எதையோ சாதித்த மாதிரி மிருணா அங்கிருந்து சென்றாள்.... பின்வரும் காலங்களில், ஏண்டா? அவனை இருக்கவைத்தோம் , என்று அவளை கவலைப்பட போவதை அறியாமல்...
அடுத்தநாள் மிருணா முதலில் அவள் ஸ்கூட்டில் கம்பெனி கிளம்பினாள்....அவள் கிளம்பி ஒரு அரைமணி நேரம் கழித்து கிளம்பிய மித்ரன், போகும் வழியில் அபிஷேக் மிருணாவை வழியில் நிறுத்தி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்... அபி ஏதோ சொல்ல அதைகேட்ட மிருணா சத்தமாக சிரித்தாள்...
"இவளை வேலைக்கு வர சொன்னா இங்க இவன் கூட, ரோடுனு கூட பார்க்காமல் சிரிச்சி பேசிட்டு இருக்கா... மவளே கம்பெனிக்கு வாடி உனக்கு இருக்கு" என்று நினைத்துகொண்டு காரை எடுத்தான்.
அபியுடன் பேசிவிட்டு கம்பெனிக்கு போன மிருணாவை ஆபிஸ் வாசலிலையே மறித்த மித்ரன் ".நீ பேக்டரி போய் துணி பண்டல் எல்லாம் எடுத்து லைன்க்கு கொடுத்துட்டு வா, என்றான்
அவளும் அவன் சொன்ன வேலையை செய்தாள்... மித்ரன் இந்த கம்பெனியில் இருப்பதால் கருணாவும், கதிரும் மற்ற கம்பெனிக்கு சென்றுவிட்டனர்...
மித்ரன் சொன்னதை செய்துவிட்டு வந்தவளை கம்பெனிக்கு இன்புட் பார்க்க சொன்னான்... இன்புட் பார்ப்பது என்றால் ஒவ்வொரு லைன்னிலும் 30பேர் வேலை செய்துகொண்டிருக்க , அவர்கள் வேலை செய்ய தேவையான மெட்ரியல்ஸ் எல்லாமே அவர்கள் இடத்திற்கே கொண்டு போய் கொடுக்கவேண்டும் . ஒரு லைன்னிற்க்கு ஒரு இன்புட் ஆள் என்று போட்டிருப்பர், ஆனால் மித்ரனோ இவளை பழிவாங்க வேண்டும் என்றே 3லைன் இன்புட்டையும் சேர்த்தே பார்க்கவைத்தான்...
மிருணா காலில் சக்கரம் கட்டியது போல சுழல ஆரம்பித்தாள்...
ஒரு கட்டத்திற்கு மேல் அவளிற்கே அவன் பழிவாங்குகிறானோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது ..அதன் பின் அவனது ஆபிஸ் ரூமிற்கு சென்று சோபாவில் உக்காந்துகொண்டாள்
வேலை செய்பவர்களுக்கு இன்புட் இல்லாமல் சும்மா நிற்கவும்... செய்தி மேனேஜரிடம் போய் அவர் வேற ஆளை அங்கு போட்டார்...
ரவுண்டு போன மித்ரனோ மிருணாவை காணாமல் "எங்கே? மிருணா "என்றான் மேனேஜரிடம்
"தெரியலை சார், அவங்க இல்லாம இன்புட் அப்படியே நிற்கவும் நான்தான் ஆள் மாத்தி விட்டேன்" என்றார் மேனேஜர்
அதை கேட்டதும் கம்பெனி முழுவதும் மிருணாவை தேடியவன் சோர்ந்து போய் ஆபிஸ்ரூமிற்கு வந்தான்
அங்கு அவள் உக்கார்ந்து கொண்டு ஆப்பிள் சாப்பிட்டுகொண்டிருந்தாள்..
"ஏய் உன்னை லைன் தானேடி பார்க்க சொன்னேன், இங்க என்ன பண்ணிட்டு இருக்க உன்னை காணாம நான் கம்பெனி முழுக்க தேடிட்டு இருக்கேன் "என்றான்
"மித்து எனக்கு ரொம்ப டையார்டா இருக்கு. நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் "என்று அப்படியே சோபாவில் உக்கார்ந்தவாறே தூங்கினாள் , சாரி தூங்க முயற்சி செய்துகொண்டிருந்தாள்...
அவளை எழுப்ப கை பரபரத்தாலும், மனமோ "அவளே நோஞ்சானாட்டம் இருக்கறா அவகிட்ட போய் அவ்வளவு பெரிய பண்டல் எல்லாம் தூக்க சொன்னா தாங்குவாளா "என்று கேக்க "அவ தூங்கட்டும் "என்று அமைதியாக இருந்துவிட்டான்
அடுத்த நாள் இதே போல ஏதாவது வேலை சொல்ல மனம் துடிக்கவும் .. எதுக்கு அப்புறம் இங்கையே வந்து ரெஸ்ட் எடுக்கறேன்ங்கற பேர்ல நம்ப உயிரை வாங்குவா என்று நினைத்தவன் அவளுக்கு எந்தவேலையும் கொடுக்காமல் அவளுக்கு என்று இருந்த வேலையும், வேற ஆளை செய்ய சொல்லிவிட்டு அவளை சும்மா இருக்க வைத்தான்
"இவன் என்ன லூசா? குடுத்தா முதுகு எலும்பு உடையற மாதிரி வேலை குடுக்கறான் , இல்லனா சும்மா இருக்க வெச்சி போர் அடிக்கவைக்கிறான்" என்று நினைத்தவள்... சும்மா இருக்க முடியாமல் அங்கு இருப்பவர்களிடம் ஏதாவது பேசிக்கொண்டு இருந்தாள் மிருணா
அடுத்து வந்த நாட்கள் யாருக்கு நன்றாக போனதோ மித்ரனுக்கு கொடுமையாக போனது.
ஒரு நாள் கம்பெனி முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகும் மிருணா கிளம்பாமல் இருக்க... "ஏன் நீ போகலையா? " என்றான்
"என்னோட பிரண்ட் ஆரூசா வரேன்னு சொல்லிருக்கா, அவளை பார்த்துட்டு அவகூட ஷாப்பிங் போய்ட்டு தான் வீட்டுக்கு போகணும் "என்றாள்
"ஷாப்பிங் போற அளவுக்கு, மேடம் எங்க போறீங்க? " என்றான் அவன் அபிஷேக் உடன் எங்காவது செல்வாளோ என்ற எண்ணத்தில் கேக்கவும்
அவளோ "இன்னும் 2நாள்ல , ஊர் திருவிழா வருது அதுக்காக அம்மாவுக்கும் எனக்கும் டிரஸ் எடுக்க போறேன், "என்றவள் ஆரூசா வந்துவிட்டாளா? என்று பார்க்க வெளியே போனாள்
ஆரூசா வரவில்லை அதற்கு பதிலாக அபிஷேக் வருவதாக மெசேஜ் வரவும் உள்ளே சென்று பேக் எடுக்க போனாள்
உன்னோட பிரண்ட் வந்துட்டாங்களா?" என்றான்
"இல்லை, அவளோட அண்ணா தான் வராங்க" என்றாள்
அவள் சொன்னதை கேட்ட மித்ரனுக்கு உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது . இருந்தாலும் "இவகிட்ட ஏதாவது கேட்டா நான் அப்படி தான் போவேன் உன்னால என்ன பண்ண முடியும்னு கேப்பா ஏதோ பண்ணி தொலையட்டும் "என்ற நினைவுடன் அமைதியாக இருக்க.
"நான் கிளம்பறேன் மழை வேற வரமாதிரி இருக்கு" என்று மிருணா வெளியேவர ..
"மழை வரமாதிரி இருக்குனு சொல்லிட்டு போறாளே, இவளை என்ன செய்யறது" என்று நினைத்தவன் டேபிள் மேல் இருந்த வெயிட்டை சுத்திகொண்டிருந்தான்...
மிருணா வாசலுக்கு கூட போகல அவள் போன் அடிக்கவும், மழை வரவும் சரியாக இருந்தது
"சொல்லு அபி" என்றாள் போனை எடுத்து ...
"மிரும்மா வண்டி பிரேக்டவுன் ஆயிடுச்சி, "" இங்க மழையும் அதிகமா பெய்து அதனால நாளைக்கு போலாம் , நீ பத்திரமா மழை நின்றதும் வீட்டுக்கு போ "என்றான்
"நீ ஒன்னும் வரவேண்டாம் "என்று போன்னை வைத்தவள் .... மழையை பார்த்துவிட்டு திரும்பவும் உள்ளே வந்தாள்
"என்ன கிளம்பலையா"? என்றவன் ஜன்னல் வழியாக மழையை ரசித்துகொண்டிருந்தான்.
"அபி வண்டி பிரேக்டவுன் ஆயிடுச்சாம்" என்றவள் சோபாவில் உக்கார்ந்து அங்கிருந்த டிவியை போட்டாள்...
மழையில் இடி, இடிக்கவும் வேகமாக போய் டீவியை ஆப் செய்தவள் மெதுவாக போய் மித்ரன் பக்கதில் நின்றுகொண்டாள்
அவளை வினோதமாக பார்த்தவன் . "என்ன "? என்றான்
"இல்லை இடி இடிக்குது "என்றாள் குழந்தை போல
"அதுக்கென்ன" என்று அவன் கேக்கவும்
"எனக்கு இடினா ரொம்ப பயம்" என்றாள் , அடுத்து இடித்த இடியில் கரண்ட் போனது . ஐயோஓஓஓஓஓஓஓ என்று பதறியவளை பார்த்தவன், " இரு நான் போய் ஜெனரேட்டர் ஆன் பண்ணிட்டு வரேன் " என்று நகர போனவனின் கையை பிடித்துகொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.. "என்னைய தனியா விட்டுட்டு எங்கையும் போயிடாத ப்ளீஸ் "என்றாள் அழுதுகொண்டே
அவளை சோபாவில் உக்கார வைத்தவன், "ஏய் நீ என்ன? இன்னும் சின்ன பிள்ளையாடி , இதுக்குலாம் போய் பயப்படற" என்றான்
"இடி நம்ப மேலையே விழுந்துடும்" என்று அழுதுகொண்டே சொன்னவள்
" ஒரு தடவை நானும், அம்மாவும் வெளியப்படுத்துருக்கும் போது பக்கத்து பனைமரத்துல இடி விழுந்துடுச்சி தெரியுமா"? அப்போல இருந்து எனக்கு இடினா பயம் "என்று , அவனை நெருங்கி உக்கார்ந்து அவன் கையை இறுக்கமாக பிடித்துகொண்டாள்
மித்ரனுக்கு இது எல்லாம் புதிது என்றாலும் அவள் பயப்படுவதை பார்த்து சந்தோசபட முடியவில்லை.. நீ அவ இப்படி அழணும்னுதானே ஆசைபட்ட அப்புறம் என்ன ? என்று மனசாட்சி கேள்வி கேட்கவும்
அதை அடக்கிவிட்டு, அவளின் கையை எடுத்துவிட்டு நகர்ந்து போக போனான்..
"மித்து ப்ளீஸ் என்னை விட்டு போயிடாத" என்று அவன் எடுத்துவிட்ட கையை இன்னும் அழுத்தமாக பிடித்துகொண்டாள் ...
அவனால் எங்கும் போகமுடியாமல் போனது அவளின் மித்து என்ற அழைப்பில்
"அடியே வெண்டைக்காய்க்கு கை, கால் முழிச்ச மாதிரி இருந்தாலும் நீ பொண்ணுடி," என்று மனதுக்குள் சொல்லிகொண்டவன்
அவன் அவளுடனே சோபாவில் உக்கார்ந்து கொண்டான் . அடுத்த இடி இன்னும் பலமாக இடிக்கவும் அதில் அதிகம் பயந்து நடுங்கியவள் அவன் கையைவிட்டு அவன் தோளில் ஒடுங்கினாள்
"கிழிஞ்சிது போ... கையை எடுத்துவிட்டதுக்காக இந்த பனிஷ்மென்ட்டா? " என்று நினைக்க "இது உனக்கு தேவையாடா? " என்று கேட்டுகொண்டே அவளை பார்த்தான்
இறுக்கி மூடிய கண்களில் நிற்காமல் வழிந்த கண்ணீர் அவன் சட்டையை நனைக்க தொடங்கியது, அதை பார்த்தவனுக்கு சிரிப்பும் வந்தது... "பார்க்க பலே கில்லாடியா இருக்கறா ஆன இந்த இடிக்கு போய் இப்படி அழறாளே"...என்று நினைத்தவனுக்கு வேற ஒன்றும் தோன்ற.... "நீ கம்முனே இருக்கமாட்டியா? கண்டதையும் யோசிச்சுட்டு" என்று மனதை திசைதிருப்ப முயன்று மீண்டும் அவளை பார்த்தான்
அவள் அப்படியே தூங்கி போயிருந்தாள் ... "இவளுக்கு என்னோட தோள் என்ன பஞ்சு மெத்தையா"? என்று திட்டிக்கொண்டே அவளை தூக்கி சோபாவில் போட போக அவள் அவனை நகர விடாமல் இன்னும் அவன் தோளில் புதைந்தாள்..
"இவ என்ன தைரியத்துல இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கறா?. என்னை கண்டு கொஞ்சம் கூட இவளுக்கு பயமே இல்லையா? ... அன்னிக்கே நான் இவகிட்ட சொன்னேன்ல நான் தினம் ஒரு பொண்ணோட அவுட்டிங் போறவன்னு இருந்தும் எப்படி இவளால் என்னோடு ஒரே ரூமில் இப்படி என்னோட தோளில் சாய்ந்து இருக்க முடிகிறது "என்று நினைத்தவன்.. அவள் தலையை வருடிகொடுத்தான்..
இருவரும் அப்படியே எவ்வளவு நேரம் இருந்தனரோ, போன கரண்ட்டும் வந்தது ... வெளியே மழையும் பேய் ஆட்டம் ஆடி தீர்த்திருந்தது...
இன்னொரு மழை வரதுக்குள்ள வீட்டுக்கு போய்டணும் என்று நினைத்தவன் அவளை எழுப்ப அவள் சிணுங்கிகொண்டே முகத்தை இன்னும் தோளில் அழுத்தினாள் அவளை சோபாவில் படுக்கவைத்தவன், இவன் எல்லா லைட் பேன்னையும் ஆப் பண்ணிவிட்டு வந்தவன்
"மிருணா எந்திரி போலாம்" என்றான்
அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க... அவளை வேகமா சத்தம் போட்டு எழுப்பினான் ...
அவள் அசைந்துகொடுப்பது போல தெரியவில்லை...".சரியான கும்பகரணி "என்று முனவிக்கொண்டே அவளை தூக்கிகொண்டு காருக்கும் போனான்..
அவளை காரில் பின்னாடி சீட்டில் படுக்க வைத்துவிட்டு அவன் காரை எடுக்க போக... தூக்கத்துல விழுந்துடானா என்ன பண்றது என்று மீண்டும் காரை நிறுத்திவிட்டு அவளை முன்னாடி சீட்டில் உக்காரவைத்தான்...
யாராவது இப்படி தூங்குவாங்களா. பொம்பள பிள்ளைக்கு அப்படி என்ன தூக்கம் கேக்குது ... நான் தூக்கிட்டு வந்ததுகூட தெரியாமல் இப்படி தூங்கறாளே நான் இவளை ஏதாவது பண்ணிருந்தாலும் இப்படிதான் தூங்குவாளா என்று பல எண்ணங்கள் மனதில் ஓட... ச்சி எப்படிலாம் யோசிக்கற என்று மனதை அடக்கிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்...
அவன் மனம் அடங்க மறுத்தது... மிருணாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான்.