மிருணா போனதும், கருணாவிற்கு அவள் பின்னால் போக வேண்டும் என்று எண்ணம் வந்தாலும் இவர்கள் எல்லோரும் இருக்கும் போது எப்படி போவது என்று தயங்கினான்....
சக்திவேல் குடும்பம் கிளம்பிதும் முதல் வேலையாக மிருணாவை பார்க்க ஓடினான்...
வேகமாக வந்த கருணாவை பார்த்த வேணி "என்ன கருணா இப்படி ஓடி வர" என்றார்
"உங்க புள்ளை அப்படி பண்ணி வெச்சிருக்கா அத்தை ", என்றவன் "எங்க அவ வீட்டுல இருக்காளா?, இல்லை, கோவத்துல வண்டியை எடுத்துட்டு எங்கையாவது போய்ட்டாளா? " என்றான்
"எங்கையோ? போகதான் கிளம்பிட்டு இருக்கா" என்றார்
அவர் சொன்னதை கேட்டுக்கொண்டே மிருணாவை பார்க்க போனான் ...
"ஏய் எங்கடி? கிளம்பிட்ட" என்றான் மிருணாவை பார்த்து
"வாங்க அமைச்சரே .... என்ன இவ்வளவு லேட்.... நான் வந்தோன வந்திருக்க வேண்டாமா? அமைச்சரே" என்றாள்
"விளையாடாத மிரு., அங்க எல்லோரும் கவலைல இருக்காங்க ஆனா நீ அதை பத்தி எதையும் கவலைப்படாம எங்கயோ கிளம்பிட்டு இருக்க" என்றான்
"ஆமா, வெளியேதான் போறேன்... ஆரூஸ் வரேன்னு சொல்லிருக்கா அவகூட ஷாப்பிங் போறேன் இது நேத்தே போகவேண்டியது... அதான்" என்றவள் "இந்தா" என்றாள்
"இது என்ன மிரு"
"என்னோட வேலையை நான் ரிசைன் பண்ணிட்டேன்" என்றாள்
"என்னது" என்று அவன் அதிர்ச்சியாகவும்
"எதுக்கு இவ்வளவு ஷாக், ஷாக்கை குறை , ஷாக்கை குறை"
"நீ ரொம்ப ஓவரா போறடி" ...
"எத்தனை ஓவர் டா "
"நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் "
"அப்போ ஹாஸ்பிடல் போடா "
விளையாடாம பதில் சொல்லு மிரு இப்போ எதுக்கு இந்த முடிவு...
சரி ஜோக் அப்பார்ட் எனக்கு உங்க கம்பெனில வேலை செய்யவிருப்பம் இல்லை அதான் இந்த ரிசைன் லெட்டர் என்றாள்
மிரு இப்படி நீ பண்ணறது எனக்கு சுத்தமா பிடிக்கலை புரிஞ்சிக்கோ ப்ளீஸ் என்றான்
"உனக்கு பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன? எனக்கு அதை பத்திலாம் கவலை இல்லை, ஆன இனி உங்க கம்பெனிக்கு நான் வரமாட்டேன் "என்றாள்
நான் உன்மேல வெச்சிருக்க பாசத்துக்கு நீ என்னக்கு நல்லா மரியாதை குடுத்துட்ட..... என்னக்கு பிடிச்சா என்ன பிடிக்கலினா என்ன சூப்பர் இப்படியே இரு மிரு.... அப்புறம் ஒன்னு நான் அந்த கம்பெனியோட md இல்லை , அண்ணா தான் அதனால நீ ரிசைன் லெட்டரை அவர்கிட்டையே கொடுத்துரு .... உனக்கு இப்போ நான் தேவை இல்லை அதான் இப்படி பேசுற... என்னோட தேவை வரும்போது கண்டிப்பா நீ என்னை தேடி வருவ...அப்போ பார்த்துக்கறேன் என்றவன் சென்றுவிட்டான்
போகும் அவனையே மனதில் வலியோடு பார்த்தாள் மிருணா
கொஞ்சநேரத்தில் ஆரூஸா வரவும் அவளுடன் கிளம்பி ஷாப்பிங் சென்றுவிட்டாள்...
மிருணாவை பார்க்க போனா பையன் வருவான் என்று ஹாலிலையே காத்திருந்தனர் கதிரும், சாந்தியும்
கருணா வந்ததும் என்ன கருணா மிரு என்ன சொல்றா என்றார் சாந்தி
அம்மா அவ வேலையை ரிசைன் பன்றேன்னு லெட்டர் எல்லாம் கைபட எழுதி குடுக்கறாம்மா ... அவ ஒரு முடிவு எடுத்துட்டா இனி அதை மாத்திக்க மாட்டான்னு தான் உங்க எல்லோருக்கும் தெரியும்ல அப்படி வளர்த்து வெச்சிருக்கீங்க அந்த குட்டி பிசாசை என்றவன் என்னமோ பண்ணுங்க ...நீங்களாச்சி, அவளாச்சி என்னையை இதுல இழுக்கதிங்க... என்று கத்திவிட்டு அவன் ரூமிற்கு சென்றுவிட்டான்
இவன் என்னடி இப்படி சொல்லிட்டு போறான்... என்னதான் பண்றது என்றார் கதிர்
"எனக்கு என்னமோ மிருக்கு வேலை குடுக்க ஆள் இருக்குனு நினைக்கறேன் அதனால தான் அவ உடனே வேலையை ரெசைன் பண்றேன்னு லெட்டர் கொடுக்கறா? அப்படினா கண்டிப்பா 2நாள நாங்க இங்க இருக்க விருப்பம் இல்லை அதனால் இங்க இருந்து போறோம்னு சொன்னாகூட ஆச்சர்யப்படறதுக்கு ஒன்னும் இல்லை, " என்றார் சாந்தி
"அந்த அளவுக்கு போக நம்ப விடக்கூடாது சாந்தி பார்ப்போம், ஆனா ஏதாவது செஞ்சிதான் ஆகணும். "
"மித்திக்கு மிருவை கல்யாணம் பண்ணி வெச்சிடலாம், சீக்கிரம் இதுக்கு எல்லாம் முடிவு வரும் "என்றார் சாந்தி
"நீ சொல்றதும் சரிதான்டி ஆனா இப்போ இருக்கற நிலைல கண்டிப்பா மிரு ஒத்துக்க மாட்டா, அதும் இல்லாம அவ சண்டை போடும்போது ஒரு விசியம் சொன்னா நியாபகம் இருக்கா? உனக்கு"
"என்ன சொன்னா.? நினைவு இல்லையே?, "
"உன்மகன் தினம் ஒரு பொண்ணோட டேட்டிங் போறானு சொன்னா,"
"அப்படின்னா என்ன?" என்று கேட்ட சாந்தியிடம் என்ன சொல்வது. பையனை பத்தி தப்பா சொல்றானு சொல்ல முடியுமா? என்று நினைத்தவர்...
"எனக்குமே அந்த சந்தேகம் இருக்குடி, சரி நம்ப எல்லோரும் சேர்ந்து வேணிகிட்ட பேசுவோம் .. அது சொன்னா மிருணா மாட்டேன்னு சொல்ல மாட்டா" என்றார்
அப்போது ரூமில் இருந்து வந்த சொக்கலிங்கம்.... "நீங்க பேசுனது கேட்டதுடா, இப்போதானே சக்திவேல் அப்பானு சொல்லி அந்த பிள்ளை மனசை காயப்படுத்திருக்கோம்,மறுபடியும் கல்யாணம்ங்கற பேர்ல காயப்படுத்த வேண்டாம் , கொஞ்சம் நாள் போகட்டும் இது ஒன்னும் விளையாட்டு விசியம் இல்லை, ரெண்டு பேர்த்தோட வாழ்க்கை பிரச்சனை."....
"நம்பபாட்டுக்கு அந்த பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சி, அது வாழ மாட்டேன்னு போய்ட்டா, அம்மாவும் வாழல பொண்ணும் அதே போல வாழாம வந்துட்டான்னுதான் பேசும் ஊர், அதான் சொல்றேன் கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் எதா இருந்தாலும் பேசிக்கலாம்" என்றார்...
"நீங்க சொல்றதும் சரிதான் அப்பா, ஆனா உடனே இதை செஞ்சிட்டா பரவால்லையோனு தோணுது "
"பொறு கதிர் பார்க்கலாம் "என்றவர்.... "மித்தியோட எண்ணம் என்னனு தெரிஞ்சிக்கோங்க முதல, ஏற்கனவே அவனையும் நம்ப கஷ்டபடுதிருக்கோம்"என்றார்
"கேக்கறேன் அப்பா, ஆனா அவன் மாட்டேன்னு தான் சொல்லுவான்" என்றார் கதிர்
"எதுக்கும் கேளுப்பா... அப்புறம் ஒரு வார்த்தை கேக்கலைனு இருக்ககூடாதுல அதுக்குதான்" என்றார்....
"சரிப்பா, அவன் ஆபிஸ் போக கீழ வருவான் அப்போ பேசறேன்ப்பா" என்றார் கதிர்
இங்கோ வெளிய போனா மிருணாவும் ஆரூசாவும், அவர்களுக்கு தேவையான துணிகளை எடுத்துகொண்டு காபி ஷாப்பிற்கு சென்றனர்,
"ஏய் எப்போடி உன் அண்ணன் வருவான், அவனுக்கு டைமிங் கீப்அப் பண்ணவே தெரியாதா? " என்றாள் மிருணா
"அவர் வருவார்ல அப்போ அவர்கிட்டையே கேளு "என்றாள் ஆரூசா
இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ள அப்போதுதான் ஆரூசா கவனித்தாள் மிருணாவின் கன்னத்தில் கை தடம் பதிந்திருப்பதை
"ஏய் என்னடி கன்னத்துல கை தடம்"
"அது ஒன்னும் இல்லடி " என்றவள் "ஆரூ எனக்கு ஒரு வேலை வேண்டும்டி"என்றாள் கவலையாக
"என்னது வேலையா ஏன் ? இப்போ நீ செஞ்சிட்டு இருக்க, அந்த வேலை என்னாச்சி "என்றாள்
"அது , அது நான் அதை ரிசைன் பண்ணிட்டேன் "என்றவள்... அதற்கான காரணத்தை சொல்ல அவள் தயங்கவும்
"சரி சொல்ல வேண்டாம் அண்ணா கிட்ட கேட்டு பார்ப்போம் அண்ணா ஆபிஸ்ல வேலை இருக்கும் "என்றாள் ஆரூசா
சரி என்று இருவரும் காபியை குடிக்கவும் , கொஞ்சம் நேரத்தில் அபி வந்தான்....
"என்ன மிரு இன்னிக்கு ஷாப்பிங் பலமா இருக்கும் போலையே? ... நீ இப்படி வாங்கி குமிக்கற ஆள் இல்லையே... சேர்க்கை சரி இல்லை அதான் இப்படி மாறிட்டியோ? " என்றான் அபிஷேக்
"உன்னை எப்போ வரச்சொன்னோம் நீ எப்போ வர.... கொஞ்சம் கூட பனிஜுவால்ட்டியே தெரியல நீ எல்லாம் என்ன பிஸ்னஸ் மேனோ"? என்றாள் மிருணா
"கிளம்பறப்ப ஒரு வேலை வந்துடுச்சி என்ன பண்றது சொல்லு" என்றான் அங்கிருந்த சேரை இழுத்து போட்டுக்கொண்டு உக்கார்ந்து கொண்டே சொன்னான்....
"சரி அபி நான் கொஞ்சம் பேசணும் விளையாடாம கேளு "
"சொல்லு என்ன விசியம்" என்றவன் அவளை உற்று பார்க்க" உன் கன்னத்துல என்ன? அது" என்றான்
'அவன் கை தடத்தை தான் கேக்கிறான் என்று புரிந்தாலும் '"அதை விடு அபி நான் சொல்றதை கேளு, எனக்கு ஒரு வேலை வேண்டும், இனிமே என்னால அங்க வேலை பார்க்க முடியாது" என்றாள்
"ஏன் "?
"அதுக்கு ரீசன், நான் அப்புறம் சொல்றேன் வேலை கிடைக்குமா? " என்றாள்
"நம்ப கம்பெனி இருக்கறப்போ உனக்கு என்ன கவலை ... நாளைல இருந்து வேலைக்கு வா "என்றான்
"இல்லை அபி அங்க வந்தா ஏதாவது சொல்லுவாங்க, வேற எங்கையாவது வேலை கிடைக்குமான்னு பாரு"
"யார்? என்ன சொன்ன என்ன பேபி... அதுலாம் பத்தி கவலைபட்டா வாழ்க்கை முழுக்க கவலைதான் மிஞ்சும் சரியா?, நீ அதை எல்லாம் விட்டு தள்ளிட்டு நம்ப கம்பெனிக்கே வா "என்றான் அபி
"ஆமா மிரு அண்ணா சொல்றதும் சரிதான் ... நீ நம்ப கம்பெனிக்கே வாடி" என்றாள்..
"நான் யோசிச்சிட்டு நைட் சொல்றேன் நாளைக்கு மறுநாள் நம்ப ஊர்ல திருவிழா நீங்க 2பேரும் வந்துருங்க சரியா? "என்றவள் அ"ப்போ நான் கிளம்பறேன் "என்றாள்
"ஏன் மிரு இப்போகூட உன்னை யார் அடிச்சதுனு சொல்லமாட்டில "என்றான் அபி
"அம்மா தான் அடிச்சாங்க அவங்களை எதிர்த்து பேசினேன் அதான் "என்று அங்கிருந்து கிளம்பிவிட்டாள்...
போகும் அவளையே அர்த்த பார்வையுடன் இருவரும் பார்த்துக்கொண்டனர்
மித்ரன் கொஞ்ச நேரம் கழித்து கீழே வரவும் , அவனை பார்த்த கதிர் "உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மித்தி" என்றார்
"சொல்லுங்க டாட்" என்றவன் அவர் பக்கத்து சோபாவில் உக்கார்ந்தான்...
"இன்னிக்கு காலைல நடந்தது உன்னக்கே தெரியும் , அதுல மிருக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் வாக்கு குடுத்ததையும் சொல்லிட்டேன் ... இதை பத்தி நீ எதுமே சொல்லவே இல்லையே மித்தி "
"நான் என்ன சொல்லணும்" என்றவன் "கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு ... ஓ நீங்க நான் அவளை கல்யாணம் பண்ணிப்பனான்னு கேக்கறீங்களா? " என்றவன் "நானும் இதை பத்தி யோசிச்சேன் டாட்" .. "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அந்த மகாராணிகிட்ட கேளுங்க அவளுக்கு ஓகேவானு" என்றான்
"என்னது உனக்கு ஓகேவா ? நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா? அதும் மிருணாவை கல்யாணம் பண்ணிக்க".. என்றார் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்தவாறே
"உங்களுக்கு காதுல எந்த பிரச்சனையும் இல்லை, நான் சொன்னதை அது சரியாதான் கேட்டுருக்கு" என்றான்
அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனையே பார்க்க...
"நீங்களே இவ்வளவு ஷாக் ஆனா அந்த மகாராணி இதை கேட்டு மயக்கம் போட்டுடுவா போல "என்று சொல்லியவன் "ரொம்ப நேரம் இப்படியே உக்கார்ந்திருக்காதிங்க, அப்புறம் உடம்புக்கு ஏதாவது ஆகிடும் நான் ஆபிஸ் போய்ட்டு வரேன் என்று கிளம்பிவிட்டான் "
கதிருக்கு மிகவும் சந்தோசமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது
மித்ரனின் இந்த சம்மததில் ஏதாவது உள்குத்து இருக்குமோ? எனக்கு தெரியாதுப்பா