sanchumahen
New member
அன்புவலி----+அது
அத்தியாயம் 6
அன்று
லக்க்ஷ்மி------------- என்று காட்டுக்கத்தல் கத்தியபடி வந்த மாணிக்கராசனைத் திகிலுடன் பார்த்தாள் லக்க்ஷ்மி.
எங்கேடி அந்த பூரான் என்று அவன் கேட்க அவள் அழகர் ஐயாவீட்டிற்கு வேலைக்குப் போயிட்டாள் என்றாள் அவனது மனைவி.
நல்ல பெயர்தாண்டி வைச்சிருக்கிறீங்கள் அந்த விசப்பூச்சிக்கு. மனம் முழுக்க நஞ்சு.
இவள் மௌனமாக நின்று கொண்டாள். அவளுக்கும் பூரா மீது பாசம், பரிவு எதுவும் பெரிதாக இருந்ததில்லை. ஆனால் இவளை மலடி என்று யாரும் பேசாது காப்பாற்றிய மகராசி அவள்.
இந்த மாணிக்கராசனை லக்க்ஷ்மி மறுமணம் செய்து நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் அவளுக்குப் பிள்ளைப் பேறு எதுவும் கிடைக்கவில்லை.
அவனது உறவினர்கள் இவளை மலடி என்று தூற்றுவதற்குப் பதிலாக அவனை ஏதோ குறையுள்ளவன் போல பார்த்ததால் அவர்களின் நஞ்சு தோய்ந்த சொல் அம்புகள் இவள் பக்கம் பாயாமல் தப்பியிருந்தாள். காரணம் பூரா.
அவளிலை என்ன குறை அவள் தான் கல்யாணம் கட்டி பத்தாம் மாசமே டாண் என்று பிள்ளைய பெத்தவளாச்சே-------
இந்த ஆறுதல் ஒருபக்கம் கிடைத்தாலும் மாணிக்கராசன் சொல்லும் கேவலமான வார்த்தைகள் நாராசமாக இருக்கும். அவளுக்கு தாலிகட்டிய கணவன் வேலுமணி அதுவும் வேலுமணியுடன் அவளுக்கு தகாத உறவு இருந்தது போல இவன் பேசும் பேச்சுக்கள் கொடுமையிலும் கொடுமை.
அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவன் அவளுடை முதல் கணவன். அப்படிப்பட்ட அப்பழுக்கு இல்லாத கனவானான அவனை இந்த சாக்கடை வாய்க்காரன் இறந்து போனவன் என்றும் பாராது தூற்றுவதும் அவன் இறந்ததற்காக எக்காளமிட்டுச் சிரிப்பதும் கேட்டால் சகிக்காது.
இவனது கபடபுத்தி நான்கு பக்கங்களிலும் அம்பைப் பாய்ச்சும். எல்லா செயல்களுக்கும் அர்த்தம் கற்பிக்கும். ஆரம்பத்தில் கேட்கச் சகிக்க முடியாதவையாக இருந்த போதும் இவனது கேவலமான வார்த்தைகள் அவளுக்கு இப்போது பழக்கப்பட்டுவிட்டன.
பாவம் பூரணி! பெத்தவளுக்கு ஆறுதல் கொடுக்கப் பிறந்தவள். தனக்கு சிறிய தகப்பன் என்ற பெயரில் வந்த அரக்கனது அராஜகங்களைத் தாங்க முடியாது தவிக்கும் இளம் குருத்து. அவள் அடிவாங்காத நாள் என்று ஒருநாள் இல்லை.
அந்த எருமைமாடு கம்மாலையில் வேலை செய்து காய்ச்சுப்போன கைகளால் அவளை போட்டு அடியோ அடியென்று அடிக்க அயலவர்கள் பொறுக்காது தலையிட இவன் பேசும் தூஷணைகளுக்கு முன்னே யாரும் முகம் கொடுக்க முடியாது போக லக்க்ஷ்மியின் காதுபடவே "போன பாவி இந்த குருத்தையும் கூட்டிக்கொண்டு போகமல் போனானே” என்று அவர்கள் பேச தனது வாழ்க்கையில் வசந்த காலத்தைக் காட்டியவனின் மகளின் இழிநிலையை நினைத்து முதற்தடவையாகக் கவலைப்பட்டவள் அவள்மீது ஆதரவு காட்ட முற்பட அவளுக்கு விழும் அடியும் ஆய்கினைகளும் இரண்டு மடங்காக வேதனையை மறைத்தவள் வழமைபோலவே அக்கறையற்றவள் போல காட்டிக் கொண்டாள்.
அதுவும் பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் அவளை வயல் வேலைக்கும் தோட்ட வேலைக்கும் போ எனவிரட்டிவிட்டவன் அவள் கொண்டு வரும் சொற்ப கூலியையும் பறித்து வைத்துக் கொண்டான்.
ஒரு நல்ல உடை கிடையாது, பசிக்கு போதிய உணவு கிடையாது அந்தக் குருத்து வாடித்தான் போனது.
ஊரார் தனது தந்தையைப் பற்றிப் பேசுவதைக் கேட்டவள் “அப்பா என்னை ஏனப்பா விட்டிட்டு போனாய்? சித்தப்பா தினமும் அடிக்கிறார். அக்கா ஒண்ணும் பேச மாட்டேங்கிறா அப்பா” என்று மனதோடு தந்தையிடம் பேசுபவள் ஆறுதல் தேடியும் தாயருகில் போகவில்லை.
அவள் லக்க்ஷ்மியை தன்னைப் பெற்றவள் என்று அறிந்ததே அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயதாகும் போதுதான். அதுவும் பக்கத்து வீட்டில் இருக்கும் செல்லம்மா பாட்டி சொல்லித்தான் தெரியும். அப்போதுகூட அம்மா என்று ஓடிச்சென்று கட்டிக் கொள்ளத் தோன்றவில்லை.
அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?????
அப்போது லக்க்ஷ்மிக்கு பதினாறு வயது. நல்ல மூக்கும் முழியுமாக சிவந்த நிறத்தில் இருந்தவளை தூரத்து உறவான மாணிக்கராசனின் பெற்றோர் பெண் கேட்டு வர சம்பாத்தியம் பெரிதும் அற்ற அவனை மணம் முடித்துக் கொடுக்கத் தயங்கிய இவளின் பெற்றோர் அரச பேரூந்து ஓட்டுநராக வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலுமணிக்குக் கட்டி வைத்தனர்.
லக்க்ஷ்மியின் குடும்பத்தில் எல்லோருமே பெண் பிள்ளைகள் தான். அவளுக்குக் கீழே மூன்று தங்கைகள் ஒவ்வொரு வயது வித்தியாசத்தில் இருக்க வந்த உழைப்பாளியை வேண்டாம் என்று சொல்ல விருப்பம் இன்றி வேலுமணியைத் திருமணம் செய்து வைத்தனர்.
வேலுமணி மிகவும் சிறந்த உழைப்பாளி. அம்மா அப்பா இல்லாதவன். மிகவும் நாணயமானவன் அன்பானவன். வேலுமணியுடன் வாழ்ந்த அந்த பத்து மாதங்களும் அவள் ராணி போலதான் வாழ்ந்தாள்.
வீட்டில் இருந்த நான்கு பெண்பிள்ளைகளுக்கும் தம்பிஐயா அதுதான் லக்ஷ்மியின் அப்பா சாப்பாடு போடும் அளவிற்குச் சம்பாதித்தாலும் அவர்களின் ஏனைய தேவைகளை நிறைவு செய்ய முடியாது தடுமாறினார். இதனால் லக்க்ஷ்மியும் சரி அவளது தங்கைகளும் சரி பள்ளிப்படிப்பை ஆரம்ப நிலையிலேயே முடித்து தோட்ட வேலைகளுக்கும் வயல் வேலைகளுக்கும் குழந்தைத் தொழிலாளிகளாகச் சென்றனர்.
வேலுமணி தன் சம்பாத்தியம் அனைத்தையும் மனைவியின் குடும்பத்திற்குச் செலவழித்தாலும் என் கணவன் என் வாழ்க்கை என்று யோசிக்கும் பக்குவம் எதுவும் அற்ற சிறு பெண்ணாகவே லக்க்ஷ்மி இருந்தாள். உண்மையிலும் அவள் சின்னப் பெண்தானே.
திருமணமான அடுத்த அடுத்த மாதங்களில் இவள் தாய்மைப் பாக்கியம் பெற்றுவிட அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவு கணக்கு இல்லாமல் போயிருந்தது. லக்க்ஷ்மியைத் தாங்கோ தங்கென்று தாங்கினான். ஆனாலும் விதிக்கு இவை எதுவும் பொறுக்கவில்லை போலும். பிரசவத்திற்கு ஒரு மாதம் இருக்கும்போது வந்த விசக் காய்ச்சல் திடகாத்திரமாக இருந்த வேலுமணியை காவு வாங்க தனது வாழ்க்கையில் என்ன நடந்தது இனி என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாமலே முழித்துக் கொண்டு நின்றாள் லக்க்ஷ்மி.
அவளின் அம்மா அப்பாவினது நிலைமைதான் மிகத்துன்பமாகப் போயிருந்தது. மருமகன் என்று வந்து குடும்ப பாரத்தை மகன்போல தாங்கியவன் மடிந்து போக அவனால் தரப்பட்ட இன்னொரு உயிரும் சேர்ந்து தம்பிஐயாவினதும் அவரது மனைவி பவனத்தினதும் பாரத்தை உயர்த்திவிட இருவரும் போராடமுடியாமல் சோர்ந்து போயினர்.
வேலுமணியின் மரணத்தில் சந்தோசமடைந்த ஒரே ஒரு நபர் மாணிக்கராசன் தான். "என்னை வேண்டாம் என்று சொன்னியே மாமா இப்போ என்னாச்சு" என்று மாமானின் நொந்த உள்ளத்தை சொல் அம்புகளால் வதைக்க நைந்த உள்ளத்துடன் வந்தவர் மனைவியிடம் சொல்லி அழ ------ஆறுதல் தர ஆளின்றி கிடந்தது குடும்பம்.
இது போததென்று லக்க்ஷ்மியும் பெண்மகவைப் பெற்றெடுக்க தங்களது போராட்ட களத்தை எப்பாடுபட்டாகிலும் நடத்தவேண்டிய நிர்பந்தத்தில் குடும்பம் நின்றிருந்தது.
தனது சித்திகளைப் பார்த்து தாயை அக்கா என்று அழைத்தவளை அம்மா என்று கூப்பிடு என்று சொல்லிக்கொடுக்க ஆளற்றுப்போக அம்மா அக்காவாகிப்போனாள்.
பிள்ளைக்குப் பால் கொடுக்கும் அளவிற்கு இவளிடம் பால் சுரக்காது போக இவர்கள் வளர்த்த பசு தாய் என்ற வகிபாகத்தை ஏற்று குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது.
தாயினது தங்கைகளுடன் உண்டு, உறங்கி, புழுதியில் விளையாடி நோய் வந்தபோது தாங்குவாரின்றி தானே அனுபவித்து தன்பாட்டிலேயே குணப்பட்டு இயற்கையின் உதவியால் வளர்ந்தாள் குழந்தை.
தனது தாத்தா பாட்டியை அம்மா அப்பா என்றும் தாயை அக்கா என்றும் அழைப்பவள் அம்மா என்பவளின் அரவணைப்பையோ பாசத்தையோ அறிந்ததில்லை.
“தகப்பனைத் தின்னி” என்ற பெயருடன் உலாவந்தவளை தனது எதிரிபோலவே நினைத்து விலகி நின்றாள் லக்க்ஷ்மி. என்னமோ அவளது கணவன் இறந்ததற்கு இவள்தான் காரணம் என்பது போல.
தனது சித்திகளைப் போலவே தனது பெயரை மட்டும் எழுதும் அளவிற்கு எழுத்து தெரிந்தவள் பள்ளிக்குப் போகாமல்விட அவளைப் படி என்று சொல்லிப் படிக்க வைக்க யாரும் இருக்கவில்லை.
அரவணைப்பில்லாது வளர்ந்த குழந்தை அன்பைக் கடல்என உள்ளத்தில் கொண்டிருந்தாள். யாரையும் கோபித்துப் பேசவோ தன்னுடன் விளையாடும் தனது பராயத்து குழந்தைகளை அடிக்கவோ மாட்டாள்.
மெலிந்து கறுத்த என்புதோல் போர்த்திய உடம்பாக போசாக்கு என்றால் என்னவென்றே தெரியாதவளாக இருந்தவள் குணத்தில் தன் தந்தையைக் கொண்டிருந்தாள். சுயநலம் இல்லாதவள். தனது கையில் இருக்கும் தின்பண்டத்தை சித்திகள் கேட்டால் தான் உண்ணாவிட்டாலும் அவர்களுக்கே தந்துவிடும் அவளது பாங்கு தம்பிஐயாவிற்கு வேலுமணியை நினைவுபடுத்த இந்த குழந்தையாவது ஆணாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அவருக்கும் வந்திருந்தது.
குடும்ப பாரத்தை சுமக்கமுடியாது போராடிய குடும்பத்திடம் பத்து வருடம் கழிந்து மீண்டும் பெண் கேட்டு வந்திருந்தான் மாணிக்கராசன். அவனுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இருபத்தேழு வயதிலிருந்த லக்க்ஷ்மியை இவனது கையில் பிடித்துக் கொடுத்ததும் என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்று தம்பிஐயா போய்விட மற்றைய பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்த பவனத்திற்கு கைகொடுக்க மாணிக்கராசன் என்ன இன்னொரு வேலுமணியா???
பட்டணத்தில் இருக்கும் நூல்நூற்கும் ஆலைக்கு ஆட்களை எடுப்பதாகக் கேள்விப்பட்டு தனது மூன்று பெண்பிள்ளைகளுடன் போனவளால் பேத்தியையும் கூட்டிச் சென்று போராட முடியாததால் அவளைப் பெற்ற தாயுடன் விட்டுச் சென்றுவிட ஆதரவற்ற பூரணிக்கு வடிவேல் அழகர் ஐயாவின் மனைவி தெய்வானை ஆச்சி உதவிக்கு வந்தார்.
மகனும் மருமகளும் பேரனுடன் அறிவியல் நகருக்கு குடிபோக ஊரைவிட்டுப் போகவிரும்பாத வயோதிப தம்பதிகள் இருவருக்கும் கையுதவிக்கு என்று சின்னமணியால் கொண்டு வந்து விடப்பட்டாள் பூரணி.
பாட்டியம்மா என்று தெய்வானையை அழைத்து ஓடிவந்து காலடியில் நிற்கும் அந்த சுறு சுறுப்பான கன்றுக்குட்டி போல திரிபவளை தெய்வானைக்கும் பிடித்துப்போக அவள் வந்து நிற்கும் பகல் வேளைகளில் வயிறு வாடாத உணவும் ஓரளவு நல்ல துணிமணியும் கொடுத்து காத்துக் கொண்டார் தெய்வானை.
ஆரம்பத்தில் பொங்கல், தீபாவளிக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்தும் பழைய கிழிந்த உடைகளுடன் வரும் சிறுமியைப் பார்த்து காரணம் எதுவும் புரியாது நின்ற தெய்வானை ஆச்சிக்கு சின்னமணி சொன்ன செய்தி மனதை வருத்தியது.
அம்மா நீங்கள் கொடுத்த புதுத்துணியை பூராவின்ரை சித்தப்பன் தன்னோடை அக்கா பிள்ளைகளுக்கு கொண்டு போய் கொடுத்திட்டான். அதுவுமில்லாம இந்த பிள்ளை புதுத்துணி போட்டதற்கு அடிவேற போட்டிருக்கிறான்-----
நொந்து போன தெய்வானை அம்மா அவளது வயிற்றுப் பாட்டை மட்டும் கவனித்துக் கொண்டார். அவளது ஆடைகள் அதிகம் கிழிசலாக இருந்தால் பழைய புடவைகளில் பாவாடை சட்டை தைத்துக் கொடுக்க-----பெரியவீட்டுப் பவுசை பார்------வேலைக்கார நாய்க்கு பழைய துணியிலை பாவாடை தைச்சு கொடுத்திருக்கின்றாங்கள் என்று நையாண்டி வேறு செய்ய பூரணி அடிக்குப் பயந்தும் லக்க்ஷ்மி எதற்கு வம்பு என்றும் பேசாது இருந்து கொண்டனர்.
தெய்வானைப் பாட்டியம்மா இறந்தபின் அவர்களது வீட்டை முற்றத்தை பெருக்கவும் சிவப்பி பசுவுக்கு தீவனம் வைக்கவும் பூரா மீண்டும் அழைக்கப்பட அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் காத்தாயிக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டாள்.
காத்தாயி வேலைக்காரியாக இருந்த போதும் பூராவின் நிலை அறிந்ததால் தன்னால் இயன்றவரை அவளை அன்பாகப் பார்த்துக் கொண்டாள்.
இன்று கந்தவேள் அழகரும் வள்ளியம்மையும் அழகர்புரத்தில் தங்கியிருப்பதால் வள்ளியம்மைக்கு உதவியாக நின்றபோதும் அவளுக்குப் பிடித்த சிவப்பி பசுவைக காணாது கலங்கியவள் அதற்கு நேர்ந்த கதியைக் கேட்டு அழுதது ஒரு புறம் என்றால் அதனைச் செய்தது சித்தப்பாவின் அக்கா மகன் கணேசன் என்பதைக் கேள்விபட்டதும் பயத்தினால் மென்மேலும் அழுதாள்.
அதுவும் ஊரே சேர்ந்து சூடு வைத்ததற்கு சித்தப்பா ருத்திர தாண்டவம் ஆடி தான் வடிவேல் அழகர் ஐயா வீட்டில் வேலை செய்வதைக் காரணம் காட்டித் தன்னை அடித்துக் கொல்லப்போகிறான் என்பதால் வந்த அதிகப்படியான பயம் அவளை மேலும் மேலும் அழத் தூண்டியது.
இது போதாதென்று காலையிலிருந்து இடையிடையே வலித்துக் கொண்டிருந்த வயிறு மேலும் வலிக்க அதனைத் தாங்கமுடியாத சின்ன பெண்ணவள் அவர்களது வீட்டில் இருக்கும் ஸ்டோர் றூமில் போயிருந்து யாரும் காணாதபடி அழுது கொண்டிருந்தாள்.
இவளது அழுகை அதனுடன் சேர்ந்த விக்கல் சத்தம் வள்ளியம்மையின் காதுகளில் கேட்க அழுகைச் சத்தம் கேட்கும் திசையை நோக்கி வந்தவர் ஸ்டோர் றூம் பக்கம் வர இவளது அழுகை வயிற்று வலியால் மென்மேலும் பெருக பெண்குழந்தையற்ற வள்ளியம்மைக்கு அவள் தாய் ஸ்தானத்தைத் தந்து தான் பெரிய பெண்ஆனதை முதன் முதலில் அவருக்குச் சொல்லி தன் கனவில் மட்டுமே ஒரு பெண்மகவினால் அடையக்கூடிய சந்தோஷங்களை கண்டு அநுபவித்திருந்த அவருக்குத் நிஜத்திலும் அதே சந்தோஷத்தை அளித்து தன்னைச் சார்ந்தோருக்கு அன்பையும் நிம்மதியையும் தரும் அவளது பிறப்பின் பேற்றினை அவரும் அடையத் தந்திருந்தாள்.
அவளால் இன்று வந்த மகிழ்வு என்றும் வருமா?? ஒரு வேலைக்கார சிறுமியால் முதலாளியம்மாவிற்கு என்ன சந்தோசமும் நிம்மதியும் வரக்கூடும்???????
இன்று
வழமையைப் போல அதிகாலையில் எழுந்த விஷ்ணு வெளிப்புறமிருந்த மின்சார விளக்குகளை ஒளிர விட்டான். தனது காலை உடற்பயிற்சிகளை முடித்தபின் வீட்டின் முன்வாசலையும் பின் பகுதியையும் பெருக்கி நீர் தெளித்ததுடன் மோட்டரை ஓடவிட்டு வாழைமரங்களுக்கும் புதியதாக நாட்டப்பட்டிருக்கும் எலுமிச்சை மற்றும் கொய்யா மரக்கன்றுகளுக்கும் நீர்ப்பாய்ச்சி முடித்தபின் அவனுக்குப் பிடித்தது போல் கைவாளியினால் கிணற்றிலிருந்து நீரை அள்ளிக் குளித்தான்.
வீட்டின் உட்புறம் பார்க்க அந்த ஒற்றை அறை இன்னமும் திறக்கப்படாமலிருக்க நல்ல காலம்டா சாமி அந்த பத்திரகாளியோடை ஃபைட் இல்லாமல் தனக்குத் தேவையான உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து வைத்ததை நினைத்து தன்னைத் தானே மெச்சிக் கொண்டான். பைக்கை ஸ்டார்ட் செய்து தவம் அண்ணாவின் மெஸ்க்கு இவன்வர நேரம் காலை ஐந்து ஐம்பதைக் காட்டியது.
பால் வந்திருக்க முதல் டீயை இவனுக்கு வழமைபோல தந்து தனது வியாபாரத்தை தொடக்கியவர் தம்பி இன்றைய ஸ்பெஷல் பால் அப்பம் என்றார்.
அண்ணா சுடச்சுட தேமோ பாக்ஸில் எடுத்து வையுங்கோ அரைமணித்தியாலத்தில் வருவேன் என்க பையா ஐந்து செட் அப்பம் எடுத்து வை என்று ஆர்டர் போட்டவர் இவன் கொடுத்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டதுடன் இவன் கொண்டு வந்த பிளாஸ்கில் டீ யை நிரப்பி தர வீட்டிற்கு வந்தவன் மீண்டும் அறையைப் பார்க்க அவள் எழுந்து வரவேயில்லை.
அட கடவுளே! எதுக்கு இந்த சோம்பேறி இங்கே வந்திருந்து என்ரை உயிரை வாங்குகிறாள்? என்று இவன் பார்த்திருக்க சரியாக ஏழுமணிக்கு எழுந்து தான் அணிந்திருந்த நைட்டியுடன் வெளியே வந்தாள் எந்தவிதமான சிந்தனையுமின்றி.
வந்தவள் சீப்பை எடுத்துவந்து ஹாலில் இவன் அமர்ந்திருந்த இடத்திற்குப் அருகில் எதிர்புறமாக சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைப் பார்த்தபடி தலையை வாரியது மட்டுமன்றி முகத்தை உற்று உற்று கண்ணாடியில் பார்த்து விரல்களால் தடவி முகப்பரு போல இருந்த அடையாளங்களில் மெல்லிய மாசாஜ் கொடுத்தாள். அத்துடன் விடாது கைகளை உயர்த்தி இவள் சோம்பல் முறிக்க இவனுக்கு பதறிக்கொண்டுதான் வந்தது.
என்ன பெண் இவள்? ஒரு ஆண்பிள்ளை இருக்கிறான் என்ற சிந்தனையில்லாமல் அரை குறை ஆடையுடன் வந்து இப்படி எல்லாம் பண்ணுறாளே------- என்று எண்ணியவன் வெளியில் முற்றத்தில் போய் நின்று கொண்டான்.
அவன் வெளியில் சென்றதைக்கூட ஒரு பொருட்டாக எடுக்காதவள் ஜான்சி ராணி போல மிடுக்காக நடந்து வெளியில் சென்று பேஸ்ட் பிரஷ் சகிதம் கிணற்றடியில் இருந்த தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டாள்.
மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் மாற்றுடைகளுடன் சோப், பேஷ் வோஷ் மற்றும் இத்யாதி இத்யாதி என்ன பலவற்றையும் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் வாளி ஒன்றினுள் வைத்துக் கொண்டு மீண்டும் வீட்டின் பின்புறம் வந்தாள்.
இந்த ஒரு மாதத்தில் அந்த வீட்டில் டாய்லட் இருந்த இடத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த புதிய குளியல் அறைக்குள் சென்று தனது குளியலை முடித்துக் கொண்டவள் வெளியில் வர இவளுக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனைக்குட்டி நிற்க அதுவும் பூனைக்குட்டியென்றால் அதைப்பிடித்து கொஞ்சும் வரை ஓயாதவள் அதை விரட்டிக்கொண்டு ஓட அது இவளிடமிருந்து தப்புவதற்கென வீட்டைச் சுற்றி ஓட நடக்கிற கூத்து எல்லாவற்றையும் இதென்னடா கருமம்! எதுக்கு பூனையைத் துரத்திக் கொண்டு ஓடுகிறாள்? என்று இவன் பார்த்துக் கொண்டு நிற்க பல்ப் நிலத்தில் விழுந்து வெடித்தது போன்ற சத்தம் வீட்டின் உள்ளே இருந்து கேட்க “ஏன்டா இப்படி பண்ணினாய்?” என்று அவள் கத்திய சத்தத்திற்கு----
நான் எதுவும் செய்யவில்லையே---- என்று நினைத்தபடி உள்ளே வந்தவன் கண்களுக்கு அவளிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பூனைக்குட்டியும் நிலத்தில் விழுந்து கிடந்த ப்ளாஸ்கும் பட ஐயோ என்றிருந்தது அவனுக்கு.
அவளோ நிலத்தில் விழுந்த ப்ளாஸ்கைப் பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் பூனைக்குட்டியைக் கொஞ்சுவதில் கவனமாக இருக்க அவளையும் ப்ளாஸ்க்கையும் மாறி மாறிப் பார்த்தவன் குனிந்து ப்ளாஸ்கைத் தூக்கிப் பார்க்க சலங்கையைக் குலுக்கியது போல சத்தம் கேட்டது.
ஐயோ விடிஞ்சதும் விடியாததுமாக ஆயிரம் ரூபாவிற்கு வேட்டு வைச்சிட்டாளே. சும்மா போன சனியனைத் துரத்திக் கொண்டு வந்து வீட்டிற்குள் விட்டு--- நஷ்டப்படுத்திப் போட்டு--- கண்டு கொள்ளாமல் நிற்கிறாள். இவளுக்கு ரொம்பத்தான் ஏத்தம்.
மனதில் கறுவியவைகளை வெளியில் சொல்லி காலம் காத்தாலை ஒரு பஞ்சாயத்தை தொடக்கி வைக்க விரும்பாதவன் உடைந்த ப்ளாஸ்கை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அந்த ப்ளாஸ்க் லண்டனில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பிராண்ட். இவனது பழைய கராஜ் ஓனரின் மகன் லண்டனில் இருந்து வந்தபோது தந்தது. அதனுள் இருக்கும் பதார்த்தம் நாள் முழுவதும் அதே வெப்பத்துடன் இருக்கும்.
ம்---நல்லத்தான் இன்றைக்கு நாள் தொடங்கியிருக்கு என்று நினைத்துக் கொண்டான் இன்று மேலும் மேலும் அவளால் வரப்போகும் இன்னல்கள் தெரியாமல்.
ப்ளாஸ்க்கிற்கு காரியம் பண்ணிவிட்டு வீட்டின் உள்ளே வர அவள் காணாமல் போயிருந்தாள் பூனைக்குட்டியுடன். அவளுக்கு இன்று யூனியில் விரிவுரைகள் இருக்க அதற்கு ஆயத்தமாக அறையின் உள்ளே வந்தவள் ஒரு ஜீன்ஸ், டாப்பை அணிந்தபடி வந்து மீண்டும் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டாள்.
அவள் அணிந்திருந்த ஜீன்ஸைப் பார்த்தவனுக்கு தலைசுற்றிப் போனது. இதே ஆடையுடன் பஸ்ஸில் போகப் போகிறாளா?? என்று நினைத்தாலும் சொல்லும் அளவிற்கு அவளுடன் அவன் பேசுவதில்லை என்பதைவிட இவனது பேச்சை மதிக்கும் அளவிற்கு அவளது மூளை இணங்கிவராது என்பது அவனுக்குப் தெளிவாகப் புரிந்ததால் ‘தைத்தபின் அணிந்தாளா!! ---- இல்லை அதை அணிந்தபின் தான் தைத்தாளா!!! என்ற ஜீன்ஸையும் அவளணிந்திருந்த சிலீவ்லெஸ் டாப்பையும் பார்த்து--------
என்னைப்பார் என் அழகைப்பார் என்று ஆடையை அணிய வேண்டியது பிறகு ஆண்களைக் குற்றம் சொல்ல வேண்டியது என்று எண்ணியவனை ஆடிட்டரிடமிருந்து வந்த அழைப்பு இவ்வுலக சிந்தனைக்குக் கொண்டு வர மொபைலை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்தான்.
சில டாக்குமென்ட்ஸை கொண்டு இவனை ஒன்பது மணியளவில் ஆபீஸ்க்கு வரச் சொல்லி அவர் சொல்ல அவர் அனுப்பிய மெயிலைப் பார்க்கலாம் என்று லாப்டாப் அருகில் வந்தவன் அதை ஆன் பண்ண போக-----
போட்ட லிப்ஸ்டிக்கை அட்ஜஸ்ட் செய்கின்றேன் பேர்வழி என்று உதடுகளை அப்படியும் இப்படியும் இவள் அசைத்து செய்த மாயாஜாலங்கள் இவள் பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருந்த கண்ணாடியின் எதிர்புறமிருந்த ஆன் செய்யப்படாதிருந்த இவனது லாப்டாப்பின் திரையில் தெரிய----
அது முத்தமிட அழைப்பது போல இருக்க விதிர்விதிர்த்துத் திரும்பியவன் கண்கள் கைகளில் இருந்த இவளது பல்லுபட்ட அடையாளத்தைக் காட்ட ஒண்ணும் வேணாம் சாமி என்ற நினைப்பில் மீண்டும் வெளியில் வந்து நின்று கொண்டான்.
அவள் அணிந்திருக்கும் டாப்பிற்கு மேல் இன்னொரு நீள கோர்ட் போன்ற ஒன்றை அணியப் போகிறாள் என்பதோ உதட்டை சுழித்து மேல் உதட்டுடன் கீழ்உதட்டை தேய்த்து அதிகப்படியான லிப்ஸ்டிக்கை அட்ஜட்பண்ணுவார்கள் என்பதோ பாவம் அவனுக்குத் தெரியவில்லை.
இவளது பேச்சுக்கள் விளைவிக்கும் கோபம் மனம் நிறைய இருந்தாலும் இவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு பார்க்கப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது என்னவோ உண்மைதான். அடடா!! இப்படித்தான் பெண்கள் மேக்கப் போடுவார்களா?
நம்ம இனம்தான் என்ன சோப் போட்டு குளிக்கின்றோம் என்று தெரியாது குளிச்சு முடிக்குது போல------என்று மனம் ஒருபுறம் நினைக்க அட போடா! பெண்பிள்ளைகளே பொறாமைபடும் அளவிற்கு எங்கள் இனத்திலும் ஒரு பகுதி பல்வேறுபட்ட ஜெல்களுடனும் கிறீம்களுடனும் பியூட்டி பார்லர்கள் என்றும் அலையுறாங்கள் என்று சொல்ல----மெல்ல மனதினுள் நகைத்துக் கொண்டவன் அவள் வைத்திருந்த மேக்கப்பிற்கான பொருட்களை நினைத்துப் பார்த்து என்னதான் சொல்லு இந்த ராட்சசி அளவிற்கு யாரும் பான்ஸி கடையையே வைச்சிருக்க மாட்டான்கள் என்று எண்ணிக்கொண்டான்.
முற்றத்தில் நின்றவனது கவனத்தை ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கலைக்க கண்களில் சாப்பாட்டுக் கேரியருடன் வரும் பாமாவும் பார்வதியம்மாவும்பட மனதில் மூண்ட எரிச்சல் காரணமாக அவர்களிடம் குறிப்பாக பார்வதியம்மாவிடம் முகம் கொடுத்துப் பேச விரும்பாதவன் விரைந்து சென்று அவனது தோட்டத்தின் கோடியில் போய் நின்று கொண்டான். வரவேற்பாக ஒரு தலையசைப்போ முகமலர்ச்சியோ காட்டவில்லை.
அம்மாவும் அவளது அன்புக்குரிய பெரியம்மாவும் சாப்பாடு கொண்டு வந்தததையும் அவர்களை வரும்படி அழைக்காது அவன் சென்றதையும் பார்த்தவள் பழையபடி ஆத்திரம் கொப்பளிக்க அவனை வார்த்தைகளால் குதறும் நோக்கத்துடன் பார்த்திருக்க அவன் அதற்குச் சந்தர்ப்பம் தந்தானில்லை.
விஷ்ணு தோட்டத்தின் பின்புறம் சென்றதைக் கவனித்த பாமா அவனுக்கும் உணவு கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி அழைக்கச் செல்ல அவரது நோக்கத்தை உணர்ந்தவனோ அவருடன் சுமுகமாக பேச மனமற்றவனாக அவரை விலத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் வர “தம்பி உங்களுடன் பேச வேண்டும்” என்று சொன்னவரது வார்த்தைகள் எதனையும் கவனிக்காது உள்ளே நுழைந்து கடைச் சாவிகளையும் கணக்குப் புத்தகம், பைக் சாவி என்பவற்றையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போக பாமாவிற்கு அவமானமாகிப் போனது ஒருபக்கம் என்றால் அவனைக் கண்டதும் குத்தல் பேச்சுகளைப் பேசத் தொடங்கிய பார்வதியம்மாவை பார்த்து இவர் இனி என்னாகுமோ எனக் கலங்கி நிற்க லயா அவனது காதுபடவே -----
என்ரை அப்பாவை ஏமாற்றிப் பிடுங்கிய காசில் வாங்கிய ப்ளாஸ்க் உடைஞ்சு போச்சுதாம் ரொம்ப ஃபீல் பண்ணிப் பார்க்கிறான் பெரியம்மா என்று சொல்ல----
ஏன் பார்க்க மாட்டான்? அவன்ரை யோகம் அப்பிடி இருக்கு லயாம்மா என்றவர் மேலும் தொடர---
அக்கா---- என்று ஆத்திரமாக கத்திய பாமா நான் நேற்றே உன்னை என்ரை வீட்டு விசயங்களிலை தலைப்போடாதை என்று சொன்னேன் தானே----- நான் ஒரு புத்தி கெட்ட மடைச்சி லயாவைப் பார்க்க வேணும் என்று நீ காலையில் கேட்க, உன்ரை புத்தி தெரிஞ்சும் லயாமீது உனக்கு உண்மையான பாசம் இருக்கு அதனாலைதான் நீ அவளைப் பார்க்க ஆசைப்படுகிறாய் என்று நினைச்சு உன்னோடைகூட வந்தேனே என்னைச் சொல்ல வேணும் என்று ஆத்திரமாகத் தொடங்கியவர் அழுகையில் முடிக்க---
அம்மா எதைப்பற்றியும் யோசிக்காதையுங்கோ நான் எல்லாவற்றையும் சரியாக்குவேன் என்று சொன்ன மகளே அத்தனையையும் கெடுத்து வைக்கப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாத பாமா----
லயா அப்பா சொன்ன சொல்லை தட்ட நினைச்சிடாதை அவரின்ரை ஆத்மா சாந்தியடையாது என்று சொல்ல---
சரி அம்மா விடுங்கோ என்றபடி வீட்டிலிருந்து வந்திருந்த டிபனை எடுத்து உண்ணத் தொடங்கியவளிடம்
லயா மருமகன் என்ன சாப்பிட்டவர் என்று கேட்க-----
“ஏதாவது வாங்கிச் சாப்பிடுவான் போல” என்ற இவளின் பதிலில் மனம் கலங்கி கடவுளே இந்த மடைச்சி எல்லோரையும் தெருவிலை கொண்டு வந்து விடப்போறாளே என்று பதற-----
அம்மா போதும் வீணாக பிறஷரை ஏத்தாமல் போங்கோ என்றபடி அவர்கள் வந்த ஆட்டோவிலேயே அவர்கள் இருவரையும் ஏற்றி அனுப்பிவிட்டவள் அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தபடி சீ. சீ ரீ வீ கமெராவிற்கான பவர் சப்ளையை நிறுத்தியது மட்டுமல்லாது யூ பீ எஸையும் இயங்காது செய்து அவன்மீது ஏற்பட்ட கோபம் ஏற்படுத்திய முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமாக கதவையோ அன்றி வெளிக் கேற்றையோ பூட்டாது விரிவுரைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறி பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
(தொடரும்)