மிருணா வேலைக்கு சேர்ந்து இன்றோடு 6 மாசம் முடிவடைய... கருணா மிருணாவிற்கான சம்பளத்தையும் சேர்த்தே மேனேஜரிடம் கொடுத்துவிட்டு சென்று அவர்கள் பணம் கொடுப்பதை கவனிக்க ஆரம்பித்தான்
சம்பளம் வாங்க போனவளுக்கு அவள் சம்பளத்தை விட 1000ரூபாய் குறைவாக இருப்பதை பார்த்துவிட்டு அதை கொடுத்த அந்த யூனியன் தலைவரிடம் வாழ்த்துகள் அண்ணா இப்படி உங்கள் பணி மென்மேலும் சிறக்கணும் என்று நக்கலாக சொல்லிவிட்டு வேகமாக கருணாவிடம் வந்தவள் அவன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு பணம் எடுத்தாள்...
ஏய் மிரு என்ன பண்ற? என்றான் கருணா
ஏய் கருவாயா அமைதியா இரு என்றவள் அவனிடம் இருந்து எடுத்த பணத்தில் 1000ரூபாயை மட்டும் எடுத்துகொண்டு மீதியை அவன் பாக்கெட்டிலையே வைத்தவள்.... அவன் எடுக்கற பணத்துல நான் எதுக்கு நஷ்டம் ஆகணும்.. எனக்கு என் உழைப்புக்கு சரியான பணம் வேணும்...அதைதான் எடுத்தேன் என்றாள்
இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு உனக்கு தோணலையா? மிரு என்றான் அவள் செய்த செயலில் கடுப்பாகி
எதுக்கு தோணனும் நான் என்ன இங்க வேலைக்கு ஆசைபட்டா வந்தேன் கிடையாதே.??? எங்க அம்மாவை மிரட்டி தானே அந்த கிழவி என்னை இங்க வரவெச்சது ... உங்க கம்பெனி எப்படி போனா எனக்கு என்ன என்றவள்.... சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வா என்றாள்
அடுத்த வந்த நாட்கள் மிகவும் பிரச்சனை தீவிரமாக காரணமே இல்லாமல் அந்த யூனியன் லீடர் எதற்கு எடுத்தாலும் ஸ்ட்ரைக் செய்தான்... இதனால் மித்தியிடம் பிரச்சனையை கருணாவே சொல்ல ஆரம்பித்தான்
ஆனால் மித்தியோ நான் எல்லாம் அங்க வரமாட்டேன் கருணா. எனக்கு இங்கதான் செட் ஆகியிருக்கு என்றவன் போனை வைத்துவிட்டான் ஆனால் அவன் போன்னை வைக்கும் முன் சில பல யோசனைகளை சொல்லவும் அதற்கு எல்லாம் தலையை ஆட்டி சரி என்று சொல்லிவிட்டுதான் போனை வைத்தான் கருணா
அடுத்த நாள் மித்தி சொன்ன மாதிரி செய்ய ஆரம்பித்தான் கருணா கம்பெனிக்கு போனதும் எல்லோரையும் அழைத்தவன்....அடுத்தவாரம் கம்பெனிக்கு புதிதாக ஒரு மேனேஜர் வர போறாங்க இனி அவங்கதான் எல்லாவிசியத்தையும் பார்த்துப்பாங்க என்றான்
அதேப்படி எங்களுக்கு இதை பற்றி எந்த விசயமும் முன்னாடி சொல்லாம நீங்களே முடிவு எடுப்பிங்க இதுதான் முதலாளி தனமா என்றான் யூனியன் லீடர்...
தனியாக மாட்டிக்கொண்ட கருணா... ஏக்கமாக மிருணாவை பார்க்க எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் அவள் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்...
தன் கையே தனக்கு உதவி என்று நினைத்தவன்.. உங்க கிட்ட இப்போ சொல்றேன்ல .... சொன்ன உடனையே ஆள் வந்து நிக்கலையே இல்லை நான் கையோட ஆளை கூட்டிட்டு வந்தும் உங்ககிட்ட அறிமுக கொடுக்களையே வர ஒரு வாரம் ஆகும்னுதானே சொல்றேன் என்றான்...
இப்போ இருக்கற மேனேஜர் என்ன ஆனார் என்றான் திரும்பவும்
அவருக்கு ப்ரோமோசன் குடுத்துருக்காங்க, அதனால வேற பிரான்ச்க்கு அனுப்பிடுவாங்க என்று வாய்க்கு வந்ததை சொன்னான்...
சரி இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா? என்று கேட்டு விட்டு கருணா சொல்வதற்கு அங்கிருந்து சென்றுவிட்டான்
இங்க யார் முதலாளினே தெரியலை என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் கருணா அவன் பின்னால் போன மிருணா இதை பத்தி நீ எதுவுமே என்கிட்ட சொல்லலையே கருவாயா
எதை பத்தி
புதுசா மேனஜர் வரதை பத்தி
ஏய் நீதான் இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு சொல்லிட்டள அப்புறம் எதுக்கு உங்கிட்ட நான் சொல்லணும்.... அதுலாம் சொல்லமுடியாது போடி என்றான்
போடா எருமை என்றவள் அவள் இடத்திற்கு போய் வேலை செய்யாமல் சும்மாவே உக்கார்ந்திருந்தாள் ...
அடியே ஏதாவது வேலை செய்டி சும்மாவே உக்கார்ந்துட்டு போகவா நேத்து அந்த வாய் பேசி, எனக்கு 1000தண்டம் வெச்சிட்டு போன என்றான் கருணா
அப்படிலாம் செய்ய முடியாதுடா, அப்படி செய்யணும்னா நான் ஒருத்தி செய்யற வேலையை நீ மறுபடியும் 2பேர் வெச்சி சரி செய்யணும் பரவலையா? என்றாள்
உன்னை எல்லாம் என்ன பண்ணலாம் என்று கடுமையாக முகத்தை காட்டியவன்... உனக்கு அந்த யூனியன் லீடரே தேவலம் என்றான் கோவமாக
தெரியுதுல போ போ ... என்று காற்றில் கை ஆட்டியவளை ஒன்றும் சொல்லமுடியாமல் போக... முதல அவர் வந்ததும் இவளை வேற பிரென்ச்க்கு மாத்தணும் என்று புலம்பிக்கொண்டே போனான்
சரியாக ஒருவாரம்.... திங்கள் அன்று கருணா சொன்ன மேனஜர் வருகிறார் என்று கம்பெனியில் அனைவரும் வரவேற்க தயாராக மிருணா ஏதோ வயசானவர் வருவார் என்று நினைத்துகொண்டாள்...
கருணா வர மேனேஜர் கம்பெனியை பார்த்துருப்பார்ல.... அவர்க்கு நிறைய எஸ்பிரியன்ஸ் இருக்கும்ல என்றாள்
இல்லை இப்போ 3.4வருசமாதான் அவர் இந்த பீல்டுல இருக்கார்.... அண்ணா சொன்னதுக்காக வரேன்னு ஒத்துக்கிட்டாங்க என்றான்
நான் வயசானவரா இருப்பாங்கன்னு நினைச்சேன் என்றவள் ஏன் கருணா இந்த பிரச்சனையை நீங்க ஏன் உங்க மாமா சக்திவேல்கிட்ட சொல்லலையா என்றாள்
சொன்னோம் ஆனா மாமாவால செய்ய முடிஞ்சாலும்... அவர் மித்தி அண்ணா இருக்கறப்பா தானா முன்வந்து செய்ய விரும்பல.. மித்தி அண்ணாவும் வந்து பார்த்து அவரால முடியலைனா தான் நான் களத்துல இருங்குவேன்னு சொல்லிட்டாங்க...
அவர் சொல்லறதை பார்த்தா ஏதோ உங்கமேல கோவம் இருக்கறமாதிரி இருக்கே என்றாள்
தெரியல அது அப்பாவும் அவங்களும் சமந்தபட்டது நான் கேட்டாலும் சொல்ல மாட்டாங்க நானும் கேக்க மாட்டேன் என்றவன் நேரம் ஆயிடுச்சி என்று வண்டியை வேகமாக ஓட்டினான்
இவ்வளவு நேரம் மனதுக்குள் எதுவும் தோன்றாமல் சந்தோசமாக வந்தவளுக்கு இப்போ மேனேஜர் சின்ன பையன் என்று தெரிந்ததும் ஏனோ மிருணாவிற்கும் மனம் படபடப்பாகவே இருந்தது
என்னவாக இருக்கும் எவனோ வந்துவிட்டு போகட்டும் தனக்கு என்ன வந்தது... என்று இருக்காமல் தனக்கு ஏன் படபடப்பாக இருக்கிறது என்று நினைத்தவள் கருணாவின் பக்கதில் போய் நின்றுகொண்டாள்
ஒரு ஆட்டோ வந்து நிற்கவும் மேனஜராக வருபவன் ஆட்டோவிலா வருவான் என்று அனைவரும் ஏனோ தானோ என்று இருக்க கருணா மட்டும் முன்னால் வந்து வாங்க சார் "வெல்கம் அவர் கம்பெனி" என்றான்
ஓ அப்போ இவன்தான் அவனா? என்று அவனை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் மிருணா.... அவனை பார்த்ததும் எங்கையோ பார்த்தது போல இருந்தது.
நெடு நெடுவென்று வளர்ந்திருந்தான் முகத்தில் தாடியும் மீசையும் அவனை அழகாக காட்டி இருக்க.... பார்க்க சிவப்பாக இருப்பானோ, என்ற அளவுக்கு அவன் கன்னங்களை தாடி மறைத்திருந்தது.... கண்டிப்பாக ஜிம்மே கதி என்று இருந்திருப்பான் போல உடம்பு நன்றாக உரம் ஏறி முறுக்குடன் இருந்தது..... இவன் அடிச்சா நான்லா ஸ்பார்ட்லையே மேல டிக்கெட் வாங்கிடுவேன் போல என்று நினைத்துகொண்டு அவன் முகத்தை பார்த்தாள்...
பார்த்தவள் நினைத்தது இதுதான்... கண்டிப்பா இவன் காலை வரப்ப டிபனுக்கு ரெண்டு பாறங்கல்லை தின்னுட்டு ஒரு லிட்டர் கஞ்சியையும் குடிச்சிட்டு வந்துருப்பான் போல இவ்வளவு விறைப்பா இருக்கான் என்று நினைத்துகொண்டவள் இவன் கிட்ட வம்பு வெச்சிக்க கூடாது மிரு... இவள் ப்புபூனு ஊதுனா நீ பறந்துருவ நியாபகம் வெச்சிக்கோ என்று உள்ளுக்குள் சொல்லிகொண்டே அவனை கவனித்தாள்
சார் நேம் என்ன? என்றாள் வாயை எவ்வளவு தான் அடக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் போனது
கருணா சொல்ல வருவதற்குள் அவனை கைகாட்டி நான் சொல்கிறேன் என்று சைகை செய்தவன்
நேத்திரன் என்றான்
குரல் கம்பிரமாக வந்து விழுந்தது....
அவன் பேரை கேட்ட மிருணாவிற்கு முகம் அஷ்டகோணலாக போனது....
என்னோட பேர் ஒன்னும் அவ்வளவு கேவலமா இல்லையே இப்படி முகம் சுழிக்க என்றான்
அப்படிலாம் இல்லை என்றவள் எதனால் தடுமாறுகிறாள் என்று கருணா புரிந்துகொள்ள அவள் தோளை தட்டிகொடுத்தான்....
உன் அண்ணனுக்கு தெரிஞ்சவிங்களாம் அவனை மாதிரியே இருப்பாங்களா என்று எதுவாக கருணாவிடம் சொன்னாள் மிருணா
மிருணா அப்படி சொல்லவும் கருணா அவளை தட்டிகொடுத்து கொண்டே அப்படிலாம் இல்லை மிரு என்றான்
அவன் தட்டிகொடுப்பதையே பார்த்த நேத்திரன்... சார் உள்ளே போலாமா என்றான்
வாங்க என்று கருணா உள்ளே போக மற்ற அனைவரும் உள்ளே சென்றனர்... ஆபிஸில் இருந்தவர்கள் மட்டும் வரவேற்க வந்திருந்தார்கள்.அதனால் பேக்டரி போவதற்கு நேத்தரன் கேட்கவும் சரி என்று கருணா முன்னே போக அவன் பின்னால் நேத்திரன் போனான்... இவர்கள் இருவருக்கும் இடையில் மிருணா சென்று கருணாவிடம் கரு... இந்த மேனஜரை பார்க்கும் போது எங்கையோ பார்த்த மாதிரி இருக்குடா என்று அவன் காதருகில் மெதுவாக சொன்னாள்.. அவள் சொன்னது நேத்திரனுக்கு கேட்டுவிட அவளை பார்த்தான்..
அவன் பார்ப்பதை எல்லாம் அவள் கவனிக்க வில்லை... சொல்லுடா கருவாயா என்றாள் கொஞ்சம் வேகமாக
வாய்ப்பு இல்லை மிரு கொஞ்சநேரம் அமைதியா இரு என்றான்...
அவள் தோளை குலுக்கிவிட்டு அமைதியானாள்... ஆனால் அப்போது இருந்து நேத்திரன் பார்வை மிருணாவை துளைக்க ஆரம்பித்தது...