கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 14

நேத்திரன் போலீஸிக்கு போன் செய்தான் தங்களுடைய கம்பெனியில் 5லட்சம் பணம் காணவில்லை... அதற்கு காரணம் யூனியன் லீடராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கு என்றும் கம்பளைண்ட் கொடுத்தான்

போலீஸ் வந்ததும் எல்லோரையும் விசாரித்தனர்... சதாசிவமோ நேத்திரன் தன் பக்கம் இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தில் மெதப்பமாக இருந்தான்

உங்களுக்கு யார்மேல சந்தேகம் மிஸ்டர் கருணா என்று போலீஸ் நரேன் கேட்கவும்

எனக்கு யூனியன் லீடர் சதாசிவம் மேலதான் சந்தேகம் என்றான் கருணா ஒட்டு மொத்த கம்பெனியும் நின்று வேடிக்கை பார்க்க இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று சதாசிவம் நினைத்தவன் அவனுடைய ஆட்களுக்கு கண்ணை காட்டினான்

எப்படி எங்க தலைவர் மேல நீங்க சந்தேகம் படலாம்... அவர் மேல் பழி சொன்னால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட்டம் செய்வோம் என்றனர்

நேத்திரன் இருக்கும் தைரியத்தில் என்ன ஆதாரம் இருக்குனு என் மேல சந்தேகபடுறிங்க என்றான் திமிராக... சதாசிவம்

அவன் பேசிய ஆடியோவை போலீஸிடம் கொடுத்த நேத்திரன் அவன் பணம் எடுப்பது போல வீடியோ ஒன்றை எடுத்திருந்தான் அதையும் போலீசிருக்கு கொடுத்தான்

நான் தான் பணமே எடுக்களையே இவன்தானே வைச்சிருனு என்கிட்ட 5லட்சம் பணம் கொண்டுவந்து கொடுத்தான்... இப்போ இப்படி பண்றான் என்று , என்ன டபுள் சைட் கேம் விளையாடுறியா... நான் திருடிருக்கேன்னா நீயும் தான் திருட்டுக்கு காரணம் நீதானே பணத்தை என்கிட்ட கொண்டுவந்து கொடுத்த, என்று சொன்னவன் என்னோட கூட்டாளியே இவன் தான் சார் என்றான் போலீஸிடம் சதாசிவம்

போலீஸ் கருணாவை பார்த்து என்ன சார் சொல்றான் இவன் அப்போ உங்க மேனேஜரையும் அரெஸ்ட் பண்ணனுமா என்றான் நரேன்

சார் இவன் பணம் திருடிருக்கான் எனக்கு அவன் பின்னாடி யார் இருக்காங்கனு தெரியணும் இவன் பணம் மட்டும் எடுக்கல இன்னும் பலவிசியங்களை செஞ்சிருக்கான் அதுக்காக எல்லாம் நான் தனியாக இவன் மேல கம்பளைண்ட் கொடுக்கறேன் இவ்வளவு நாள் இவன் பண்ண பிரச்சனையை நான் பொறுத்துட்டு இருந்ததுக்கு காரணம் இவன் பண்ண எதுவுக்கும் என்கிட்ட ஆதாரம் இல்லை.... அது ஒன்னு மட்டும் தான் காரணம்..

இன்னொரு விஷயம் என்னனா இவனை நான் சமாளிச்சு வெளிய அனுப்பிருந்தா... இவனை போல இன்னும் 10பேர் முளைக்க மாட்டாங்கன்னு என்ன இருக்கு... இந்த பிரச்சனையை நான் செடியோட வெட்ட விரும்பல வேரோட வெட்டதான் விரும்பினேன்... இனி இந்த பிரச்சனை எப்போமே வரக்கூடாது..

இதுக்கு பின்னாடி இருக்கறது யார்னு எனக்கு தெரியணும் என்று சதாசிவத்தின் மேலும் அவன் ஆட்களின் மீதும் பணமோசடி, கூலி வழங்கல் சட்டம் 1936இன் படி கூலி வழங்கலில் மோசடி செய்தது, அதை தட்டிகேட்டதுக்காக கம்பெனி முதலாளியின் மனதை நோகும்படி அவரை அவதூர் பேச்சுக்களால் திட்டியது, அப்புறம் கம்பெனியில 5லட்சம் கையாடல் பண்ணது இப்படிணு இவ்வளவு கேஸ் இவங்க மேல கொடுக்கறேன் என்றான் கருணா...

கதிரை இந்த பிரச்சனையின் போது வர வேண்டாம் என்று சொன்னதால் அவர் வேற பிரென்ச்க்கு போய்விட்டார்...

நீங்க இவ்வளவு நாள் கம்பளைண்ட் கொடுக்காம எப்படி இருந்திங்கனு எங்களுக்கு தெரியல என்றான் நரேன்

இல்லை அதுக்கு ஒரு காரணம் இருக்கு சார்... அது அப்பாவுக்கு தான் தெரியும் என்றவன்... இவங்களா ஏற்பட்ட நஷ்டத்தை இவங்கதான் கொடுக்கணும் என்றான் கருணா

சரிங்க மிஸ்டர் கருணா இதுலாம் ஓகே ஆனால் இதுக்கு உடந்தையா இருந்தது உங்க மேனேஜர் நேத்திரன்னு சொல்றாங்களே அவங்க மேலையும் கம்பளைண்ட் கொடுக்கறீங்களா என்றான் நரேன்

இல்லை சார் அவர் மேல கொடுக்கல

ஏன்னு கேளுங்க சார் அப்போ எங்க தலைவர் மட்டும் என்ன இளிச்சவாயனா? எடுக்காத காசை எடுத்தார்னு சொல்ல என்றான் ஒருவன்

என்ன கருணா எல்லோரும் சேர்ந்துதானே இந்த கையாடலை செஞ்சிருக்காங்க அப்புறம் அவங்க மேல கேஸ் கொடுக்க ஏன் தயங்கறிங்க என்றான் நரேன்

இல்லை சார் அவர் எங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் இவனோட கூட்டு சேரமாதிரி நடிச்சாரு என்றான் கருணா..

அதை எப்படி நாங்க நம்பறது என்றான் நரேன்

நோ அவன் உங்க ஆள்னு காப்பத பார்க்கறீங்க என்றான் சதா

சரி என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க என்றான் நேத்திரன்

முடியாது என்று கருணா கத்த என்னடா நடக்கும் இங்க என்பது போல் மிருணா வேடிக்கை பார்த்தாள்

விடு கருணா பண்ணட்டும் என்றான் நேத்திரன்

இல்லை முடியாது சார் இவர் மேனேஜர் இல்லை

அப்புறம் என்றனர் எல்லோரும் மிருணாவிற்கோ அந்த சந்தேகம் எப்போ அவனை அருகில் பார்த்தாலோ அப்போது இருந்தே இருக்கிறது... இருந்தாலும் மனம் அவள் நினைத்தது போல இருக்க கூடாது என்று வேண்டிகொண்டிருந்தது..

கருணா கம்முனு இரு, சார் நீங்க அரெஸ்ட் பண்ணுங்க என்றான் நேத்திரன்

அண்ணா நீங்க கம்முனு இருங்க... சார் இவர் என்னோட அண்ணா பேர் மித்ரன்.. இந்த கம்பெனி அவர் பேர்ல தான் இருக்கு இவ்வளவு நாள் வெளிநாட்டுல இருந்ததுல யாரும் இவரை பார்த்துருக்க மாட்டாங்க அதனால தான் இவர் பேரை மாத்திட்டு வந்து இந்த பிரச்சனைக்கு காரணம் யார்னு கண்டுபிடித்தார் என்றான் கருணா

மிருணாவிற்கு மயக்கமே வருவது போல இருந்தது.. அவளுக்கு அந்த சந்தேகம் அவனை அருகில் பார்த்த போது வந்தது இருந்தாலும் தழும்பு எப்படி ஏற்பட்டது என்று அவன் கேட்டதால் அவளின் சந்தேகத்தை குழி தோண்டி புதைத்தாள் இப்போது அவன் தான் மித்ரன் என்றதும் அவனை விட்டுவிட்டு கருணாவின் மேல் கொலை காண்டாணாள் மிருணா

கருணா அப்படி சொல்லவும் சதா கூட கொஞ்சம் ஆடிதான் போனான்... மித்ரன் மிருணாவை தான் பார்த்தான்... என்னோட அடுத்த டார்கெட் நீதாண்டி என்று நினைத்தவன்.. சார் இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கனு இவங்க சொல்லவே வேண்டாம் நானே கண்டுபிடிச்சிட்டேன் என்றான் மித்ரன்

யார் சார் அது என்றான் நரேன்

அபிஷேக் ... A.K, குரூப் ஆப் கம்பெனியோட md....

அவங்க பெரிய பிஸ்னஸ்மேன் ஆச்சே சார் என்றான் நரேன்

அப்போ நாங்க யார் சார் என்றான் மித்ரன் புருவங்களை உயர்த்தி... அவங்களுக்கு கொஞ்சமும் குறைஞ்சவங்க இல்லை சார் நாங்க என்றவன் அவனை உங்களால அரெஸ்ட் பண்ண முடியலைன்னா நான் கோர்ட்ல பார்த்துக்கறேன் என்றான் மித்தி

நான் பார்க்கிறேன் சார் என்று மட்டும் சொன்ன நரேன் சதாவையும் அவனுடைய ஆட்களையும் அரெஸ்ட் பண்ணி அழைத்து சென்றான்..

என்னடா இது புதுசா ஒரு கேரக்டர் உள்ள வரானே ஒன்னும் புரியலையேனு பார்க்கறீங்களா...

அபிஷேக் A.k குரூப் ஆப் கம்பெனியோட md.... 28வயதான வாலிபன்... மித்திரனை போலவே அவனும் அழகுக்கு குறை இல்லாதவன்.. பார்த்தவுடன் பெண்களை கவரும் அளவுக்கு அழகானவன், திடமான உடல் , தீர்க்கமான மூக்கு, அழுத்தமா உதடு என்று ஒரு இளைஞனுக்கு உள்ள எல்லா தகுதிகளும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அவன் அழகில் மயங்காத ஒரே ஆள் அது நம்ப மிருணா தான்.. அதுவே அவனுக்கு மிகவும் பிடித்து போனது .. அபிஷேக்கின் தங்கை ஆரூசா மிருணாவின் நெருங்கிய தோழி... இப்படிதான் அபிஷேக்கின் அறிமுகம் மிருணாவிற்கு கிடைத்தது...

அவன் மிருணாவிடம் நல்லா நண்பனாக பழகினான் மிருணாவிற்கும் அவன் நட்பு கருணாவை போல பாதுகாப்பாகவும், அக்கறையாகவும் இருக்க கருணாவிற்கு தெரியாமல் நிறைய தடவை ஆரூசா வீட்டிற்கு சென்று வந்தாள் மிருணா

ஒரு நாள் மிருணா ஆரூசா வீட்டிற்கு சென்றிருக்கும் போது மிருணாவின் முகம் வாடி இருப்பதை பார்த்த அபிஷேக் என்ன மிரும்மா ஏதாவது பிரச்சனையா என்றான்

அப்படிலாம் இல்லை அபி ஏன் கேக்கற என்றாள்

உன் முகம் பார்த்தாலே தெரியுதே சொல்லு என்றான்..

அவள் தயங்கவும் சரி சொல்ல விருப்பம் இல்லைனா பரவால இப்படி மூஞ்சை இஞ்சி தின்ன குரங்கு போல வெச்சிருக்காத என்றான்

இல்லை அபி சொல்லகூடாதுனு எதுவும் இல்லை என்று அவள் பிரச்சனையை சொன்னாள்...

உண்மையாவா மிரும்மா என்றான்

ஆமா அபி என்ன பண்றதுனு தெரியல என்றாள்

சரி விடு அவங்களை நான் பார்த்துக்கறேன் என்றான்..

மிருணா என்ன சொன்னாளோ அபிக்கு அவர்களை பிடிக்காமல் போனது. அன்று முதல் கருணாவின் கம்பெனியில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்துவதே வழக்கமாக வைத்திருந்தான் அபி

அதை முதலில் சரி செய்துவிடலாம் என்று எல்லோரும் சாதாரணமாக விடவும் அபிஷேக்கின் பிரஷர் அதிகம் ஆனது...
அதன்படியால் மித்தி வெளிநாட்டில் இருந்து வரவேண்டியதாக ஆனது...

மித்தி இந்த பிரச்சனைக்கு பின்னால் அபிஷேக் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டதும் மிருணாவால் தான்...

கம்பெனி முடிந்து எல்லோரும் கிளம்ப அன்று மிருணாவின் ஸ்கூட்டி வீட்டிக்கு செல்லும் வழியில் செல்லாமல் எதிர் திசையில் செல்வதை கண்டவன்... இவ எங்க போறா அதும் இருட்டுன நேரத்துல என்று அவளை பின் தொடர்ந்தான்

அவள் அபியை பார்க்க தான் போயிருந்தாள்.... இவன் யாரு எதுக்கு இவனை பார்க்க வந்திருக்கிறாள் என்று நினைத்தவன் அவனை பற்றிய எல்லா டீடெயில்ஸையும் தேட ஆரம்பித்தான்....

அதில் இருந்து அவன் மேல் ஒரு கண்ணு வைத்திருந்தான் மித்தி... அவனை பாலோவ் பண்ண ஒரு ஆளை வைத்தான்

அதன் விளைவு 2நாளில் , சதாசிவம் அவனை சந்தித்து பேசியது முதல் மித்திக்கு செய்தி வந்தது...

அப்போ இதுக்கு பின்னாடி அந்த அபிஷேக் இருக்கானா? அவனுக்கு உதவியா இந்த மிருணா இருக்காளா... என்று நினைத்தவன் என்னை பழிவாங்கணும்னு எவனு தெரியாதவன் கூட எல்லாம் சேர்ந்து இப்படி பண்ணிட்டு இருக்கா இவளை என்று பல்லை கடித்தவன் சும்மா விட கூடாது இவளை ஏதாவது பண்ணனும் .. முதல அந்த அபிஷேக்கின் ஆட்களை பார்ப்போம் அப்புறம் இவளை பார்ப்போம் என்று நினைத்தவன் உன்னை எப்படி பழிவாங்கறேன்னு மட்டும் பாருடி .... உன்னோட வாழ்க்கை முழுக்க முழுக்க அதை நினைச்சி நினைச்சியே நீ சாகனும் என்று வன்மம் கொண்டான்.
 
Top