கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 32

மூவரும் கிளம்பி வெளியே வரவும்

அபி கோவிலுக்கு வந்துவிடுவதாக சொல்லி போன் செய்தான், மூவரும் ஒரு வண்டியில் எப்படி கோவிலுக்கு செல்வது என்று யோசித்துகொண்டிருக்க , அப்போது

சாந்தி இவர்கள் கிளம்பி ரெடியாகி நிற்பதை பார்த்ததும் இவர்கள் பக்கதில் வந்தார்...

"என்ன? கிளம்பிட்டு யோசிச்சிட்டு இருக்கீங்க" என்றார்

"மூணு பேர் எப்படி ஸ்கூட்டில போறதுன்னு யோசிக்கிறோம்" என்றாள் ஆரூசா

"என்னது ஸ்கூட்டிலையா? மிருக்கு ஒழுங்கா வண்டி ஓட்டவே தெரியாது, இதுல மூணு பேர் போறிங்களா? " என்றவர் "ஒழுங்கா எல்லோரும் கார்ல வாங்க ... நம்ப வீட்டுல இருந்தே 2கார் கோவிலுக்கு போகும் போது நீங்க மட்டும் எதுக்கு வண்டில போகணும்" என்றார்

அவர் சொல்வதில் மிருவை தவிர மற்ற இருவருக்கும் சம்மதம் என்பது போல் நிற்கவும்

"இல்லை அத்தை , இவங்கள வேணும்னா கூட்டிட்டு போங்க நான் வண்டிலையே வந்துறேன் "என்றாள் பிடிவாதமாக ....

"இங்க பாரு மிரு திருவிழாக்கு வரவிங்க எல்லோரும் கார்லையும், டூவீலர்லையும் தான் வருவாங்க. அதனால ட்ராபிக் ரொம்ப அதிகமாக இருக்கு வண்டியை எல்லாம் அரை கிலோமீட்டர்க்கு முன்னாடியே நிறுத்த சொல்லிருக்கறதா அவர் சொன்னார்... அதனால தேவை இல்லாம எதுக்கு ரிஸ்க் மிரு எங்களோட கார்ல வரதுல்ல உனக்கு என்ன பிரச்சனை" என்றார்

"ஆமா மிரு ஆண்ட்டி சொல்றதுதான் சரி, தாவணி கட்டிட்டு வண்டில போகமுடியுமா? வாடி ப்ளீஸ் "என்றாள் ஆரூசா

சாந்தி அவ்வளவு சொல்லியும் போகாமல் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று " சரி அத்தை வரோம், "என்றாள்

மித்ரன் , பாட்டி, சொக்கலிங்கம் ஒரு காரிலும் சாந்தி.கதிர். கருணா ஒரு காரிலும் கிளம்ப சாந்தியுடன் வேணியும் காரில் ஏறிக்கொண்டார்.

கருணாவுடன் ஒரே காரில் வர ஆசைப்பட்ட ஆரூசா . "மிருணாவிடம் நானும் ஆண்ட்டி கூடவே வரேன் மிரு" என்றாள்

5பேர் மட்டும் தான் உக்கார முடியும் என்பதால் மிருணாவை மித்ரன் காரிற்கு அனுப்பிவைத்தனர்

"அவன்கூட போறதுக்கு நான் வீட்டுலையே இருந்துப்பேன்" என்று முனவியவள் அவன் காருக்கு போகாமல் அப்படியே நிற்கவும் கருணாவின் கார் கேட்டை விட்டு வெளியே சென்றுவிட்டது , வேற வழி இல்லாமல் மிருணா மித்ரன் காரிற்கு சென்றாள்..

அவள் வருவதை பார்த்த சொர்ணம் சொக்கலிங்கத்தை பின்னால் ஏற சொல்லி கண் ஜாடை காட்டவும் அவரும் புரிந்து கொண்டு பின்னால் ஏறிக்கொண்டார்....

மிருணா அவர்களுடனே பின்னால் ஏறவும் " மிரு எனக்கு கால் வலிக்கு நான் இப்படி நீட்டி உக்கார்ந்துப்பேன் அதனால நீ முன்னாடி ஏறிக்கோ" என்றார்..

அவரை முறைத்துகொண்டே 'எல்லோரும் நல்லா பிளான் பண்ணிறிங்க, செய்ங்க, எவ்வளவு? தூரம் போவீங்கனு நானும் பார்க்கறேன்' என்று நினைத்தவள் திரும்பி மித்ரனை முறைத்துகொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்...

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முன்னால் பார்த்து காரை எடுக்க ஆரம்பித்தான்....

கார் வீட்டை விட்டு கிளம்பியதும் "ஏன் மித்தி" என்றார் சொர்ணம்

"சொல்லு பாட்டி"

"சக்திவேல் கோவிலுக்கு வந்துருவான்ல "

"ஆமா மாமா நேரா கோவில்லுக்கு வந்துறேன்னு சொல்லிருக்காங்க , பூஜை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடுவாங்க "என்றான் மிருணாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே

அவளோ ' எனக்கு காது கேக்காது' என்பது போல வெளிய வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்....

இவளை ஏதாவது கடுப்பேத்தனுமே என்று நினைத்தவன் அவன் பக்கதில் இருந்த அவள் காலை பார்த்தவன் இவன் கால் கொண்டு அவள் காலை லேசாக வருடி கொடுத்தான் அவள் உணரும் முன் வேகமாக காலை எடுத்துகொண்டு ஒன்றும் தெரியாதவனை போல ரோட்டை பார்த்து காரை ஓட்டிகொண்டிருந்தான்

மிருணா அவள் காலில் ஏதோ உரசுவது போல் இருக்கவும் என்ன என்று குனிந்து பார்க்க அங்கு ஒன்றும் இல்லை..... ஏதோ, என்று மீண்டும் வெளியே வேடிக்கை பார்க்க,, மீண்டும் அவன் காலை உரசினான், இந்த முறை மிருணா அவன் கால்களை பார்த்துவிட கண்டுக்காத மாதிரி இருந்தாள்...

மீண்டும் அவன் காலை கொண்டுவந்து இவள் கால் மீது வைத்தவுடன் மிருணா நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளானாள்...

ஆனால் அந்த கிளளுக்கு எல்லாம் அசருபன் நான் இல்லை என்பது போல அவன் அவள் கையை தட்டிவிடவும் அவளுக்கு pp எகிறியது...

அவனுக்கும் மட்டும் கேக்கும் படி "உனக்கு கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சுரணை எதுமே இல்லையா? நான் தான் உன்னை விட்டு தள்ளி,தள்ளி போறேன்னு தெரியுதுல , அப்புறம் என்ன டேஸ்க்கு இப்படி மேல விழுந்து இளையற",,

"நீ பாரின்ல கண்டபடி சுத்திட்டு இருந்த மாதிரி, இங்கயும் அது மாதிரி ஆள் கிடைக்கும் சுத்தலாம் நினைக்கிறியா?" என்று அவள் கோவமாக கேட்கவும்

மித்ரன் விளையாட்டுக்கு செய்ய போய் இவள் இப்படி பேசுவாள் என்ற எதிர்பார்க்காததால் அவன் முகம் கடுமையானது....

அவன் எதுவும் பேசாமல் காரை ஓட்டவும் இவள் கண்ணாடி பக்கம் முகத்தை திருப்பிகொண்டாள்

அவள் மனம் 'ஒரு சின்ன விசியதுக்கு நீ இவ்வளவு பேசியிருக்க வேண்டாம்... அவன் உன்னை கடுப்பேத்ததான் பண்ணானு, உனக்கும் தெரியும்ல அப்புறம் எதுக்கு இப்படி பேசுன... நீ அவன் மேல சாணி கொட்டி பண்ணதை விடவா, அவன் பெருசா பண்ணிட்டான் ' என மனம் மித்ரனுக்காக வாதாட "உன்னோட திருவாயை கொஞ்சம் மூடிட்டு இரு" என்று அதை அடக்கிவிட்டு வெளியே பார்த்துக்கொண்டு வந்தாள்

காரை கோவிலுக்கு அரைகிலோமீட்டர்க்கு முன்னாடியே நிறுத்தியவன் அவள் பக்கம் திரும்பியும் பார்க்காமல் காரை விட்டு இறங்கியவன் கார் டிக்கில் இருந்த பூஜை பொருட்களை எடுத்துகொண்டிருந்தான்

மிருணாவும் இறங்கி யாரையோ தேடவும் சொர்ணம் தான் "யாரடி தேடற "என்றார்...

"அது கிழவி அபி வரேன்னு சொன்னான், அதான் எங்க காணானு தேடிட்டு இருக்கேன் "என்றாள்

"போன் பண்ணி பார்த்துட்டு வா நாங்க முன்னாடி போறோம் "என்றவர் சொக்கலிங்கத்துடன் பூஜை பொருட்களை எடுத்துகொண்டு நடக்க ஆரம்பித்தார்...

மிருணா அபி வருகிறானா? என்று பார்த்துகொண்டிருக்க மித்ரன் காரின் டிக்கியை மூடுவிட்டு காரை லாக் செய்துகொண்டிருக்க மிருணாவின் பின்னால் இருந்து அபி "பே............" என்று கத்தினான்

அதில் பயந்த மிருணாவும் "ஆஆஆஆ" என்று கத்த.... "மிரு நான்தான்" என்றான்

"அடப்பாவி ஏண்டா இப்படி பயமுறுத்தர என்று கேட்டவள்... மூச்சி வாங்கினாள்

இவர்கள் இருவரும் செய்யும் சேட்டையை கடுப்புடன் பார்த்த மித்ரன் முன்னாடி நடக்க போகவும்

"அபி வா நடந்துட்டே பேசலாம் பூஜைக்கு டைம் ஆய்டும்" என்றாள்

இவர்கள் இருவரும் முன்னால் நடக்க பின்னால் மித்ரன் வந்தான்

"என்ன? இன்னிக்கு தாவணிலாம் கட்டி ரொம்ப அழகா இருக்க"...

"அப்படியா" என்றவள் திரும்பி ஓரக்கண்ணால் மித்ரனை பார்த்துவிட்டு

" ஏன் அபி கோவிலுக்கு வரேன்னு சொன்ன ... வீட்டுக்கே வந்துருக்கலாம்ல நீ வந்திருந்தா உன்னோட கார்லையே வந்துருப்பேன் ... நீ வரமா போகவும் கண்டவங்க கார்லலாம் வர வேண்டியதாயிடுச்சி" என்றாள்

"இந்த எக்ஸ்சஸ் அழகு எனக்காக காத்திருக்குனு தெரிஞ்சிருந்தா வேலை எல்லாம் விட்டுடு ஓடி வந்திருப்பேனே " என்றான் கொஞ்சம் சத்தமாகவே....

இவர்கள் இருவரும் பேசுவது அவ்வளவு சத்ததிலும் தெளிவாக கேட்டது மித்திக்கு

அவன் இவர்களை கடந்து வேகமாக செல்லவும் மிருணா அவனுக்கு பின்னால் மெதுவாக புன்னகைத்தாள்

"அபி உன்னைய கேக்காம விழா போட்டிலலாம் உன் பேர் கொடுத்துட்டேன் உனக்கு ஏதாவது பிரச்சனையா? " என்றாள்

"இப்படிலாம் கேக்கலாமா? நீ சொன்னா அந்த கோபுரத்துல இருந்துகூட குதிப்பேன் ... இந்த போட்டில கலந்துக்க மாட்டானா? " என்றான்

"அப்போ குதிச்சிடு, அபி பார்க்க ஆசையா இருக்கு" என்றாள்.

"அவ்வளவு தானே செஞ்சிட்டா போகுது ... என்ன ஒன்னு, கூட உன்னையும் கூட்டிட்டு போய் தான் குதிப்பேன் பரவாலையா? " என்றான்

"கிராதகா.... நீயலாம் ஒரு பிரண்ட்... போடா" என்றவள் அவனை அடிக்க துரத்த .. அவனோ ஓட ஆரம்பித்தாள்

இவர்களை பார்த்தாலும் பார்க்காதது போல் இருந்துகொண்டான் மித்ரன்...

கோவில் வரவும் அபியும், மிருணாவும் அமைதியாக நடந்து வந்தனர்...

மற்ற அனைவரும் கோவிலில் இவர்களுக்காக காத்திருக்கவும் மித்ரன் அவர்களுடன் வந்து இணைந்துகொண்டான்.. சக்திவேல் குடும்பமும் கோவிலில் இருந்தது

அவர்களை பார்த்ததும் மிருணா முறைத்துக்கொண்டு போய் ஆரூசாவின் பக்கதில் நிற்கவும் சக்திவேல் அவளை வாஞ்சையுடன் பார்த்தார் ...

கண்ணன் அவளை வெறுப்புடன் பார்க்கவும்" சரிதான் போடா" என்று வாயை அசைத்து அவனுக்கு பதில் கொடுத்தாள் ...

"இவளுக்கு இருக்கற திமிர் ஊர் உலகத்துல யாருக்கும் இருக்காது" என்று பக்கதில் இருந்து மித்ரன் காதில் அவன் ஓதவும் மித்ரன் மிருணாவை பார்த்துவிட்டு கண்ணனிடம் புன்னகைத்தான்....

கருணாவிற்கோ மிருணாவின் மேல் கோவம் அவள் அவன் காரில் ஏறவில்லை என்று, அன்று கம்பெனியின் நடந்த பிரச்சனைக்கு அப்புறம் அவள் அவனுடன் எங்கும் செல்லவில்லை.... இப்போது வருவாள் என்று நினைக்க ஆருசாவை அனுப்பிவிட்டு அவள் மித்ரன் காரிற்கு சென்று கொஞ்சம் கவலையாக இருந்தது

கதிர் கார் ஒட்டவும் கருணா முன்னாடி உக்கார்ந்திருந்தான் ... ஆரூசா கருணா பார்க்க மாட்டானா? என்று அவனையே மிரர் வழியாக பார்த்துகொண்டு வர அவனோ இவள் பார்ப்பது தெரிந்தும் அவளை பார்க்காமல் தவிர்த்தது வந்தான்...

காரைவிட்டு இறங்கி வரும்போது கூட ஒரு வார்த்தை பேசிட மாட்டானா? என்று ஏங்கி அவனை பார்க்க....அவன் மிருணாவுடன் சண்டை இட்டத்தை நினைத்துகொண்டு வந்தான்....

ஆரூசாவிற்கு கருணா அவளை தவிர்ப்பது புரிந்தாலும் காதல் கொண்ட மனம் அதை ஏற்றுகொள்ள மறுத்தது..... ஒரு சில நேரம் இவன் இப்படி பண்ணியும் நம்ப அவன் பின்னால போகணுமா? என்று வீம்பு தோன்றி அவனை பத்தி நினைக்காமல் இருப்பாள்... ஆனால் அவன் முகமோ இல்லை அவன் குரலோ கேட்டுவிட்டால் அவள் வீம்பு எல்லாம் ஓடி ஒழிந்துகொள்ளும்....

பூஜை ஆரம்பிக்கவும் எல்லோரும் சாமியை கும்பிட்டனர்.... வரிசையாக நிற்க கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது... திருவிழா என்றாலே சொந்தகாரர்களை அழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது தானே....

பூஜை முடியவும் யார் யார் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று கூட தெரியாமல் எல்லோரும் அலைமோத மிருணா சக்திவேலின் முன்புறம் நின்றாள்... அவரோ சாமியை கும்பிடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்... மகளை பக்கதில் பார்த்ததும் , இவள் தன் மகள் என்ற உணர்வில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்வாக இருந்தது... மிருணா பின்னால் திரும்பி பார்த்தாள் தான் அது சக்திவேல் என்பது தெரியும்

மிருணாவிற்கு ஒரு பக்கதில் வேணியும் மறுபக்கதில் சொர்ணமும் நிற்க பூஜை.முடிந்து தீர்த்தம் தெளிக்கபட்டது எல்லோரும் தீபாராதனை வாங்க முண்டி அடித்துகொண்டு முன்னே போகவும் வேணி பின் தங்கினார் அதை பார்த்த சக்திவேல்க்கு வேதனையாக இருந்தது .. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவர் என்ன? ஆனாலும் பரவால்லை என்று ஒரு முடிவுடன் தீபாதாரனை வாங்கிவிட்டு தட்டில் இருந்து திருநீரும் குங்குமமும் எடுத்தவர் ...

நேராக வேணியிடன் சென்று அவர் நெற்றில் குங்குமத்தை வைத்தார் சக்திவேல்....
 
Top