அடுத்த நாள் திருவிழா வேலைகளில் எல்லோரும் மும்மரமாக இருந்தனர்....
கதிரும், சொக்கலிங்கமும் ஊரில் பெரிய தலை என்பதால் அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டனர்...
வேணிகூட இந்த வருஷம் அபியும் , ஆரூசாவும் வருகிறார்கள் என்று பலகாரம் எல்லாம் செய்தார்... இதற்க்கு முன் யாரும் வீட்டிற்கு விருந்தினர் என்று யாரும் வந்ததில்லை
"அம்மா முறுக்கு செய்யறேன்னு சொன்னில , அதை கை முறுக்கா செஞ்சிடும்மா" என்றாள்
"அதுக்கு நல்லா ஆட்டனும், நம்ப கிரைண்டர் ஆட்டவிட மாட்டிங்குது , நீ போய் சின்னமாகிட்ட கொடுத்து ஆட்டிட்டு வா " என்றார் வேணி
"நானா? , அம்மா அங்கலாம் நான் போகமாட்டேனு உன்னக்கு தெரியும்ல, அப்புறம் எதுக்கு போக சொல்லற ? "
"அதான் நேத்தே வீட்டுக்குள்ள போய்ட்டில "என்றார் வேணி
"அந்த கருணா எருமைக்கு போன் போடறேன் , அவன்கிட்ட குடுத்துவிடு, நல்லா அரைப்பான் மாவை" என்றாள்
"அப்ப நீங்க எங்க கிளம்பறீங்க மேடம்"
"நான் ஆரூஸ்க்கு போனை போட்டுட்டு வரேன்" என்றாள்
"சும்மா சுத்தாம கன்னுகுட்டிக்கு தண்ணி காமிச்சி, மரத்தடியில கட்டு, அப்புறம் தொழுவதை கூட்டி விடு" .. என்றார்
"என்னமா இவ்வளவு வேலை சொல்ற போ என்னாலலா செய்ய முடியாது
"நல்லா திங்க மட்டும் முடியுமா?, வேலை செஞ்சா பலகாரம் செஞ்சிகுடுப்பேன், இல்லனா ? பலகாரமும் இல்லை , சோறும் இல்லை இன்னிக்கு பட்டினி தான்" என்றார் வேணி
"அம்மா இதுலாம் பிளாக்மெயில், நான் ஒத்துக்க மாட்டேன்"
"பிளாக்மெயிலோ, ஒயிட்மெயிலோ எனக்கு தெரியாது?, "என்றவர் அவர் வேலையில் கவனமாக இருக்க... மிருணா அவர் சொன்ன வேலையை சினிங்கியபடியே செய்ய ஆரம்பித்தாள்..
மாட்டிற்கும், கன்னிற்கு தண்ணி காமித்து வேற இடத்தில் கட்டியவள், மாட்டு தொழுவத்தை கூட்டி சுத்தம் செய்யதவள் , சாணியை தட்டைகூடையில் அள்ளி போட்டுவிட்டு நிமிர்ந்தாள், மித்ரன் பிளாக் ஜீன்ஸ், வைட் ஷர்ட்டில் ஹேண்ட்சம்மாக வந்துகொண்டிருப்பதை பார்த்தவளுக்கு ,' இவனை ஏதாவது செய்ய வேண்டுமே' என்று உள்ளம் துடிக்கவும் , 'விடு சிறப்பா செஞ்சிடலாம்% என்று அள்ளி வைத்திருந்த சாணியை எடுத்துகொண்டு வந்தாள்
மித்ரன் போன் பேசிக்கொண்டே வர அவன் மிருணாவை கவனிக்கவில்லை ஆனால் மிருணாவோ மித்ரனை தாண்டி சென்று தான் சாணியை கொட்ட வேண்டும் என்பதால் அவனை பார்த்துக்கொண்டே தான் நடந்து வந்தாள், அவன் அருகில் வந்ததும் கால் தடுமாறுவது போல் தடுமாறி அவள் கையில் வைத்திருந்ததை மித்ரன் மேல் முழுவதும் கொட்டினாள் மிருணா
அவள் மோதியதும் தடுமாறியவன் போன்னை கீழே போட்டவன் அவள் செய்திருந்த காரியத்தை பார்த்து "சிட் ஏய் இடியட், என்னடி பண்ணி வெச்சிருக்க " என்று அவன் கண்களில் இருந்த கூலரை கழட்டிகொண்டே கோவமாக கத்தினான்..
"சாரி மித்ரன், கால் தடுமாறிடுச்சி" என்றவளின் கண்கள் சிரிப்பதை பார்த்தவன் 'அப்போ இவ தெரியாம பண்ணல , வேணும்னு தான் பண்ணிருக்கா' என்று நினைத்தவன் ,"உனக்கு உடம்பு முழுக்க 50கிலோ திமிறு இருக்குடி" என்று அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்
மித்ரனை கடுப்பேத்தியதில் சந்தோசமானவள் மீதி இருந்த வேலையை முடித்துவிட்டு குளிக்க சென்றாள்...
உள்ளே சென்ற மித்ரனை பார்த்து எல்லோரும் சிரிக்கவும், அவனுக்கு இன்னும் கடுப்பாகியது ... 'எல்லாம் அந்த ஒட்டடகுச்சால வந்தது'.. என்று நினைத்தவன் அவள் கண்களில் இருந்த சிரிப்பை நினைத்து பார்த்தான்..... 'என்னை கடுப்பேத்தி பார்க்கணும்னே செஞ்சிருப்பா கிராதகி ' என்று நினைத்தவன் மீண்டும் குளித்து தயாராகி வந்தான்..
அப்போது மிருணா தலைக்கு குளித்து வந்து தலையை துவட்டிகொண்டிருக்க இவனை பார்த்ததும் நக்கலாக சிரித்தாள் ....
அவள் சிரிப்பதை பார்த்தவாறே சென்றவன் .... காரில் ஏறிவிட்டு மீண்டும் அவளை பார்க்க அவள் இவனை பார்த்தவாறே இன்னும் சிரித்துகொண்டே தான் இருந்தாள்...
அவனுக்கு என்ன தோன்றியதோ, காரை எடுக்காமல் அவளையே பார்த்திருக்க, அபி கார் உள்ளே வந்தது....
அதை பார்த்த மிரு ஓடி சென்று அவர்களை வரவேற்கவும், மித்திக்கு எரிச்சலாக இருந்தது.. இவ்வளவு நேரம் அவளின் சிரிப்பை ரசித்துகொண்டிருந்தவனுக்கு இப்போது அந்த சிரிப்பே எரிச்சலை கிளப்பியது ....
மித்தி கிளம்பாமல் இவர்களையே பார்த்துகொண்டிருக்க, அவனை பார்த்தவாறே மிரு அவர்களுடன் சிரித்து பேசிக்கொண்டே வீட்டிற்கு சென்றாள்...
அவர்கள் போவதை கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்த மித்தி.. எங்கோ வெளிய போக கிளம்பி வந்தவன் , எங்கும் போகாமல் மீண்டும் வீட்டிற்கு சென்றுவிட்டான்....
அவன் போவதை மிருணாவும் பார்த்தாள், ' மிரு நீ அவனை காலைல இருந்து ரொம்ப கடுப்படிக்கற அப்புறம் அவன் ஏதாவது செய்வான், நீ ஒப்பாரி வெச்சிட்டு இருப்ப 'என்று மனம் சொல்ல, 'அது நடக்கறப்ப பார்க்கலாம்% என்று விட்டுவிட்டாள்
உள்ளே வந்த அபியும், ஆரூசாவும் வேணியை பார்த்ததும்
"ஹாய் ஆண்ட்டி , எப்படி இருக்கீங்க? என்றனர்
"நான் நல்லா இருக்கேன், வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க" என்று வேணி அவர்களை பார்த்து கேட்டார்
"எல்லோரும் நலம் ஆண்ட்டி "என்று
அவர்களுக்குள் நல்லவிசாரிப்பு முடிந்ததும் , வேணி அவர்கள் சாப்பிட இனிப்பு கொண்டுவந்து கொடுத்தார்
"ஆண்ட்டி , நான் இப்போ போய்ட்டு ஈவினிங் பூஜைக்கு வந்துறேன், ஆரூஸ் இங்கையே இருக்கட்டும்" என்றான் அபி
"ஏன்? தம்பி அதுக்குள்ள போறீங்க? இருங்க போலாம்"
"இல்லை ஆண்ட்டி எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்கு, நான் கண்டிப்பா பூஜைக்கு வந்துறேன்" என்றவன் சாப்பிட்டு கிளம்பிவிட , " ஏய் மிரு இந்த ஸ்வீட்டையாவது சின்னமா கிட்ட கொண்டுபோய் கொடுத்துட்டு வாடி" என்றார் வேணி
"போம்மா நீயே போய்ட்டு வா" என்றவள் உள்ளே அவள் ரூமிற்கு ஆருசாவை அழைத்துகொண்டு போய்விட, ஆரூசாவோ "ஏய் போய்ட்டு வரலாம் டி ப்ளீஸ் வாடி" என்று கெஞ்சினாள்
"உனக்கு உன் ஆளை பார்க்கணும்னா, நீ போ நான் எல்லாம் வர மாட்டேன்" என்றாள் மிருணா
"ஹே மிரு எனக்காக வாடி ப்ளீஸ், ப்ளீஸ் என் செல்லம் இல்லை"
இல்லை
எனக்காக வாடி அவரை பார்த்து ரொம்ப நாள் ஆகுதுடி ப்ளீஸ்"என்று கெஞ்சியவளை பார்க்க பாவமாக இருக்கவும்
"சரி வரேன் வரேன் "என்றவள் வேணியிடம் சென்று ஸ்வீட்டை வாங்கி கொண்டு இருவரும சென்றனர்
"இங்க பாரு ஆரு, நான் குடுத்தோன வந்துருவேன், என்னை அங்க இருக்க சொல்லிலாம் கம்பள் பண்ண கூடாது, சரியா ? "
"வா வா அதை அங்க போய் பார்த்துக்கலாம்" என்றவள் உள்ளே எதிர்பார்ப்புடன் சென்றாள்
இருவரும் ஹாலில் யாரும் இல்லை என்றதும் சுத்தி சுத்தி பார்க்க "அத்தை" என்றாள் மிரு
"நான் கிச்சன்ல இருக்கேன் மிரு, வா" என்று உள்ளே இருந்து சத்தம் வந்தது
இருவரும் உள்ளே செல்ல , அங்கு நெய் வாசனை தூக்க பால்கோவா கிண்டி கொண்டிருந்தார் சாந்தி
"ஐ! அத்தை பால்கோவாவா "என்றவள் "இந்தாங்க அம்மா குடுக்க சொன்னாங்க" என்றவள் அவள் கையில் இருந்ததை கொடுக்க ...
"இந்த பொண்ணு யாரு மிரு புதுசா இருக்கு " என்றார் சாந்தி ஆரூசாவை பார்த்தவாறே
"உங்க ரெண்டாவது மருமகள் "என்று மிரு சொல்லிவிட்டு "ஐயையோ!" என்று நாக்கை கடித்தாள்
"என்ன சொன்ன மிரு .... மருமகளா"??
"ஐயோ! இல்லை அத்தை நான் அப்படி சொல்லல உங்க மருமகளோட பிரண்ட்டுனு சொன்னேன் "என்று எதையோ சொல்லி சமாளிக்க வேண்டும், என்று என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் சொன்னாள்,
அவள் சொன்னதின் அர்த்தம் அவளுக்கு புரிந்ததோ? இல்லையோ? சாந்திக்கு நன்றாக புரிந்தது... அவர்க்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை அதனால் வேணி கொடுத்த ஸ்வீட்டில் ஒன்றை எடுத்து மிருவிற்கு ஊட்டி விட்டார்
'இப்போ நான் என்ன சொன்னேன்னு இவங்க இந்த ரியாக்ட் பண்றாங்க' என்று நினைத்தவள், அவள் சொன்னதின் அர்த்தம் புரிய "ஐயோ ! அத்தை நீங்க நினைக்கற மாதிரி இல்லை" என்றவள் 'விட்டா பேசிட்டே இருப்பாங்க ' என்று கருணா "எங்க அத்தை" என்றாள்
"அவன் மேல ரூம்ல இருக்கான் , போய் பாரு" என்றவர் "அதுக்குள்ள நான் இதை கிண்டி முடிச்சிருவேன் நீ போறப்ப எடுத்துட்டு போலாம்".. என்றார்
"எனக்குலாம் இது வேண்டாம். ஸ்வீட்டை குடுங்க அந்த கருவாயனுக்கு கொடுக்கணும்" என்று இரண்டு தட்டில் வாங்கிகொண்டவள் ஆரூசாவை அழைத்துகொண்டு மேலே போனாள்
'நேத்து வீட்டை சுத்தி காட்டினான் தான், ஆனால் அதில் இவன் ரூம் எதுன்னு நான் இருந்த டென்ஷனில் கவனிக்காம விட்டுடேனே' என்று நினைக்க
"ஏய் என்னடி யோசிச்சிட்டு இருக்க, வாடி "என்றாள் ஆரூசா
"இவ ஒருத்தி, இவளுக்கு இவ பிரச்சனை தான் பெருசு, "என்று தோன்ற "இருடி எனக்கே உன் ஆள் ரூம் எதுன்னு தெரிய மாட்டிங்குது, இதுல நீ வேற" என்றாள்
"என்னை பார்த்தா , அவர் எதுவும் சொல்ல மாட்டாரா? " என்றாள்
"அது உங்க பிரச்சனை, அதுல என்னை இழுக்காத" என்றவள்" இந்த ரூமாதான் இருக்கும் வா "என்றாள்
சரி என்று ஒரு ரூமின் கதவை தட்டி "ஏய் கருவாயா, கதவை திறடா" என்றாள் அவள் கதவு தட்டிய சத்தம் கேட்டு ரெண்டு ரூம் கதவு திறந்தது , மிருணா தட்டிய ரூமில் மித்தியும் மற்றொன்றில் கருணாவும் இருந்தனர்
மித்தியை பார்த்தவள் " இது கருணா ரூம்னு நினச்சேன்" என்றவள் திரும்பி கருணாவை பார்க்க அவனோ ஆருசாவை முறைத்துகொண்டிருந்தான்..
ஆரூசா கருணாவை பார்த்து முழி பிதுங்கி நிற்கவும் அதை பார்த்த மிருணாவோ தலையில் அடித்துகொண்டு " இவளுக்கு எங்க என்ன பண்ணணும்னே தெரியலை" என்று முனவியவள் "ஏய் ஆரூ இந்தா இந்த ஸ்வீட்டை அவன்கிட்ட குடு நான் இவருக்கு குடுத்துட்டு வரேன் "என்றாள்
ஆரூசா புரிந்துகொண்டு மிருணாவிடம் இருந்து அதை வாங்கிகொண்டு கருணாவை நோக்கி போக நம்ப உள்ளே போய் பேசலாமா?" என்றாள் மித்ரனிடம்
அவன் வழி விட்டு நிற்க மிருணா மித்ரனின் ரூமிற்குள் போனாள் . அவள் உள்ளே போனதும் அவனும் உள்ளே போக அங்கு இருந்த டேபிள் மீது ஸ்வீட்டை வைத்துவிட்டு ரூமை சுத்தி பார்த்தாள்
அது அழகாக மிகவும் நேர்த்தியாக இருந்தது , "பரவால ரூமை கூட கிளீன்னா தான் வெச்சிருக்க" என்றவள் அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்தாள்
அந்த பொண்ணு அபிஷேக் தங்கச்சி தானே "என்றான் மித்ரன்
"ஆமா "
"அதை, எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்க "
அதென்ன அது இது சொல்றது, அவ என்ன ஆடா? மாடா ?, அவ என்னோட பிரண்ட் , மரியாதையா பேசு என்றாள்
ஓ சரிங்க மேடம், அவங்க உன்னோட பிரண்ட் மட்டும் காரணமா தெரியலையே? இங்க வந்ததுக்கு வேற ஏதோ இருக்கற மாதிரி இருக்கே" என்றவன் அவள் பக்கதில் வரவும்
இவ்வளவு நேரம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த மிருணாவிற்கு இதய துடிப்பு வேகமாக கேக்க ஆரம்பித்தது
அவளை பார்த்துக்கொண்டே சென்று டேபிளின் மீது இருந்த ஸ்வீட்டை எடுத்தவன் .." இந்த ஸ்வீட்டை விட இன்னொன்னு இன்னும் ஸ்வீட்டா இருக்கும் "உனக்கு தெரியுமா? அமுலு" என்றான்
அவன் கேட்பது என்ன என்று புரியவில்லை என்றாலும், அவன் ஏதோ வில்லங்கமாக தான் சொல்கிறான் என்பதை புரிந்துகொண்டவள்
"என்ன.......? ஸ்வீட்.. எனக்கு புரியலை".... என்று தடுமாற
"வாடி, கேடி காலைல என்னமா? என்னை கடுப்பேத்துன, இப்போ நல்லா மாட்டுனியா? " என்று நினைத்தவன்... அவளை இன்னும் நெருங்கி " இந்த ஸ்வீட்டை விட, இதை டேஸ்ட் பண்ணி பார்த்தா ரொம்ப ஸ்வீட்டா இருக்கும் "என்று அவளின் கீழ் இதழை பிடித்து சொன்னான்
அவனிடம் இருந்து திமிறி விலகியவள் மேல் மூச்சி, கீழ் மூச்சி வாங்கியபடி "இதுலலாம் ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் போல" என்றாள்
"நான்தான் சொன்னேனே அப்புறம் இப்படி கேட்டா என்ன சொல்ல" என்றவன் மீண்டும் அவள் பக்கதில் வர ....
"நீ சரியான சாமியாருனு தானே அபி" சொன்னான் என்று கண்களில் கண்ணீர் குளம் கட்டிருக்க கேட்டாள் மிருணா
"அவன் பொய் சொல்லிருப்பானோவா இருக்கும்டி செல்லம் ...உண்மைய சொன்னா நீ பீல் பண்ணுவல " என்றவன் "ஒரு டைம் டேஸ்ட் பண்ணிக்கிட்டா "என்றான்
அவன் கேட்டதில் கோவமாக அவன் மார்பில் அடித்தவள் பொறுக்கி, பொறுக்கி என்று கத்தியவள் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்...
அவள் போவதையே சிரிப்புடன் பார்த்துகொண்டிருந்தான் மித்ரன்,
வெளியே ஓடி வந்த மிருணா மூச்சி வாங்க நின்றாள்... அவளை மேலிருந்து பார்த்த மித்ரனுக்கு "இவ என்ன? லூசா , இவளை ஏதாவது பண்ணும்னு நினைச்சிருந்தா அன்னிக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சுது, அப்போவே நான் சும்மாதான் இருந்தேன் , இப்போ போய் இவளை என்ன? பண்ணிடுவேன்னு இப்படி ஓடறா" என்று நினைத்தவனுக்கு முகம் கறுத்து இறுகியது.....