sanchumahen
New member
வணக்கம் அன்பூஸ் இது எனது இரண்டாவது கதை. இந்த கதையை படித்துப்பாருங்கள். உங்களுடைய கருத்துக்களை மறக்காது பதிவிடுங்கள்.
உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கும்
சஞ்சு மகேந்திரன்
அன்புவலி --------+அது -டீசர்
ப்ளீஸ்----- அத்தான் நான் சொல்லுறதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கோ -----என்று தொடர எத்தனித்தவளிடம் சீ---- வாயை மூடு என்று சீறினான் விஷ்ணு.
என்னது அத்தானா? புதுசா இருக்கு. முறையெல்லாம் வைச்சு வேறை கூப்பிடுகின்றாய்!!
என்ன இந்த கராஜ்காரனிலை காதல் வந்திட்டுதோ?------ அப்பிடி மட்டும் சொல்லிடாதையம்மா அதைக்கேட்டு தலைசுத்திப்போக நான் அந்த பைத்தியக்கார மெக்கானிக் விஷ்ணு இல்லை -------
ஓஹ்--- என்ன வார்த்தை சொன்னனீ------- என்னது--------என்று முன் நெற்றியைத் தட்டியோசித்தவன்------ “உனக்கென்ன லாயக்கிருக்கு என்னையெல்லாம் கல்யாணம் செய்ய” அவள் அன்று சிந்திய வீண்சொற்களைச் சொல்லிச் சீறியவனைப் பார்க்க கூண்டில் அடைக்கப்பட்ட புலி போலிருந்தது அவளுக்கு.
இந்த அஞ்சு வருஷத்திலை எல்லா டிறாமாவும் பார்த்தாச்சு அம்மணி------நான் அப்பாவி அன்னபூரணியின்ரை மகனில்லை------பழநிவேலின்ரை மகன்-----விஷ்ணு------- விஷ்ணு என்று சொல்லியபடி கைகளைச் சுவரில் குத்தியவன் தனது ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான். எனக்கு விபரம்தான் தெரியாமல் இருந்தது. அறிவு எல்லாம் நல்லாவே இருக்கு.
அதுவும் உன்னைப் போல காசுக்கு சோரம் போற கேவலமான ஜென்மங்களை---------- அவன் தொடர விக்கித்துப் போய் நின்றிருந்தாள் லயா.
அத்தனை சொல் அம்புகளும் அவளை வார்த்தையாலேயே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எய்யப்பட அத்தனையும் குறிதப்பாது அவளது காதல் கொண்ட இதயத்தை குத்திச் சல்லடையாக்கியது.
கண்ணீர் அணையைமீறிப் பாய்ந்த வெள்ளம்போல உடைப்பெடுத்து அவளது சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.
அவளது கண்ணீரைப் பார்த்ததும் மனதின் ஓரம் சற்று ஈரம் வர அவனது பார்வையின் உக்கிரம் தணிய புத்தி கட்டளையிட்டது 'உனக்கு பகுத்தறிவு, பட்டறிவு எதும் இல்லையா?' என்று.
மனதை அறிவு வெல்ல மீண்டும் உக்கிரமானவன்
உன்ரை மாயாஜாலங்களை எல்லாம் பார்த்து மயங்க நீ வேறை எவனையாவது உங்களின்ரை குடும்பத்திற்கு ஏற்றவனைப் பிடி---- என்னை விடு என்று அமிலமழை பொழிய
அவனை எவ்வாறாயினும் நம்ப வைத்துவிடமுடியாதா என்ற ஏக்கம் கூடிக்கொண்டு சென்றது அவளுக்கு. சந்தேகப்படவேண்டிய நேரமெல்லாம் நம்பியவன் அவன்மீது பித்தாகி அவள் நிற்க சந்தேகப்பட்டு வதைப்பதைத் தாங்காது---
நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்ரை அன்பு உண்மை-----அதை ஒருநாள் நீங்கள் தெரிந்து கொள்ளுவியள் என்று விம்மலின் ஊடே தொடர----
ஏனம்மா என்றோ வரும் அந்த ஒரு நாளுக்கு காத்திருப்பான் ----இப்ப இந்த நொடி தெரிஞ்சு கொள்ளுறன் கையொழுத்தைப் போடு என்று சில அச்சடித்த காகித தாள்களை அவளின் முன்னே வீசி எறிந்தான்.
அவற்றைப் பொறுக்கி எடுத்தவளோ நிலைகுலைந்து போனாள். அந்த பத்திரம் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பந்தத்தை அறுப்பதாக சொல்ல ---– தவித்துப்போய் அவனை பார்த்தாள்.
அந்த பார்வை வாழ்க்கையை யாசகம் கேட்க-----சீ என்று உதறியவன் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேற எத்தனிக்க பதினைந்து நாட்களின் பின் அவனைக் கண்ட ஆறுதல் மீண்டும் பறிபோய்விடுமோ என்று பயந்தவள்----
நீங்கள் உங்களின்ரை வீட்டைவிட்டுப் போக வேண்டாம் நானே போறேன் ---ஆனால் ஒன்று எந்த சந்தர்ப்பத்திலையும் நான் உங்களுக்கு டைவர்ஸ் தர மாட்டேன்----
என்னைப் பழிவாங்க என்று நீங்கள் யாரை வேணும் என்றாலும் கல்யாணம் செய்யுங்கோ ஆனால் வாறவளுக்கு வைஃப் என்ற பெயர் வராது வேறை பெயர் தானிக்கும் என்று சொன்னவள் அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள்.
மனம் போகாதை என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டானா என்று ஏங்கியது. ஆனால் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும் அவன்ரை குணத்திற்கு அப்படி ஒரு வார்த்தை எந்த சந்தர்ப்பத்திலும் வரவே வராது என்று.
அவள் தெரியாமல் செய்தவை பல---- ஆனால் தெரிந்து செய்தது--------? அவனைவிட வீம்புக்காரி தெரிந்து செய்த எதற்கும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்-----நான் செய்தது தப்பே இல்லை-----நீ என்னை ஒதுக்கினாலும் நான் இதற்கெல்லாம் பயந்து சாக மாட்டேன் உயிரேடைதான் இருப்பேன்.
உனக்கு நடந்த துரோகத்திற்கான தண்டனையாய் நடைபிணமாகத் தன்னிலும் வாழுவேன். இந்த உலகத்தின் எந்த மூலையில் என்றாலும் நீ என்னைப்புரிந்து கொண்டு தேடிவருவாய் என்ற நம்பிக்கையுடன் உனக்காக உயிர்வாழ்வேன்.
உனக்குத் தெரியயில்லை நீ பழநிவேலின்ரை மகன். ஆனால் நான்--- அன்பு என்ற அஸ்திரத்திற்கு இரையாகிப்போன அன்னபூரணியின்ரை மருமகள். என்ரை உடம்பிலை ஓடுறதும் அன்னபூரணியின்ரை இரத்தம்தான்--இது பொய்யில்லை. சாசுவதவமான உண்மை.
நீ வருவாய்--------- நிச்சயம் நீ வருவாய் என்ரை அன்புக்கு சக்தியிருந்தால் நீ என்னைத் தேடி வருவாய்-------
Last edited: