கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள் -முகிழ் 4

மித்திரன் எவ்வளவுதான் கோவமாக வேணியிடம் நடந்துகொண்டாலும் வேணிக்கு அவன் மீது மட்டும் கோவமே வருவதில்லை, அதற்கு காரணம் பிறந்ததில் இருந்து மித்திரனை சாந்தி வைத்திருந்ததை விட வேணி வைத்திருந்தது தான் அதிகம் அதனால் எப்போதும் வேணிக்கு மித்திரன் மீது தனி பாசம் உண்டு

அடுத்த வந்த நாட்களில் மிருணாவை ஸ்கூல்லில் சேர்த்துவதற்காக வேணி அலைந்து கொண்டிருந்தாள் ..

அந்த செய்தி எப்படியோ சொர்ணத்திடம் சென்றது... வேகமாக வேணியை பார்க்க வந்தவர் பிள்ளையை படிக்க வைக்க போறின்னு கேள்விபட்டேன் உண்மையாவா என்றார்

ஆமாம்மா அவளை ஸ்கூல்லுக்கு அனுப்ப கேட்டுட்டு வந்துருக்கேன் என்றாள்

பண்ணையத்துல இருக்கறவளுக்கு எதுக்குடி படிப்பு...... உன்னோட பிள்ளையும் என்னோட பேரனுக்கு சமமா படிச்சா அப்புறம் உனக்கும் எங்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கு என்றார் கோவமாக

அம்மா நான் தானே பண்ணையத்துல இருக்கேன், என்னோட மகள் பண்ணையத்துல இல்லையே? அவளை படிக்க வைக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம், என்றார்

ஏய் எதிர்த்து பேச்சிக்கு, பேச்சி, பேசி பழகிட்ட, இது எல்லாம் என்னோட பையன் குடுக்கற தைரியத்துல தானே ஆடிட்டு இருக்க... ஆடுடி ஆடு எவ்வளவு நாள் ஆடுறனு நானும் பார்க்கறேன் என்றார்....

அம்மா இதுல எதுக்கு சின்னையாவை இழுக்குறிங்க.... அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது என்னோட முடிவு தான்.. இதுல நான் உறுதியா இருக்கேன் என்றாள்

அவளை மேலும் கீழும் பார்த்த சொர்ணம் சரிடி ஸ்கூல்ல பிள்ளைக்கு அப்பன் யாரு, அப்பன் பேரு சொல்லுங்கன்னு கேப்பாங்களே அப்போ என்ன பண்ணுவ என்று அடுத்த அஸ்திரத்தை எய்தார்.

அப்பா செத்து போய்ட்டார்னு சொல்லுவேன்... என்னோட பேரை இன்சிலா போட சொல்லுவேன் என்றாள் வேணியும் வேகமா, அவள் மனதில் எப்படியாவது மகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வேகம் இருந்தது... எங்கே ஏதாவது காரணம் சொல்லி தன்னை போல் தன் மகளையும் மாற்றி விடுவார்களோ என்ற பயம் அவள் அடிமனதின் ஆழத்தில் நெருப்பு கங்கு போல் கிடந்து வேணியை அவ்வவ்வ போது அவளை சுட்டு பொசுக்கிக்கொண்டிருந்தது,

அதனால் யார் என்ன சொன்னாலும் தன் மகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் வேணி

பூ, பொட்டு வெச்சிக்கிட்டு இப்படி சுத்தறப்ப உனக்கு புருஷன் இல்லனு சொல்றதை எவண்டி நம்புவான்... யார்கிட்ட காதுகுத்த பார்க்கற என்றவர்
முடிவா சொல்றேன் உன்னோட பிள்ளை அந்த குட்டி பிசாசு படிக்க போகக்கூடாது... என்றவரை பார்த்து வேணி

அப்படிலாம் பண்ண முடியாதும்மா கண்டிப்பா மிருணாவை படிக்க வைச்சே தீருவேன் என்றவள்.... இதுக்காக நீங்க என்னை இங்க இருந்து வெளிய அனுப்பினாலும் பரவாலை என்றாள்

அதன்பிறகு எதுவும் பேசாமல் சொர்ணம் அங்கிருந்து சென்று விட்டார் ... ஆனால் அவர் மனதில் வேற ஒரு எண்ணம் இருந்தது அது என்ன என்றால்

இப்போது இவளை வெளியே அனுப்பிவிட்டாள் இவள் எப்படியாவது தன் மகளை படிக்க வைத்து விடுவாள், ஆனால் அதுவே இங்கையே இருந்தால் நம்ப ஏதாவது செய்து அந்த குட்டி பிசாசை படிக்கவிடாமல் செய்து விடலாம் என்ற கெட்ட எண்ணத்தில் தான் சொர்ணம் அப்போது எதுவும் பேசாமல் சென்றது...

ஆண்டவன் எப்போதும் ஒரே பக்கமாகவா இருப்பான் அப்போ அப்போ நல்லவிங்க பக்கமும் எட்டி பார்ப்பான் என்பது போல வேணி மிருணாவை பல எதிர்ப்புகளை தாண்டியும் படிக்க வைத்தாள்.

சொர்ணம் சண்டை போட்டு விட்டு சென்ற அடுத்த நாள் வேணி மிருணாவை ஸ்கூலில் சேர்க்க போவதற்கு கிளம்பி வெளியே வந்தாள் அவளை பார்த்த அங்கிருந்தவர்களின் கண்களில் அவர்களையும் அறியாமல் கண்ணீர் வந்தது...

வேணியை பார்த்த சாந்தி.... பதறிபோய் அவளிடம் வந்தாள்

ஏய் என்னடி கோலம் இது என்றவளை ..

நான் பாப்பாவை ஸ்கூல் சேர்க்க போறேன்...சின்னம்மா அதுக்குதான் இந்த கோலம் என்று தன்னை மேலே இருந்து கீழே வரைக்கும் காட்டினாள்

என்ன விளையாடறியா? இப்படிலாம் செய்ய சொல்லி உன்னை யார் சொன்னது... ஒழுங்கா போய் டிரஸ் மாத்திட்டு வா...

இல்ல சின்னம்மா. என்னோட பிள்ளையை நான் படிக்க வைக்கணும்னா எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவேன்.... இதுலாம் எனக்கு சாதாரணம்...

அதுக்கு நீ இப்படி விதவை கோலம் போட்டுதான் செய்யணுமா?? நான் உங்க சின்னையா கிட்ட சொல்றேன் அவரே கொண்டு போய் மிருவை ஸ்கூல்ல சேர்த்துட்டு வருவாரு. முதல இந்த கோலத்தை கலைச்சிட்டு வா

இல்ல முடியாதும்மா நான் இனி இப்படிதான் இருக்க போறேன் இதுதான் நான் செஞ்ச தப்புக்கு தண்டனை.... என்னோட பிள்ளையை ஸ்கூல் சேர்க்கும் போது அப்பா எங்கனோ? அப்பா பேர் என்னனோ யாரும் கேக்க மாட்டாங்க அப்படியே கேட்டாலும் என்னோட பெயரை நான் இனிசியலா குடுத்துப்பேன் என்றவள் மிருவை அழைத்துகொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்

பிள்ளையை எப்டியோ ஸ்கூல்லில் சேர்த்துவிட்டு வந்தவளை ரோட்டில் சில நாய்கள். ஏய் இங்கபாருடா இவ வெள்ளை சீலை கட்டிருக்கா... புருஷன் செத்துபோய்ட்டானோ என்றான் ஒரு நாய்

புருஷன் செத்துபோகலைடா இவளை கெடுத்துட்டு ஓடி போய்ட்டான் என்றது இன்னொரு பொறுக்கி நாய்

அப்போ நீ சொல்லறதை பார்த்தா இவளுக்கு புருஷன் இல்லை சரியா

ஆமாண்டா...

அப்போ நம்ப வேணா புருஷனா போலாமா?? என்று வேணியை பின் தொடர்ந்து வந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.

போலாமே... இவ அப்படி ஒன்னும் பழைய பீஸ் மாதிரி தெரியலை... ஒருநாள் தொட்ட ரோஜா தான் போல...

ஆமாண்டா அணில் கடிச்ச பழத்துக்கு தானே ருசி அதிகம் என்றவன் பேசி கொண்டே வேணியின் மீது கையை வைத்தான்...

வேணிக்கு எங்கிருந்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ காலில் கிடந்த செருப்பை எடுத்து அவனை சாரமாறியாக தாக்கினாள்...

ஏய் என்னடி பண்ணற என்று அவள் கையை பிடித்தான் இன்னொருவன்

டேய் கையை தொட்டனா உனக்கு செருப்பு தான், எதுவா இருந்தாலும் 2 அடி தள்ளி நில்லுங்க என்றவள்... ஏன்டா ஒரு பொண்ணை தனியா ரோட்ல நடமாட விடுறிங்களா.... நான் கெட்டு போனேன்னு சொல்றிங்களே நானா எவனையாது தேடி போனேன்... சின்ன பொண்ணு தனியா இருக்கானு இப்போ நீங்க பண்ண கேடுகெட்ட வேலையை தானேடா அவனும் எனக்கு பண்ணிருக்கான்... அப்போ என்னால போராட முடியலை அதனால தானே நான் இந்த நிலையில இருக்கேன் இப்படி ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையும் ஏன்டா கெடுக்கவே அலையறீங்க , உங்களுக்கு எல்லாம் அக்கா தங்கச்சி இல்லை, ஒரு பொண்ணுதான் தேவைன்னா அதுக்குன்னு இருக்கறவிங்க கிட்ட போக வேண்டிதானே எதுக்கு எல்லா பொண்ணுங்க வாழ்க்கையையும் கெடுக்கறிங்க. அப்போ என்னால போராட முடியலை ஆனா இப்போ எனக்கு அதுக்கான தைரியம் இருக்கு... தொட்டு பாருங்கடா பார்க்கலாம். என்றவள் அவர்களை நோக்கி செருப்பை வீசினாள்

அந்த தெரு பொறுக்கிகள் தலை குனிந்த வண்ணம் இருக்க... இனிமே தினமும் 2தடவை இந்த ரோட்ல போய்ட்டு வருவேன் எவனாவது என் கிட்ட மட்டும் இல்லை எந்த பொண்ணுக்கிட்டையாவது தப்பா நடக்க முயற்சி செஞ்சிங்கனு தெரிஞ்சது... ஸ்கூல் பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு அப்புறம் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிருவேன் என்றவள் செருப்பை போட்டுகொண்டு அங்கிருந்து கிளம்பினாள்

என்னடா இவ இப்படி பேசுறா என்று ஒருவன் சொல்ல எல்லா பொண்ணுங்களும் அந்த மாதிரினு நினைக்கறது தப்புதானே என்று பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றனர்..
 
Top