கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 15

மிருணா நேத்திரன் தான் மித்ரன் என்று சந்தேகம் வந்ததற்கு காரணம் அவன் வாசனை தான் ....கருணா ஒருதடவை , "அண்ணா அங்க இருந்து பர்ஃயும் அனுப்பிருக்கான் உனக்கு வேண்டுமா என்று எடுத்து வந்து அவள் மேல அடித்துவிட்டான்"... அதற்காக கருணாவிடம் பேய் ஆட்டம் போட்டது வேற கதை , இருந்தாலும் அந்த வாசம் அவளை விட்டு போகாமல் அன்று முழுவதுமே அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்தது . அந்த வாசனையே அன்று அவன் மேல் வீசவும் உடனே கண்டுகொண்டவளுக்கோ மனம் ஒரு வாசனையை வைத்து அவன் தான் இவன் என்று எப்படி சொல்லுவது என்று சொல்ல அமைதியானாள் .

இது காரணம் என்றால் அவன் கையில் இருக்கும் மச்சம்... அது அவள் சின்ன வயசில் அந்த மச்சத்தை பார்த்து வியப்பாகிருக்கிறாள்.. அவன் மச்சம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் .. அதுவே அவள் நினைவில் ஓட... அடுத்த நாள் இதை பற்றி அபியிடம் சொன்னாள்... அதற்காக தான் அவள் சென்றது.... அபி செய்த எந்த வேலையுமே அவளுக்கு தெரியாது

இப்போது இதற்கு பின்னால் அபி இருக்கிறான் என்றதும் "ஏன் அபி இப்படி செஞ்ச உங்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்களை" என்று கவலைபட்டாள்

நினைவுகளை இவ்வுலகிற்கு அழைத்து வந்தவள் அவனை பார்க்க அவனோ இவளை தான் கொலை வெறியுடன் பார்த்துகொண்டிருந்தான்

எல்லோரும் போன பின் அவளை கருணா "ஆபிஸ் ரூம்க்கு கொஞ்சம் வா" என்றான் ..

ஏதோ பெருசா இருக்குமோ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே போனவள் அங்கு ருத்ரமூர்த்தியாக இருக்கும் மித்ரனை பார்த்து நடுங்க ஆரம்பித்தது அவள் உடல்.

"அண்ணா மிரு வந்துட்டா அவ தப்பா எதுவும் செய்ச்சிருக்க மாட்டா அண்ணா" என்றான் கருணா தயங்கி தயங்கி

"நீ வெளிய இரு கருணா நான் இவங்க கிட்ட பேசணும் "என்றான்

இல்லை... என்று சொல்ல வாய் திறந்தவன் மித்ரன் இருந்த கோவத்தில் சொல்லமுடியாமல் வார்த்தைகளை அப்படியே முழுங்கினான், போக மனம் இல்லாமல் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தவனை

"உன்னை தான் சொன்னேன் வெளியே போனும்" என்று கர்ஜித்தவனை பார்த்து உள்ளுக்குள் உதறிய உதறலில் ஓடி போனவன்... போகும் போது மிருவிடம் "நீ வாயையே திறக்காத மிரு" என்று சொல்லவும் மறக்கவில்லை

அவன் போனதும் "கதவை லாக் பண்ணு" என்றான்

"எதுக்கு கதவுலா லாக் பண்ணனும்" என்று மெதுவாக கேட்டவளை பார்த்தவன் "உன்னை ரேப் பண்ண போறேன்" என்றான்

அவள் பேய் முழி முழிக்கவும் "சொன்னதை செய்டி" என்றான்

பயத்துடன் கதவை அடைத்தவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது அவள் அருகில் சென்றவன்... அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு .... "பாக்க பாவமா முகத்தை வெச்சிட்டு என்ன தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்யற" என்றான்

"நான் என்ன வேலை செஞ்சேன்" என்றவளில் உதடு தந்தி அடிக்க ஆரம்பித்தது...

அந்த உதட்டை கையால் பிடித்தவன்... "அந்த அபிஷேக்கை உனக்கு எப்படி தெரியும்" என்றான்

"ஐயையோ! இவனுக்கு எப்படி தெரிந்தது" என்று நினைக்க..

"என்ன? இவனுக்கு எப்படி இதுலாம் தெரியும்னு பாக்கறியா" என்றான்.

அவன் பிடித்திருந்த உதட்டில் அழுத்தம் கூட வலி தாங்காமல் அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ள முயன்றாள் அவளால் அவனை அசைக்ககூட முடியவில்லை...

"ஏய் கொசு மாதிரி இருந்துட்டு என்ன தள்ள பார்க்குறியா? "என்றவன் அவள் உதட்டில் இருந்து கையை எடுத்தான் அவன் பிடித்து அழுத்தியதில் உதடு கன்னிபோயிருந்தது

"எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க... எதுவா இருந்தாலும் தள்ளி இருந்து பேசுங்க "என்றாள் கண்களில் கண்ணீருடன்

அவள் அப்படி சொல்லவும் அவனுக்கு நினைவு எல்லாம் கருணா, அபிஷேக்குடன் அவள் எப்படி பழகுகிறாள் என்று போனது..

"சரிங்க மேடம் நான் உங்களை தொடல .ஆனால் எதுக்காக கம்பெனி பத்தின பர்சனல் விஷயத்தை எல்லாம் நீங்க உங்க பிரண்ட்டோ, காதலனோ மிஸ்டர் அபிஷேக் கிட்ட கொண்டு போய் கொடுத்திங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா" என்றான்

"நான் எப்போ அப்படி பண்ணேன்... நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க நான் அப்படி எதுவும் செய்யவில்லை" என்றாள்

"அப்போ நான் பார்த்தது என்ன பொய்யா" என்றான் கண்கள் சிவக்க

"நீங்க என்ன பார்த்திங்கனு எனக்கு தெரியாது ஆனால் அவன் என்னோட பிரண்ட் அதுக்காக எங்களுக்குள்ள இருக்கற பர்சனல் வீசியத்தை உங்ககிட்ட
நான் சொல்லணும் இல்ல.. ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்றேன் நான் இந்த கம்பெனியை பத்தி யார்கிட்டையும் இன்குல்டு எங்க அம்மாகிட்ட கூட நான் டிஸ்கஸ் பண்ணனது இல்லை...". என்றாள் மிருணா பொறுமையாக

"யாரடி ஏமாத்த பார்க்கற எனக்கு உன்னை பத்தி தெரியாதுனு நினைக்கறியா... நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடினு எனக்கு தெரியும் இல்லனா அந்த வயசுலயே என்னை எங்க அப்பா அம்மாகிட்ட இருந்து பிரிச்சிருப்பியா" என்றான்

"அது நீங்க பண்ண தப்புக்கு தண்டனை அதுக்கு நான் என்ன பண்ண முடியும் "

"என்னோட தண்டனை உன்னோட இதோ இந்த காயம் ஆறவரைக்குமோ, இல்லை உனக்கு வலி போகற வரைக்குமோ இல்லையே... கிட்ட தட்ட 10வருடம் வனவாசம் போற மாதிரி போய், யாரோட பாசமும் அன்பு கிடைக்காம அனாதை மாதிரி இருந்தேனே அதுக்கு என்ன சொல்ற.... சொல்லு...நான் பண்ணது தப்புனா உன்னால நான் பட்ட வலிக்கு வேதனைக்கு உனக்கு யார் தண்டனை கொடுக்கறது" என்றான்

அவன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது அறியா வயதில் அவன் மனதில் விதைக்கப்பட்ட விஷத்தால் அவன் செய்த தவறுக்கு பத்து வருடம் தண்டனையை அனுபவிக்கும் வலி சொல்லில் அடங்காதது என்று நினைத்தவள்... எதுவும் பேசாமல் இருக்க..

"என்னடி வாய் திறக்காம நிக்கற சொல்லு,உன்னை என்ன பண்ணலாம் என்று யோசிப்பது போல் நின்றவன், உன்னால நான் பட்ட வலி வேதனையை நீ ஆயிசு முழுக்க படனும், படவைப்பேன்" என்றான் திமிராக

"வேண்டாம் மித்ரன்.. ஏற்கனவே இப்படி ஏதோ ஒன்றை மனதில் வைத்து நீங்கள் செய்ததுக்குதான் இவ்வளவு தூரம் கஷ்டபட்டுருக்கீங்க... மறுபடியும் அதே தப்பை செய்யாதீங்க "என்றாள்

"ஆமா பெரிதாக சொல்ல வந்துட்டா.. உன் மூச்சில முழிக்க கூடாதுனு தான் இவ்வளவு நாள் இந்த பக்கமே வரல... அப்பாவும் அம்மாவும் அவ்வளவு தூரம் மாறி மாறி கூப்பிட்டாங்க... இப்போ அவங்களுக்கு நான் நல்ல பிள்ளை ஆய்ட்டனா ..ஏன்னா நல்லா சம்பாரிக்க ஆரம்பிச்சிட்டேன்ல அதனால இப்போ நான் தப்பே பண்ணாலும் கொண்டாடதான் செய்வாங்க..." என்றவன்

"என்னோட பாட்டி தப்பா எனக்கு சொல்லி தந்திருந்தாலும் அவங்க என்மேல உயிரையே வைச்சிருந்தாங்க... இப்போ நான் வந்ததுக்கு கூட அவங்கதான் காரணம் " என்று இவ்வளவு நாள் மனதில் அடக்கி வைத்திருந்த கோவத்தை எல்லாம் கொட்டி தீர்த்தான்...

அவள் அமைதியாக கேட்டுகொண்டிருக்க... ஏய் ரொம்ப பாவப்படற மாதிரி நடிக்காதடி அந்த அளவுக்கு நான் ஒன்னும் நல்லவன் கிடையாது ... அவங்க எதுக்காக என்னை இங்க இருந்து அனுப்புனாங்களோ அதை நிறைவேற கூடாதுனு ஒரே முடிவோட இருந்து எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துட்டு வந்துருக்கேன் என்றான் மித்ரன்

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மிருணா என்ன சொல்றிங்க.... நீங்க மாறனும், உங்க மனசு எப்போமே சுத்தமா இருக்கணும்னுதானே அத்தை ஆசைப்பட்டாங்க அதனாலதானே அவங்களோட மனசை கல்லாக்கிட்டு உங்களை அங்க அனுப்பி வெச்சிருக்காங்க.. நீங்க இப்படி மாறிருக்கிங்கனு தெரிஞ்சா அவங்க எவ்வளவு வேதனை படுவாங்கனு தெரியுமா என்றாள் இவளும் வேதனையுடன்

அதுக்கு தான் நான் இப்படி மாறி வந்துருக்கேன் என்றான் திமிராக... ஒன்னு தெரியுமா பையன் தப்பு பண்ணறானு அவனை கொண்டு போய் ஹாஸ்டலையோ இல்லை சொந்தகாரங்க வீட்டுலையோ விட்டா அந்த பையன் திருந்திருவானா?? அவனை திருத்துர ஆயுதம் அம்மாவோட அன்புல இருக்கு... நாலு அடி அடிச்சாலும் அவனுக்கு வலிக்குமேனு கண் கலங்கற அம்மாவை பார்த்து இனி அப்படி செய்யமாட்டேனு சொல்லுவான் பையன்.... அதைவிட்டுடு எங்கையோ கண் காணாத இடத்துக்கு அனுப்பி வெச்சிட்டா திருந்திருவான்னு நினைக்கறது முட்டாள் தனம்...

என்னோட ஹாஸ்டல்ல எல்லோரோட அப்பா அம்மாவும் சண்டே ஆனதும் வந்து பசங்கள பார்த்துட்டு பசங்களுக்கு சாப்பாடு ஊட்டிவிடுபோது நான் மட்டும் எல்லோரும் இருந்து அனாதையா இருக்கற வலி அது நரகத்தை விட கொடுமை என்றவன் அதை எல்லாம் அனுபவிச்சி பார்க்கணும்.... நான் பட்ட கஷ்டத்தை நீயும் அனுபவிக்கனும்... அதை நான் பார்த்து பார்த்து ரசிக்கனும் என்றவன்... உன்னை எப்படி எல்லாம் பழிவாங்கணும்னு லிஸ்ட் போட்டு செய்யப்போறேன்... இனிதான் இந்த மித்ரனோட ஆட்டமே இருக்கு என்றான்.

அவன் கண்கள் கோவத்தால் கோவைப்பழம் போல சிவப்பை பார்த்து இவன் சொன்னதை செய்வான் போலவே என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள்ள உதறல் எடுத்தும் அதை வெளியே காட்டாமல் கெட்டபழக்கம் எதுவரைக்கும் போயிருக்குனு தெரிஞ்சிக்கலாமா என்றாள் தயங்கியாவரே

ம்ம் என்று யோசித்தவன் தண்ணி தம்மு, அப்புறம் தினம் ஒரு கேர்ள் பிரண்ட்கூட அவுட்ங் போற அளவுக்கு என்றான்

அதை கேட்டதும் மிருணாவிற்கு மயக்கம் வந்தது..... என்ன இவன் இப்படி இருக்கிறான்.... இவனை என்று பல்லை கடித்தவள்... உன்னை அமெரிக்கா அனுப்புனதுக்கு பதில்லா காலை உடைச்சி வீட்டுல உக்கார வெச்சிருக்கனும் என்ற எண்ணம் தோன்ற அவனை முறைத்து பார்த்தாள்

என்ன லுக்கு கண்ணை நோன்டி கையில குடுத்துருவேன் இதுக்கு எல்லாம் மூளை காரணமே நீதான் என்றவன் அது பத்தலைனு இன்னும் எவன்கூடலாம் கூட்டு சேர்ந்துட்டு இன்னும் இந்த கம்பெனியையும் இழுத்து மூட வைக்கலாம்னு நினைக்கறியா என்றான்

லூசு மாதிரி பேசாதீங்க நான் எதுக்கு அப்படி பண்ண போறேன்.... என்றவளின் பொறுமை காற்றில் பறந்தது...

நீ பண்ணுவடி உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் என்றவன் போன் ரிங் ஆகவும் அதை எடுத்து பார்த்தவன் கண்கள் சந்தோசத்தில் விரிந்தது...

ஹாய் பேபி ஹவ் ஆர் யூ அம்மு.......

..........

மிஸ்யூ பேபி..... உம்மா உம்மா என்றவன் கண் மிருணாவை தீண்டி சென்றது

அவன் சொல்வதை கேட்ட மிருணாவிற்கு அவனை நாலூ அறை அறையனும் போல கை பரபரத்தது...

சரி பேபி உன்னோட மித்து சீக்கிரம் வந்துறேன்... நீ கவலை படமா இரு சரியா என்றவன் மீண்டும் மீண்டும் முத்தம் கொடுத்துவிட்டு போனை வைத்தான்

பேசுறது பேசி முடிஞ்சிருச்சினா நான் கிளம்பலாமா என்றான்....

அவளை பார்த்தவன் இங்க இருந்து போயி தொல்லை முதல என்றான்..

ரூமில் இருந்து வெளியே வந்தவள் அவளுடைய வண்டியை எடுத்துகொண்டு எங்கோ கிளம்பிவிட்டாள்
 
Top