கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 39

மிருணா சொன்ன வேலை எல்லாம் வேகமாக நடக்க ..மிருணாவும் கல்யாணத்தில் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் இருந்தாள்...

ஒருபக்கம் கட்டடம் எழும்ப, மறுபக்கம் கல்யாண வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தது

இதற்குள் கல்யாண புடவை எடுப்பது, நகை எடுப்பது எல்லாம் சாந்தியும் பத்மாவுமே செய்தனர், மிருணா ஒரு பார்வையாளராக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்

வேணியும் எல்லாத்துலையும் இருந்து தள்ளி நின்றார்

மிருணா கல்யாணப்பத்திரிக்கையை , ஆரூசா, அபிக்கு மட்டும் வைத்தாள்....

"ஆரு கல்யாணத்துக்கு 2நாளைக்கு முன்னாடியே வந்துடனும், நான் உன்னை தவிர வேற யாரையும் கூப்பிடல! என்றாள்

"நாங்க வராம இருப்போமா மிரு, கல்யாணத்திற்கு 4நாளுக்கு முன்னாடியே வந்தறேன்" என்றவள் அபியை பார்க்க அவனோ ஏதோ யோசனையில் இருந்தான்

"என்ன அபி யோசனை "?? என்று மிரு கேட்கவும்.... "நீ ரொம்ப ரிஸ்க் எடுக்கறியோனு" தோணுது

"ரிஸ்க்கா, நான் எதுக்கு அதுலாம் எடுக்க போறேன்?? ... நீ கண்டதையும் நினைச்சி பீல் பண்ணற, அதனால தான் இப்படி கண்டதையும் யோசிக்கற" என்றாள்

"சரி என்னமோ பண்ணு எனக்கு கோர்ட்க்கு டைம் ஆய்டிச்சி" என்று கிளம்ப

"சாரி அபி என்னால தானே கோர்ட்க்குல்லாம் போகவேண்டியதா ஆயிடுச்சி " என்றாள்

அவர்கள் இருவரும் பேசுவதை வினோதமாக பார்த்தாள் ஆரூ

"லூசு மாதிரி பேசாம போய் கல்யாண கனவு எப்படி காணறதுனு, ட்ரினிங் எடு" என்றவன் கிளம்பிவிட

ஆரூசா மிருணாவை பார்த்துவிட்டு !என்னடி எனக்கு தெரியாம, ஏதோ ரகசியம் பேசறீங்க??, என்ன பிராடுத்தனம் பண்றீங்க சொல்லுடி??

"ஒன்னும் இல்ல ஆரூ, இது அபிக்கு மட்டும் தெரிஞ்ச கம்பெனி விஷயம் அதான் உன்க்கிட்ட சொல்லல" என்றவள் கிளம்பிவிட்டாள்

மித்ரன் மிருணாவின் மீது ஒரு கண் வைத்திருந்தான்... அவள் எங்கு போகிறாள், யாரை பார்க்கிறாள் என்று எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டுதான் இருந்தான்...

மிருணாவின் மனநிலையோ கல்யாணம் நாள் நெருங்க, நெருங்க ஒருவிதப் பதட்டத்துடன் இருந்தது....

மிருணா சொன்ன எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் மித்ரன்... கருணா அவனுக்கு துணையாக இருந்தான்

இதை எல்லாம் பார்த்த மிருணாவிற்க்கு தான் "பழிவாங்கறேன்னு சொன்னான் ஆனா நான் சொன்ன எல்லாத்தையும் தட்டமா கேக்கறான், என்ன நடக்குது இங்க? எனக்கு ஒன்னுமே புரியலையே? ... என்று புலம்பியவளுக்கு, வெகுநாட்களாக மித்ரனிடம் கேக்கவேண்டும் என்று நினைத்தது இப்போதான் அவள் கண் முன் பூதகறமாக தோன்றியது,

நான் சொல்ற எல்லாத்தையும் கேக்கறானே, இதையும் கேட்டு பார்க்கலாமா?? என்று ஒரு எண்ணம் தோன்றவும் ஐயோ நான் கேட்டேன்னு அபிக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என்றும் நினைத்தாள்

இருந்தும் மனம் "கேட்டு பாரு செஞ்சா நல்லதுதானே" என்று நினைக்கவும் கல்யாணத்திற்கு மூன்று நாள் இருக்க... மித்ரனை பார்க்க சென்றாள்

அவன் கல்யாணம் வேலைகளில் பிஸியாக இருக்க, யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்தான்,

அவள் அவனுக்கு முன் வந்து நிற்பதை பார்த்தவன் போனில் இருப்பவர்களிடம் அப்புறம் பேசறேன் என்று சொல்லிவிட்டு இவளிடம் என்ன என்று புருவத்தை உயர்த்தினான்...

"அது அது "

"என்ன தந்தியடிக்கற.... நீ இப்படி தந்தியடிக்கிற ஆள் இல்லையே? சொல்லு, என்ன விஷயம்"?

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "

!அதை பேசத்தானே வந்துருக்க சொல்லு" என்றான்

"அபி மேல நீங்க கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிக்கணும்"

அதை கேட்டவனின் முகம் அப்படியே இறுகியது....

"எதுக்கு" என்றவனின் வார்த்தைகள் அடக்கப்பட்ட கோவத்தில் தெரித்து விழுந்தது...

"அது அது."....

"எது"?

"இல்லை, அவன் அப்படி பண்ணதுக்கு காரணம் நான்தான்" ...

"அதான் எனக்கு முன்னவே தெரியுமே"?

"இல்லை முழுக்காரணமும் நான்தான், நீங்க தண்டிக்கணும்னா என்னைத்தான் தண்டிக்கும். என்னை தண்டிக்கதானே இந்த கல்யாணம் அப்புறம் எதுக்கு அவன் மேல கேஸ் கொடுத்திருக்கிங்க, அதை வாபஸ் வாங்கிடலாமே? "..

அவளை உற்றுப்பார்த்தவன்.... "முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவ"...

"ப்ளீஸ் மித்து என்னை எவ்வளவு வேணா தண்டிங்க... அவனை எதுவும் பண்ண வேண்டாமே?? அவன் கோர்ட் கேஸ்னு அலையறனால அவனோட பிஸ்னஸ் பாதிக்கப்படுது, அவனோட கேரியர் பாதிக்குது , எனக்காக உதவி செய்ய போய் அவன் பாதிக்கப்படறதை என்னால தாங்கிக்க முடியலை"...

"ஓ தாங்கிக்க முடியாதவிங்க, இதை செய்யறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும், இப்போ வந்து ... கேசை வாபஸ் வாங்கிடுன்னு சொன்னா என்ன அர்த்தம், எவ்வளவு லாஸ் ஆயிருக்குனு தெரியுமா? அதுலாம் யார் தருவா? , நீயா தருவ... தரதுக்கு தான் உங்கிட்ட என்ன இருக்கு? .... இருக்கறவன் கிட்டாதானே கேட்கமுடியும்? " என்றான் மித்தி

"நான் தரேன், எவ்வளவு லாஸ் ஆயிருக்குனு சொல்லுங்க, என்னால முடிஞ்சதை தந்தரேன்"...

"கோடிகணக்கா லாஸ் ஆயிருக்கு உன்னால தர முடியுமா?? "

"முயற்சிசெய்யறேன்" என்றாள்

"அப்படிங்கற" என்றவன் "எனக்கு காசு, பணமாதான் வேணும்னு இல்லை வேற மாதிரி கூட தரலாம்" என்றவன் அவளை ஏற இறங்க பார்க்க...

"வேறமாதிரினா?? " என்றவளுக்கு புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது....

"அது நான் வேணும்ங்கறபோது, நானே கேட்டு வாங்கிக்கறேன்" என்றவன் அவள் காதின் பக்கதில் வந்து "அவனை காப்பாத்த, என்ன வேணாலும் தர முடிவோட இருக்க.... கேக்கறது நாங்கறதால இந்த முடிவு பண்ணியா?? இல்லை யார் கேட்டிருந்தாலும் இதுதான் முடிவு பண்ணிருப்பியா?" என்றான்

அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் மிருணாவிற்கு இதயத்தை ரம்பம் கொண்டு அறுப்பது போல் இருந்தது, அவனின் கேள்வியில் கண்களில் இருந்து கண்ணீர் வர

"சரி நான் கேஸை வாபஸ் வாங்கிக்கறேன்... நீ சொன்னதை மறந்தறாத".... என்றவன் அவளுக்கு முன்னாடியே போலீஸ்க்கு போன் பண்ணி "சார் என்னோட கேஸ் மிஸ்டர் அபிஷேக் மேல் கொடுத்த கம்பளைண்டடை வாபஸ் வாங்கிக்கறேன், இந்த விசயமா என்னோட லாயர் வருவாரு", என்றான்

அந்த பக்கம் என்ன பேசினார்களோ? "சரிங்க சார் நானே வரேன்" என்றான் மிருணாவை பார்த்துக்கொண்டே

அவள் இவன் பார்த்தும் குற்றவுணர்வில் தலைகுனிந்தாள்

போனை வைத்தவன்.... "எதுக்காக நீங்க 2பேரும் அப்படி பண்ணிங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா"?

"அது அது"....

"இன்னிக்கு தான் உன்னை இந்த மாதிரி பார்க்கறேன், இதுவும் நல்லாதான் இருக்கு" என்றவன் அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதை கேக்காமலே அங்கிருந்து கிளம்பிவிட்டான்

போற அவனையே பார்த்தவள் "எல்லாம் உனக்காக செஞ்சது தான்" என்று சொல்லியவள்...

"யார் கேட்டாலும் இதை சொல்லிருக்க மாட்டேன் ....ஏன்னா அபிக்கு அவனோட கேரியரே போனாலும் என்னை யார்கிட்டையும் எதுக்காவும் நிற்கவைக்க மாட்டான்" என்றாள்.

போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்த மித்ரன் . மிருணாவிடம் வந்து "இந்தா கேஸ் வாபஸ் வாங்குன பேப்பர்... நான் சொன்னதை செஞ்சிட்டேன், நீயும் நான் கேக்கறதை செய்ய தயாரா இரு" என்றவன் சென்றுவிட்டான் ..

அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலையில் வீடே கோலாகலம் கொண்டது...

மித்ரன் -மிருணாவிற்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க

ஆரூசா மிருணாவை சந்தோசப்படுத்த பாட்டு பாடி டேன்ஸ் ஆடினாள்...

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்
அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போக்ஹும்
தான தனதான தந்தானே ...

அடி பஞ்சு மேதையில - ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜெயகுமே
இதை பாடும் போது மிருணாவின் கன்னம் இரண்டும் ரோஜா பூவை போல சிவந்து இருந்தது அது அவள் கன்னத்தில் பூசியிருந்த மஞ்சளையும் தாண்டி தெரிய...அவளை ஒரு மாதிரி பார்த்தான் மித்ரன்

அவளின் பாட்டு மிருணாவிற்காக இருந்தாலும் அவளின் மனது அது கருணாவிற்கு என்று சொன்னது அதனால் அவள் பார்வை முழுவதும் கருணாவை சுற்றியே இருந்தது

கருணாவும் அதை புரிந்துகொண்டானோ என்னவோ அவன் மித்ரன் பக்கத்திலையே இருந்தான்....

கண்ணனும் ஆரூசாவுடன் சேர்ந்து ஆட அதைப்பார்த்த கருணாவும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்

ஒரு பொண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ புத்தி சொல்லி கொடுப்ப
தான தனதான தந்தானே ...

அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்...

அனைவரும் சந்தோசத்தில் திளைக்க,அபி மட்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கோவமாகவே இருந்தான்
 
Top