கனவு 3
முகம் முழுதும் வேர்வை வழிந்து படபடத்து போய் அவன் எழுந்து பார்க்கும் போது மணி ஆறு....
அருளிற்கு முன்பே எழுந்து விட்ட விக்ரம்...தேனீர் அருந்தி கொண்டு இருக்கும் போது... தன் அறையை விட்டு குழப்பத்துடன்... வேர்த்து போய் வெளியே வந்தான் அருள்
"என்னடா... நல்லா தூங்குனியா?" என்று கேட்டவன், பதில் ஏதும் வராமல் போக... அருனை பார்த்தவன்... அவன் குழம்பிய முகம் விக்ரமை உஷாராக்க
என்ன என்று விசாரிக்க.... தான் கண்ட கனவை பற்றி முழுதும் கூறினான் அருள்....
"அது எல்லாம் ஒன்னும் இருக்காதுடா... புது இடம்..... பயண களைப்பு... ஓய்வு எடுக்க நேரம் இல்லாம போனது... இதனால் அப்டி வந்து இருக்கும்"நண்பனாய் இல்லாமல் மருத்துவனாய் பேசினான்...
"இது சாதாரணமா வர கனவு மாதிரி தெரியால, அந்த ஏரி, எங்கயோ பார்த்து இருக்கேன்", சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவன்....
"நாம வர வழில... அந்த வீடுகள் எல்லாம் இருந்துது இல்ல.அதுக்கு கொஞ்சம் தூரத்துல இருக்க ஏரி தான்டா அது"
அருளின் பேச்சை நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடிய வில்லை... மாலை வந்து இதை பற்றி பேசி கொள்ளலாம் என்று முடிவு எடுத்த இருவரும்... அவர் அவர் வேலைகளுக்கு சென்று விட்டனர்....
அருளிற்கு மட்டும் நாள் முழுதும் அந்த கனவு அவனை உறுத்தி கொண்டே தான் இருந்தது......
அவன் யோசனையை கலைக்கும் வண்ணம் வெளியே எதோ இரைச்சல் சத்தம் கேட்க.... என்ன என்று எட்டி பார்த்தவன்....
ஒரு முதியவர் ஒருவர் கான்ஸ்டபிளிடம் எதயோ கூறி கத்தி கொண்டு இருந்தார்..... வெளியே சென்று விசாரிக்க...
அவரின் பேத்தியை இரு தினங்களாக காண வில்லை என்றும்.....கடைசியாக பொருட்கள் வாங்க கடைக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.....
பின் அவரை அழைத்து அந்த பெண்ணின் விவரமும்... அவரின் விவரமும் பெற்று கொண்டான் அருள்.... உணவு நேரம் முடிந்து அந்த முதியவர் கொடுத்த விவரத்தை எடுத்து பார்த்தவன்.... அதிர்ந்து திகைத்து போனான்... உடனே விக்ரமிற்கு அழைத்தவன்.... விவரத்தை கூறி அவனை அந்த ஏரி இருக்கும் இடத்திற்கு வர சொன்னான்....
அருள் கூறிய இடத்தை அடைந்த விக்ரம்... அந்த ஏரியை சுற்றி போலீஸ் ஜீப்புகள் நிற்க... பெரிய கிரேன் ஒன்று நின்று கொண்டு இருக்க.... அருளோ அங்கு போலீஸ் ஒருவருடன் பேசி கொண்டு இருந்தான்...
அவனை நெருங்கி விஷயத்தை கேட்டவன்... அவன் அந்த முதியவரையும் அவரின் பேத்தியை பற்றி கூறி... அவளின் புகைப்படத்தை காண்பிக்க....
அவளை உடனே அடையாளம் கண்டு கொண்டான் விக்ரம்...இவளா... இவளோட பெயர் மஞ்சரிடா.... அழகு கலை பத்தின படிப்பை முடிச்சிட்டு... போனா மாசம் தான் தன் தாத்தாவோட வந்து தங்க ஆரம்பிச்சா...
"அதுக்கு எதுக்குடா இப்போ இந்த ஏரிக்கு வந்து இருக்க... இந்த பொண்ணுக்கும் இந்த எரிக்கும் என்ன சம்மந்தம்"
"நான் நேத்து கனவுல பார்த்ததா சொன்னேன் இல்லை... அந்த பொண்ணு இவ தான்டா..." புகைப்படத்தை காண்பித்து கூறினான்....
அந்த ஏரியை தூர் வர சொல்ல... அருள் எதோ எதிர் பார்த்து நிற்க... அவனுக்கு அதிர்ச்சியாய், அனைவர்க்கும் அதிர்ச்சியாய்,
அந்த குளத்தில் இருந்து ஏழு பெண்களின் உடல்கள் எடுக்க பட்டது....
தான் நினைத்ததை விட இது எதோ விபரிதமான விஷயமாக இருக்கும் என புரிந்து கிண்டவன்... எடுத்த உடல்களை போஸ்டமோர்டெத்திற்கு அனுப்பியவன்...
இதுவரை காணாமல் போனவர்களை பற்றிய புகார் பதிவேட்டை கையில் எடுத்தான்....
தொடரும்.....
-அர்பிதா
கருத்துகளை கீழே பதிவிடவும்

Last edited: