கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 23

அடுத்த நாள் நினைவு வரவும் வேணியை பார்க்க போன சக்திக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது

வேணிக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமல் போய் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருந்தது

"என்ன ஆச்சி" என்று சாந்தியிடம் சக்தி கேட்கவும் .

"நேத்து ரொம்ப காச்சல் அண்ணா . நேத்து நாங்க கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து பார்க்கும் போது சுயநினைவு இல்லாமல் இருந்தாள் அதன்பிறகு டாக்டர் வந்து பார்த்துட்டு ட்ரிப்ஸ் கட்டாயமாக இறக்கியே ஆகவேண்டும் "என்று சொன்னார்... என்றாள்

'ஐயோ தன்னால் தான் இவளுக்கு இப்படி ஆனதோ? ' என்று நினைக்க அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை...

மனமோ' உன்னால் தான் இப்படி ஆனாளா? இல்லை ஏற்கனவே காச்சல் உள்ள பிள்ளையைதான் நீ இப்படி நாசம் பண்ணிருக்கியா? 'என்று கேக்கவும், 'தன்னால் தான் காச்சல் வந்தது ' என்று நினைத்த போது இருந்த வேதனையை விட , 2வதாக காச்சல் வந்த பிள்ளையை தான், நாசம் செய்திருக்கிறேன்' என்று நினைக்கும் போது சக்திக்கு யாரோ ? இதயத்தை ஈட்டி கொண்டு குத்தி குத்தி எடுப்பது போல் இருந்தது...

'உனக்கு இந்த தண்டனை பத்தாதுடா ஆதரவற்ற பிள்ளை என்று தெரிந்ததும் தான் குடிபோதையில் இப்படி நடந்துருக்க... குடித்தால் எதுவும் தெரியாதா??என்ன, அப்படி என்றால் வேணிக்கு பதில் அந்த இடத்தில் சாந்தி இருந்திருந்தாலும் இதை தான் செய்திருப்பியா? ....இது எல்லாம் நீ செய்யும் தப்புக்கு யூஸ் பண்ணிக்கிற காரணம்' என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக்கொண்டாலும் மனம் முழுக்க வேணியின் நிலையிலையே நின்றது...

அடுத்து வந்த தினங்களில் சக்திவேல் தூக்கமால் , சாப்பிடாமல் , . பைத்தியம் பிடித்தவன் போல இருந்தான் ...

வேணி ஒரு அளவுக்கு தேறி வந்ததும் அவளை பார்க்க போனான் ..

அப்போது அவள் இவனை பார்க்க மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி கெஞ்சி அவள் பின்னாலையே சுத்தி எப்படியோ பேச அனுமதி வாங்கியவன், வீட்டின் பக்கதில் இருந்த வைக்கோல் போரின் பின்னால் சென்று பேசினர்

"என்ன வேணும் உங்களுக்கு ? எதுக்கு? இப்படி என் பின்னாலையே சுத்தறீங்க , யாரவது பார்த்தால் என்ன நினைப்பாங்க "என்றாள்

"வேணி நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு என்னை மன்னிச்சுடு" என்று அவள் காலில் விழ போனவனை" ஐயோ ! என்ன பண்றீங்க? " என்று விழவிடாமல் செய்து அவள் நகர்ந்துகொண்டாள் ...

"குடிபோதைல உன் வாழ்க்கையே அழிச்சிட்டேன் , என்னை மன்னிச்சிரு" என்று கதறி அழுதான் சக்தி

"இங்க பாருங்க .... உங்க மேல எனக்கு பயங்கரமான வெறுப்பு இருக்கு , அதுக்காக இப்போ நீங்க வந்து மன்னிப்பு கேட்டாளோ ? இல்லை நான் உங்களை மன்னிச்சாளோ ? என்னோட கற்பு திரும்ப வந்துடுமா ? சொல்லுங்க "என்று அவள் மண்டியிட்டு அழுகவும் .....

சக்திவேல்லுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.. இவர்கள் இருவரும் இங்கே வருவதை , கதிர் பார்த்துவிட.. இவங்க ரெண்டு பேரும் எங்க போறாங்க, என்று மெதுவாக வந்து போருக்கு பின்னால் நின்று பார்த்தவனுக்கு சக்திவேல் சொன்னது அனைத்தும் அதிர்ச்சியை உண்டாக்கியது....

இருவரும் அழுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாமல்" என்ன நடக்குது இங்க"? என்று கேட்டான்

அவன் குரல் கேட்டதும் பதறி அடித்து எழுந்த வேணி...." ஐயா" என்றாள்

"உங்க ரெண்டு பேரையும் தான் கேக்கறேன், என்ன நடக்குது இங்க? என்றான் கோவமாக

சக்திவேல் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்கவும், கதிர் அவனை அடி வெளுத்து வாங்கிவிட்டான் .... "அவ எங்க வீட்டுல வேலைல இருக்காங்கறதுக்காக உனக்கு என்ன கில்லு கீரையா? " என்றவன் "எனக்கு தங்கச்சி மாதிரி டா ! என்று சொல்லி சொல்லி அடிக்கவும் வேணி தடுத்து "விட்டுடுங்க ஐயா , இனிமேல் அழுது புலம்பி , அடிச்சினு , எது பண்ணாலும் நான் இழந்தது திரும்ப வர போறது இல்லை... என்னோட தலை எழுத்து வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கனும்னுனு இருந்தா? அதை மாத்த முடியாதுல" ... என்றாள்...

"இந்த சாக்கடையே நினைச்சிட்டு உன்னோட வாழ்க்கையை நீ கெடுத்துக்காத ....உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சிக்குடுக்கறேன்" என்றான் கதிர்

"அதை அப்புறம் பார்க்கலாம் ஐயா, என்னோட மனதுல இருக்கற காயம் ஆறுனதுக்கு அப்புறம்" என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அதன்பின் வந்த காலங்களில் வேணி கற்பம் தரிக்கவும் சொர்ணம் ஆடி தீர்த்துவிட்டார் ...

அப்போது சாந்திக்கு சந்தேகம் வந்து வேணியை கேக்கவும், வேணி ஒரே முடிவாக யார் கேட்டாலும் என் பதில் இதுதான் சொல்லமாட்டேன் என்பதுதான் என்று அழுத்தி சொல்லவும் , சாந்தி கதிரிடம் சொல்லி புலம்பினாள்....

"எல்லாத்துக்கும் உன் அண்ணாதான் காரணம் "என்று கதிர் சாந்தியிடம் சண்டை போடவும் அடுத்தநாளே அதைபத்தி கேக்க சக்திவேலின் வீட்டிற்கு சென்றாள் சாந்தி

அங்கு சக்திவேலிடம் சாந்தி சண்டைபோட்டிக்கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த அவர் மனைவி பத்மாவிற்கும் தெரிந்துபோனது விசியம்...

"என்னடி சொல்லற? இவரா? இப்படிபண்ணுனாரு .... என்று கேட்டு அதிர்ச்சியில் பத்மா அப்படியே மயங்கிவிழுந்தார்....

அவருக்கு மயக்கம் தெளியவைத்து எல்லாம் விசியதையும் சாந்தி சொல்ல, பத்மா சக்திவேலை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்....

அதன்பின் 5பேரும் ஒரு மீட்டிங் போட்டு என்ன செய்யலாம் என்று முடிவு செய்தனர்...

"தெரிந்து நடந்ததோ? தெரியாம நடந்ததோ ? என் வாழ்க்கை கெட்டு போயிடுச்சி".. "இதை காரணம் காட்டி இவங்க வாழ்க்கையையும் நான் கெடுக்க விரும்பல "என்றாள் வேணி

"அப்போ இந்த கருவை கலைச்சிட்டு வா , உனக்கு புதுவாழ்க்கை துணையை ஏற்படுத்தி கொடுக்கறேன் "என்றான் கதிர்

"இல்லை ஐயா , அது சரியா வராது ..... நான் செஞ்ச பாவத்துக்கு ஒருபோதும் இந்த கருவை அழிக்கமாட்டேன்" .... "என்னோட வாழ்க்கையே இந்த குழந்தைதான்...நான், என் குழந்தை இதுதான் என் உலகம், எங்க உலகத்துக்குள்ள யாருக்கும் அனுமதி இல்லை ,"என்றாள் வேணி சக்திவேலை பார்த்து....

"இதனால நீ இதை சமூகத்துல எவ்வளவு பிரச்சனையை சந்திக்கனும்னு தெரியுமா? வேணி .. அவர் சொல்ற மாதிரி நட" என்றாள் சாந்தி

"இல்ல சின்னம்மா , நான் முடிவு பண்ணிட்டேன், இனி என்னோட கருத்துல எந்த மாற்றமும் இல்லை, என்றவள் கதிரை பார்த்து "எனக்கு ஒரு உதவி செயிரிங்களா? ஐயா" என்றாள்

"என்ன சொல்லு" என்றான் கோவமாக

"என்ன பிரச்சனை நடந்தாலும் என்னை வீட்டை விட்டு அனுப்பிற மாட்டீங்களே?" .... என்றவள் "இந்த விசயம் யாருக்கும் தெரியகூடாது ...4பேரும் சத்தியம் பண்ணுங்க" என்றாள்

"நாளைக்கு உன் குழந்தை வந்து கேக்குமே? அப்போ என்ன சொல்லுவ? " என்றாள் சாந்தி...

"அப்பா செத்து போய்ட்டார்னு சொல்லி வளர்த்துவேன் சின்னம்மா "

அப்படி எல்லாம் பண்ண கூடாது..... இது பொண்ணா இருந்தா சமூகத்துல எவ்வளவு பிரச்சனை தெரியுமா? வேணி, நீ விளையாட்டுதனமா யோசிக்கற, எதையா இருந்தாலும் சமாளிச்சிடலாம்னு. அப்படி பண்ண முடியாது புரிஞ்சிக்கோ..., நீ ஒன்னும் இயேசு இல்லை, கண்டவங்களுக்காக சிலுவை சுமக்க ... உன்மேல எந்த தப்பும் இல்லாத போதே நீ உன்னோட வாழ்க்கையை பண்ணையம் வச்சிட்ட...ஆனா எல்லாம் தப்பும் பண்ண இவன் சும்மா தானே நிக்கறான் ", என்றாள் சாந்தி

"சாந்தி சொல்றது சரிதான் நான் பண்ண தப்புக்கு நான்தான் தண்டனை அனுபவிக்கனும்.... உன்னை கல்யாணம் பண்ணி என்னோட அழைச்சி போறேன்" என்றான் சக்தி

அப்போது உயிர் போகும் வலியோடு பத்மா, சக்தியை பார்த்தாள்

அதை பார்த்த வேணிக்கு. வேதனையாக இருந்தது....

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியாக சொல்ல கடைசியில் வேணி... "எனக்கு கல்யாணமும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம் இப்படியே இருக்கவிட்டா உயிரேடவாது இருப்பேன் . இல்லனா? எங்கையாவது போய் செத்து தொலைஞ்சிடுவேன்" என்று கதறினாள்...

"சரி நீ இப்படியே இரு"... என்று கதிர் சொன்னதும் "அப்போ எல்லோரும் சத்தியம் பண்ணிகுடுங்க இந்த விசியதை பத்தி எப்போமே யாருக்கும் சொல்லமாட்டேனு" என்றாள் வேணி

பெண்கள் இருவரும் சத்தியம் பண்ண, சக்திவேல் பண்ண வரும் போது கையை எடுத்து கொண்டாள் வேணி..

"நீங்க உங்க மனைவி, தங்கச்சி மேல பண்ணுங்க" என்றாள்

அவனை தொடக்கூட விடாத வேணியை பார்க்கும் போது பத்மாவிற்கு ஒரு நம்பிக்கை வந்தது இது சூழ்நிலையினால் ஏற்பட்ட தவறு... இந்த தவறு இனி தொடராது என்று நினைத்தவளுக்கு வேணியின் மீது மதிப்பு உண்டானது....

கதிர் மட்டும் சத்தியம் பண்ணாமல் நிற்கவும் "என்ன ஐயா யோசிக்கறீங்க.? ..பண்ணுங்க" என்றாள்

"நான் சத்தியம் பண்றேன் ஆனால் சில கண்டிஷனோட பண்றேன் அதுக்கு சம்மதமா? "

"என்ன கண்டிஷன்" என்றனர் மற்றவர்கள்

பிறக்கற குழந்தை, பெண்ணா இருந்தா? அந்த குழந்தை என்னோட பசங்கள ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்.... அப்படி கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அவளுக்கு இவன் தான் அப்பான்னு சொல்லிடுவேன், அதுவே பிறக்கிறது ஆணா இருந்தா? .... சக்திவேல் அவனுடைய சொத்துல பாதியை குழந்தை பேர்ல எழுதி வைக்கணும் . அப்பவும் பையனுக்கு 18வயசான, இவன்தான் அப்பான்னு நான் சொல்லிடுவேன், இதுக்கு சம்மதமா? என்றார் கதிர்

"எதுக்கு ஐயா இதுலாம், அப்புறம் சொத்துக்காக தான் . இதுலாம் நான் பண்ண மாதிரி ஆகிடாதா? .. ஊர் உலகம், என்னை தப்பா பேசாத அதுதான் உங்களுக்கு வேணுமா? .... என்றாள் கண்ணீருடன்

"உனக்கு புரியலை, கிறுக்கி மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க . அந்த குழந்தைக்கு 18வயசாகறதுக்குள்ள நீ எவ்வளவு கொடுமையையும், கஷ்டத்தையும் அனுபவிக்கணும்னு உனக்கு தெரியுமா? ... ஏன் வெளிய போற, உள்ளேயே என்னோட அம்மாவே உன்னை உயிரோட கொல்லுவாங்க.... இதுலாம் எதுக்கு பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? என்றான் கதிர்

"அப்போ நான் சாகறதை தவிர வேற வழி இல்லை" என்றாள் வேணி

"என்ன மிரட்டி பாக்கறியா? சரி போய் சாவு, உன்னோட சாவுக்கு இவன் தான் காரணம்னு நான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணி உள்ளே தள்ளறேன், இவன் குடும்பம் நாசமா போகட்டும், அப்போ உனக்கு சந்தோசம் தானே? என்றான் கதிர்

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க ... "சக்தி செய்ங்க மாப்பிள்ளை எனக்கு அதுதான் தண்டனை "என்றான்

"இல்லை வேண்டாம் ....நீங்க சொல்ற மாதிரியே செய்ங்க "என்றாள் வேணி வெறுப்பாக....

அதன்பிறகு அவன் சொன்னதை அனைத்தையும் சொல்லி சத்தியம் பண்ணிகொடுத்தான் கதிர்...


வீட்டுக்கு வந்ததும் சாந்தி "என்னங்க? இப்படி ஒரு வாக்கு குடுத்துட்டீங்களே? ... உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிப்பாங்களா? அதும் நம்ப வீட்டுல வேலைக்கு இருக்க பொண்ணுனு அத்தை ஏற்கனவே அவளை எவ்வளவு கஷ்டபடுத்துறாங்க.... இதுல போய் நீங்கசொன்னதுக்கு சம்மதம் சொல்லுவாங்களா? " என்றாள்

"உனக்கு ஒன்னு தெரியுமா? ... வேணி நினைச்சிருந்தா இந்நேரம் உன்னோட அண்ணனை அவ வசத்துக்கு கொண்டுவந்து உன்னோட அண்ணியை வெளியே அனுப்பியிருக்கலாம் ....அதுக்கு உங்க அண்ணாகிட்ட இருக்கற காசு பணமே போதும் .."

"ஆனா அவ அப்படி பண்ணாம ... அவ வாழ்க்கையை கெடுத்துகிட்டு இருக்கா, இதுக்கு அவ நல்ல மனசுதான் காரணம்.... அவ இப்படி ஆனதுக்கு நம்மளும் ஒரு காரணம் தானே அதுக்கு நம்ப ஏதாவது செய்ய வேண்டாமா? சாந்தி "என்றான்

"செய்யணும், நானும் அதை தான் யோசிச்சேன், எனக்கு நீங்க சொன்னதுல எந்த பிரச்சனையும் இல்லை, சந்தோசம் தான், ஆனா இதுக்கு அத்தை மாமா எப்படி சம்மதம் சொல்லுவாங்க? என்றாள்

"அதுக்கு இன்னும் 20வருஷம் இருக்கு பாப்போம் ... அதுக்குள்ள எவ்வளவோ மாறிடும், இவங்க மாறமாட்டாங்களா? " என்றான்

நீங்க சொல்றதை பார்த்த டிக்கெட் வாங்கிடுவாங்கனு சொல்றிங்களோ? " என்றாள் புன்னகையுடன்

நீண்ட நாளுக்கு பின் கதிர் சிரித்தான்....

அதன்பிறகு வேணி பல கஷ்டங்களை அனுபவித்தாள், அதை அனைவருமே வெளியே ஒரு ஆளாக நின்று வேணியை காட்சிபொருளாக வேடிக்கை மட்டுமே பார்க்க ஆரம்பித்தனர்..

வேணிக்கு பெண் குழந்தை பிறக்கவும் முதலில் சந்தோசபட்டது கதிர், சாந்தி தான். அந்த குழந்தை தங்கள் வீட்டு மகாலட்சுமி என்று நினைத்து சந்தோசப்பட்டனர்..

மித்ரனை வேணிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் , வேணி அவனை மனதில் வைத்து மிருணாளினி என்று பெயர் வைத்தார்...

குழந்தையை வளர்க்கவும், படிக்க வைக்கவும் தான் வேணி கல்யாணமாகமல் விதவை ஆனாள்... அதை பார்த்ததும் சக்தியை அவன் மனமோ குற்றவுணர்ச்சியில் அவனை அனு அனுவாக கொன்னு தின்று கொண்டிருந்தது...

அவர் மனம் மிருணாளினியை தொட்டு தூக்கி முத்தம் இட வேண்டும், என்ற ஆவலை அடக்கி தூர இருந்து பார்த்துவிட்டு போவார்....

காலம் ஓட மித்ரன் மனம் மிருணாவை விரோதியாக பார்ப்பதை அறிந்து சக்திவேல் பயப்பட ஆரம்பிக்க, அதை கதிரிடம் சொல்லி ஆதங்கபட்டார்

அவரின் ஆதங்கம் போலவே மித்ரன் தவறு செய்யவும், மிருணாவை எங்கும் அனுப்ப முடியாது என்பதால் மித்ரனை சக்திவேல் வீட்டிற்கு அனுப்பினார் கதிர்
 
Top