கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 28

மிருணா வந்ததும் சிரித்துகொண்டிருந்த மூவரும் அமைதியாகி விட, கருணாவை பார்த்த மிருணா " என்னடா சொல்லிட்டு இருந்திங்க" என்றாள்

"எனக்கு தெரியாதுடி , அம்மா தான்" என்று சாந்தியை பார்த்தான்

'பயபுள்ள மாட்டிவிட்டுட்டானே' என்று புலம்பியப்படி சாந்தி கருணாவை முறைத்துவிட்டுக்கு மிருணாவின் பக்கம் திரும்பி ..." அது ஒன்னும் இல்லமா" என்று தயங்கவும்

"எதுக்கு அத்தை தயங்கிறீங்க, நான் என்ன? புலியா, சிங்கமா பயப்படறதுக்கு" என்றாள்

அவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, " உனக்கும் மித்திக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்யலாம்னு இருக்கோம் " என்றார்

"என்னது! கல்யாணமா? . இல்லை அத்தை எனக்கு இதுல விருப்பம் இல்லை, நீங்க உங்க பையன் கிட்ட கேட்டா, அவனும் சாரி அவங்களும் இதைதான் சொல்லுவாங்க " என்றாள்

"இல்லைம்மா, மித்தி சம்மதம் சொல்லிட்டான்" என்றார்

"என்னது !என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்களா? .... இருக்காது அத்தை கேட்டு பாருங்க "

"நல்லா கேட்டுட்டோம், மித்தி அவனாதான் சொன்னான், நாங்க அவனை வற்புறுத்த கூட இல்லை" என்றார்

"ஒ சரிங்க அத்தை, அது உங்க பையனோட விருப்பமா இருக்கலாம், ஆனா எனக்கு இதுல விருப்பம் இல்லை" என்றாள்

"நீ யோசிச்சிட்டு சொல்லு மிரு" என்றவர் கிளம்பிவிட, கருணா தனியாக சிக்க கூடாதுனு என்று அங்கிருந்து ஓடி விட்டான்.

மித்ரன் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதை மிருணாவால் நம்பவே முடியவில்லை... இருந்தாலும் அவனிடம் பேசி இதை தெளிவு படுத்திக்கனும் , என்று நினைத்தவள் வெளியே திண்ணியில் உக்கார்ந்து விட்டாள் ...

மித்ரன் வரும் நேரம் தான் என்பதால் அவனிடம் வழியில்லையே கேக்க வேண்டும், நினைத்தவள் அவன் வரும் வரைக்கும் கண்டதையும் யோசித்துக்கொண்டு அங்கையே உக்காருந்திருந்தாள், அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்த வேணி, மெதுவாக பேச்சி கொடுத்து பார்த்தார்

"மிரு "

"சொல்லும்மா"

"நீ ஏன்? மித்தி தம்பியை வேண்டாம்னு சொல்ற? ... அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? "

"அப்படியா, எனக்கு தெரியாதே? " என்றவள் "அவனை நீங்கதான் மெச்சிக்கணும், சும்மா இரும்மா ஏதாவது சொல்லிட போறேன் "என்றாள்

"கதிர் ஐயா, அவர் கொடுத்த வாக்கை காப்பத்தனும் நினைக்கறப்ப, நானும் என் வாக்கை காப்பாத்தணும்னு நினைக்க கூடாதா"?என்றார் வேணி

"அம்மா, உன்னோட வாக்கை காப்பாத்தணும்னு, நான் என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியுமா? " என்றாள்....

இப்படி கேப்பவளிடம் என்ன சொல்வது என்று அமைதியாகிவிட்டார் வேணி...

"என்ன? அமைதியா இருக்க"...

"இங்க பாருடி , மித்தி சம்மதம் சொல்லாத வரைக்கும் தான் , நீ என்ன சொல்லுவியோ?, உன்னை, எப்படி? சம்மதிக்க வைப்பனேனோன்னு எனக்கு பயமா இருந்திருக்கும், ஆனா அந்த தம்பி சம்மதம் சொன்னதும் எனக்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லாம போயிருச்சு ஏன் தெரியுமா? அந்த தம்பி எப்படியும் உன்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிரும்னு எனக்கு தெரியும் " என்றவர் எழுந்து உள்ளே சென்றுவிட

'இந்த அம்மா ஒன்னு பீதியை கிளப்பிட்டு இருக்கு'.. என்று நினைத்தவள் , 'ஒரு வேளை சம்மதிக்க வெச்சிருவானோ? 'என்று நினைக்க 'ஐயோ! நோ , அப்படி எதுவும் நடந்துற கூடாதே.. மிரு பி கேர்புல் , அந்த மித்ரன் ரொம்ப டேன்ஜரஸ் பெல்லோ 'என்று அவள் நினைத்துகொண்டிருக்க ..... மித்ரன் கார் சரியாக உள்ளே வந்தது

'"சார் வந்துட்டாரு. மகனே இருக்குடா உனக்கு" என்றவள் அவன் கார் அருகே போனாள் மிருணா....

அவளை பார்த்துக்கொண்டே காரைவிட்டு இறங்கிய ,மித்ரன் என்ன? என்று புருவத்தை உயர்த்த, உங்கிட்ட பேசணும்" என்றாள் ஒற்றை வார்த்தையில்

"என்ன பேசணும்"

"பேசணும்னா பேசணும் "... வரீங்களா? என்றாள்

அவள் முன்னே போக, அவன் பின்னாலையே போனான் தோட்டத்திற்கு போனவள் .... மரத்தடியில் நின்றாள், "என்னைய கல்யாணம் பண்ணிக்க எப்படி? சம்மதம் சொன்னிங்க' என்றாள்

"வாயில தான்" என்றான்

"விளையாடாதீங்க ... இதே வாய்தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அதுக்குனு ஒரு தகுதி வேணும், வேலைக்காரி எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதா எனக்கு நினைவு"என்றாள்

"இப்போதான் நீ வேலைக்காரி இல்லையே, என்னோட ஆசை மாமா பொண்ணு தானே" என்றான்

"என்னது!ஆசையா? "

"என் மாமாவை சொன்னேன்ம்மா" என்றான்

"எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும், ஆனால் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. "

"ஏன் ? "

"எல்லா கெட்ட பழக்கத்தையும், குத்தைக்கு எடுத்து வைச்சிக்க, உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லை.. உங்களை கல்யாணம் பண்ணிட்டு என்னோட புருஷன் இந்நேரம் எந்த பொண்ணோட இருப்பானோனு? , நான் தினம் தினம் பயந்துட்டு வாழ முடியாது"

"நீ வந்து என்னை திருத்து "என்றான் நமட்டு சிரிப்புடன்

"என்ன டேஸ்க்கு நான் திருத்தணும். எனக்கு என்ன தலையெழுத்தா?, . பொண்ணுக என்ன உங்களை திருத்துறதுக்குனேவா? பொறந்து இருக்காங்க.. நீங்க சொல்றதை பார்த்தா அவ பொண்ணா பொறுப்பெடுக்கறதே ஆணை திருத்த தான் சொல்லுவீங்க போல, ..28வருஷம் திருந்தாதவன் தான் பொண்டாட்டி வந்து சொன்ன உடனே திருந்திருவானா?.". என்றாள்

"அவளை ஆழமாக பார்த்தவன் ... யாரையாவது லவ் பண்றியா?"என்றான்

"ஆமானு சொல்லிடலாமா "? என்று நினைத்தவள் ..'இதனால் பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா என்ன? பண்றது' ..... என்று" இல்லை" என்றாள்

"ஒ நான் கூட நீயும் அபிஷேக்கும் லவ் பண்றிங்களோனு? நினைச்சேன்" என்றான்

"பொண்ணும், பையனும் பேசினாலே லவ் பண்றாங்கன்னுதான் அர்த்தமா? அப்படி பார்த்தா நீங்க என்னைய கருணாவை வெச்சில சந்தேகப்பட்டுருக்கணும்" என்றாள்

"மத்தவங்க எப்படினு? எனக்கு தெரியாது. உங்களை எப்படி. அப்படி நினைச்சேன்னா உனக்காக என்னோட கம்பெனியை சிறப்பா வச்சி செஞ்சார்லையா அபிஷேக்... அந்த விசியத்துல கூட நான் அவன் மேல கேஸ் கூட குடுத்தேனே , உனக்கு தெரியாததா? அப்புறம் கருணா என்னோட தம்பி அவன் எப்படி உன்னோட பழகரானு பக்கதுல இருந்து பாக்கலைனாலும் , ஓர் அளவுக்கு தெரியும் " என்றான்

"அபி பண்ணதுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை "என்றாள் மிருணா

"அப்போ உனக்கும் அந்த அபிஷேக்கும் சம்மந்தம் இருக்கு இல்லையா? "அதுதான் எனக்கு வேணும்

"என்ன சொல்றிங்க நீங்க... அவருக்கும் எனக்கு நல்ல பிரிஎண்ட்ஷிப்பை தவிர வேற எந்த சம்மந்தமும் இல்லை " என்றாள்

"சரி சரி நான் நம்பிட்டேன் "என்றவன் முகத்தில் இவ்வளவு நேரமா இருந்த புன்னகை மறைந்து கடுமையானது

"இங்க பாரு, நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும் பரவால சொல்லாட்டியும் பரவால, ஆனா இந்த கல்யாணம் நடக்கும், உன்னை பழிவாங்கணும்னு தான் நான் இங்க இருக்கேன்னு சொன்னேன் அது உன்னக்கே தெரியும், ஆனா நேத்து அந்த அபிஷேக்கை பார்த்து பேசுனதுல இருந்து, எனக்கு உங்க ரெண்டு பேரையும் பழிவாங்கணும். அதுக்கு இந்த கல்யாணம் ரொம்ப ரொம்ப முக்கியம், வாழ்க்கை முழுக்க நான் உன்னை கொடுமை படுத்துறத.. அந்த அபிஷேக் பார்த்து துடிக்கணும்" என்றான்

"நீ என்ன லூசா?, என்னை கொடுமை படுத்துன்னா, அவன் எப்படி துடிப்பான், நான்தான் துடிப்பேன் என்றவள் இதே பதிலை நான் உனக்கு குடுத்தா, நீ என்ன பண்ணுவ? என்றாள்

"என்ன? பதில்"..

"நீ என்னை பழிவாங்குவனு சொன்னில, அதையே உன்னை நான் செஞ்சா?" என்று வேகத்தில் கேட்டாள்

'வாடி வா மாட்டிக்கிட்டயா? 'என்று மனதில் நினைத்தவன், ஒ மேடம் என்னை கல்யாணம் பண்ணி பழிவாங்க போறிங்களா?" என்று பலமாக சிரித்தான் ....

அவன் சிரிப்பதையே பார்த்தவள், " ஏன் என்னால முடியாதா? சவாலா?" என்றாள்

அவன் மேலும் மேலும் சிரிக்கவும், எரிச்சல் ஆன மிருணா , "இங்க பாரு சிரிச்சி கடுப்பை கிளப்பாத".... நான் நினைச்சேன் வெச்சிக்க உன்னை" என்று அவன் சிரிக்கும் எரிச்சலில் பல்லை கடித்தாள்...

"என்ன செல்லம் பண்ணுவ, மாமாவுக்கு கிஸ் குடுத்துருவியா? அம்முலு" என்றான்

அவள் பக்கதில் கிடந்த கல்லை எடுத்தவள், " இதாலையே உன் மண்டையை உடைச்சிருவேன்" என்றாள்...

"இதுலாம் உன் அருமை தோழன், கருணா கிட்ட வெச்சிக்கோ? சரியா? என்கிட்ட வெச்சிகிட்டனா, ஒரே அடியில 32 பல்லையும் தட்டி கைல குடுத்துருவேன்" என்றான்...

'அவன் சொன்னதை செய்வான்,' என்று நினைத்தவள் கல்லை கீழே போட்டுவிட்டு , கன்னத்தில் கை வைத்தவள் " முடிவா என்ன சொல்ற".... என்றாள்

நீதான் சொல்லணும் , மேடம் என்னை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னிங்க, அப்போ அதை வாபஸ் வாங்கிட்டியா? என்றான்

"அது, அது ஏதோ வேகத்துல சொன்னேன்" என்றாள்

"இங்க பாரு, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன் , நீ மட்டும்தான் பாக்கி , உன் முடிவை ரெண்டு நாள சொல்லு... அந்த முடிவு எனக்கு சாதகமா இருந்தா? நல்லா இருக்கும்" என்றவன் அவள் காதருகில் வந்து சீக்கிரம் சம்மதம் சொல்லணும். செல்லம் சரியா? மாமாவை ரொம்ப நாள் காக்கவைக்காத" என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்றுவிட்டான்..

அவன் கன்னம் தட்டி இடத்தை கை வைத்து நின்றவள்.... "இவனை எதுல சேர்த்தறதுனே தெரியலை " என்றாள்

மனம் இருவேறு நிலையில் இருந்தது 'அவன் பழிவாங்க தான் கல்யாணம் செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாக சொல்லும்போது அவனை எப்படி? கல்யாணம் செய்வது' என்று ஒரு மனமும் ,' அவன் மட்டும்தான் பழிவாங்குவானா? ஏன்? நான் பண்ணமாட்டனா, அவனை விட ஒரு படி மேலே போய் நானும் பழிவாங்குவேன், சும்மா விட்டுருவனா? 'என்றது இன்னொருமனம்...

"அதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முடியாது "என்றாள்

'அவனை உனக்கு புடிக்குமா? புடிக்காதா?' என்று மனதில் கேள்விக்கு

"அது உனக்கு தேவை இல்லாதது" என்றாள்

"அடிப்பாவி, எனக்கு தெரியாம உங்கிட்ட எந்த ரகசியமும் இல்லை தெரியும்தானே? " என்று சொல்ல

"அப்புறம் என்ன கேள்வி" என்று அதை அடக்கியவள்.... ஒரு முடிவோடு வீட்டிற்கு கிளம்பினாள்

"மிரு எங்க? போன இவ்வளவு நேரம்" என்றார் வேணி

"அது, அந்த மித்ரன் கிட்ட பேச போயிருந்தேன் " என்று சொல்லியவள் "அம்மா "என்றாள்

அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட வேணி "சொல்லு மிரு" என்றார்

"அது, அது "

"என்னடி அது , அதுனு வண்டி ஓட்டிட்டு இருக்க, சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு "

"கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம் இல்லம்மா அது உனக்கே நல்லா தெரியும் .அப்படி சொன்னதுக்கு அப்புறம் நம்ப இங்க இருந்தா நல்லா இருக்காதுல" ,

"அதுக்கு "

"அதனால நம்ப வேற வீட்டுக்கு போயிறலாமா?" என்றாள்

"எங்க போவோம் மிரு, ஏற்கனவே வீடு பார்த்துவெச்சிருக்கியா"?

"இல்லைம்மா, இனி தான் பார்க்கணும்" என்றாள்

"மிரு என்னோட கடைசி மூச்சு இருக்கறவரைக்கும் இங்கதான் இருப்பேன்... உனக்கு சங்கடமா இருந்தா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி அதை சரிபண்ண பாரு,, அதை விட்டுட்டு வீட்டை மாத்தலாம், காட்டை மாத்தலாம்னு நினைக்காத " என்று உள்ளே சென்று விட்டார்

அம்மா இதைதான் சொல்லுவார் என்பதை எதிர்பார்த்ததால் மிருணாவும் எதுவும் சொல்லவில்லை
 
Top