அன்று மாலை 4 மணி ஆனதுமே சொர்ணம் வெளியே வந்து பார்த்துவிட்டு சென்றார் , அதற்கு பிறகு 5நிமிசத்துக்கு ஒரு தடவை வெளியே வருவதும் , வாசலை பார்ப்பதுமாக இருந்தவரை" என்ன சொர்ணம், வெளிய வர வாசலை பார்க்கற அப்புறம் மறுபடியும் உள்ளே போய்டற " என்றார் சொக்கலிங்கம்
"அது ஒன்னும் இல்லங்க கோவிலுக்கு போலாம்னு பக்கத்துவீட்டு பரிமளாவை வரச்சொன்னேன், அவ வராளான்னு தான் எட்டி, எட்டி பாத்துட்டு இருந்தேன்" என்றார்
"ஓ, என்ன இன்னிக்கு உன்னோட கை பரிமளாவோட உதவியை தேடுது" என்றார் சாதாரணமாக ஆனால் அதை கேட்ட சொர்ணதிற்க்கோ கை என்றதும் வாய் நடுங்க ஆரம்பித்தது...
"அது, அது ஒன்னும் இல்லைங்க இன்னிக்கு சனி பிரதோஷம் பரிமளாவும் பார்க்கணும்னு சொன்னா, அதான் " என்று ஏதோ சொல்ல" சரி சரி நேரமா போய்ட்டு வந்துருங்க "என்றார் சொக்கலிங்கம்
பரிமளா 4.30 மணிக்கு வரவும் இருவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றனர் ... இவர்கள் இருவரையும் வழியிலையே மடக்கி பரிமளத்தை போக சொல்லிவிட்டு சொர்ணத்தை கூட்டிகொண்டு ஹாஸ்பிடல் போனாள் மிருணா..
"வா மிரு.... எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் ... இதனால என்னக்கு எந்த பிரச்சனையும் வந்துறாதுல " என்றார் நர்ஸ்
"அக்கா நீங்க பயப்படாம செய்ங்க .. கிள, சாரி பாட்டியே அவங்களோட விருப்பதோடதான் வந்துருக்காங்க " என்று " என்ன பாட்டி உனக்கு இதுல சம்மதம்தானே நர்ஸ் அக்கா கிட்ட சொல்லு அவங்க பயப்படறாங்க பாரு " என்றாள்
"எனக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லைம்மா, நீ செய் ஏதாவது பிரச்சனை வந்தா நான் பார்த்துக்கறேன் "என்றார் சொர்ணம் ...
அதன்பிறகு நர்ஸ் கட்டு போட்டுவிட்டு கொஞ்சம் மருந்து, மாத்திரை எழுதிகொடுக்க, "என்ன மிரும்மா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவணு பார்த்தா நர்ஸோட முடிச்சிக்கிட்டியே" என்றார்
"உன் மூஞ்சிக்கு நர்சே அதிகம் கிழவி கம்முனு இரு எனக்கே என்ன நடக்கபோகுதுனு பதட்டமாவும், பயமாவும் இருக்கு... இதுல நீ வேற லொட, லொடன்னு "என்று திட்டியவளை பார்த்த சொர்ணம் தனது வாய்க்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியது போல கப்பு சுப்பு என்றானார்.
கட்டுபோட்டு கொண்டு இருவரும் வண்டியில் கிளம்ப, "கிழவி உன்னோட பக்கத்து வீட்டு பரிமளா இந்நேரம் நடிப்பை ஆரம்பிச்சிருக்கும்ல "என்றாள்
"அவ என்னைய விட செமையா நடிப்பாடி பயப்படாத " என்றார் ..
"உனக்கு ஒன்னு தெரியுமா நான் உன்னை வெளியே விட்டுட்டு என்னோட பிரண்ட் வீட்டுக்கு கிளம்பிடுவேன் நீதான் உள்ளே போய் எல்லோரையும் சமாளிக்கனும்" என்றாள்
" எனக்கு உன் அளவுக்குலாம் சமாளிக்க தெரியாதுடி , எதையாவது உளறி வெச்சிடுவேன் "என்றார் சொர்ணம்
"ஆமா நான் மட்டும் சமாளிக்கறதுல ஆஸ்க்கார் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு... ஒழுங்கா போய் சமாளி இல்லனா, உன் பேரன் பிளைட் ஏறி பறந்துடுவான் "என்றாள்
"மிரு நான் பாவம்ல , நீயும் வாடி நீ ஸ்டார்ட் பண்ணி வை நான் மீதியை பார்த்துக்கறேன்" என்றார்
"ஏன்? உனக்கு ஸ்டார்ட்டிங் ட்ருப்ளா" என்றவள் "வெளியே யாராவது இருந்தா சொல்றேன் அதுக்காக உள்ள எல்லாம் வந்து சொல்லமாட்டேன்" என்றாள்
"சரிம்மா அதையாவது செய்யறையே அதுவே போதும்", என்றவருக்கும் தெரியும் பொழுது இறங்க வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெளியேதான் இருப்பார்கள் அதும் இல்லாமல் தான் கீழே விழுந்துவிட்டதாக பரிமளாவை சொல்லவேற செய்திருக்கிறார் அப்படி இருக்கும் போது எப்படி எல்லோரும் உள்ளே இருப்பார்கள் என்று நினைத்தார்
வண்டி வீட்டிற்கு போனதும் மிருணா வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டாள். ... இன்னிக்குனு பார்த்து எல்லோருமே வீட்டிற்கு வெளியே தான் இருந்தனர்...
மிருணா வண்டியை நிறுத்துவதற்குள் அவர்கள் அருகில் வந்த மித்ரன் ... "பாட்டியை என்னடி பண்ணி வெச்ச" என்றான்
அவனை முறைத்தவாறே வண்டியை நிறுத்தினாள் அவள் நிறுத்தியவுடன் பாட்டியை இறக்கிவிட்டவன் ... "பாட்டி உனக்கு இப்படி ஆனதுக்கு இவதானே காரணம் "என்றான்...
"இல்லப்பா பரிமளா சொல்லிருப்பாளே , கோவில எண்ணெய் கொட்டிருக்கும் போல தெரியாம வலிக்கி விழந்ததும் கையை அழுத்தி ஊன்னிட்டேன்" என்றவர் ஹப்பா எப்படியோ மிரு சொல்லிகுடுத்ததுல ஒரு வார்த்தை மாறாம சொல்லிட்டேன் என்று மிருணாவை பார்த்து கண் அடித்தார்
அதை பார்த்த மிருணா இந்த "கிழவிக்கு லொள்ளை பாரு... எப்படியும் என்னை மாட்டிவிடாம விடாது போல "என்று நினைத்தவள் ஒன்னும் தெரியாதவள் போல் அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டாள்
"நீ கோவிலுக்கு போனப்ப இவ எப்படி அங்க வந்தா? " என்றான் மிருணாவை பார்த்தவாறே ... மித்ரன்
"ஐயோ கை வலிக்குதே" என்று பாட்டி சொல்லவும் சொக்கலிங்கம் .. "மித்தி அவளே வலில இருக்கா, இப்போ போய் கேள்வி கேட்டுட்டு இருக்கியே என்றவர் ஏதோ மிருணா அங்க இருந்தனாலே , இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் கட்டு எல்லாம் போட்டு கூட்டிட்டு வந்துருக்கு அதுக்கு நன்றி சொல்லலைனாலும் இப்படி குற்றவாளி மாதிரி நிற்க வச்சி கேள்வி கேக்ககூடாது மித்தி "என்றார்
"இல்லை தாத்தா நான்" என்று அவன் ஆரம்பிக்க
"மித்தி எனக்கு ஒரு மாதிரி இருக்குப்பா, நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமா "? என்றார்
"சரி பாட்டி நீ போ" என்றவன் அவர் போகவும் மிருணாவும் நகர "ஏய் நீ எங்கடி போற? " என்றான்
அவள் சுத்தி முத்தியும் பார்க்க யாரும் இல்லை... சாந்தி, வேணி, கதிர், கருணா நால்வருக்கும் இவள் போட்ட திட்டம் தெரியும் என்பதால் அவர்கள் எதுவும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டனர்...
தாத்தாவிடம் அதிகம் மிருணா பேசமாட்டாள் , அதனால் இந்த திட்டத்தை பற்றி எதையும் சொல்லவில்லை... வீட்டில் இருப்பவர்களும் சொல்லாததற்கு காரணம் அவர் வயசானவர், தன் மனைவிக்கு என்று வரும்போது... இதுலாம் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று நினைத்து சொல்லவில்லை...
இப்போது எல்லோரும் உள்ளே சென்றுவிட மித்தியிடம் தனியாக மாட்டிக்கொண்டாள் மிருணா
அவன் "ஏய் எங்கடி போற" என்று கேட்டதும் அவளுக்கு கோவம் வரவும்
"நான் என்ன உன்னோட பொண்டாட்டியா ? வாடி, போடின்னு , இப்படி உரிமையா கூப்பிடற? " ... என்று அவளும் மரியாதை இல்லாமல் பேசினாள்...
அவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் "எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்னா, அதுக்குன்னு ஒரு தகுதி வேண்டும்... வேலைக்காரி எல்லாம் என்னோட பொண்டாட்டி ஆக முடியாது"... என்று சொன்னவன்." பாட்டிக்கு இப்படி ஆனதுக்கு நீ காரணம் இல்லனு சொன்னா, மத்தவங்க நம்பலாம் ஆனால் நான் நம்ப மாட்டேன் " என்றான்...
அவன் வேலைக்காரி என்று சொன்னதும் இவ்வளவு நாள் வீட்டில் ஒருத்தியாக நடத்திய சாந்தி, கதிர் தான் அவள் கண் முன் வந்து நின்றனர்..அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றவளை பார்த்தவன்...
"ஏய் நான் கேட்டதுக்கு என்ன? பதில்" என்றான்....
"நான் வேலைக்காரியா இருக்காறனால தான் , எனக்கு இவ்வளவும் செஞ்ச உன்னையும் , உன் பாட்டியையும் ஒன்னும் செய்யமுடியாம இருக்கேன் ... நானும் உங்களுக்கு இக்குவலா இருந்திருந்தால் நீ பண்ணதுக்கு"..... என்றவள் அதற்கு மேல் சொல்லமுடியாமல் உள்ளே ஓடிவிட்டாள்
அவளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது... "எவ்வளவு திமிறுடி , இந்த திமிறை அடக்கல, நான் மித்ரன் இல்லை "என்று சபதம் போட்டுகொண்டு வீட்டின் உள்ளே சென்றான்...
ஹாலில் சொர்ணம் சோபாவில் படுத்து இருக்கவும் .... "என்ன பாட்டி ரூமுக்கு போகலையா? இங்க படுத்திருக்க" என்றான்
"பாட்டிக்கு உங்ககிட்ட ஏதோ பேசணுமா" என்றான் கருணா
"என்ன பாட்டி சொல்லு "என்றான்
"எனக்கு உடம்புக்கு ஏதோ மாதிரியே இருக்கு தம்பி, நாளைக்கு நீ வேற ஊருக்கு போறேன்னு சொல்லற ....நான் இருக்கபோறதோ இன்னும் கொஞ்ச நாள்தான் அதுவரைக்கும் உன்கூடவே இருக்கணும்னு ஆசைப்படறேன் மித்தி" என்றார்
எல்லோரும் அவரை சுத்தி இருக்க .... "என்ன மித்தி யோசிக்கற பாட்டிக்காக இதை கூட செய்யமாட்டியா? அவ உங்கிட்ட ஆசையா கேக்கறாள" என்றார் சொக்கலிங்கம்
"இல்லை தாத்தா அங்கதான் என்னோட பியூச்சர் இருக்குனு நான் மைண்ட்செட் ஆயிட்டேன் " என்றவன் தயங்க
"உனக்கு அங்க விட இங்கதான் மித்தி நல்ல பியூச்சர் இருக்கு "என்றார் கதிர்
"எனக்கு யோசிக்க டைம் வேண்டும், அதும் இல்லாம நீங்க பண்ணதை என்னால அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க முடியாது "என்று சாந்தியை பார்த்தான்
"உனக்கு எங்க கூட இருக்கறதுதான் பிரச்சனையா? மித்தி "என்றார் கதிர்
"அப்படினும் சொல்ல முடியாது, அப்படி இல்லைனும் சொல்லமுடியாது".. இங்க இருக்கறப்ப என்னை போக சொன்ன அந்த நாள்தான் எனக்கு கண் முன்னாடி வருது" என்றான்....
கதிர்க்கு அவன் நிலை புரிந்தது, குழந்தை பருவத்தில் மனதை பாதிக்கும் அளவிற்கு எந்த நிகழ்வு நடந்தாலும், பாதிக்கபட்டவர்கள் அதில் இருந்து மீண்டும் வருவது மிகவும் கடினம், பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதிந்த சில வடுக்களை நாம் எவ்வளவு பாசம் காட்டி மாற்ற முயன்றாலும், அந்த வடுவை சரி செய்ய முடியாது, என்று நினைத்தவர்... அன்று அந்த பிரச்சனையை வேற மாதிரி தீர்த்திருக்கணுமோ? பிரச்சனைக்கு பயந்து அவனை அங்குகொண்டு போய் விடாமல் இருந்திருந்தால் இன்று தன்மகன் தங்களை யாரோ போல பார்த்திருக்க மாட்டான் , என்று காலம் கடந்த ஞானோதியம் தோன்றியது கதிருக்கு
"நான் யோசிக்கனும்" என்றான் மித்ரன்
"இங்கபாரு மித்தி நம்ப முதல் கம்பெனி உன் பேர்ல தான் ஆரம்பிச்சேன், அதனால நீதான் அந்த கம்பெனியோட md... அதை உன் திறமையால இன்னும் எப்படி மேல கொண்டு வரணும்னு யோசிச்சு செய். அதுவரைக்கும் நீ இங்கதான் இருக்கனும்.. உனக்கு கல்யாணம் ஆனவுடன் உனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லனா , உன் மனைவியை அழைச்சிட்டு நீ வேற வீட்டுக்கு போயிடலாம் "என்றார்...
"அதுக்காக என்னால இப்போ கல்யாணம் செஞ்சிக்க முடியுமா? டாட், என்றவன் .... கண் முன் ஒரு பெண் முகம் தோன்ற . "இங்க இருக்கறதை பத்தி நான் யோசிக்கணும் "என்றான்...
"சரி தம்பி" என்றார் பாட்டி
அப்போது மிருணா வெளியே பூ பறிக்க வந்தவள் இதை கேட்டுகொண்டிருக்க... இந்த நெட்டை கொக்கு யோசிச்ச பிரச்சனை ஆய்டுமே என்று நினைத்தவள்.... அங்கிருந்து கொண்டே "என்ன மாமா உங்க பையன் ஊருக்கு போறேன்னு சொன்னாங்க... போகலையா? " என்றாள்
அவளை முறைத்த மித்ரன் "இவளை" என்று பல்லை கடித்தான்
அவள் ஏதோ பிளான் பண்ணிட்டா, என்று நினைத்த கதிர் "போவான் ஏன்? கேக்கற மிரு" என்றார்
"என்கிட்ட சவால் விட்டாரே உன்னை பழிவாங்கியே தீருவேன்னு , அதுல ஜெயிக்க முடியாதுனு தான் ஊருக்கு போறேன்னு சொன்னாரோ .... சவால நான் ஜெய்ச்சிடுவேனும் அவர் தோத்துடுவார்னும் பயந்துட்டார் போல... பாவம் "என்றாள் கேலியாக
"அப்பா நான் இனி இங்க தான் இருப்பேன்" ... என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போய்விட்டான் மித்ரன்
போகும் அவனையே எல்லோரும் பார்த்துவிட்டு அவன் போதும் மிருணாவை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டினர்...