை குடுக்காமல்லாம் எப்டி மா.. நல்லா இருக்காது "
" எனக்கு நீங்க இங்க வந்தா சந்தோஷம். வாடகை குடுக்குறதும் குடுக்காததும் உங்க இஷ்டம் மா "
" சரி மா. என்னால என்ன முடியுமோ அத குடுத்துடறேன்."
" சரி மா.. "
" வரதாயிருந்தா எப்போ வர்ரது "
" நீங்க எப்போ வேணா வாங்க. இடம் தயாராதான் இருக்கு "
" சரி நா கொஞ்ச நேரத்துல கூப்பிடறேன் மா " என ஃபோனை வைத்தார் கற்பகம்.
பதினோரு மணிக்கு எழுந்த ராகவ் , பொருமையாக தன் வேலைகளை முடித்து வாசலுக்கு வந்தவனுக்கோ இன்ப அதிர்ச்சி.
" ஹேய் மஹி "
திரும்பி சிரித்தவளின் சிரிப்பு கண்களை எட்டியது. அருகில் ஓடி வந்தவன்
" இங்க என்ன பண்ற "
" நா இனி இங்க உங்க வீட்லதா இருக்க போறேன். தேங்க்ஸ் "
" எதுக்கு தேங்க்ஸ் "
" சும்மா தா "
" ம்ம்ம்ம... சரிவா. எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு நம்ம போய் விளையாடலாம் "
" ம்ம்ம்ம்" என அவளை தென்னங்கொட்டகைக்கு அழைத்து சென்றான். விளையாடி முடிக்கவும் , சுமதி சாப்பிட கூப்பிட
" சரி... நா சாப்டு ரெஸ்ட் எடுக்குறேன். நம்ம ஈவிங்க் விளையாடலாம் "
" இல்ல இப்போ விளையாடுன்னு சொன்னா விளையாட போறியா.. இல்லல்ல.. "
" பாய் " என வீட்டிற்குள் ஓடினான்.இவள் இங்கு மெல்லியதாய் சிரித்தாள். வீட்டிற்குள் போன ராகவ் நேரே சுமதியை போய் கட்டிக்கொண்டான்
" தேங்க்ஸ் மா "
" எதுக்கு "
" மஹிய நா நேத்து காதுல சொன்னத வெச்சு இங்க வர வெச்சதுக்கு "
அவனை உச்சி முகர்ந்து
" சந்தோஷமா விளையாடு தங்கோ. மஹி கூட நல்ல ஃப்ரெண்டா என்னைக்கும் இருக்கனும் . சரியா "
" ஓகே மா " என ஓடினான்.மாலை வர , சுமதி பருப்பு வடை செய்ய , மழை மேகம் இருட்டிக்கொண்டு வர , மழை பெய்ய துவங்கியதும் ரஞ்சனி , ராகவ் , மஹி மூவரும் நன்றாக மழையில் ஆட்டம் போட்டு பின் வேறு உடை மாற்றி சுடச்சுட இஞ்சி டீயும் பருப்பு வடையும் சாப்பிட்டு , கதை பேசி அந்நாள் அழகாய் நிறைந்தது அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்.
( வளரும் ....)