கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 16

மிருணா வெளியே போனதும் அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து தப்பிடுவியாடி இன்னும் உன்னை எப்படிலாம் ஓட விடறேன் பாரு என்று வாய் விட்டே சொன்னவன் வெளியே வந்தான்

வேகமாக போன மிருணாவின் பின்னால் ஓடிய கருணா அவளை பிடிக்க முடியாமல் தலையில் கை வைத்தவன் இவ இவ்வளவு கோவமா போற அளவுக்கு அண்ணா என்ன பண்ணி வெச்சாரோ தெரியலையே என்று புலம்பியவன் அங்கு வந்த மித்ரனிடம் அண்ணா அவளை என்ன சொன்னிங்க இவ்வளவு கோவமா போறா என்றான்

உண்மையை சொன்னேன் என்றான் ரஜினி போல

ஆமா இவர் பெரிய ரஜினிகாந் உண்மைய சொன்னாராம் என்று மித்ரனை பார்த்து ஒரு லுக்கு விட்டவன் அவளுக்கு அவ்வளவா வண்டி ஓட்ட தெரியாது அண்ணா... நல்ல நிலைல போனாலே 4பேர்த்தோட உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதுல கோவமா வேற போறா எத்தனை பேர் சாக போறாங்களோ என்றவன்.. இனி இந்த தலைவலி தினமும் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை என்று நினைத்தவன் மிருணாவின் நம்பர்க்கு அழைத்தான்

முதல் மூன்று தடவை எடுக்காதவள் அடுத்த ரிங்கில் எடுத்துவிட்டாள்..

சொல்லுடா கருவாயா என்றதும் அவள் நல்ல மூடில் தான் இருக்கிறாள் பயப்படாமல் பேசலாம் என்று தைரியமாக எங்க போன பிங்கி என்றான்

அந்த பக்கம் மிருணாவின் முகம் கோவத்தில் சிவந்திருக்கும் என்று இந்த பக்கம் இருந்த கருணா நினைத்து சிரிக்கவும்

ஏய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்னை அப்படி கூப்பிடாதான்னு என்று நான் ஒன்னும் பிங்க் கலர்ல இல்லை என்றாள் மூக்கு விடைக்க

சரி இப்போ நீ எங்க இருக்க எதுக்கு கோவமா போனா அதை சொல்லு என்றான்

சும்மாதான் என்றவள் மித்ரன் சொன்ன எதையும் சொல்லவில்லை.நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீ என்னை எங்கையும் தேடமா வீடு வந்து சேரு என்றவள் போனை வைத்துவிட்டாள்

மகாராணி எங்க போனாளாம் என்றான் மித்ரன் திமிராக

அவ வீட்டுக்கு போய்ட்டா அண்ணா.... நம்மளும் கிளம்பலாம் அண்ணா நான் போய் காரை எடுத்துட்டு வரேன் என்று சொன்னவன் கிளம்ப போக... கருணா என்றான்

சொல்லுங்க அண்ணா

அது என்ன பிங்கி

அது... அது என்றவன் சொல்ல தயங்கவும்

சரி சொல்ல முடியாத அளவுக்கு பர்சனல்னா சொல்ல வேண்டாம் என்றான்

அப்படி எதுவும் இல்லை அண்ணா... அவளுக்கு கோவம் வந்தா மட்டும் மூக்கு பிங்க் கலர்ல மாறிடும் .. அதனால நான் அவ கோவமா இருக்கறப்ப மட்டும் பிங்கினு விளையாட்டா சொல்லுவேன் .. என்றான்

ஓ ஓ என்று மட்டும் மித்ரன் சொல்ல கருணா அங்கிருந்து கிளம்பி காரை எடுத்துகொண்டு வந்து மித்ரன் அருகில் நிறுத்தியவன்... அண்ணா வீட்டுக்கு போலாம் வாங்க என்றான்

நான் டிரைவ் பண்றேன் என்று கருணாவை நகர சொல்லிவிட்டு அவன் ஓட்டினான்

நீண்ட நாளுக்கு பின் மகன் வீட்டிற்க்கும் வரும் செய்தி கருணாவின் மூலம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செய்தி பறந்தது ..

அண்ணா இவ்வளவு நாள் வீட்டுக்கு வரமா இருந்திங்க... இனி இங்கையே தானே இருப்பிங்க என்றான்

அப்படி எல்லாம் இல்லை கருணா இந்த இஸ்சுக்கு தான் வந்தேன் இனி எனக்கு இங்க என்ன வேலை அதனால இன்னும் 2 நாள கிளம்பர மாதிரி இருக்கும் என்றான் மித்ரன்

இல்லை அண்ணா நீங்க அப்படி எல்லாம் போககூடாது ப்ளீஸ்... நீங்க எவ்வளவு அழகா கம்பெனியை நடத்துறீங்கன்னு கூட இருந்து பார்த்தவன் இவ்வளவு நாள்தான் அங்க இருந்துட்டீங்க இனிமேல் இங்க இருக்கனும்னு நாங்க எல்லோருமே ரொம்பவே எதிர்பார்ப்போடு இருக்கோம் என்றான்

எல்லோரும்னா உன் பிரண்ட் மிருணாவும் கூடவா

அவ எதிர்பார்த்தா என்ன பார்க்கலனா என்ன? அவ என்ன நம்ப வீட்டுக்கா வர போறா என்றான் கருணா

அவ அங்க இருக்கறனாலே தானே என்னை அங்க இருந்து அனுப்பிட்டாங்க என்றான்

நீங்க எப்போ போனிங்களோ அப்போல இருந்தே மிரு வீட்டுக்கு உள்ள வரது இல்லை எல்லோரும் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டாங்க அவ முடியாதுனு சொல்லிட்டா.. என்றவன் அவளை விடுங்க அண்ணா எங்களுக்காக இங்கையே இருங்க அண்ணா என்றான் கருணா

இல்லை கருணா நான் 2நாள கிளம்பிடுவேன் இதுதான் என்னோட முடிவு என்றான்

அதன்பிறகு கருணா எதுவும் பேசவில்லை....

இருவரும் வீட்டிற்கு வரும் போது சாந்தி வீட்டையே ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தார்...

மித்ரன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இறங்கியவன் வீட்டின் உள்ளே செல்ல போக இரு மித்தி அம்மா உனக்கு ஆரத்தி எடுத்துடறேன் என்றார்

எதுக்கு ..... மறுபடியும் எப்போடா இவனை துரத்தலாம்னா ஆரத்தி சுத்தி வரவேற்கிரீங்க என்றான் வெடுக்கென்று

அவன் கேட்டதில் அதிர்ச்சி ஆனவர் ஏன் மித்தி இப்படி சொல்ற நான் உன் அம்மா டா இப்படிலாம் எப்படி நினைப்பேன்...

அப்படி நினைக்கமலா என்னை இங்க இருந்து அனுப்புனீங்க என்றான்....

மித்தி உள்ளே போய் பேசிக்கலாம் என்றார் கதிர்...

பேசறதுக்கு எதுவும் இல்லை அப்பா இன்னும் 2நாளா இங்க இருந்து கிளம்பிடுவேன் என்றவன் சாந்தி சுத்த வந்த ஆர்த்தியை வேண்டாம் என்று பார்வையிலையே தள்ளி வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்

இதை எல்லாம் வீட்டின் வெளியே இருந்து மிருணா பார்த்துக்கொண்டிருந்தாள்

பெரிய இவன், போடா யார் உன்னை இங்க இருக்க சொன்னது, 2நாள் தான் இருப்பானாம்.... என்று முனவியவளின் கண் முன்னாள் மித்தி யாரோ ஒரு பெண்ணின் கை பிடித்து சுத்துவது போல வரவும் ஐயா அதுக்குதான் சீக்கிரம் கிளம்பனும்னு நினைக்கிறியா உன்னை அப்படி ஈஸியா போக விடற மாட்டேன் என்றவள் ஏதோ பிளான் போட ஆரம்பித்தாள்

உள்ளே போன மித்தியை பார்த்து கண் கலங்க நின்றார் சாந்தி

சாந்தி அங்க என்ன பண்ற வந்து பையனை கவனி என்றவர் மித்தி பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்துடுச்சி இனி அந்த கம்பெனிக்கு நீதான் md என்றார்

நோ டாட் எனக்கு இங்க இருக்கலாம் சுத்தமா விருப்பம் இல்லை... நான் பாரின் கிளம்பிடுவேன் ... என்னோட பியூச்சர் அங்க தான் இருக்கு என்றவன் வாசலில் பக்கதில் பூ பறித்துகொண்டிருந்த மிருவை பார்த்தவன் மே பி என்னோட லைப் பார்ட்னர் கூட அங்க இருக்கலாம் என்றான்

அதை கேட்டவள் சட்டென்று அவனை பார்க்க தெரியும்டி நீ என்னை பார்ப்பனு... இவனுக்குலாம் கல்யாணம் ஒரு கேடானு நினைச்சுருப்பா என்று இவனாகவே நினைத்தவன் போவதற்குள் இவளை ஏதாவது செய்ய வேண்டுமே என்று என்ன செய்யலாம் என்று நினைத்தான்

இருவருமே ஒருவரை ஒருவர் தாக்க பலமாக திட்டம் தீட்ட இதில் யாரு ஜெயிப்பார்கள் என்று பார்க்கலாம்

சொர்ணமும், சொக்கலிங்கமும் கோவிலுக்கு போயிருந்ததால்... இப்போதுதான் வந்தனர் வரும் வழியில்லையே பேரன் வீட்டுற்கு வந்திருக்கிறான் என்ற செய்தி கிடைக்கவும் இருவரும் அந்த தள்ளாடும் வயதிலும் வேகமா வீட்டிற்கு வந்தனர்

சொர்ணம் வேகமாக உள்ளே வந்தவர் மித்ரனை பார்ததும் கண்களில் கண்ணீருடன் அவனை கட்டிகொண்டார்

மித்தி என்னால தானே நீ இவ்வளவு வருஷம் இங்க வரமாலே இருந்துட்ட இந்த கிழவியை மன்னிச்சிருப்பா என்றார்

அவர் கிழவி என்றதும் மிருணா அப்படிதானே பாட்டியை கூப்பிட்டா என்றுமனம் நினைக்க அவளுக்கு உடம்பு முழுக்க கொழுப்பு பெரியவிங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாத ஜடம் என்று நினைத்துகொண்டவன் உனக்கு அப்படி ஒன்னும் வயசாகுல கிழவினு சொல்ல என்றவன் அதான் தினம் என்னோட வீடியோ கால்ல பேசுறில பாட்டி அப்புறம் எதுக்கு இந்த அழுகை என்றான்

என்னதான் அந்த டிவி பொட்டில உன்னை பார்த்தாலும் இப்படி உன்னை நேர்ல பார்த்து எத்துணை வருஷம் ஆயிடுச்சு என்றார் அவனின் கன்னம் வழித்து..

என்னடி இப்படி மசமசன்னு நிக்கற போய் என்னோட பேரனுக்கு விதம் விதமாக செஞ்சிகுடு என்றார் சாந்தியிடம்

இத்தனை வருஷத்தில் அப்பாவோடு பேசுகிறான் பாட்டியோட பேசுகிறான் ஆனால் அம்மா என்று என்னுடன் பேச மாட்டிங்கறான் என்று ஏக்கமாக மித்தியை பார்த்தார் சாந்தி.....

மித்ரனுக்கு சாந்தியின் மேல் இருக்கும் கோவம் எப்போதும் போகும் .... மித்ரன் மறுபடியும் அமெரிக்கா சென்று விடுவானா என்று இனி வரும் ud யில் பார்க்கலாம்
 
Top