சக்திவேல் பொட்டு வைத்ததும் அதிர்ச்சியான வேணி, அவரை தள்ளிவிட்டு குங்குமத்தை அழிக்க போனார்.
அவர் கையை யாரோ? பற்றி தடுக்கவும், அது யார் என்று பார்த்த வேணி இன்னும் அதிர்ச்சி ஆனார்... அது வேற யாரும் இல்லை சக்திவேலில் மனைவி பத்மா தான்
"விடுங்கம்மா என்னை", என்று அவர்களை கைகளில் இருந்து தனது கைகளை பிடுங்க வேணி முயற்சி செய்யவும்
"இங்க பாரு வேணி இவ்வளவு நாள் இவர் மட்டும் உனக்கு துரோகம் பண்ணல , நானும் தான் துரோகம் பண்ணிட்டேன்... இவர் தப்பு பண்ணிட்டாரேன்னு, என் வாழ்க்கை போயிருமேனு கவலை பட்டேனே தவிர... உன்னோட வாழ்க்கை வீணா போய்டும்னு நான் நினைக்கல. ரொம்ப சுயநலமா இருந்து உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன்" என்றார் பத்மா
"அதுக்காக முடிஞ்சி போன விசியத்தை எதுக்கு?? திரும்ப திரும்ப தோன்றிங்க" என்றார் கோவமாக
"எது?? முடிஞ்ச போன விஷயம்"
என்று பத்மா கேள்வி கேட்க மித்ரன் சாமி கும்பிட்டு இவர்கள் பக்கதில் வந்தவன் இவர்கள் பேசுவதை கேட்டு விடவும் ...
"அத்தை என்ன நடக்குது?? இங்க"
என்று கேள்வியை பத்மாவிடமும் பார்வையை வேணியிடமும் பதித்து கேட்டான்.
முவரும் அமைதியாக இருக்கவும்
வேணியின் நெற்றில் இருந்த குங்குமத்தை பார்த்ததும் மித்ரனுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது ....
"சூப்பர் மாமா , இப்போவாது உங்களுக்கு தோணுச்சே "என்றவன் .... "மிருக்கு தெரிஞ்சா சாமி ஆடிடுவா" என்றான் புன்னைகைத்துக்கொண்டே
"மித்தி" என்று சக்திவேல் தயங்க
"வாங்க , அந்த பக்கம் போய் பேசலாம்" என்று மித்ரன் சொல்ல
நால்வரும் சற்று தள்ளிக் கோவிலுக்கு பின்னால் சென்றனர் .
கோவில் சுற்றி கூட்டம் இருந்ததால் இவர்கள் மெதுவாக தங்களுக்குள் வாதாட ஆரம்பித்தனர்
மீண்டும் நெற்றில் இருக்கும் குங்குமத்தை அழிக்க வேணி கையை கொண்டு போக
இப்போது மித்ரன் தடுத்தான், "என்ன பண்றீங்க நீங்க?? " ....
"இது எல்லாம் நடைமுறைக்கு ஓத்து வராது தம்பி, தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க " என்றார்....
"என்ன ஒத்து வராது, எனக்கு புரியலை புரியற மாதிரி சொல்லுங்க " என்றான்
"மித்தி நாங்க என்ன சொன்னாலும் ஒதுக்க மாட்டா வேணி , நீ தான் எடுத்து சொல்லி புரிய வை " என்றார் பத்மா
"அத்தை நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, என்னைய விட நீங்க பெரியவிங்க உங்களுக்கு நான் சொல்லணும் இல்லை " என்றான் பத்மாவை பார்த்தபடி
"தம்பி யார்?? என்ன சொன்னாலும் நான் என்னைய மாத்திக்கற மாதிரி இல்லை, இதனால ஊரு உலகம் எவ்வளவு கேவலமா பேசனும்னு உங்களுக்கு தெரியுமா? ... இவரால நான் ஒருதடவைப்பட்ட அவமானமே போதும் மறுபடியும் அவமானம் படற அளவுக்கு என் உடம்புலையும் தெம்பு இல்லை, மனசுலையும் தெம்பு இல்லை, அதும் இல்லாம இந்த பிரச்சனையால என்னோட பொண்ணை அவமானபட விடவும் விரும்பல" என்றார்.
"என்ன பேசறீங்க? நீங்க .... ஊரு உலகம்னு,, பேசறவிங்க பேசத்தான் செய்வாங்க . பேசறவீங்க ஒன்னும் நம்ப கஷ்டத்துல்ல பங்கெடுத்துக்க மாட்டாங்க ....வெளிய நின்னு வேடிக்கை தான் பார்ப்பாங்க ... அதனால அவங்கள பத்திலாம் யோசிக்காதிங்க... அவங்களுக்காக நம்ப வாழ்க்கையை தொலைக்க முடியுமா? சொல்லுங்க இல்லை பேசுறவிங்கதான் நம்ப வலியில் பாதியை வாங்கிக்க போறாங்களா??? " என்றான்
"இருந்தாலும் இவ்வளவு நாள் நான் இப்படி இருந்துட்டு , திடீர்னு மாறதுல எனக்கு விருப்பம் இல்லை தம்பி, நான் கடைசிவரைக்கும் இப்படியே இருந்துக்கறேன், என்னை விட்டுடுங்க ப்ளீஸ் "என்று கையை எடுத்து கும்பிட்டார்
"அப்போ யார் சொன்னாலும் கேக்கமாட்டீங்க? அப்படிதானே? "
"விடு மித்தி, அவங்க விருப்பம் நான் கடைசிவரைக்கும் இப்படியே குற்றவுணர்ச்சியிலையே சாகனும்னு இருக்கோ என்னமோ,, இது தான் என்னோட தலை எழுத்து "என்று புலம்பினார் சக்திவேல்
"ஒருத்தவிங்களுக்கு குற்றவுணர்ச்சியா இருக்குங்கறதுக்காக என்னைய நான் மாத்திக்க முடியுமா? " என்றார் வெடுக்கென்று....
வேணியை மூன்று பேரும் மாறி மாறி பார்க்க மற்ற அனைவரும் இவர்களை தேடிகொண்டிருந்தனர்.
"இங்க பாருங்க எல்லோரும் நம்மளைதான் தேடறாங்க .... சீக்கிரம் அங்க போகணும்"... என்றவன்..
."உங்களை போலதான் உங்க பொண்ணும் இவ்வளவு பிடிவாதமா கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லறா ....இப்படி அவ பிடிவாத்தோட இருந்தா என்னாலே எப்படி அவளோட குடும்பம் நடத்த முடியும் சொல்லுங்க, .... அவ இப்படி இருக்கறதுக்கு நீங்கதான் காரணம்" என்றான் மிருணாவை இழுத்து பேசினாலாவது மனதை மாற்றிக்கொள்ள மாட்டாரா என்ற எண்ணத்துடன்... அவர் யோசிப்பதை பார்த்ததும்...
"அவளை மாத்தணும்னா முதல நீங்க மாறனும், எங்க கல்யாணத்துல கன்னியாதானம் செஞ்சிகொடுக்கறது நீங்க ரெண்டு பேரா தான் இருக்கனும்" என்றான் முடிவாக
"எப்படி தம்பி? அது முடியும்" என்று வேணி தயங்கவும்
"எதுக்கும் ஒரு முடிவு வேணும் வேணி இவர் என்னோட வாழ்ந்தாலும், ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான் அனுபவிச்சிட்டு இருக்காரு, நீங்க கஷ்டபட்டதை போல இவரும் மனதளவில் கஷ்டப்பட்டுருக்கார்.... இப்போ இந்த முடிவால இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரும் வேணி ப்ளீஸ் " என்றார் பத்மா
மூவரும் மாறி மாறி பேசி வேணியை சம்மதிக்க வைத்தனர் ....
வேணிக்கு இதில் முழு ஈடுபாடு இல்லை என்றாலும் , நடந்தை மாற்ற முடியாது என்பதாலும் மற்றவர்களின் வற்புறுத்தலாலும் தான். வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டார்...
எல்லோரும் இவர்களை தேடுவதை பார்த்து அவர்களிடம் நால்வரும் செல்ல... வேணியை பார்த்த மற்றவர்களுக்கு அதிர்ச்சி என்றால், மிருணாவோ அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள் ... சிறிது நேரம் அனைவரிடமும் சலசலப்பு இருக்க அனைவருக்கும் புரியும் படி எடுத்து சொல்லும் பொறுப்பு மித்ரனின் தலையில் விழுந்தது...
அவன் கண் மிருணாவை பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்கு விளக்கம் சொன்னான், இதில் கண்ணனை தவிர மற்ற அனைவருக்கும் பரம சந்தோஷம்....
மிருணா எப்போது வெடிப்பாள் என்று தெரியாமல் எல்லோரும் அவளையே பார்க்க, அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்...
கண்ணன் தான் தாம் தூம் என்று குதித்தான்... அவனையும் மித்ரன் அடக்கிவிட... மீதி இருந்தது மிருணா மட்டும்தான் எல்லோரும் வீட்டிக்கு கிளம்பலாம் என்று நடக்க ஆரம்பித்தனர்...
மிருணா எதுவும் பேசாமல் அவர்களுடன் நடந்தாள் அவளிடம் வேணியும் ஆரூசாவும் மாறி மாறி பேச முயற்சி செய்ய அவள் யாரிடமும் பேசவில்லை...
அபிக்கு இங்க நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும், மிருணாவிடம் எதுவும் கேக்க வேண்டாம், ஏற்கனவே அவள் அதிர்ச்சியில் இருக்கிறாள் அவளை போய் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், என்று நடப்பதை வேடிக்கை பார்த்தான்...
மிருணா பேசாததால் வேணியின் முகம் வாடி இருப்பதை பார்த்த கதிர் வேணி மிரு அதிர்ச்சில இருக்கும் கொஞ்சம் நேரம் போனா சரி ஆய்டும் அதுவரைக்கும் தொந்தரவு செய்யம பிரீயா விடு என்று கதிர் சொன்னதால் அவளிடம் அதற்கு மேல் வேணி எதுவும் பேசவில்லை.... அவர் கண்ணில் கண்ணீர் குளம் கட்டியது... வாழ்க்கை முழுக்க கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தவர்க்கு இதுவும் ஒரு கஷ்டம் என்று நினைத்து கடந்துபோக வேண்டும் நினைத்துகொண்டார்.
எல்லோரும் கார் கிட்ட வர வரைக்கும் அமைதியாக வந்தனர்...
அதன்பின் அவரவர் காரில் ஏற.. மிருணா மட்டும் அபியின் காரில் சென்று ஏறிக்கொண்டாள்...
மித்ரன்" இவள் வருவாள் "என்று காரை எடுக்காமல் காத்திருக்கவும்... அவனை கடந்து போன அபியின் காரில் மிருணா இருப்பதை பார்த்தவனுக்கு கொலை வெறி உண்டானது...
அதை அடக்கிக்கொண்டவன் காரை வீட்டை பார்த்து ஓட்ட ஆரம்பித்தான்..
எல்லோரும் வீட்டிக்கு வந்ததும் ஒன்று கூடினர் ... மிருணா எதுவுமே பேசாமல் அவள் வீட்டுக்கு சென்றுவிட்டாள்... அவள் செல்வதை பார்த்த மித்ரன்
அதன்பின் காரை நிறுத்திவிட்டு அவள் பின்னால் போன அபியை கவனிக்கவில்லை
" மிரு அங்க என்ன நிலைமைல எல்லோரும் இருக்காங்க, நீ ஏன் எதுமே பேசாம இங்க வந்துருக்க" என்றான்.....
"என்ன பேச சொல்ற அபி .... இப்படி நடக்கனும்னு நான் எவ்வளவு நாள் ஏங்கிருப்பேன் தெரியுமா? அப்பா இல்லாமலே வாழறது ஒரு வித கஷ்டம்னா , அப்பா இருந்தும் இல்லாம வாழறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா? "
"எனக்கு அப்பா உயிரோட தான் இருக்காருனு கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடிதான் தெரியும்.... அது தெரிஞ்சப்ப நான் எவ்வளவு வேதனை பட்ருக்கேன் தெரியுமா? அந்த சமயம் எங்க அம்மாவை கருணாவையும் தவிர எனக்குனு கூட யாரும் இருந்தது இல்லை அபி என்று அடக்கி வைத்த கோவத்தையும், அழுகையும் கொட்ட ஆரம்பித்தாள்...
ஆனா இப்போ மட்டும் எங்கிருந்து இவ்வளவு பேர் வந்தாங்க அபி.... அப்பானு இன்னிக்கு அவர் பண்ணிருக்க காரியம் எங்க ரெண்டு பேரையும் வெளிய தலை காட்ட முடியாத அளவுக்கு கேவலப்படுத்திருச்சி... இப்போ இதை பண்றவரு இதையே என்னோட எதிர்க்காலத்தை மனசுல வெச்சி அப்போவே செஞ்சிருக்கலாம்ல, ஏன்? செய்யல ...
மிரு நாணயத்திற்கு 2பக்கம் இருக்குனு சொல்லுவாங்க , உன் பக்கம் இருந்து நீ பேசற.... அவர் பக்கம் இருக்கற நியாயத்தையும் நீ பார்க்கணும்ல....
அவள் எதுவும் சொல்லாமல் அழவும் அவளின் தோளில் தட்டி கொடுத்தான் அபி
மிருணாவை சமாதானம் படுத்த அபி அவளை அணைத்தார் போல் இருக்கவும் .... அழுதுகொண்டிருந்த மிருணா எதையுமே அறியவில்லை அவளுக்கு நடந்த விசியம் ஒருபக்கம் அம்மா நிலை மாறும் என்று நினைத்தாலும் ...இப்போது அவர் இப்படி செய்தால் சொத்துக்காக தாங்கள் அவரை வற்புறுத்தினோம் என்று மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா?? இவ்வளவு நாள் இல்லாத அக்கறை, பாசம் எல்லாம் இப்போது மட்டும் ஏன் வந்தது என்று நினைத்தாள்
அபி மிருணாவை அணைத்து ஆறுதல் சொல்லும் நிலையை வெளியே இருந்து மித்ரன், கருணா, ஆரூசா மூவரும் பார்த்தனர்....
மிருணா வந்தது இவ்வளவு நேரம் ஆகியும் அங்கு வராததால் கருணாவை பார்க்க சொன்னான் மித்ரன் ...
கருணாவோ அவள் என்ன மனநிலையில் இருப்பாள் என்பதை அறிந்ததால் ஆரூசாவையும் உடன் அழைத்துகொண்டு போனான்... இவர்கள் இருவரும் போனாலும் மனசு கேக்காமல் மித்ரனும் பின்னால் போக அபி. மிருணா இருந்த நிலை மூவருக்குமே அதிர்ச்சியை அளித்தது..
மித்ரனிற்கு கோவம் சொல்ல முடியாத அளவு வர.... மிருணாவை பற்றி தப்பாக நினைக்க தோன்றியது.... கோவமாக அங்கிருந்து கிளம்பியவன் மனம் இதுவரை இல்லாதா அளவிற்கு வெறுப்பை சுமந்து இருந்தது.......
இவ்வளவு நாள் அவளை பழிவாங்க வேண்டும் நினைத்திருந்தாலும் அவள் சம்மதத்துடன் கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைத்திருக்க.... இப்போது அவள் சம்மதம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி சீக்கிரம் கல்யாணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வந்தான் மித்ரன்...
இந்த முடிவால் யாராவது பாதிக்க படுவார்களா.????