கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 29

மிருணாவிற்கு வேணி இப்படிதான் சொல்லுவார், என்று தெரியும் என்பதால் அவள் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாள்.

ஆனால் அவளுக்கு மித்ரன் எதற்கு அபியை போய் பார்த்தான் , அபி அப்படி என்ன? சொல்லிருப்பான் , இவன் இப்படி இங்கு என்னிடம் பொங்கிகொண்டிருக்கிறான் , என்று மண்டை குடைச்சலாக இருந்தது..

எதுக்கு இப்படி குழம்பி தவிக்கிற. இதை பத்தி மித்ரன் கிட்ட கேக்கமுடியலைனாலும், அபி கிட்ட கேக்கலாம்ல, என்று போன்னை கையில் எடுத்தவள் அபிக்கு அழைத்தாள்.

"ஹெலோ "

"சொல்லு மிரு"

"அபி மித்து உன்னை வந்து பார்த்தானா"?

"ஆமா , ஏன்? ஏதாவது பிரச்சனையா? "

"அவன்கிட்ட நீ என்ன? சொன்ன"

"நான், என்ன? சொன்னேன் எதுவும் சொல்லலியே"?

"அப்புறம் அவன் உங்கிட்ட பேசிட்டு வந்ததுல இருந்து, நம்ப 2பேரையும் பழிவாங்கணும்னு வெறியா? இருக்கேன்னு சொல்றான்.

"அப்படியா "?

"விளையாடத அபி, எனக்கு மண்டை வெடிச்சிரும் போல இருக்கு , உண்மைய சொல்லு அவன்கிட்ட என்ன? சொன்ன"

"எனக்கு தெரிஞ்சி நான் எதுவும் தப்பா பேசலை"...

"அப்புறம் ஏன்? அவ அப்படி சொன்னான்" சும்மா சொல்ல அவன் என்ன லூசா?

"அது எனக்கு எப்படி? தெரியும், இதை நீ அவன்கிட்டதானே கேக்கணும்"

" என்ன? லூசான, ஐயோ !எல்லோரும் சேர்ந்து எதுக்கு இப்படி என்கிட்ட பிலே பண்ணறீங்க... நம்ப இன்னிக்கு மதியம் மீட் பண்ணோம்ல அப்போ ஏன் மித்து வந்து பார்த்ததை நீ சொல்லல".

"அது எனக்கு அவ்வளவு பெரிய விசயமா தெரியல மிரு அதான் சொல்லல"....

"சரி ரெண்டு பேரும் என்ன? பேசிக்கிட்டிங்க சொல்லு "

"பிஸ்னஸ் விசியமாதான் பேசுனோம் எதுக்காக அவன் கம்பெனியை டார்கெட் பண்ணணு கேட்டான், அது பத்திதான் பேசிட்டு இருந்தோம்"

"ஓ அப்போ நான் வெச்சிறட்டும்மா "

"ஏதாவது பிரச்சனையா மிரு"

"ஆமா உங்க எல்லோருக்கும் இப்போ நான் இருக்கறதுதான் பிரச்சனை போதுமா? வை "என்று கத்திவிட்டு போன்னை வைத்தவள்.. அப்படியே தலையை பிடித்துகொண்டு திணையில் உக்கார்ந்துவிட்டாள்

"என்னை சுத்தி என்ன நடக்குது, எனக்கு எதுமே புரியலையே? "என்று புலம்பியவளின் தோளில் ஒரு கை விழுந்தது...

தலை நிமிர்ந்து பார்க்க கருணா நின்றிருந்தான்..

"என்ன? மிரும்மா" என்று அவள் பக்கதில் உக்கார்ந்தான்

"முடியலடா கருணா , என்னை வெச்சி எல்லோரும் விளையாடுறாங்க , எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா" என்று அழுதவளை அவன் தோளில் சாய்த்துகொண்டான்

"இங்க பாரு மிரு உன்னை வெச்சி யாரும் விளையாடல...சில விசயங்கள் நம்ப எதிர்பாராம நடந்துருச்சிலையா அதுதான் உன் மனசை இந்த அளவுக்கு பாதிச்சிருக்கு"

"எதிர்பாரமாவா, இல்லை கருணா எல்லோரும் சேர்ந்து தான் இப்படி பண்ணிருக்காங்க"

"எல்லோரும் மேலையும் தப்பு இல்லை மிரு, சக்தி மாமா மேலதான் தப்பு இருக்கு, ஆனா அதுவும் சூழ்நிலையால் நடந்த தப்புதான், நீ பெரிய பொண்ணு ஆகிட்டீல ... இதல்லாம் புரிஞ்சிக்கணும் மிரு , நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுருப்பிங்கலோ அதே அளவு அவரும் கஷ்டபட்டுருக்கார் மிரு"

இப்போ நீயும் அவங்க பக்கம் போய்ட்டில, அவருக்கு சப்போர்ட்டா பேசறதுக்குதான் வந்தியா?

நான் எப்போமே உன் பக்கம் மட்டும் தான், நான் அவருக்கு சப்போர்ட் பண்ணல மிரு,
ஆனா நீ அப்பா பண்ணது தப்புனு நினைச்சி, சக்தி மாமாவை பழிவாங்கறான்னு , அப்பாவையும் சேர்த்து கஷ்டப்படுற மாதிரி செய்யற .. அப்பாவால அதை தங்கிக்க முடியலை மிரு, அதை உனக்கு புரியவைக்கத்தான் முயற்சிக்கிறேன் .... நீ கம்பெனி விட்டு போறேன் சொன்னதுமே அவர் எப்படி உடைஞ்சிபோய்ட்டாரு தெரியுமா?

"உனக்கு சக்தி மாமா மேல கோவம் இருக்குன்னா அதுக்கு எதுக்கு நீ நம்ப கம்பெனி விட்டு போகணும் சொல்லு"

கல்யாணம் விசியமும் அப்படிதான்.... உனக்கு மித்து அண்ணாவை பிடிச்சிருந்தா சரி சொல்லு, இல்லை அவர் கூட உன்னால வாழ முடியாதுனு நினைச்சினா வேண்டாம்னு சொல்லிடு . ஒரு முடிவை எடுத்தாலும் அதை தெளிவா எடு, உனக்கு நான் நிறைய தடவை சொல்லிருக்கேன் எந்த ஒரு முடிவையும் நீ சந்தோசமா இருக்கறப்பவோ இல்லை கோவமா இருக்கறப்பவோ எடுக்காதனு , அதே போல உன்னோட முடிவு யாரையும் கஷ்டப்படுத்தற மாதிரி இருக்ககூடாது அதை தான் நான் இப்பவும் சொல்றேன் ....

"அவன் என்னை பழிவாங்கிவேனு அது, இதுனு எது எதுவோ சொல்றான்" என்றாள் அழுகையுடன்

"அவர் உன்ன அழ வைக்க மாட்டார்னு , அம்மா உறுதியா நம்பறாங்க , அதுக்கு அவங்க சொன்ன காரணம்" என்று சாந்தி சொன்னதை சொன்னான்

"அன்னிக்கு என்ன நடந்ததுன்னு இங்க இருக்கற யாருக்குமே தெரியாது, ஆனா உனக்கு தெரியும் நல்லா யோசிச்சி பார்"..

கருணா சொன்னதும் மிருணாவிற்கு மழை வந்த போது நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தவளுக்கு ஒரு தெளிவு வந்தாலும்.."இதற்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்ற எண்ணம் தோன்ற

"எது அவளை தடுக்கிறது " என்று யோசித்தவளுக்கு அதுவும் கண் முன் தோன்றியது...

"கருணா நான் கொஞ்சம் யோசிக்கிறேன் , அப்போதான் எனக்கு ஒரு தெளிவு வரும்" என்றாள்.

"ஆமா, நீ என் பேர் சொல்றப்பையே தெரியுது மேடம் எவ்வளவு தெளிவுல இருக்கீங்கன்னு " என்றான் கண் அடித்து

"ஆமாண்டா கருவாயா" என்று அவன் தோளில் இருந்து எழுந்தவள் கண்களை துடைத்துக்கொண்டே 'எனக்கு என்ன பிரச்சனைனாலும் எப்போமே நீ என்கூட இருக்கறல அதுவே எனக்கு போதும்டா , நீ என்கூட இருக்கிறனால எவ்வளவு தைரியமா இருக்கு தெரியுமா? "என்றாள்

"உனக்கு புடிச்சதை அதை செய், உன்கூட எப்போமே நான் இருப்பேன்" என்றவன் " வா போய் சாப்பிடலாம்" என்றான்

"டேய் குண்டா உனக்கு வேணி சாப்பாடு வேணும்னு சொல்லு அதைவிட்டுடு என்னை சாப்பிட வைக்கறேன்னு சீன் போடாத" என்றாள்

"ஆமா எனக்கு சாந்தி சமையல் விட, வேணி சமையல் தான் பிடிக்குது" என்று சொல்லியபடியே உள்ளே போனவன் வேணி யிடம் "அத்தை அவள் கிட்ட சும்மா சும்மா கல்யாணம் விசியத்தை பத்தி பேசாதீங்க".... என்றான்

"நானா? பேசறேன், அவளாதான் மூச்சிக்கு முன்னூறு தடவை, அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் மாட்டேன்னு கத்திட்டு இருக்கா" என்றார்...

"எனக்கு என்னமோ? இவளுக்கு அண்ணாவை பிடிச்சிருக்குனு தோணுது, உங்களுக்கு "

"எனக்கு தோணலாம் இல்லை, நான் கான்போர்ம்மே பண்ணிட்டேன்" என்றார்

இருவரும் சிரிக்க "சரி எங்களுக்கு சாப்பாடு போட்டு குடுங்க நாங்க அப்படியே வெளிய உக்கார்ந்தே சாப்பிட்டுகிறோம், இன்னும் எத்தனை நாள் இப்படி இருக்க முடியுமோ? "என்று ஏக்கமாக புலம்பியவனை பார்த்த வேணி

"அப்புறம் கருணா ஆரூசா என்ன சொல்றா? " என்றார்

பக்கதில் இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து குடித்துகொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது

"அத்தை"............

"எல்லாம் தெரியும் சொல்லு" ....

"அந்த வாயடி சொன்னாளா? அவளை" என்றவனை....

"அப்படியே தப்பிக்க பார்க்காத சொல்லு" ..

"ஹீஹீ அவ என்ன சொல்லற போறா, அத்தை மிருவோட பிரண்ட்டா தெரியும் அவ்வளவு தான்" என்றான்

"நம்பிட்டேன், நம்பிட்டேன் "என்றவர் இரண்டு தட்டிலும் இட்லியை வைத்து கொடுத்தார்

"நம்புங்க அத்தை நம்புங்க, நான் பச்சை குழந்தை, வாயில் விரல் வைத்தா கூட எனக்கு கடிக்கவே தெரியாது "என்றான் முகத்தை அப்பாவியாக வைத்து

"அடப்பாவி, உலகமகா நடிப்புடா சாமி, எனக்கு சாப்பாடு எடுத்து வரேன்னு இங்க என்னடா நடிச்சிட்டு இருக்க" என்றாள் மிருணா அவன் கடைசியாக சொல்ல வாக்கியத்தை மட்டும் கேட்டு...

டிராமா கம்பெனிக்கு ஆள் இல்லைனு சொன்னாங்க அதான் நடிச்சிபார்த்துட்டு அங்க போய் சேரலாம்னு இருக்கேன் என்று சொல்லிகொண்டே அவளை அழைத்துகொண்டு வெளியே வந்தான்.

கருணா, மிருணா பிறந்த பொழுதில் இருந்து ஐ பாப்பா, பாப்பா என்று அவளை சுத்தி சுத்தியே வந்துகொண்டிருப்பான் ... வளரும் காலங்களில் இருவருமே நல்ல புரிதலோடு வளர்ந்தனர், மிருணாவிற்கு கருணா என்றால் கொள்ளை பிரியம்.. அந்த வீட்டில் யார் வேண்டும் என்றாலும் பாகுபாடு காட்டலாம் ஆனால் கருணாவிடம் அப்படி ஒன்றை பார்க்கவே முடியாது. வளர வளர மிருணா அதை நன்றாக புரிந்துக்கொண்டதால் ... அவளுக்கு கருணாவின் பாசம் ஒரு பாதுகாப்பு உணர்வை அள்ளித்தது, கருணாவிடம் மட்டும் தான் மிருணா அதிகம் கோவத்தை காட்டுவாள் அது கூட எவ்வளவு கோவம் காட்டினாலும் கருணா புரிந்துக்கொள்வான் என்பதால் தான்...

கருணாவுக்கும் அப்படியே குழந்தைபருவத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்ததால் .ஒரு தங்கை போல தான் மிருணாவை பார்த்தான். மித்ரன் எப்போதும் பாட்டி கூட இருப்பதால் கருணா கூட விளையாட ஆள் இல்லாமல் இருந்ததால் கருணா எப்போதும் மிருணாவின் உடனே இருந்தான்... அவனுக்கு தெரிந்த நல்லவிசயங்களை அவளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டே இருப்பான்...இப்போது வரைக்கும்

"எருமை சாப்பிடுடி..... ஒரு இட்லி தான் சாப்பிட்டு இருக்க"

"போதும்டா , என்னால சாப்பிட முடியல "என்று அவள் சொல்லிகொண்டிருக்க.....

"ஏன்? கருணா சொல்றதோட விட்டுட்ட அவளுக்கு ஊட்டிவிடலாம்ல" என்றான் அங்கு வந்த மித்ரன் .

அவனை பார்த்ததும் மிருணா முகத்தை திருப்பவும் . "நீங்க பேசிட்டு இருங்க அண்ணா . நான் ஒரு போன் பேசவேண்டி இருக்கு பேசிட்டு வரேன் " என்றவன் போனையும் , தட்டையும் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்

"இங்கிதம் தெரிஞ்ச பையன்" என்று சொன்னவன் ..." என்ன? அமுலு சாப்பிடலையா? மாமா வேணா ஊட்டி விடட்டுமா" என்றான்

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும், "என்னை பத்தி விசாரிக்க சொல்லி அபி கிட்ட சொன்னியா? " என்றான்

அவள் வேகமாக அவனை திரும்பி பார்க்க... "பார்த்து பார்த்து மெதுவா திரும்பு, இல்லனா கழுத்து சுழிக்கிக்க போகுது" என்றான்

"ரொம்ப தான் அக்கறை" என்றவள்.. "ஆமா விசாரிக்க சொன்னேன் அதுக்கு இப்போ என்ன? "

"நீதான் என்னை கல்யாணம் பண்ணிக்க போறதுலனு சொன்னியே? அப்புறம் எதுக்கு இந்த விசாரணை"

"அது நான் இப்போ சொன்னது இல்லை , நீ என்கிட்ட சொன்னப்பவே அவன் கிட்ட நான் சொல்லிட்டேன்" என்றவள் "அதுவும் எனக்காக இல்லை சாந்தி அத்தைகாக தான்" என்றாள்

"ஓ விசாரிச்சி தெரிஞ்சிகிட்டியா? "

"ம்ம்"

சரி என்று எழுந்து போனவனை பார்த்து "இதை கேக்கத்தான் வந்திங்களா? " என்றாள்

அது என்ன? சில தடவை மரியாதையா பேசற . சில தடவை மரியாதை இல்லாம பேசற என்றான்

அவள் எதுவும் சொல்லாம தலையை குனிந்துகொள்ள." அதை கேக்க மட்டும் வர , கல்யணத்துக்கு சம்மதமானு கேக்கத்தான் வந்தேன்"

"அதான் அப்போவே சொல்லிட்டேனே"....

"அமுலு உனக்கு நான் யோசிக்க டைம் கொடுத்து நல்லா யோசிச்சு எனக்கு சாதகமா பதில் சொல்ல சொன்னதா? நியாபகம்" என்றான்

"அப்போ இப்போ நீங்க இந்த கேள்வியை என்கிட்ட கேட்ருக்கவே கூடாது மிஸ்டர் மித்ரன் "

அவள் மிஸ்டர் என்றதும் அவளை முறைத்தவன் . அங்கிருந்து கோவமாக சென்றுவிட்டான்...

அவன் போனதும் உள்ளே போனதும் கருணா " என்ன " என்பது போல் புருவம் உயர்த்தினான்

"ஒன்னுமில்ல" என்று தலையை இட வலமாக ஆட்டினாள்.

வேணி இருவரையும் பார்க்க ..." அம்மா அபியும், ஆரூசாவும் திருவிழாவிற்கு வருவாங்க" என்றாள்

வேணி புரிந்து கொண்டு தலையை ஆட்டினார்...
 
Top