கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 22

அடுத்தநாள் எப்போது வரும் வரும் என்று இரவு முழுவதும் தூங்காமல் நடந்துகொண்டே இருந்தாள் மிருணா...

அவள் நடப்பதை வேணி பார்த்தாலும் 'ஏன் இப்படி நடக்கற என்று அவர் கேட்கவில்லை

விடிந்ததும் முதல் ஆளாக ரெடி ஆனவள் கோவிலுக்கு போனாள்... மிருணா

அங்கு சாமியிடமோ பெரிய அப்ளிகேஷன் ஒன்றை போட்டாள், மிருணா

'சாமி எனக்கு எங்க அப்பா இவரா இருப்பாரோனு ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு ஆனா அவருக்கு ஏற்கனவே பேமிலி இருக்கு... சில விசயங்களை என்னையும் அறியாமல் நான் செஞ்சிருக்கேன், என்னக்கு என்னோட மனசுக்கு அது தப்புனு தெரிஞ்சாலும் மாத்திக்க முடியலை..... ஆன நான் நினைக்கவர் மட்டும் அப்பாவா இருக்கவே கூடாது 'என்று வேண்டியவள்... மித்து ஊருக்கு போகவிடாம பண்ணதுக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ... தேங்க்ஸ் சாமி... அவன் வழி மாறி போனதுக்கு முக்கியமான காரணம் நான்தானோனு எனக்கு கவலையாவே இருக்கு. அவன் ரொம்ப நல்லவன் தான் ஏதோ அவன் வளந்த சூழ்நிலையால தான் தப்பா போய்ட்டான் ...நேத்துக்கூட பார்த்தில என்கூட தனியா இருக்கற வாய்ப்பு கிடைச்சிது அப்போகூட அவன் எவ்வளவு நல்லபிள்ளையாய் இருந்தான் எத்தனை படம் பார்த்துருப்பேன். இப்படி மழை வரும் போது ஹீரோ ஹீரோயின் தனியா இருந்தா அவங்களுக்குள்ள ஏதாவது நடந்துரும்னு என்று பேசிக்கொண்டே போனவள் நான் இன்னிக்கு சீக்கிரம் போகணும் நாளைக்கு வந்து நம்ப டிஸ்கஸ் பண்ணுவோம் என்று சொல்லிவிட்டு கோவிலை சுத்தி வந்தாள் ... வேகமாக வீட்டிற்கு பறந்தவள் கேட்டின் உள்ளே நுழையும் போது மித்ரனிடம் மாட்டிகொண்டாள்

"ஏய் நீ ஆபிஸ் வரலையா?" என்றான் அவளை பார்த்து

"ஹாஆ எனக்கு காச்சல். என்று வேகமாக" சொன்னவள் "எனக்கு காச்சல் அதான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் "என்று சொங்கி மாதிரி மெதுவாக சொன்னாள் ...மனதுக்குள் 'நேத்து யாரடி நீ மோகினி படம் பார்த்தனாலே அந்த எபக்ட்' என்று நினைத்துகொண்டாள்

"எந்த ஹாஸ்பிடல்ல உனக்கு விபூதி தராங்க" என்றான் காரில் உக்கார்ந்தவாறே தலையை மட்டும் வெளியே நீட்டியபடி

"அது ரொம்ப காச்சல் வந்துடுச்சா அதான் ஊசிபோட்டுட்டு சீக்கிரம் சரியா போகணும்னு பக்கதுல கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்" என்றாள் 'ஐயோ எனக்கு கூட பொய் சொல்ல வருதே' என்று நினைத்தவளின் 'மனசாட்சி அடியே நீ பொய்யே பேசாத மாதிரி சொல்லாத' என்றது ...

"அப்போ இன்னிக்கு ஆபிஸ்க்கு மட்டம் போட்டுட்டியா? " என்றான்

"மதியமா வரட்டுமா? என்றாள் மீண்டும் காச்சலில் விழுந்தவர்கள் பேசமுடியாமல் பேசுவார்களே அதுபோல

அங்க வந்துமட்டும் நீ வேலை செஞ்சி கிழிச்சிருவ ஒன்னும் வேண்டாம் வீட்டுலையே இரு" என்று சொன்னவன் கிளம்பிவிட....

இவள் உள்ளே சென்றாள்...

அவள் நேராக போனது மித்ரன் வீட்டிற்குதான்

மெதுவாக சுத்தி சுத்தி பார்த்தவள் , வாசலில் யாரும் இல்லை என்று உள்ளே போக பார்க்கவும் "அங்கையே நில்லு "என்று உள்ளிருந்து கதிரின் குரல் கேட்டது

"என்னப்பா வர சொல்லிட்டு இப்போ இப்படி சொல்றாங்க "என்று நினைக்கவும் சாந்தி ஆரத்தி தட்டுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது

"எதுக்கு அத்தை இது எல்லாம்" என்றாள்

"உங்க மாமாவை கேளும்மா எதா இருந்தாலும்" என்றவர் புன்னகையுடன் அவளுக்கு ஆரத்தி சுத்திவிட்டு அதை கொட்டுவதற்கு வெளியே போக மற்றவர்கள் அவளை உள்ளே அழைத்து போனார்கள்

அதுவரை அந்த வாசலில் இருந்து வீட்டை பார்த்திருக்கிறாளே , தவிர உள்ளே கடுகளவு கூட எட்டி பார்த்தது இல்லை. இன்று தான் முதன் முதலில் வருகிறாள்.....

வெளியே இருந்து பார்க்க இது பெரிய வீடு அவ்வளவு தான் ஆனால் உள்ளே வந்து பார்த்தால் ஒரு குட்டி அரண்மனை போல இருந்தது ... ஹாலில் நின்று சுத்தி பார்த்தவளுக்கு தலை சுத்துவது போல இருக்க... கதிரை பார்த்தவள் "மாமா நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க நான் கிளம்பறேன்" என்றாள்....

"இரும்மா வீட்டை சுத்தி பாரு" என்றவர் கருணாவை பார்க்க கருணா மிருணாவை அழைத்துகொண்டு போய் வீட்டை சுத்தி காட்டினான்

"ஏண்டா கதிர் இவ்வளவு நாள் அவன் அப்பா யாருனு சொல்லாம இப்போ எதுக்கு சொல்லற" என்றார் சொக்கலிங்கம்

"உங்களுக்கு அது யாருனு தெரியும்ல அப்பா" என்றவர் ... "நான் இவ்வளவு நாள் சத்தியதுக்கு கட்டுபட்டு இருந்தேன் இப்போ அப்படி எதுவும் இல்லைல " அதான் என்றார்

அவர் பேசிக்கொண்டிருக்க ... ஆபிஸ் போன மித்ரன் திரும்பி வந்தான் ....

"என்னப்பா எதுக்கு அவசரமா வர சொன்னிங்க" என்றவன் மேலே இருந்து வரும் மிருணாவை பார்த்து இவ உள்ளே வர மாட்டாளே'? என்று நினைத்தவன் ஆச்சர்யமாக பார்த்தான்...

என்ன? மிரு வீட்டை சுத்தி பார்த்துட்டியா" என்றார்

"பார்த்துட்டேன் மாமா "என்றவள் அவர் சொல்ல போகும் பதிலுக்காக ஆவலாக காத்திருந்தாள்

"உன்னோட எதிர்பார்ப்பு எனக்கு புரியுது, இரு இன்னும் சிலர் வர வேண்டி இருக்கு" என்றார்

"இன்னுமா ! யார்டா அது சீக்கிரம் வந்து தொலைங்களே" என்று கத்த வேண்டும் போல் இருந்தது மிருணாவிற்கு....

அப்போது சக்திவேல் அவரது மனைவி பத்மா. அவரது ஒரே மகன் கண்ணன் எல்லோரும் வந்தனர்....

எல்லோரையும் பார்த்தவள்' இந்த மாமா எதுக்கு ஊரையே கூப்பிடறாரு நான் மட்டும்தானே கேட்டேன் இவங்கனு சொல்லிட்டு போக வேண்டிதானே... இதுக்கு போய் விழா கொண்டாடற மாதிரி எல்லோரை கூப்பிட்டு வைக்கறாரு,' என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்

அடுத்து வேணி வரவும்" எல்லோரும் உக்காருங்க "என்ற கதிர் பேச ஆரம்பித்தார்

"மிருணா வளர்ந்துட்டா அவளுக்கு அவ அப்பா யாருனு தெரிஞ்சிக்கணும்னு ஆசையைப்படர " என்று நிறுத்த மிருணாவிற்கு கோவம் வந்துவிட்டது...' இப்படி ஊரை கூட்டி சொல்ற அளவுக்கு இது ஒன்னும் நல்ல விசியம் இல்லையே? 'என்று நினைக்க கோவத்தில் மூக்கு எல்லாம் விடைத்து நின்றவள் "மாமா "என்றாள்

"இரும்மா நான் பேசிடறேன் "என்றவர் சொல்லுங்க மச்சான் என்று சக்திவேலை பார்த்தார்...

அவர் கண்களில் கண்ணீர் வழிய மிருணாவை பார்த்தவர் ... "அன்னிக்கு உன்னை அப்பானு என்னை நினைச்சுக்க சொன்னேன்.. அப்போ என்னால நினைக்க மட்டும் தான் சொல்ல முடிஞ்சது..... இன்னிக்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றவர்" நான்தான் உன்னோட அப்பா" என்றார்

அங்கிருந்த சிறியவர்கள் எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்க....பெரியவர்கள் எல்லோரும் அவர்கள் இதை எப்படி எடுத்துக்க போறாங்களோ? என்று பயத்துடன் பார்த்தனர்...

மிருணா வேணியை பார்த்து அப்படியா? என்று தலை அசைக்கவும் அவர் ஆமா !என்று கண்களில் நீர் வழியா தலையை அசைத்தார்....

அவரை பார்த்தவள் அவரிடம் 'என்ன என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று மனதிற்குள் ஆயிரம் முறை ஒத்திகை பார்த்துவிட்டு வந்தது எல்லாம் இப்போது வெளியே வரமால் தொண்டைகுழியில் நின்றது.... மிருணாவிற்கு

எல்லோரும் மிருணாவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்....அவள் ஏதாவது சொல்லுவாள் என்று பார்க்க... இவர்கள் எல்லாம் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து எதிர்ப்பு வந்தது...

"என்ன விளையாடுறிங்களா? .... அம்மா இவர் என்ன பேசிட்டு இருக்கார்... நீயும் அதை கேட்டுட்டு அமைதியா இருக்கற... நீ இவ்வளவு அமைதியா இருக்கிறனா உனக்கு விசியம் ஏற்கனவே தெரியும் போல " என்றவன்

"வா அத்தை வீட்டுக்கு போகணும்னு 2பேரையும் கூட்டிட்டு வந்துட்டு இப்போ இவ எனக்கு தங்கச்சிங்கறிங்க ..... என்ன நடக்குது இங்க... உங்களை என்னோட ரோல்மாடலா நினைச்சிட்டு இருக்கேன் ஏன் தெரியுமா? எனக்கு தெரிஞ்சவரைக்கும் உங்ககிட்ட ஒரு தப்பு கூட கண்டுபிடிக்க முடியாது... ஆனால் அதுக்கு எல்லாம் சேர்த்து வெச்சி நல்லா செஞ்சிட்டிங்க " என்றான் கண்ணன்

கண்ணனின் கேள்விக்கே அங்கு பதில் இல்லை யெனில் மிருணாவின் கேள்விக்கு எப்படி பதில் இருக்கும்

"என்ன நடந்ததுன்னு சொல்றேன் இதுக்குமேல என்ன கேள்வி கேக்கணுமோ கேளுங்க"... என்றார்

மிருணா எதுவுமே பேசவில்லை அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்திருந்தவள் அவர் சொல்ல போவதை கேக்க தயாரானாள்.

சாந்திக்கு 2வது குழந்தை பிறந்து எங்கவீட்டுல 7மாசம் இருந்துட்டு இங்க வந்த நேரம் என்று அவர் தொடங்க ..... வாங்க நம்மளும் அவங்க கதைக்கு போவோம்

வேணி அப்போது 20வயது பெண்.... சாந்தி தேவையான எல்லா வேலைகளையும் அவள் தான் செய்துகொண்டிருந்தாள்.... சாந்தி கருணாவை பார்த்துகொள்ள வேண்டும் என்பதால் வேணி எப்போதும் மித்ரனுடனே இருப்பாள்.... அவனை குளிப்பாட்டுவது , சாப்பாடு ஊட்டுவது என்று இன்னொரு தாயாக அவனை பார்த்துகொண்டாள்...

தங்கையும் அவர் குழந்தைகளையும் பார்க்க சக்திவேல் அடிக்கடி கதிரின் வீட்டிற்கு வருவார் ... ஒரு நாள் பக்கத்து ஊரில் சொந்தகார கல்யாணத்திற்கு எல்லோரும் அங்கு சென்றிருந்தனர்

மித்ரனை வேணியிடம் விட்டுவிட்டு சாந்தியும் கூட கல்யாணம் சென்றிருந்தார்...

அன்று மாலையில் இருந்தே வேணிக்கு காச்சல் அடிக்க ஆரம்பித்தது.... லேசாகதானே இருக்கிறது சரியாக போய்விடும் என்று நினைத்திருக்க நேரம் ஆக ஆக காச்சல் அதிகரிப்பது போல் தெரியவும் மித்ரனை வைத்துகொண்டு எங்கும் போக முடியாது என்பதால் பொறுத்துகொண்டாள்

இரவு 7மணி இருக்கும் போது மித்ரன் தூங்கி தூங்கி விழவும், அவனை தூக்கிகொண்டே போய் சாப்பாடு ஊட்டிவிட்டி படுக்கவைத்தாள், அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சென்று கதவை திறந்தவள் அங்கு இருந்த நபரை எதிர்பார்க்கவில்லை . அங்கு குடிபோதையில் சக்தி நின்றுகொண்டிருந்தான்

வாங்க ஐயா .... எல்லோரும் கல்யாணத்திற்கு போயிருக்காங்க .... வர லேட்டாகும் என்றாள் வேணி

அப்போ யாரும் இல்லையா என்று கேட்டவனின் வாய் குழறியது அங்கிருந்து சோபாவில் உக்கார்ந்தான்...

ஐயோ இவர் வேற இப்படி வந்துருக்காரே எப்படி நம்ப போறது என்று பயந்துகொண்டிருந்த வேணியின் உடல் அனல் போல கொதிக்க ஆரம்பித்தது ...

அவளை பார்த்தவன் மெதுவாக அவளிடம் வரவும், "என்ன? ஐயா, எதும் பண்ணிடாதீங்க ஐயா " என்று கத்திகொண்டே நகர்ந்து நகர்ந்து போனாள், பயத்துடன்.

ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியாமல் போக, வேணியின் தாவணி சக்தியின் கையில் இருந்தது...

அவள் பலம் கொண்ட மட்டும் போராடினாள், ஆனால் காச்சல் கண்ட உடம்பு என்பதால் அவளால் ஒரு எல்லைக்கு மேல் போராட முடியாமல் போக, சக்திவேலின் பசிக்கு இரையானாள் வேணி......

எல்லாம் முடிந்ததும் சக்திவேல் அவன் வீட்டிற்கு சென்றுவிட ... வேணிக்கு மயக்கம் வருவதுபோல இருக்கவும் அப்படியே கீழே சரிந்தவளை மித்ரனின் கத்தல் சத்தம் சுயநினைவுக்கு கொண்டு வர எழுந்து போய் குளித்து வந்தவளால் ஏனோ நடக்கவே முடியவில்லை உடல் அசதில் உயிர் போகும் வலி உண்டானது வேணிக்கு

அடுத்த நாள் போதை தெளிந்த போது சக்திவேலுக்கு எல்லாவிசியங்களும் நியாபகம் இல்லை என்றாலும் வேணியை ஆட்கொண்டது நியாபகம் இருந்தது......

அவளை தேடி போனவனுக்கோ அதிர்ச்சி காத்திருந்தது..
 
Top