கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 41

கல்யாணம் மண்டபம் முழுவதும் கண்களால் அபியை தேடினாள் மிருணா அவளின் தேடலை பார்த்த மித்ரன் "யாரை தேடற? கருணாவை வர சொல்லட்டுமா, அவன்கிட்ட சொல்லி நீ தேடறவிங்கள வர சொல்லலாம்" என்றான்

"இல்ல வேண்டாம் "என்றவள் போட்டோவிற்கு போஸ் கொடுக்க ....

"சொல்லுடி யாரை தேடறனு"? என்றான்

"கல்யாணம் பண்ணிட்டா டி போட்டு கூப்பிடணும்னு இருக்கா"? என்றாள்

"நான் இப்போதான் உன்னை டி போட்டு கூப்பிடறானா? என்றவன் அப்டிதான் கூப்பிடுவேன்" என்றான்

இருவரும் மேடையில் வாதாட, அதை பார்த்துவிட்டு வந்த ஆரூசா " கீழ இருக்கறவிங்க நீங்க பேசிக்கறதை பார்த்தா சண்டை போடுறிங்கனு நினைச்சிப்பாங்க"எதுக்கு இப்படி ஆர்க்யூ பண்ணிக்கறிங்க"? என்றாள்

"ஆரூ, அபி எங்க? காலைல இருந்து நான் பார்க்கவே இல்லையே "என்றாள்

அவள் அபியைதான் தேடியிருக்கிறாள் என்று தெரிந்ததும் மித்ரன் முகம் கடுமையானது

"அண்ணா இங்கதான் இருந்தாங்க இரு பார்க்கறேன் "என்றவள் அபியை தேட மேடையை விட்டு கீழே இறங்க போக அப்போது மித்ரனிடம் எதையோ கேக்க வேகமா மேலே வந்த கருணாவின் மீது இடித்து விழப்போனாள்.....

அவள் விழாமல் இருக்க கருணா அவளை தாங்கினான், இமைக்கும் நொடிகளில் இது நடந்து விட கேமரா மேனும் அதை தனது கேமராவில் பதிவு செய்துக்கொண்டார்..

அவளை நிற்க வைத்தவன் "உன் கண்ணு என்ன பிடறிலையா இருக்கு? என்றான்

அவன் சொன்னதை கேட்டவள் முகம் சோகத்தை தத்தெடுத்துக்கொள்ள.அதை பார்த்தவன் "சரிப் பார்த்துப் போ" என்றான்

இங்கோ மித்ரனிடம் கேமராமேன் போராடிக்கொண்டிருந்தார்

"சார் கொஞ்சம் சிரிங்க, சார் ப்ளீஸ்" என்று கெஞ்சிப்பார்த்து விட்டார் அவன் சிரித்தப்பாடுதான் இல்லை

ரிசப்ஷன் முடியும் தருவாயில் வந்த அபி, அவர்களுக்கு என்று வாங்கிய கிப்ட்டை கொடுத்துவிட்டு கடமைக்கு 2போட்டோ எடுத்துக்கொண்டான்...

போட்டோவிற்கும் அபி மிருணா பக்கதில் நிற்க... அவள் மெதுவாக "எங்கடா போன ஆளையே காணல"? என்றாள்

"நான் எங்க போனா உனக்கு என்... அதான் கல்யாணத்துக்கு வந்துட்டேன்ல" .... என்றான் வெடுக்கென்று

"ஏண்டா இப்படி பேசற" என்றவளின் குரல் கம்ம

"இது கல்யாணம் மேடை இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்க நீ , என்று கண்களால் மித்ரனை காட்டி மெல்லிய குரலில் மிரட்டினான், அவன் இவர்கள் இருந்த பக்கமே திரும்பவில்லை, " ஹாப்பி மேரைட் லைப்" என்ற அபி, வேகமா கீழே இறங்கி போய்விட்டான்

அதன்பிறகுதான் மிருணாவிற்கு ஒரு தெளிவு வந்தது.... அவள் நார்மலாக இருக்க மித்ரனை அப்நார்மல் ஆகிவிட்டாள்....

மணமக்களை சாப்பிட அழைத்து சென்றனர் .. மித்ரனுக்கு கோவம் இருந்தாலும் அவன் செய்ய வேண்டிய கடமையை சிறப்பாக செய்தான்..... மிருணாவிற்கு ஊட்டிவிட அவளோ எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாங்கிகொண்டாள்....

சாப்பிட்டுகொண்டிருந்தவள் அங்கு இருந்த போஸ்டரை பார்த்தாள், அதை பார்த்ததும் ஆச்சரியப்பட்டாள்

"என்ன!! இது" என்று மித்ரனிடம் கேட்டவள் கண்களால் தன் புடவை தடவிப்பார்த்துக்கொண்டாள்...

அவன் எதுவும் சொல்லாமல் இருக்கவும் மிருணா அந்த போஸ்டரை சாப்பாட்டு கையோடு சென்று படிக்க ஆரம்பித்தாள்

மித்ரன், மிருணா கல்யாணத்தை பற்றி ஊரே அதிசயம் போல் பேசியது.... இதுபோல் கல்யாணம் முழுவதுமே எல்லாம் இயற்கையாக இருந்ததை இதுவரை யாரும் எந்த கல்யாணத்திலும் பார்த்ததில்லை...

மண்டபம் முன் எல்லாம் தென்னை, பனை, வாழை இலைகள் , பூக்களை கொண்டுதான் சிறப்பாக அலங்காரம் செய்யபட்டிருந்தனர்

குழந்தைகளுக்கு என்று தனியாக பாரம்பரிய விளையாட்டை நியாபகப்படுத்தும் வகையில் நுங்கு வண்டி செய்து பிள்ளைகளை விளையாட வைத்திருந்தனர். இன்னும் சில விளையாட்டுகளையும் சொல்லிக்கொடுக்க ஆள் வைத்திருந்தனர்

உணவுப்பொருள்களில் கூட எல்லாம் இயற்கையாக தான் இருந்தது.

இவ்வளவும் செய்திருந்ததை பார்த்தவர்களை அதிகம் வியப்பில் ஆழ்த்தியது... மிருணாவின் புடவையும், மித்ரனின் வேட்டி சட்டையும் தான், அதற்கு காரணமும் இருந்தது, மிருணாவின் புடவையும் மித்ரனின் வேட்டி சட்டையும் போட்டோ எடுத்து போஸ்ட்டாக அடித்து மண்டபத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.... அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?.

இருக்கிறது... அந்த புடவை முழுவதும் வாழைநாரில் தங்க இலையை பிணைத்து நெய்து இருக்க அதனுடன் வெள்ளைக் கல் பதிக்கபட்டிருந்தது..... இதை பார்த்தவர்கள் தான் வாழைநாரில் சேலையா? என்று வாயைப் பிளக்க.... அதற்கு ஹைலைட்டா மித்ரனின் வேட்டி சட்டைகள் கற்றாழையை கொண்டு நெய்திருந்தனர்... (என்னப்பா இதுலாம் சாத்தியமானு நினைக்கறீங்களா?? படிச்சிட்டு வாங்க கடைசியா சொல்றேன் )

இப்படியும் இயற்கையாக செய்யலாம் என்று விழிப்புணர்வு உண்டாக்க ஆங்காங்கே அவர்கள் பயன்படுத்திய இயற்கை பொருள்களைப் பற்றி விளக்கம் கொடுப்பதுபோல் போஸ்டர் வைத்திருந்தனர்.... போஸ்டர்கள் அதிகம் சாப்பிடும் இடம் , கை கழுவும் இடம் , மண்டபம் ஜன்னல்கள் போன்ற இடத்தில் தான் இருந்தது, அப்போது அது எல்லோரின் கவனமும் கவரும் என்று திட்டம் இட்டு செய்திருந்தனர்

இப்படி ஒரு கல்யாணத்தை யாரும் வாழ்க்கையில் மறக்கவே கூடாது என்பது போல் அந்த அளவுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தனர்...

இதற்கு முதலில் மிருணா அடிபோட்டுக்கொடுத்தாலும், மித்ரனும் கண்ணனும் தான் இதற்கு முழுவதும் பாதை அமைத்து செய்திருந்தனர்....

மிருணா பனைமரத்தையும், உணவுப்பொருள்களையும் பற்றி சொன்னதும் மித்ரன் இன்னும் இயற்கையாக என்ன, என்ன செய்யலாம் என்று கூகுள் ஆண்டவரிடம் கேட்டு அதன்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான், இது எதுவுமே மிருணாவிற்கு தெரியாது.... கல்யாணம் புடவை எடுக்கும்போது கூட சாந்தியும் பத்மாவும் எதை எடுத்துக்கொடுத்தாலும் அதை வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் இருந்தவளுக்கு கல்யாணப்புடவை மட்டும் நெய்ய குடுத்துருக்காங்க கல்யாணத்திற்கு 2நாளுக்கு முன்னால் தான் வரும் என்று சொன்னதும் ஏதோ ஒன்னு என்று விட்டுவிட்டாள்...

இப்போது சாப்பிடும் போதுதான் அவளே பார்த்தாள் இப்போது எதையும் கேக்க வேண்டாம் வீட்டில் போய் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்....

சாப்பிட்டு முடித்ததும் மண்டபம் ஹாலில் போய் உக்கார்ந்தனர்

வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர்

எல்லோரும் கிளம்பும்போது.... அவர்களுக்கு மிருணா சொன்னது போல பனைக்கன்றுகளை கொடுத்து அதன் பயன்களையும், விளக்கி தான் அனுப்பினார்கள் இந்த வேலையை கண்ணனும், கருணாவும் எடுத்துக்கொண்டனர்....


கல்யாணம் அமோகமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்துமுடிஞ்சது....

பொண்ணு மாப்பிள்ளைக்கு வைக்கும் விளையாட்டில் இருவருமே ஆளுக்கு ஒரு முறை மோதிரத்தை எடுக்கவும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சமமாக காதலை வெளிப்படுத்துவர்.... இருவர் கையும் சமமாக இருக்கும் என்று பாட்டி சொர்ணம் சொன்னார்

அதன்பின் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்


வாசலில் பெண் மாப்பிள்ளைக்கு பத்மா ஆரத்தி எடுத்தார்....

உள்ளே அழைத்து மிருணாவை விளக்கு ஏற்ற சொல்லவும் அவள் எதையோ நினைத்து அப்டியே சிலை போல் நின்றாள்....

மிருணா உன்னைத் தான் சொல்றாங்க போ போய் விளக்கு ஏற்று என்று ஆரூ சொல்லவும் மிருணா மித்ரனை பார்த்துக்கொண்டே விளக்கை ஏற்ற தீக்குச்சியை உரசினாள்... அது பற்றாமல் போகவும் அடுத்து அடுத்து என்று 10குச்சிகளை உரசிபோட்டுவிட்டாள்....

கல்யாணவீட்டில் ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டாலே அதை பெரிதாக பூதமாக்கி விடுவார்கள் என்று தெரிந்த வீட்டு பெண்மணிகள் பதைபதைப்புடன் மிருணாவையே பார்க்க அவளோ கொஞ்சம் கூட படபடப்பே இல்லாமல் கூல்லாக மித்ரனை பார்த்துக்கொண்டே குச்சியை உரசிக்கொண்டிருந்தாள்..

அதை பார்த்தவன் அவள் கையில் இருந்து தீப்பெட்டியை வாங்கி, ஒரே குச்சியில் உரசி அதை பற்றவும் வைத்துவிட்டான்....

அவள் கையில் அதைக்கொடுக்க வாங்கியவள் தவறிக்கிழே விடவும் தலையில் அடித்துக்கொண்டவன், மீண்டும் ஒரு குச்சியை பற்ற வைத்தவன் அவள் கையைப் பிடித்து அவளுடன்
அவனும் சேர்ந்து விளக்கை ஏற்றினான்.....

இதுவரை இல்லாத பழக்கம் தான் என்றாலும் இருவரும் சேர்ந்து இதுபோல் வாழ்க்கை முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்துகொண்டனர் பெரியவர்கள்....

அதன்பின் இருவருக்கும் பால் பழம் கொடுத்தனர்...... அந்த ஊரில் பழக்கப்படி பருப்பு, உப்பு, சர்க்கரை மூன்றையும் வெவ்வேறு பவ்ளில் கொண்டுவந்து மிருணாவிடம் கொடுத்து அதை அள்ளி மூன்று முறை சொல்லசொன்னார்கள்....

"எதுக்கு இதை சொல்லணும்னு சொல்லுங்க? செய்யறேன்" என்றாள் மிருணா...

"கல்யாண வாழ்க்கைங்கறது இனிப்பாவும் இருக்கும் கசப்பாவும் இருக்கு , கரடு முரடாவும் இருக்கு அதை எல்லாம் எதிர்க்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழுவோம்னு சொல்றதுதான்" என்றார் சாந்தி

"அதை ஏன் கிட்ட மட்டும் கொடுக்கறீங்க? இவ இவர்க்கிட்டையும் கொடுத்து சொல்ல சொல்லவேண்டிதானே?" என்றாள் கேள்வியாக

பெண் தான் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு போகணும்... பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்னு உனக்கு தெரியாதா? சொன்னதை செய் மிருணா என்றார் சொர்ணம் கொஞ்சம் கடுமையாகவே

அவரை முறைத்தவாறே ஆமா எல்லாம் தூக்கி பொண்ணுங்க தலையையே போடுங்க , பெண்ணுங்கதான் சகித்து போகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்று முனவிக்கொண்டே அவர்கள் சொன்னதை செய்தாள்....

அன்று இரவு அவர்கள் இருவருக்குமான முதல் இரவா இருக்க... மிருணா அவன் அபியின் மீது இருந்த கேஸை வாபஸ் வாங்க சொன்னதுக்காக அவளையே கேப்பான் என்று நினைத்து கொண்டே ரூமிற்கு போனாள்

ஆனால் அவள் நினைத்தது போல மித்ரன் அவளிடம் கடுமையாக நடந்துகொள்வானா என்று அடுத்த ud monday பார்க்கலாம்



வாழைநாரில் புடவை நெய்து விற்பனை செய்கிறார்கள். அதே போல கற்றாழை, மூலிகை, இவைகளின் நார்களைக் கொண்டும் சேலை வேட்டி நெய்கிறார்கள்.... இதனை பயன்படுவதால் என்ன பயன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது.... அது வேற ஒன்னும் இல்லைங்க ..... வாழைநாரை பயப்படுத்துவதால் விவசாயும், நெசவாளரும் தான் பயனடைவார்கள் இதனால நலிந்து வரும் விவசாயத்தையும் , நெசவு தொழிலையும் காப்பாற்றலாம்... எவனோ ஒரு வெளிநாட்டுகாரனை வாழவைக்க.. கண்ட வெளிநாட்டு பொருள்களை வாங்கும் நம்ப நமக்கு சோறு போடும் விவசாயத்தை போற்றவவும் வளர்க்கவும் தவறிவிட்டோம்... நெசவுத்தொழிலையும் அதேபோலதான் நலிவடைய வைத்திருக்கிறோம் .... காரணம் மெஷின்னை வைத்து நெய்வதால் தான்


அதற்காக எப்போதும் கைத்தறி சேலை கட்டுங்க, கதர் சட்டை போடுங்கள் என்று சொல்லவரவில்லை.... அவர்களையும் வாழவைக்க 10தில் 2ஷர்ட் 2சேலை கைத்தறியாக வாங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்..... இவர்கள் எல்லாம் நம் வாழ்வில் ஆதரங்கள் அவர்களை நலிவடைய செய்து நாம் செயற்கை நாடி செல்வதால் தான்... இன்றிய தலைமுறையினர் அவர்களின் பாதி வாழ்க்கையை ஹாஸ்பிடலில் கழிக்கின்றனர்....

தயவுசெய்து அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்கவில்லை என்றாலும் பரவால்லை அவர்களுக்கு விஷத்தை சேர்த்திவைக்காதீர்கள்.....

இவ்வளவு பேசறியே நீ இதை செய்யறீயான்னு கேக்கறீங்களா .....

செய்யறேன், செய்வதால் தான் உங்களுக்கும் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கிறேன்..... தயவுசெய்து நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள், உங்களை நான் வற்புறுத்த மாட்டேன்.... எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன் அவ்வளவு தான்......


ரொம்ப பேசிட்டனோ....... சாரி..... தவறாக ஏதாவது சொல்லிருந்தால்.....
 
Top