கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 40

மித்ரனிற்கும் மிருணாவிற்கும் மஞ்சள் நலங்கு வைத்து முடிந்ததும் அவர்கள் இருவரையும் கல்யாணம் வரைக்கும் பார்த்துக்கவேண்டாம் என்று சொல்லி அவரவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.......

மிருணா குளித்துவிட்டு.... ஆரூசாவுடன் பேசிக்கொண்டிருக்க அவளை பார்க்க சக்திவேலும், பத்மாவும் வர.... அவர்களுடன் கண்ணணும் வந்தான்.....

அவரைகளை பார்த்ததும் மிருணா எழுந்து நிற்க.... "மித்ரனுக்கு தாய்மாமா நான்தாங்கற முறைக்கு கல்யாணப் பொண்ணுக்கு நாங்கதான் தாலி செயின் போடணும் அதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றார்.....

அவரின் பார்வை மிருணாவை வாஞ்சையாக தடவி சென்றது.. அவள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டவள் "அம்மா எதா இருந்தாலும் சீக்கிரம் வாங்கிட்டு அனுப்பும்மா" என்றாள் கோவமாக

வேணி அவளை முறைத்துவிட்டு "பத்மா அம்மா எதுக்கு இந்த சடங்கு எல்லாம்?? "... என்று அவர் தயங்க

"செய்யணும் தானே வேணி, அப்புறம் எங்களை தான் தப்பா பேசுவாங்க தாய்மாமா முறைக்கூட செய்ய வக்கு இல்லாதவங்க இல்லையே?? நம்ப" என்றார் பத்மா மிருணாவை பார்த்துக்கொண்டே

அவள் இவர்கள் இருந்த பக்கமே பார்க்காமல் இருக்கவும் "மிருணா" என்றார்

அவர் அழைத்ததும் என்ன என்பது போல மிருணா பார்க்க...

"வாம்மா" என்றார்

அவள் தயங்கவும் வேணி "போ" என்று கண் ஜாடை காட்டினார்

மிருணா பத்மாவின் பக்கத்தில் போக அவளுக்கு ஒரு டைமண்ட் நெக்லசை கழுத்தில் போட்டுவிட்டவர்

"இதுலாம் வேண்டாம் " என்றாள்

"இது எங்க மருமகனோட மனைவிக்கு செய்ய வேண்டிய சீர்"என்றவர்.... அதை போட்டுவிட்டு அவள் தலையில் பூ வைத்துவிட்டு நெத்தியில் முத்தம் கொடுத்தார்....

அதை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டவள் உள்ளே சென்றுவிட "அவ சின்ன பொண்ணும்மா , சீக்கிரம் மனசு மாறிடும், நீங்க எதையும் மனசுல வெச்சிக்காதிங்க" என்றார் வேணி

"நீ சொல்லவே வேண்டாம், அவளும் என்னோட பொண்ணுதானே" என்றவர்..... சக்திவேலை பார்க்க... அவர் சந்தோசத்தில் "ஆமா" என்று தலையை ஆட்டினார்

இவர்கள் சென்றதும் மிருணா கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று படுக்க போனாள்,அப்போ அவளது போன் அடிக்கவும் எடுத்தவள் புது நம்பராக இருக்கவும் போனை அட்டன் செய்ய கொஞ்சம் யோசித்தாள்...

" எடுத்து பேசுடி நம்ப பிரண்ட்சாக கூட இருக்கலாம்" என்றாள் ஆரூசா...

"சரி" என்று போன்னை எடுத்தவள் ஹலோ என்றாள்..

"ஹாய் பொண்டாட்டி என்ன பண்ற??? " என்றான் மித்ரன்

முதன் முறையாக போன் செய்தவன் பொண்டாட்டி என்றதும் மிருணா முன்ன மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் அவனை வறுத்து எடுத்திருப்பாள். ஆனால் இப்போ இருக்கற மிருணா அப்டி எதுவும் செய்யாமல் அமைதியா " ம்ம்" என்றாள்

"ம்ம் சொன்னா என்ன அர்த்தம்? சொல்லு"...

"தூங்கப்போறேன்"

"மாமனை நினச்சா உனக்கு தூக்கலாம் வருமா?? " என்றான் கிண்டலாக

"இவன் என்ன இப்படி பேசறான்.???? இவ்வளவு நாள் ஒரு கால் பண்ணி பேசிருப்பானா?, இப்போ மட்டும் என்ன?? என்று நினைத்தவள்..நீ மட்டும் என்ன அவனுக்கு தினமும் போன் பண்ணி பேசிட்டு இருந்தியா? என்று மனது கேள்வி கேக்க...அந்தப்பக்கம் மித்ரனோ சத்தம் கேக்காமல் "ஹெலோ ஹெலோ" என்று கத்திக்கொண்டு இருந்தான்...

"ம்ம் இருக்கேன் சொல்லுங்க".....

"நான் கேட்டதுக்கு பதில்"?

"நான் நல்லா தூங்கனும்னு நினைக்கறேன்"என்றவள்... போனை வைத்துவிட்டாள்

திரும்ப மித்ரனும் அழைக்கவில்லை

இருவரின் மனநிலையும் அவர்களின் கடந்தகாலங்களை பற்றி நினைத்துகொண்டிருந்தது....

அடுத்தநாள் எல்லோரும் முன்னிலையில் நிச்சியப்பத்திரிகை படித்து முடிக்க..... மிருணாவிற்கு மோதிரம் போட்டுவிட்டான் மித்ரன்

அடுத்துநாள் காலையில் பிரம்ம மூகூர்த்ததில் கல்யாணம் வைத்திருந்தனர்.... அதன்பின் ரிசப்சன் வைத்திருக்க...... எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்....

மிருணாவின் மனம் ஓரளவிற்கு அமைதி அடைந்திருந்தாலும் முழுதாக எதையும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் அவளுக்கு மனம் பக்குவப்படவில்லை.... மித்ரன் சொன்ன ஒரு வார்த்தை அவள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது....

சின்னவயசில் அவனால் அவள் பட்ட காயத்தைக்கூட மன்னித்தவலாள் இந்த வார்த்தை மன்னிக்க முடியவில்லை... இவளின் நிலை இப்படி இருக்க

அங்கு மித்ரனோ .......மிருணா அபிக்காக அவன் கேப்பதை தருவேன்னு சொன்னதை நினைத்துப் பார்த்துகொண்டிருந்தான்..... அவனாக அவளுக்கு போன் பண்ணி பேசிய போதுகூட அவளால் பேசமுடியவில்லை, அவன் மறைமுகமாக அவனை நினைக்க சொல்லியும் அவளும். முடியாது என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டாளே? அப்போ அபி சொன்னது போல....அவனைத்தான் காதலித்தாளோ?? , இவளுக்காக அவன் என்ன வேணாலும் பன்றான் ... அவனுக்கு ஒன்னுனா இவ அப்டியே பதறா , ஒன்னும் சரில்லையே? என்ற எண்ணம் தோன்ற, இருக்காது இல்லனா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதித்திருக்க மாட்டாளே என்ற எண்ணமும் கூடவே தோன்றியது ஒரு வேலை இப்படி இருக்குமோ? ஏதாவது காரணம் வைத்துகூட என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிருக்கலாம்ல என்று மனம் சொல்ல குழம்பி போய் தவித்தான் மித்ரன்....

என்னவா இருந்தா என்ன மித்து கல்யாணம் ஆகட்டும் அப்புறம் அவளை நீ சிறப்பா செஞ்சிடமாட்ட என்று சொல்லிக்கொண்டவன்

" அவகாரணம்லாம் இருக்கட்டும், நீ என்ன காரணதுக்கு கல்யாணம் பண்ணற" என்று மனம் கேள்வி கேட்கவும் மித்ரன் தனது வலது கையால் தலை முடியை கோதிக்கொண்டே சிரித்துக்கொண்டான்...

அவன் அன்று இரவு வெகு நேரம் ஆகியும் தூங்காமல் இருந்தான்

அடுத்தநாள் காலையில் கல்யாண மேடையில் மித்ரன் வேட்டி சட்டையில் கம்பீரமாக உக்கார்ந்திருந்தான்....

கருணா கல்யாணத்திற்கு வருபவர்களை வரவேற்று உக்காரவைத்துக்கொண்டிருந்தான்.... ஆரூசாவின் பார்வை முழுவதும் தன்னை தான் சுற்றியே இருப்பதை அவனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்...

அப்போ அப்போ ஆரூசாவை சுற்றி கண்ணன் வருவதை பார்த்தவன் மனம் ஏதோ சொல்ல.... வேகமாக அவள் பக்கதில் போனவன்... "ஏய் ஒழுங்கா ஒரு இடத்தில் இருக்க மாட்டியா?, எப்போ பாரு எங்கையாவது சுத்திட்டே இருக்க"? என்று கத்தினான்

"என்ன கருணா, ஏன் இவ்வளவு கோவம் மண்டபத்தில் வேலை இருக்கும்ல அதான்" என்றாள்.... தயங்கியபடி

அதற்கு மேல் என்ன சொல்வது? என்று கருணா அங்கிருந்து சென்றுவிட்டான்

மிருணா அரக்கு கலர் பட்டுப்புடவை அணிந்து அதற்கு மேட்ச்சாக நகைகளை அணிந்திருந்தவளை அழைத்துக்கொண்டு மேடைக்கு வந்தாள் ஆரூசா

அவளை பார்த்த மித்ரனின் கண்ணில் மின்னல் வந்தது.... "பார்க்க ஓட்டட குச்சி போல இருந்தா, இப்போ கொஞ்சம் பூசுனா மாதிரி இவ்வளவு அழகா மாறிட்டாளே? " என்று நினைத்திக்கொண்டே ஐயர் சொன்ன மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தான்

அவன் பக்கதில் உக்கார்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க அதற்காவே காத்திருந்தது போல அவளை பார்த்து கண் அடித்தான்....

அது அவள் உயிர் வரை சென்று தீண்டியது போல இருந்தது...

"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்று ஐயர் சொல்லவும்....

தாலியை வாங்கி அதை மிருணாவின் பக்கதில் கொண்டு போனவன்

"கட்டட்டுமா?? " என்றான்

"இது என்ன கேள்வி"?? என்று கேட்டவளின் கண்கள் கலங்க...

"இப்போ எதுக்கு அழறா?? ... என்னை கல்யாணம் பண்ணிக்க போறோமேன்னு அழறாளா?? " என்று நினைத்தவன் கை ஒரு நிமிடம் தாலியை தாங்கியபடி நின்றது.... அதன்பின் என்ன நினைத்தானோ வேகமாக அவள் கழுத்தில் தாலியை கட்டினான்....

பெரியவிங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்று ஐயர் சொல்ல..... இருவரும் தாத்தா, பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்

பின்பு கதிர், சாந்தியிடம் வாங்கினர்... அடுத்து சக்திவேலிடம் மித்ரன் போக.... மிருணா தனியாக நின்றாள்...

அவளை திரும்பி பார்த்தவன் கண்களால் "வா" என்று கட்டளை இடவும்... "முடியாது" என்றாள்

அவளை முறைத்தவன்.. அவள் அருகில் சென்று கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தவன் சக்திவேல் பத்மா காலில் விழுந்தான்....

இருவரும் எழுந்ததும் சக்திவேல் மித்ரனை கட்டிக்கொண்டார்....

மிருணாவிற்கு இது எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் மித்ரனை விட்டு விலகியும் போகவில்லை....

இருவரும் சென்று ரிசப்ஷனுக்கும் தயாராகி வர... எல்லா விசேஷமும் அமோகமாக நடந்தது.... இதுவரைக்கும் கர்ணா மிருணாவிடம் பேசவில்லை..

கருணா மித்ரன் பக்கதில் வந்து வாழ்த்து சொல்ல தனக்கும் சொல்லுவான் என்று எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்...

ஆனால் கருணா அவளிடம் பேசாமல் அவர்களுடன் இரண்டு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்....

போகும் அவனையே பார்த்த மிருணாவை..." அவன் கிட்ட நீ எதையோ மறச்சிருக்க, அதான் அவன் இவ்வளவு கோவமா இருக்கான் போல என்று போட்டு வாங்கினான் மித்ரன்...

அவள் "ப்ச்"என்று தலையை திருப்பிக்கொள்ள "இதுக்குலாம் இருக்குடி உனக்கு" என்று கறுவிக்கொண்டான்,

அந்த இரவை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மிருணா
 
Top