Yasmin Shabira Sukarno
New member
அந்தி சாயும் அழகிய நேரத்தில் அதீத பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது தஞ்சை மாநகரின் மத்தியில் அமைந்திருந்த அந்த துணிக்கடை. தஞ்சையில் மட்டும் 2 கிளைகள் பட்டுக்கோட்டையில் ஒரு கிளை மற்றும் பட்டுக்கோட்டையைத் தாண்டி இருவது கிலோமீட்டர் தொலைவில் அலையாத்திக் காடுகளின் மடியில் அமைந்துள்ள முத்துப்பேட்டையில் ஒரு கிளையோடு கடந்த 18 ஆண்டுகளில் இறைவன் அருளால் நன்றாக முன்னேறி இருந்தது.
கடையின் உள்ளே பலதரப்பட்ட மக்களும் பரபரப்புடன் அவரவருக்கு தேவையானவைகளை தேடிக்கொண்டிருந்தனர்.
கடையில் பில் போடுமிடத்திற்கு அருகில் ஓனருக்கான ப்ரத்யேக சேரில் அமர்ந்து அது எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் கையிலிருந்த சத்யஜித் ரேயின் ஸ்பீக்கிங் ஆஃப் ஃபில்ம்ஸில் (speaking of films)மூழ்கி இருந்தான் சலீம். இடையிடையே விழிகளை மட்டும் உயர்த்தி கடையின் அத்தனை மூலைமுடுக்குகளையும் துழாவிவிட்டுத் திரும்பவும் புத்தகத்தில் ஆழ்ந்தான். மேஜை மேல் இருந்த செல்போன் சத்தமின்றி ஒளிர்ந்தது. புத்தகத்திலிருந்து கண்களை அகற்றாமல் மொபைலை எடுத்தவன் அது காட்டிய பெயரைப் பார்த்ததும் மெலிதாய் அழகாய் புன்னகைத்தபடி அட்டென்ட் செய்தான்.
“ஹலோ. அஸ்ஸலாமு அலைக்கும்"
“வ அலைக்கும் அஸ்ஸலாம். பாரேன் என்னலாம் கூட நியாபகம் இருக்கு சாருக்கு"
அந்தக் கேலியில் அவன் முகத்திலிருந்த புன்னகை பெரிதானது. “சாரி செல்லம் கொஞ்ச நாளா பயங்கர பிஸி அதான் உங்கள பாக்க வரமுடியல...என் செல்லம்ல சாரி" என்று செல்லம் கொஞ்சினான்.
“ நல்லா ஐஸ தூக்கி தலைல வைய்யி. ஆனா வந்து பாக்க மட்டும் செஞ்சிறாத காலைல வீட்டு வாசல்ல வந்து சமீராவ விட்டுட்டு போய்ட்ட ஏன் ஐயா உள்ள வர மாட்டீங்களோ?" என்று குறைபட்டு கொண்டது எதிர்முனை.
“என்ன செல்லம் இப்டி சொல்லிட்டிங்க. ரொம்ப ஏர்லி மார்னிங்கா இருக்கே உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டா சமிய பிக்அப் பண்ண வரும்போது வரலாம்னு நெனச்சேன். இப்ப என்ன உங்கள பாக்க வரணும் அவ்ளோதான இதோ இப்பவே வரேன்"
தன் செல்லப்பிள்ளையின் கொஞ்சலில் கரைந்தவர் "டேய் டேய் நீ இப்பவே ஒன்னும் வரவேணாம் கடைய பூட்டிட்டு நைட் வந்தா போதும். ஆமா என்ன சொன்ன நீ வர்றது எனக்கு டிஸ்டபா. வா உன்ன பாத்துக்கிற்றேன். ஒழுங்கா இன்னைக்கு நைட் நீயும் சமீராவும் இங்க தங்குறீங்க இல்ல எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன். சீக்கிரம் வந்து சேரு" என்றுவிட்டு அவன் பதில் சொல்லும்முன் போனை வைத்துவிட்டார் வகீதா.
“மாமி மாமி...” அவன் தொடங்கும்முன் கால் கட்டாகியிருந்தது. திரும்ப திரும்ப முயற்சித்தும் வகீதா போனை எடுக்கவில்லை.
ஒரு நிமிட யோசனைக்குப்பிறகு அவனிதழோரத்தில் சிறு புன்னகை பூத்தது. புன்னகையோடே திரும்பவும் புத்தகத்தில் கண்களை பதித்தான். ஆனால் மனமோ புத்தகத்தில் புதைய மறுத்தது. இத்தனை நேரமும் ரெக்கை கட்டிப் பறந்த கடிகாரம் சிறகொடிந்து மெல்ல ஊர்வதைப் போல உணர்ந்தான்.
இரவு நெருங்கிட கடையில் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மணி ஒன்பதைத் தொட்டதும் ஊழியர்களும் கிளம்பினர். கடையின் கணக்காளர் சையது அன்றைய கணக்குகளை சரிபார்த்து அவனிடம் சமர்ப்பித்தார். அவனும் சரிபார்த்தபின் இருவரும் கடையை பூட்டிவிட்டு கிளம்பினர்.
“மாமா உங்க பைக் எங்க?" என்றான் சலீம்.
“பைக் கொஞ்சம் மக்கர் பண்ணுது தம்பி அதான் சர்வீசுக்கு விட்ருக்கேன்" என்றார்.
“சரி வாங்க மாமா வீட்ல விட்டுற்றேன்”
“பரவால்ல தம்பி நீங்க போங்க நான் போயிருவே"
“எப்டி மாமா போவீங்க லேட் ஆய்டுச்சு வாங்க நான் ட்ராப் பண்ணிற்றேன். அட ஏறுங்க"
மெலிதாக சிரித்தவர் “சரி தம்பி" என்றபடி பைக்கில் அமர்ந்தார்.
சையது அந்த கடைசியில் பதினைந்து வருடங்களாக வேலை செய்கிறார். சலீமுடைய தந்தையின் மேல் நிறைய மரியாதையும் விஸ்வாசமும் உடையவர். அவரின் நேர்மையின் பொருட்டு சலீமின் தந்தைக்கு அவர் மேல் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் உண்டு. சலீமும் சிறுவயது முதல் அவரை மாமா என்றே அழைப்பான். சலீம் எத்தனையோ முறை சொல்லியும் அவர் சலீமை பேர் சொல்லி அழைக்க மாட்டார். தம்பி என்றும் வாங்க போங்க என்று மரியாதையுடன் தான் அழைப்பார். சலீமும் அவர் மேல் மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டிருந்தான்.
அவரிடம் மட்டுமல்ல இதுவரை வயதில் மூத்தவர்கள் யாரிடமும் மரியாதைக் குறைவாய் நடந்ததில்லை சலீம். தாய் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்றே இதுநாள் வரை மதித்து வருபவன்.
சலீமின் பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள். முதல் பெண் சுமையா. திருமணமாகி கணவருடன் லண்டனில் வசித்து வருகிறாள். அவளுக்கு அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் நம் கதாநாயகன். அவனுக்கு அடுத்து நான்கு வருடங்கள் கழித்து பிறந்தவள் சமீரா. ரதீமா படிக்கும் அதே கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள். அவளையடுத்து இரண்டாண்டு இடைவெளியில் பிறந்தவள் ஷிஃபானா. பதினோராம் வகுப்பு பயில்கிறாள். தன் குடும்பத்தினரிடம் உயிரையே வைத்திருந்தான் சலீம். பத்தாம் வகுப்பு வரை தஞ்சையில் படித்தவன் ஏற்காட்டில் உள்ள இன்டர்நேஷனல் ஸ்கூலில் பதினோராம் வகுப்பில் சேர்க்கப்பட்டான். பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் மாணவனாக வந்தவனுக்கு அவன் தந்தை இரண்டு வாய்ப்பு கொடுத்தார். மருத்துவம் படிக்கிறாயா அல்லது பொறியியல் படிக்கிறாயா. என்னதான் சலீம் வீட்டின் செல்லப்பிள்ளை என்றாலும் சில விஷயங்களில் அவன் தந்தை அவனுக்கு சரியாக இருக்குமா என யோசிப்பாரே தவிர அவனுக்கு பிடிக்குமா என யோசிக்கமாட்டார். பிறந்ததிலிருந்து அவன் விரும்பியவை விரும்பாதவை என சகலமும் அவன் கேட்காமலேயே அவனுக்குக் கிடைத்தது. அதனாலோ என்னவோ அவனுக்கு பெரிதாய் எதிலும் நாட்டமில்லை. பொறியியலில் பெரிதாய் நாட்டமில்லை என்றாலும் தந்தையின் சொல்லுக்காக மென்பொருள் பொறியியலை தேர்ந்தெடுத்தான். கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றவன் தாய்தந்தையரின் ஆசைக்காக படித்தாலும் அவனுக்கென ஒரு லட்சியத்துடன் சத்தமின்றி அதற்காய் உழைத்துக் கொண்டிருந்தான்.
எட்டு மணியில் இருந்து இருப்பு கொள்ளாமல் நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்தபடி நடை பயின்றாள் ரதீமா. தன்னவனுக்காக அவனுக்குப் பிடித்த அனைத்தையும் தன் கையால் சமைத்து அவனுக்கு பறிமாற வேண்டும் என மனது அடித்துக் கொண்டது. ஆனால் அதை செய்யும் துணிவில்லை.
‛சலீம் உனக்காக சமைக்கனும்னு ஆசையா இருக்கு ஆனா திடீர்னு அம்மாட்ட போய் நான் சமைக்கிறேன்னு சொன்னா என்ன நெனப்பாங்க. அம்மாவே சரினு சொன்னாலும் எனக்கு டீ காபி தவிர வேற ஒன்னும் பண்ண தெரியாது. சே அம்மா எத்தனை தடவை சொல்லிருப்பாங்க நான் தான் கேக்கல. பட் யூ டோன்ட் வொர்ரி நம்ம கல்யாணத்துக்குள்ள நான் சூப்பரா சமைக்க கத்துக்கறேன். தினமும் நானே சமைச்சு நானே உனக்கு ஊட்டி விடுறேன்.'
நல்லா இருந்த பொண்ண இப்படி தனியா பெனாத்துற அளவுக்கு பைத்தியம் ஆக்கிட்டானே இவன். எங்க போய் முடிய போகுதோ

பாப்போம்....