Yasmin Shabira Sukarno
New member
“ஹாய் ரதீமா” தீடீரென கேட்ட குரலால் சற்றே பயந்து திரும்பியவள் அங்கே தன் உயிர்த்தோழியும் மாமன் மகளுமான சமீரா நிற்பதை பார்த்தாள். அவளைக் கண்டதும் “சமீ” என ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.
“ஹே என்னடி இவ்ளோ காலைல வந்துருக்க அதிசயமாயிருக்கு” என்றாள் ரதீமா.
“இன்னிக்கு கோயம்புத்தூர்ல அத்தாட ப்ரெண்ட் பையனுக்கு கல்யாணம் அதுக்கு உம்மாவும் அத்தாவும் போயிருக்காங்க ஷிஃபாவும் ஸ்கூல் டூருக்கு போயிருக்கா அதான் தனியா இருக்க போரடிக்குமேனு வந்துட்டேன்”
“ம்.... சரி தனியாவா வந்த” என்க
“இல்ல அண்ணன் கூட வந்தேன்” என்றாள் சமீரா. அதைக்கேட்ட ரதீமாவிற்கு ஒருநிமிடம் காற்றில் பறப்பது போலிருந்தது. ஆனால் மறுநொடி “அவன் என்னை வாசல்லையே விட்டுட்டு கடைக்கு போய்ட்டான். அத்தா ஊர்ல இல்லாததால அவன் கடைய பாத்துக்க போயிட்டான்” என்றாள்.
அவ்வளவு தான் ரதீமாவின் முகம் ஒரே நொடியில் வதங்கிவிட்டது.
‛அண்ணனோட வந்தேன்’ என்றதும் அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியையும் அவன் சென்றுவிட்டான் எனக்கேட்டதும் அவளின் முகமாற்றத்தையும் நன்றாக கண்டுகொண்டாள் சமீரா. ரதீமாவின் மனது அவளுக்கு நன்றாய் புரிந்தது. ஆனால் அவள் எதையும் வெளிக்காட்டவில்லை. மனதிற்குள் ‛யா அல்லாஹ்! எப்டியாவது ரதீமா மனசுல இருக்குறத நடத்தி வச்சிரு. எப்டியாவது என் அண்ணனோட அவள சேத்துவச்சிரு’ என மனதாற மன்றாடினாள்.
“சரி வா சமி உள்ள போலாம்” இருவரும் வீட்டினுள் சென்றதும் எதிரே வந்தார் ரதீமாவின் அத்தம்மா. சமீராவை பார்த்தவர் “வாடி என்ன அதிசயம் எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரிஞ்சிருக்கு. இந்தா வகீதா வராத விருந்தாளி வந்துக்குறாக பாரு”
மாமியாரின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து வெளிவந்த வகீதா சமீராவை பார்த்ததும் முகம் மலர “சமீராம்மா எப்ப வந்த” என்க அவரைக் கண்ட சமீரா “மாமி” என ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.
“ஏன்டி பக்கத்தில தான இருக்க அப்பப்ப வந்தா என்ன உங்கம்மா என்ன பண்றா நல்லாருக்காளா. அவளயும் பாத்து ரொம்ப நாளாச்சு” என்றார் வகீதா.
“நாந்தான் காலேஜ் போய்ட்டு பிஸியா இருக்கேன் நீங்களாச்சும் வர்லாம்ல” என குறைபட்டு கொண்டாள் சமீ.
“ம்மா சமீ சொல்றது சரிதான இந்த வர்ர சன்டே நாம எல்லாரும் மாமா வீட்டுக்கு போவோம்மா. மாமா மாமிய பாத்து ரொம்ப நாளாச்சு” என்றாள் ரதீமா.
‛மகளே நீ மாமாவ பாக்க வர்றியா மாமா மகன பாக்க வர்றியானு எனக்கு மட்டுந்தான்டி தெரியும். நீ நடத்து நடத்து’ என நினைத்து கொண்டாள் சமீரா.
அதன்பின் தோழிகள் இருவரும் சேர்ந்து அரட்டை கச்சேரி நடத்தி உல்லாசமாக பொழுதைக்கழித்தனர்.
“ரதீமா நீ எக்ஸாம்கு படிச்சியா நான் மூணு நாளும் நல்லா சாப்ட்டு சாப்ட்டு தூங்குனேன் மிச்ச நேரமெல்லாம் டிவி பாத்தேன். நீ எப்டி ஃபுல்லா முடிச்சிட்டியா.”
‛க்கும் கிழிச்சேன். எங்க என்ன படிக்க விடுறான் உன் அண்ணன் எங்க பாத்தாலும் எத பாத்தாலும் அவன் தான் தெரியிரான் கொஞ்ச நேரமாவது என்ன விடுறானா’ என மனதிற்குள் தன்னவனை திட்டுவது போல் கொஞ்சிக்கொண்டிருந்தவளை தோலை தொட்டு உளுக்கி “ஏய் என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எங்க இருக்க" என்றாள் சமீ.
“அது.. அது.. அது வந்து ஒன்னும் இல்லடி அது வந்து நான் இன்னும் ஒன்னுமே படிக்கலையா அதான் நீ கேட்டதும் எக்ஸாம் எப்டி எழுதப்போறனோனு பயமாருக்கு அதான்”
‛ம்ம் நல்லா சமாளி’ என மனதிற்குள்ளே சிரித்துக்கொண்டாள் சமீரா.
“சமீ நீ நைட்டு லேட்டாதான போவ"
“தெரிலயே. ஏன் கேக்குற”
“ஒன்னுமில்ல சும்மாதான் கேட்டேன்”
“ஹ்ம். அத்தா உம்மா சீக்கிரம் வந்துட்டா அவங்க வந்து கூட்டிட்டு போவாங்க அவங்க வர லேட்டாச்சுனா அண்ணன் கடை பூட்டிட்டு வரும்போது பிக்அப் பண்ணிகிறேன்னு சொன்னான்” என்ற சமி ‛இததான எதிர்பாத்த’ என எண்ணிக்கொண்டாள்.
‛யா அல்லாஹ்! மாமா மாமி வர ரொம்ப லேட்டாகனும். சமிய அவ அண்ணனே வந்து கூட்டிட்டு போகனும். ப்ளீஸ்’ மனதிற்குள் இறைவனிடம் மிகத் தீவிரமாக யாசித்தாள் ரதீமா...
எப்படியாவது இன்று அவனை பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தவளுக்கு இறைவனும் பெரும் உதவி செய்தார். சமீராவின் தந்தையிடமிருந்து அவரின் உடன்பிறந்த தமக்கையான ரதீமாவின் தாய்க்கு அழைப்பு வந்தது.
போனை எடுத்த வகீதா “ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் என்னடா கல்யாணம் முடிஞ்சுதா கிளம்பியாச்சா”
“வலைக்கும்ஸலாம் முடிஞ்சுதுக்கா ஆனா இன்னும் கிளம்பல கொஞ்சம் வெளில வேலைகள் இருக்கு எல்லாம் முடிச்சுட்டு கிளம்ப ராத்திரி ஆய்டும் சமீராவ கூட்டிட்டு போவ சலிம் வருவான்” என்றார் நூர்தீன்.
“ஏன்டா சலிமும் சமீராவும் நைட் இங்கயே இருக்கட்டுமே. எப்படியும் நீங்க நாள காலைலதான் வருவீங்க அதுவரக்கும் ரெண்டு பேரும் இங்கயே இருக்கட்டும்”
“சரிக்கா நீயாச்சு உன் மருமகனாச்சு அவன்ட்ட நீயே பேசிக்க”
“ம் அவன நான் சமாளிச்சிகறேன். ஷிஃபாக்கு போன் பண்ணியா நல்லா இருக்காலா எப்போ வராலாம்"
“ பேசினேன் இன்ஷால்லாஹ் இன்னும் ரெண்டு நாள்ள டூர் முடிஞ்சிரும் வந்துருவா”
“சரி பாத்து பத்திரமா வாங்க இராத்திரி நேரம் டிரைவர மெதுவாஓட்ட சொல்லு”
“ம் சரிக்கா நான் வக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்”
“வ அலைக்கும் அஸ்ஸலாம்”
தன் தாய் போனில் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தாள் ரதீமா. அவளுக்கு அப்படியே இறக்கை கட்டி பறப்பது போல இருந்தது. தன்னவன் வீட்டிற்கு வரப்போகிறான் அதுவும் தன் வீட்டில் ஓர் இரவு தங்கபோகிறான் என்பதே அவளுக்கு உலகை வென்று விட்ட ஆனந்தத்தை அளித்தது. அடுத்த நிமிடமே இன்னொரு உலக மகா கவலை வந்து சேர்ந்தது.
‛அவனுக்கு நைட் சாப்பாடு செய்யனுமே அவனுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலயே. இப்போ நான் அத எப்படி தெரிஞ்சுகறது. உம்மாக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஆனா உம்மா அதையெல்லாம் செய்யனுமே. நா என்னனு உம்மாகிட்ட கேக்குறது. பேசாம சமிகிட்ட கேட்டுடலாமா. ஆனா எப்டி கேப்பேன்’ வகீதா வந்து அருகில் நிற்பதைக் கூட உணராமல் தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தாள் ரதீமா.
‛ம். என்னாச்சு இவளுக்கு’ என நினைத்தபடி
“ஏய் செல்லம்மா என்ன செலயாட்டம் நிக்கிற” என சற்று உரக்க கேட்கவும் தான் சுய உணர்வுக்கு வந்தாள் ரதீமா.
“ம் என்னம்மா” என்றாள் ஒன்றும் புரியாதவளாய்.
“சரியாப்போச்சு என்னாச்சு உனக்கு என்ன யோசிச்சிட்டிருக்க”
“ம். அது வந்து. ஒன்னும் இல்ல மா சும்மா தான். அது வந்து என்னோட ரெக்கார்ட் நோட்ட காணோம் எங்கனு தெரில அதான் எங்க வச்சிருப்பேன்னு...” என இழுத்தாள்
“உன் ரெக்கார்ட் நோட்டு கிச்சனுக்கு எப்புடி வரும். உன் ரூம்ல தான் இருக்கும் அங்க போய் பாரு”
“ம் சரிம்மா” என திரும்பியவள் ஏதோ நினைத்த படி “ம்மா நைட் என்ன சாப்பாடு” எனக் கேட்டாள் ரதீமா.
“ஏன்டி இப்பதான் மதியான சாப்பாடே முடிஞ்சிருக்கு அதுக்குள்ள நைட்டு என்னனு கேக்குற. போய் படி போ” என விரட்டிவிட்டார் வகீதா.
‛சே இந்த அம்மா வேற’ என முனங்கிக்கொண்டே தன் அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்தவளின் நினைவுகள் சிறுவயதிற்குச் சென்றது.
“சலிம் சலிம் அங்க பாரேன் எவ்ளோ மாங்கா”
“அதுக்கு என்னடி குள்ளவாத்து”
“மாங்காய் வேணும் பறிச்சுத்தா”
“போடி குள்ளகத்தரிக்கா எனக்கு வேற வேல இல்லயா நீயே போய் பறிச்சுக்கோ”
“சரி போ நீ ஒன்னும் பறிச்சுதர வேணாம் நானே பறிச்சுக்குறேன்” என்று கோபமாய் போய் எம்பி எம்பி பறிக்க முயற்சி செய்யும் அவளைக் கண்டு கைகொட்டி சிரித்தான்.
“ஏய் குள்ள வாத்து நவரு நானே பறிச்சுதரேன்”
“ஒன்னும் வேண்டாம். நாந்தான் பறிப்பேன்” என்று திரும்பவும் எம்பி பார்க்கும் அவளை அப்படியே தூக்கி “இப்போ பறி” என்க அவளும் சந்தோஷமாய் பறித்துப் போட்டாள்.
“எப்டி நாங்களே பறிச்சுட்டோம்ல” என இல்லாத காலரை உயர்த்திக் கொண்டவளை பார்த்து “ஆமாமா ஏன் சொல்ல மாட்ட இந்த கனம் கனக்குற குண்டு பூசணிக்கா”
“யாரு நானா குண்டு”
“இல்லம்மா நீ ரொம்ப ஒல்லி” என்று பலிப்புகாட்டுபவனைக் கண்டு கோபம் கோபமாய் வரும் ரதீமாவிற்கு. இப்பொழுது அதை நினைத்து சிரித்துக்கொண்டாள்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் “சே அந்த ஒட்டகம் இவ்ளோ உயரமா இருக்கு நான் அவன் கழுத்தளவு கூட இருக்கமாட்டேன் அப்பவே ஸ்கிப்பிங் பண்ணி காம்ப்ளான் குடிச்சு வளர்ந்துருக்களாமோ!!” என்றெண்ணிக்கொண்டே திரும்ப படுக்கையில் சாய்ந்தாள்.
அவள் நினைவுகள் முழுவதையும் அவனே நிறைத்திருந்தான். சத்தமாய் சொன்னால் அவன் பெயருக்கு வலிக்குமோ என மிக மெதுவாய் “சலிம் சலிம்” என அவளையும் அறியாமலே மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்தாள் ரதீமா. அவள் உதடுகளில் மட்டுமல்ல அவள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் அவளுடலின் ஒவ்வொரு அணுவிலும் அவனே நிறைந்திருந்தான்.
அவள் வாழ்வின் ஒரே கனவு ஆசை லட்சியம் அவனே.
ரதீமாவின் ஆசைக்காதல் கைகூடுமா....
பார்க்கலாம்.....