கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 21

மித்ரன் மிருணாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான்...

அவள் அழகாக தூங்கிகொண்டு வந்தாள்....

கார் வீட்டை அடைந்ததும் காரை செட்டில் விட்டவன் , மிருணாவை மெதுவாக தூக்கிகொண்டு அவளது வீட்டிற்கு சென்றான்

மிருணாவை எதிர்பார்த்து காத்திருந்த வேணி, மித்ரன் மிருணாவை தூக்கிவருவதை பார்த்து கதவை முழுவதுமாக திறந்து வழி விட்டார்...

அவளை பெட்டில் படுக்க வைத்தவன் ... அவ என்று என்ன சொல்வது என்று தெரியாமல் மித்ரன் முழிக்கவும்

எனக்கு தெரியும் தம்பி அவளுக்கு இடின்னா பயம் என்றார்

ஹப்பா நம்ப எஸ்க்பிளைன் பண்ண தேவை இருக்கல என்று விட்டால் போதும் என்று அவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் ....

அங்கோ சொர்ணம் தன் கையில் போட்டிருந்த கட்டை பிரித்துவிட்டு கையை ஆட்டி, ஆட்டி பாட்டுபாடிகொண்டிருந்தார்.

ஏய் உன்னோட பேரன் வர நேரம்டி ஒழுங்க கட்டை மாட்டிகிட்டு உக்காரு என்றார் சொக்கலிங்கம்...

அன்று வந்தபோதே சொக்கலிங்கத்திடம் எல்லா
விசியத்தையும் சொல்லிவிட்டார் சொர்ணம் ...அவர் தெரிந்துகொண்ட ரகசியம் வரை எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்....

அதனால் அவர்களுடன் சொக்கலிங்கமும் கூட்டு சேர்ந்துகொண்டார்...

நீங்க வேற ஏங்க ? இந்த கட்டை ஒன்னு போட்டுக்கிட்டு என்னால எப்பயும் போல இருக்க முடியலைங்க என்றவர்.... கையை உதறி உதறி நெட்டை முறித்தார்... இதை எல்லாம் வெளியே சூவை கழட்டி கொண்டு மித்ரன் பார்த்துகொண்டிருந்தான்....

"மித்தி வந்துர போறாண்டி அப்புறம் நீதான் மாட்டிப்ப, சொன்னா கேளு" என்றார்

"அவன் வந்தா கார் சத்தம் கேக்கும்ல, அப்போ போய் மாட்டிக்கறேன் "என்று சொல்லிவிட்டு சோபாவில் படுத்து கொண்டார் ....

அவன் அவர்கள் இன்னும் பேசட்டும் என்று அமைதியாக வெளிய நிற்க, அதை அறியாத தாத்தா , ஏண்டி இப்படி அஜாக்கிரதையா இருக்கறையே இதனால ஏதாவது பிரச்சனை வந்தா பாதிக்க படறது மிருணாதானே என்றார்

பிரச்சனை எதுவும் வராதுங்க என்றவர் கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கீங்களா சும்மா நசநசன்னு பேசிக்கிட்டே மனுசியே நிம்மதியா கொஞ்சம் நேரம் படுக்கவிடுறிங்களா? என்றார்

இதற்கு எல்லாம் மிருணா தான் காரணம் என்று புரிந்துகொண்டான் அவனுக்கு உள்ளுக்குள் கோவம் அலைஅலையாக பரவ ஆரம்பித்தது ... வயசானவிங்கள வெச்சி என்ன வேலை எல்லாம் பார்த்துருக்கா பாரு அவளை" என்றவன்... இன்னும் என்ன என்ன பண்ணி வெச்சி தொலைஞ்சிருக்காளோ என்று நினைத்துக்கொண்டே உள்ளே போனான்...

அவன் வந்ததை பார்த்த சொக்கலிங்கம்... சொர்ணம். சொர்ணம் எந்திரிடி என்றார்

சூ கம்னு போயிருங்க என்று அவர் கையை தட்டி விட்டார் சொர்ணம்

பாட்டி என்றான்

அவன் குரல் கேட்டவர் சட்டென்று எழுந்து நிற்க பயத்தில் அவருக்கு உடம்பு ஆட்டம் கண்டது...

என்ன பாட்டி இதுலாம் ...

அது.. அது

ஒழுங்கா என்ன பண்ணுணிங்கனு உண்மையை சொல்லுங்க இல்லனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்றான்

பயத்தில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார் இல்லை உளறிவிட்டார் சொர்ணம்

இதை கேட்டதும் சொக்கலிங்கம் தலையில் கை வைத்துகொண்டு சோபாவில் உக்கார்ந்துகொண்டார்

அவ சொன்னானா உங்களுக்கு எங்க போய்ச்சி அறிவு ..... எல்லோரும் கூட்டு சேர்ந்துட்டு என்னை ஏம்மாதிருக்கீங்க என்றவன் அவளை என்ன பன்றேன்னு பாரு என்று மிருணாவை பார்க்க போனான்...

வேகமா வரும் மித்ரனை பார்த்த , வேணி ஏதும் புரியாமல் பார்க்க...

அவ எங்க எழுந்துட்டாளா? என்றான்

"இப்போதான் எழுந்து, பாத்ரூம் போயிருக்கா "என்றார்

அவன் கோவமாக அங்கும் இங்கும் நடக்க .... அவள் வெளியே வந்ததும் அவனை பார்த்தவள் இவன் இங்க வந்திருக்கானா என்று பார்த்துவிட்டு மித்ரனை பார்த்து "என்ன "என்றாள்

அவளை பார்த்தவன் கண் இமைக்கும் நொடியில், அவளை ஓங்கி அறைந்தவன் , " உனக்கு எவ்வளவு திமிறு இருந்தா பாட்டிக்கு கை உடைஞ்சிருச்சின்னு பொய் சொல்லி கட்டு போட்டிருப்ப, " என்றான் கோவமாக

வேணி அவன் அடிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ச்சியாக .... மிருணாவோ "அவன் வீடு வரை வந்திருக்கான் என்றால் விசியம் இல்லாமல் வந்திருக்க மாட்டான்" என்பதை தெரிந்து வைத்திருந்ததால் அவன் அடித்த அடியும் அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கவில்லை...

"மிஸ்டர் மித்ரன் உங்க கிட்ட வந்து அந்த கிழவிக்கு கை உடைஞ்சி போயிருச்சினு நான் சொன்னேனா?"??

"நீ சொன்னா என்ன அவங்க சொன்னா என்ன? .... அப்படி செய்ய சொல்லி நீதானே ஐடியா குடுத்த" என்றான்

அவள் நிதானமாக வார்த்தையில் அழுத்தம் கொடுத்து "நான் சொன்னா அவங்களுக்கு எங்க? போய்ச்சி அறிவு... நான் ஆயிரம் சொல்லுவேன் அதை எல்லாத்தையும் அவங்க செய்வாங்களா? "என்றாள்

"செய்யறதையும் செஞ்சிட்டு எப்படிடி உன்னால இப்படி பேசமுடியுது" என்றான்

"வாயில தானு சொன்னா நீங்க நம்பவா போறீங்க, மிஸ்டர் மித்ரன்.. அவங்க இந்த அளவுக்கு போயிருக்காங்க. அப்படினா அதுக்கு காரணம் நான் இல்லை, நீங்க தான்... நீங்க ஊருக்கு போறேன்னு சொன்னதால தான் அவங்க ஏதாவது செஞ்சாவது உங்களை போகவிடாம பண்ணனும்னு நினைச்சி என்கிட்ட கேட்டாங்க, நான் கையை உடைச்சி கட்டு போடலாம்னு தான் ஐடியா குடுத்தேன் அப்புறம் வயசானதேனு கொஞ்சம் ஆபஃர் குடுத்து வெறும் கட்டோட விட்டுட்டேன் ", என்றாள்...

அவள் ஆபஃர் என்றதும் அவன் இதழ்களில் புன்னகை வந்தது போல இருக்க , "அவனா சிரித்தான் இருக்காது "என்று பாட வேண்டும் போல இருந்தது மிருணாவிற்கு

"இனி இதுபோல ஏதாவது லூசு மாதிரி செஞ்சினா, அதை உன்னோட வெச்சிக்கோ சரியா அதை பெரியவிங்க மேல திணிக்க பார்க்கத" என்றவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்

அவன் தன்னை அடித்ததை பெரிதாக நினைக்காதவள், சிலை போல நின்ற வேணியிடம் "அம்மா பசிக்குதும்மா" என்றாள்...

அவளுக்காக சமைத்த சப்பாத்தியை எடுத்து வந்து கொடுத்தவர்...

"ஏன்? மிரு நான் ஒன்னு கேக்கவா? " என்றார்..

"என்ன கேக்க போறன்னு தெரியும்... அதுக்கு நான் பதில் சொல்லனும்னா முதல என்னோட அப்பா யார்னு நீங்க எல்லோரும் சொல்லணும்.."என்றவள் .

"இங்க இருக்கற பெரியவிங்க எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கறேன்" என்றாள் அவள் அழுத்ததோடு......

"நான் அதை பத்தி கேக்க கூடாதுனு உங்கிட்ட சொன்னேன்ல மிரு மறுபடியும் மறுபடியும் எதுக்கு உனக்கு இந்த கேள்வி."...

"அம்மா நான் அவரை ஆசையா அப்பான்னு கூப்பிட கேக்கல ..... ஆன ஒரு தடவை நான் அவர் யாருனு தெரிஞ்சிக்கனும்னு ஆசைபடறேன் " என்றாள் பிடிவாதமாக,

"அதை பத்தி பேசறதா இருந்தா நீ என்கிட்ட பேசவே வேண்டாம்" என்றார்

"அப்போ எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று தட்டை தள்ளிவிட்டு சென்றவளை பார்த்து வேணி கவலையுற்றார்..

கோவமாக போன மிருணா வெளியே போய் நின்றுகொண்டாள்...

பலத்த மழை பெய்து முடித்ததும் அதன்பின் சாரல் மழையாக துவ ஆரம்பித்தது....

அப்போதுதான் கம்பெனியில் இருந்து வந்த கதிர். கருணா இருவரும் காரை விட்டு இறங்கி வந்தனர்

அவரை பார்த்ததும் இவள் கேட்கவேண்டும் என்று நினைத்த கேள்வியை கேக்க அவரை நோக்கி போனாள்...

அவளை பார்த்த கதிர் என்ன மிரும்மா இப்படி மழைல நிக்கற, என்று சொல்ல. அவர் பின்னால் வந்த கருணா... ஏய் எருமை இன்னிக்கு இடி இடிச்சிதே... மழை வரதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டியா,? என்றான்

"இல்லை மழையப்ப கம்பெனிலதான்" இருந்தேன்

"தனியாவாடி, நம்பவே முடியலைடி ... பயப்படாம இருந்துட்டியா?" என்றான்

"கூட உன் அண்ணன் இருந்தான்" என்றவள் "நான் மாமாகிட்ட பேசணும் கொஞ்சம் நேரம் உன்னோட திருவாய்யை வெச்சிட்டு கம்னு இரு", என்றவள் கதிரிடம் "மாமா நான் காலேஜ் முடிச்சதும் என்னோட அப்பாவை காட்றனு சொன்னிங்கள, நான் மறந்துட்டா நீங்களும் சொல்ல மாட்டிங்களா"? என்றாள் கோவமாக

"ஏன் திடீர்னு இவ்வளவு கோவ"ம் என்றவர்.... "நீ கேக்கல நான் சொல்லல"

நான் கேக்கலைனா நீங்க சொல்லிமாட்டீங்களா மாமா என்றாள் கவலையாக

சரி நாளைக்கு சொல்றேன் நீ நாளைக்கு நம்ப வீட்டுக்கு வந்துடு

உங்க வீட்டுக்கு எப்படி நான் வருவேன் என்றாள்

உனக்கு தேவைன்னா நீ வந்துதான் ஆகணும் ..... என்றார் கதிர்

கருணா சுவாரசியமாக இருவரையும் பார்க்க ... இங்க என்ன வித்தையா காட்டிட்டு இருக்கோம் இப்படி வேடிக்கை பார்க்கற என்றவள்... நான் வர மாட்டேன் மாமா என்றாள் புடிவாதமாக

நீ வந்துதான் ஆகணும் இல்லனா கண்டிப்பா நான் சொல்லமாட்டேன் என்றவர் என்னைய விட்டா உனக்கு சொல்றதுக்கு ஆள் இல்லை என்றார்

நேரம் பார்த்து பழி வாங்குறீங்களா மாமா ....


நான் அப்படி சொல்லலையே , நானும் எவ்வளவு நாள் உள்ளே வானு கூப்பிட்டுட்டே இருக்கோம் ஆன நீ உன்னோட பிடிவாததுல வரல அதான் நான் இப்படி சொன்னேன் உனக்கு விசியம் வேணுமா நீ வந்துதான் ஆகும் என்றவர் உள்ளே சென்று விட்டார்

கருணா மட்டும் மிருணாவை பார்த்துக்கொண்டே இருந்தான்

உனக்கு என்னடா என்றாள்

நீ உள்ளே வர போரிலே அந்த சந்தோசம் என்றான்

உன்னை கொல்ல போறேன் பாரு ஒழுங்கா ஓடிடு என்றவள் ஆஆஆஆ என்று கத்திகொண்டே காலை தரையில் உதைத்தாள்

அதில் பக்கதில் இருந்த தண்ணீர் எல்லாம் கருணா மீது பட அட எருமை எருமை நீயலாம் பொண்ணே இல்லை என்றவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்

மிருணாவிற்கு ஒரே குழப்பமாய் இருக்க என்ன பண்ணலாம் என்று மண்டையை போட்டு குழப்பிக்க ஆரம்பித்தாள்




மிருணா மித்ரன் வீட்டிற்குள் போவாளா? இல்லையா? நாளைக்கு பார்க்கலாம்
 
Top