கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 25

மிருணா சக்திவேலை திரும்பி பார்க்கவும் ... போச்சி இன்னிக்கு இவர் கதி , அதோகதி தான் என்று நினைத்தான் கருணா

"உங்க கிட்ட கேக்க எனக்கு ஒன்னு இல்லையே ? மிஸ்டர் சக்திவேல்.. எப்போ என் அம்மா விதவை ஆனங்களோ அப்பவே என்னோட அப்பா செத்துட்டார்... அப்படி தான் அம்மா எனக்கு சொல்லிகுடுத்து வளர்த்துச்சி.... அப்புறம் ஏன் அப்பா யாருனு கேட்டேன்னு நீங்க? கேக்கலாம்" ...

"நான் கேட்டா மாமா போட்டோவை காட்டுவார், பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்.... அவர் இப்படி ஊரையே கூப்பிட்டு சொல்லுவார்னு எனக்கு தெரியாது இல்லையா? "என்றாள்

மிருணா அப்பா செத்துவிட்டார் என்று சொன்னதும் சக்திவேல் ஆடிபோய்விட்டார்.... எவ்வளவு நாள் ஏக்கம் அது... எப்போதும்டா பிள்ளைக்கு கல்யாண வயசு வரும் என்னை பற்றி சொல்லுவார்கள் என்று காத்திருந்தவருக்கு மிருணா சொன்ன பதில் தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது, கலக்கத்தில் இருந்தவர் அப்படியே தலையை சோபாவின் மேல் சாய்த்துக்கொண்டார்...

அதை பார்த்து எல்லோரும் பதறினாலும், மிருணா கல்லுமாதிரி அப்படி நின்றாள்.... அவள் பக்கதில் வந்த மித்ரன் "எதுக்கு இப்படி பண்ணற மிருணா" என்றான்

"ஓ சார்க்கு என் பேர்கூட நினைவு இருக்கா ... இவ்வளவு நாள் நான் ஒரு வேலைக்காரி தானே , அப்போ வார்த்தைக்கு வார்த்தை ஏய் சொல்லித்தானே கூப்பிடுவிங்க இப்போ மட்டும் என்ன மிருணா... உங்க மாமா பொண்ணு ஆய்ட்டதாலையா? என்றாள்

"லூசு மாதிரி பேசாதாடி ... எந்த நேரத்துல எதை பேசணும் தெரியாத உனக்கு"

"எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்டர் மித்ரன் நீங்க உங்க வேலையை பாருங்க "என்றாள்

மிருணா நினைத்து வந்தது வேறு, ஆனால் இங்கு நடந்ததோ வேறு....

கதிர் தன் மேல் காட்டு பாசமும், அன்பும் அவளுக்கு அவர்மேல் தான் சந்தேகத்தை உண்டு பண்ணியது... அந்த சந்தேகம் வரும் போதுலாம் அவளின் மனதில் இருக்கும் இன்னொரு விசியதை அடக்கிகொள்ளுவாள்... ஆனால் அவள் எவ்வளவு அடக்க முயன்றும் அந்த விசியத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவளால்.. கொஞ்சம் நாளாகவே மனதை அரித்துகொண்டிருந்ததை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தவித்து இருந்தவளுக்கு , அப்பா யார்? என்று கேட்டு தெரிந்துக்கொண்டால் , பிரச்சனை சரி ஆகிவிடும் என்றுதான் கதிரிடம் கேட்டாள்...

இப்போ சக்திவேல் தான் அப்பா என்றதும் வந்த கோவத்தை விட கதிர், அப்பா இல்லை என்றதும் வந்த நிம்மதிதான் அதிகம் ..... என்று நினைத்தாள்..

மித்ரன் மிருணாவை முறைத்துகொண்டிருக்க, "என்ன? முறைப்பு வேண்டிகிடக்கு போ, போய் உன்னோட மாமனை கவனி" என்றாள்....

"உனக்கு உடம்பு முழுக்க திமிறுடி, ... இதுக்கு ஒருநாள் நல்லா அனுபவிப்ப" என்றான் கோவமாக

அது அனுபவிக்கிறப்ப நான் பார்த்துக்கறேன் இப்போ கிளம்பு என்றவள் அப்படியே சாபம் கொடுக்க வந்துட்டான் பெருசா ... இவனே ஒழுங்கு கிடையாது.... இதுல இவன் எனக்கு சாபம் கொடுக்கறான் என்று முனவியதை மித்ரன் கேட்டுவிடவும்

"நான் என்னடி ஒழுங்கு இல்லை.., . உன்னை" என்று அவள் பக்கதில் வர
"மித்து நீ வா, அவ திமிறு பிடிச்ச, ராங்கிகாரி,"என்று கண்ணன் சொல்லவும்

"அதான் ஐயா சொல்லிட்டாருல, கிளம்பு, கிளம்பு "என்றாள்

"மிரு கொஞ்சம் நேரம் அமைதியா இரேன் எதுக்கு உனக்கு இவ்வளவு வாய் "என்றான் கருணா....

உன்னக்கு இருக்குடா உன்னை விட்டுட்டேன்ல என்றவள்... உனக்கு இந்த விசியம் முன்னாடியே தெரியுமா?

"ஐயோ! எனக்கு தெரியாது என்னைய விட்டுவிடும்மா தாயே" என்றான்...

"உன்னோட மாடுலேஷனே , சரி இல்லையே? இரு உன்னை தனியா கவனிச்சிக்கறேன்".. என்றவள் அவர்கள் எல்லோரும் செய்யும் கூத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்

வேணி இவள் நிற்பதை பார்த்ததும் இன்னும் இங்கிருந்தால் இவள் ஏதாவது சொல்லக்கூடும் என்று நினைத்தவர்... "மிரு போலாம் வா" என்றார்

"இரும்மா போலாம், அந்த மனுஷன் இன்னும் எவ்வளவு நேரம் நடிக்கறாருனு, பார்த்துட்டு போலாம் " என்றாள்

"பெரியவிங்களுக்கு மரியாதை குடுத்து பேசுனு எவ்வளவு தூரம் சொல்றேன், பெரியம்மாவை கிழவின்னு சொல்ற, இப்போ அவரை மனுஷன் அது இதுனு சொல்ற? " என்றாள் வேணி வேகமா.

"மரியாதைங்கறது எதுல இருந்து வருதும்மா.... வயசுலையா? இல்லை அவங்க நடந்துக்கற நடத்தையிலையா?" என்று கேட்டவள்

"மிரு" என்ற சொர்ணத்தை பார்த்தவள் "சொல்லு பாட்டி" என்றாள்

"என்ன பாட்டினு சொல்ற நீ எப்போமே கிழவி தானே சொல்லுவ, "என்றார் சொர்ணம்

"இல்லை இனி உனக்கு மரியாதை கொடுத்து பாட்டினே கூப்பிடுறேன், ...இவ்வளவு நாள் நீ மட்டும் தான் இங்க மோசம்னு நினைச்சு தான் மரியாதை கொடுக்காம பேசிட்டேன் , ஆனா இன்னிக்குதானே தெரிஞ்சிது உன்னை விட மோசமானாவீங்க இருக்காங்கனு " என்றவள் "எதுக்கு கூப்பிட்ட சொல்லு" என்றாள்

"அவனும் பாவம் தானே, இவ்வளவு வருஷம் உன் பக்கத்திலையே இருந்தும் உங்கிட்ட உரிமையா பேசமுடியாமல், உன்னை ஆசையா கொஞ்ச முடியாம தவிச்சிருப்பான்... நீ அப்பான்னு கூப்பிடமாட்டியானு எவ்வளவு? ஏங்கிபோயிருப்பான் ..அவனை நீ மன்னிக்க கூடாதா? "என்றார்

அவர் அப்படி கேட்டதும்.... எல்லோரையும் பார்த்தவள்... "இங்க பாருங்க நான் சொல்லறதை கவனிங்க, அப்புறமா அந்த மனுஷனோட நடிப்பை பார்க்கலாம்... அவர் நடிப்பு எங்கையும் போயிராது" என்றாள் , அதில் மித்ரனுக்கு கோவம் வர வேகமா வந்தவன் மிருணாவை ஓங்கி ஒரு அறை விட்டான்.

அவன் அடுத்த அடி அடிப்பதற்குள் கருணா அவனை பிடித்துகொள்ளவும்

" என்னை விடுடா என்னமா பேசறா, என்னடி ஓவரா துள்ளற... அவர்தான் சூழ்நிலையால தப்பு நடந்துருச்சினு சொல்றாருல . அவரை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம திரும்ப , திரும்ப நடிக்கறாரு, நடிக்கறாருனு சொல்ற, ... ஒரு மனுஷன் இன்னும் எவ்வளவு தாண்டி இறங்கி வருவாரு "என்றான் கோவமாக...

"நாங்க ஒன்னும் அவரை இறங்கி வர சொல்லையே? உனக்கு என்னடா தெரியும் இந்த 21வருஷம் எங்க அம்மா பட்ட கஷ்டமும், நான் பட்ட கஷ்டமும் அவர் மன்னிச்சிருங்கனு கேட்ட ஒரு வார்த்தையில சரியா போயிரும்னா, நானும் அவரை கொன்னுட்டு மன்னிச்சிருங்கனு சொல்லிறேன் சரியா போயிருமா"? என்றாள் மற்ற எல்லோரும் இதை எதிர்பார்த்ததால் அமைதியாக இருக்க மித்ரன் மட்டும் "அதுக்குன்னு இன்னும் எவ்வளவு கஷ்டபடுத்துவ உங்களை மாதிரி தானே அவரும் கஷ்டபட்டுருப்பாரு உன்னால அதை புரிஞ்சிக்க முடியலையா? " என்றான்

"முடியலை, முடியவும் முடியாது, நான் சாகறவரைக்கும் இப்படி தான் இருப்பேன்.... என்னோட அப்பா செத்து போய்ட்டாரு... அவ்வளவு தான் ... என்னோட வழியும் வேதனையும் எனக்குதான் தெரியும் உன்னை மாதிரி தினம் ஒரு பொண்ணோட டேட்டிங் போறவிங்களுக்கு எல்லாம் தெரியாது..". என்றவள் கோவமாக மற்ற எல்லோரையும் பார்த்து "இங்க பாருங்க" என்றாள்

எல்லோரும் பார்க்க அவளை பார்க்கவும்

"இவரையும் , இவர் குடும்பத்தையும் நான் என்னைக்குமே மன்னிக்கமாட்டேன்.. நான் மன்னிப்பேனு நினைச்சா அது உங்க முட்டாள் தனம்... எங்க அம்மா விதவை கோலத்துல இருக்கறவரை... என்னோட அப்பா செத்துட்டார் அவ்வளவு தான் " என்றவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்

"எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க.. அவ ஏதோ ஆதங்கத்துலையும், கோவத்துலையும் பேசறா??? நாங்க இவ்வளவு நாள் எப்படி இருந்தமோ, இனியும் அப்படியே இருந்துக்கறோம் என்று வேணி கை எடுத்து கும்பிட்டு கேட்கவும் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வந்தது... மித்ரனை தவிர

"நல்லா நடிங்க, அவ சொன்ன மாதிரி.... அவளை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இப்போ ஒரு மன்னிப்பை கேட்டுட்டு ஒன்னும் தெரியாத நல்லவங்க போல நடந்துக்குங்க" என்றான் மித்ரன்

"டேய் மித்தி, சும்மா இரு வேணியை பத்தி எங்களுக்கு தெரியும் "என்றார் சொக்கலிங்கம்

"ஐயோ !எல்லோரும் இப்படி பேசி பேசி தான் அவளை தலையில் வெச்சி கொண்டாடுறிங்க. அதான் அவ இவ்வளவு பேசக் காரணம், என்னமோ? பண்ணுங்க "என்றவன் அவனுடைய ரூமிற்கு சென்றுவிட்டான்....

"சக்தி மிருணா இப்படி பேசுவானு நம்ப எதிர்பார்த்தது தானே.... நீ இப்படி மனசு உடஞ்சிறாத, தைரியமா இருக்கனும் இந்த நேரத்துல " என்றார் கதிர்

"உங்களுக்கு முடியலைன்னா ஹாஸ்பிடல் போலாமா? " என்றார் பத்மா

"இந்த அம்மாவை திருத்தவே முடியாது ..இவ்வளவு பட்டும், இன்னும் அவருக்காக கவலைபடுது என்ன சொல்றது "என்று தலையில் அடித்துக்கொண்டான் கண்ணன்.....

"எனக்கு புரியுது மாப்பிள்ளை ... மூளை அதை ஏத்துக்கிட்டாலும், மனசு அதிகமா எதிர்பார்த்துடுச்சில அதான் அதால ஏத்துக்க முடியலை " என்றார்....

எல்லோரும் அவர் நிலையை புரிந்துகொண்டனர்.... அதன்பின் சக்திவேல் அவர் குடும்பத்துடன் அவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்....
 
Top