கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 42

மித்ரன் கண்டிப்பாக தன்னிடம் கடுமையாக தான் நடந்துக்கொள்வான் என்று நினைத்தவள்.... மனம் பாரமாக இருக்க இந்த இரவு வராமலே போய்விடக் கூடாதா என்று அவள் மனம் மறுக.... அதை எல்லாம் பொருட்ப்படுத்தாமல் நீ சொன்னா நான் வரமாப்போடுவனா என்று இரவோடு நிலவும் வந்தது , அவளை அலங்கரித்துக் கொண்டு போய் ரூமின் பக்கதில் விட்டு வந்தாள் ஆரூசா .....

கல்யாணத்திற்கு வந்த உறவுகள் இன்னும் வீட்டில் நிறைந்து இருந்ததால் மிருணா அமைதியாக ரூமிற்கு சென்றாள், இல்லை என்றால் விட்டால் போதும் என்று ஓடிப்போயிருப்பாள்....

மிருணா மெதுவாக ரூமில் நுழைய

மிருணாவின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும்ப்படி மித்ரன் அவள் ரூமின் உள்ளே நுழையும் போதே நன்றாக உறங்கி இருந்தான்

இதை எதிர்பார்க்காத மிருணா ரூம் கதவை மூடிவிட்டு அவள் கொண்டுபோன பால் சொம்பை டேபிளின் மீது வைத்தவள், சிறிது நேரம் அவனை உற்றுப்பார்த்தாள்....

அதன்பின் போர்வையை எடுத்து கீழே விரித்துப்போட்டவள் அதில் படுத்தாள்,

சிறிது நேரம் தூக்கம் வராமல் அங்குமிங்கும் பிறண்டுக்கொண்டு இருந்தவள் எப்போது உறங்கினோம் என்றே தெரியாமல் உறங்கிப்போனாள்.....

இரவில் வானத்தில் தெரிந்த நிலா பால்கனி வழியாக இவர்களை பார்த்து சிரித்தது....

காலையில் உறக்கம் கலைந்து மெதுவாக கண் விழித்தவள், பாறைப்போன்ற கடுமையான ஒன்றின் மீது படுத்துருப்பது போல இருக்கவும் முழுவதுமாக கண் விழித்துப்பார்த்தவள் அதிர்ந்துப் போனாள்..

மித்ரன் மார்பில் படுத்திருந்தவளுக்கு "எப்படி நான் இங்க வந்தேன்? ... கீழே தானே படுத்திருந்தேன்" என்று நினைத்தவள் அவனை விட்டு வேகமாக எழப்போக அவளின் கால் மித்ரனின் காலுக்கு இடையில் மாட்டி இருந்தது அவன் மீது சாய்ந்தவாறே காலை எடுக்க முயற்சி செய்தாள்.. .... அவளின் அசைவில் கண் முழித்தவன் அவள் மேலே இருக்கவும்

பதறி அடித்துக்கொண்டு எழுந்தவன் ... "ஏய் நீ எப்படிடி இங்க வந்த? ..... நைட் நான் கண் முழிச்சி பார்த்தப்ப கூட நீ கீழே தானே இருந்த" என்றான்

"அதை தான் நானும் கேக்கறேன் , ஒழுங்கா சொல்லு நான் எப்படி மேலே வந்தேன்" என்று அவளின் முட்டைக்கண்ணை இன்னும் பெரியதாக்கி கேட்கவும்

"அடிப்பாவி நீயே மேல வந்துப்படுத்துட்டு என்னைய சொல்றியா??? தூக்கத்துல மேல வந்து மட்டும்தான் படுத்தியா இல்லை வேற ஏதாவது என்னைய பண்ணிட்டியா,, என்று அலறியவன்.. ஒழுங்கா சொல்லுடி என்னோட கற்புக்கு எந்த பாதகமும் ஆகலைல" என்றான்

"டேய் உன்னைக் கொன்னுடுவேன்... நீ என்னை எதும் பண்ணமா இருந்தா பத்தலை இதுல நான் இவனை, ச்சி" .... என்றவள்... "எனக்கு நடக்கற வியாதிக் கூட இல்லை, அப்புறம் எப்படி நான் மேல வந்துப்படுத்தேன் ... நீ தான் என்னை தூக்கி மேல போட்டுருக்கணும்" என்றவள் அவனை அடிக்க கை ஓங்கவும் அவன் ஒரு பார்வை பார்த்தான் மிருணாவின் ஓங்கிய கை தானாக கீழே இறங்கியது....

"சரி நீ சொல்றபடியே வெச்சுக்கலாம் ... ஆனா என்னோட மார்புமேலே நல்லா வக்கணையா படுத்துருந்தியே அதைக்கூட நான்தான் படுக்கவெச்சனா"? என்றான்

அதானே அவனா என்னை படுக்கவைத்திருந்தாலும் நான் எழுந்துப்பார்க்கும் போது அவன் மேல் கை, காலை போட்டுக்கொண்டு நான் தானே உறங்கினேன் என்ற நினைவு வரவும் .... ஒன்னும் புரியாமல் முழித்தாள்

"சரி சரி நான் எதுவும் தப்பா நினைக்கல... விடு" என்றவன் எழுந்து எக்சசைஸ் செய்ய சென்றுவிட்டான்

போற அவனையே பார்த்தவள்.... இவன் உடம்பு என்ன இப்படி கல்லு மாதிரி இருக்கு... "என்ன சாப்பிட்டு இப்படி உடம்பை வளர்த்து வெச்சிருக்கான் என்று நினைத்தவள் இவனுக்குனு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா சாப்பாடு செய்வாங்க போல "என்று முனவினாள்

அதன்பிறகு இன்னும் கொஞ்ச நேரத்தில் வெளியே போகவில்லை என்றால் தன்னை தேடி ஆள் வந்துவிடும் என்று நினைத்தவள் வேகமாக குளிக்க சென்றாலே தவிர மாத்திபோட்டுக்க டிரஸ் எடுத்து வந்தோமா என்ற எண்ணம் இல்லை.... அவள் நினைவு முழுவதும் எப்படி மேலே பெட்டிற்கு போயிருப்பேன் என்பதிலையே இருந்தது...

குளித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது இன்னும் வீட்டில் இருந்து எந்த துணிகளையும் எடுத்துவரவில்லை என்று...

"ஐயோ! இப்போ என்ன பண்றது இதே ட்ரெஸோட கீழ போகமுடியாதே" என்று நினைத்தவள் குளித்து டவல் ஒன்றை கட்டிக்கொண்டு அதன்மேல் சேலை சுத்திக்கொண்டு வந்தவள் அதே ரூமில் இருந்த மற்றொரு அறையில் எக்சசைஸ் செய்துக்கொண்டிருந்த மித்ரனை அழைத்தாள்...

அவனுக்கோ அவள் அழைத்த சத்தம் கேக்காததால் வியர்வை வழிய எக்சசைஸ் செய்துக்கொண்டிருந்தான்...

மீண்டும் மீண்டும் அழைத்துப்பார்த்தவள் அவன் அருகில் சென்று " மித்து "என்றாள் வேகமாக.

இந்த முறை அவளின் அழைப்பு அவனுக்கு கேட்டுவிடவும் திரும்பிப்பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்

"என்னடி இந்த கோலத்தில் வந்து நிற்க்கற" என்றவன் வார்த்தை முதன் முறையாக திக்கியது

"என்னோட டிரஸ் எல்லாம் வீட்டுல இருக்கு.... அது நினைவு இல்லாம குளிக்க போய்ட்டேன், ப்ளீஸ் மித்து அம்மாகிட்ட போய் ட்ரெஸ் வாங்கிட்டு வா" என்றாள் கண்களில் கெஞ்சலுடன்

"இப்படி தரிசனம் கொடுத்துருக்க உனக்காக இதைக்கூட செய்ய மாட்டானா? என்றவன் அவளை நெருங்கி... ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தா மாமனுக்கு என்ன தரவ" என்றான்

இவன் ஒரு சரியான கேடி எப்போ பாரு பிஸ்னஸ்மேனவே இருக்கான்.... ப்ரோபிட் இல்லாம வேலை செய்யமாட்டானோ? என்று மனதுக்குள் பொங்கியவள் ...

"நீ ஒன்னும் செய்யவேண்டாம் நான் யோசிச்சு வேற எதவாது ஏற்பாடு பண்ணிக்கறேன்" ....என்றவள் யோசிக்க

"மேடம் அப்போ யோசிச்சு பொறுமையா வழியை கண்டுபிடிங்க அதுக்குள்ள ஆள் வந்து கதவை தட்டுவாங்க அப்போ இப்படியே போய் கதவை திறங்க எனக்கு என்ன போய்ச்சி" என்றவன் அவளை உரசிக்கொண்டே செல்ல

அவனை முறைத்தவள்... "ஐடியா .... அம்மாக்கு போன் பண்ணி எடுத்துட்டு வர சொல்லுவேன்"என்றாள்

"என்னமோ பண்ணுடி, "என்றவன் மிரு "இப்போ எனக்கு ஒரு ஆசை வந்துருச்சி "என்றான் கண்கள் மின்ன

"என்ன ஆசை "என்றவள் குரலில் பயம் எட்டிப்பார்க்க

"கள்ளி கரைட்டா கண்டுபிடிச்சிட்ட போல.... இந்த டவல் கீழே விழுந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன் அதான் அதை கழட்டி "என்று அவன் சொல்லும் போதே மிரு அங்கிருந்து சிட்டாக பறந்திருந்தாள்..

அவளைப் பார்த்தவனுக்கு மனதுக்கு சந்தோசம் அலைஅலையாக பரவியது....

அதன்பின் மிருணாவின் துணியை அவனே சென்று வாங்கி வந்தான்...

அதுவரை அவள் பாத்ரூமில் இருக்க அவன் துணியை கொடுக்கும் போது மிருணாவை கொஞ்சம் வெறுப்பேத்தி பார்த்தான்....

"மித்து இப்போ டிரஸை தர போறியா இல்லையா"??

"தரேன் தரேன்..... இந்த நிலையில உங்கிட்ட நான் அந்த கேள்வியைக் கேக்க கூடாது இருந்தாலும் கேக்கறேன் .... எதுக்குடி அந்த வீணா போனவன் கூட சேர்ந்து நம்ப கம்பெனிக்கு நஷ்டத்தை உருவாக்க ஆளுங்களை கொண்டுவந்திங்க" என்றான்

"சொல்ல முடியாதுனு சொன்னா'....

"டிரஸ் தர மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.... இதோட சேர்ந்து டவல்" என்று அவன் இழுக்க

"என்ன பயமுறுத்தரியா"?

"இல்லைனு சொல்லமாட்டேன் எனக்கு தேவை பதில் அதை சொல்லிட்டா நான் எதுக்கு உன்னை தொந்தரவு செய்ய போறேன்" என்றான்

"சரி சொல்றேன் முதல கொடு என்று சொல்லவும் உன்னை நம்பி தரேன் சொல்லாம ஓடுன தூரத்தி பிடிச்சி" என்று அவன் கண்கள் அவள் மேல் ஊற

"ச்சி பே " என்றவள் "சொல்லறேன் சொல்லிதொலையறேன்" என்றாள்

அதன்பின் அவன் கொடுத்துவிட்டு வெளியே பெட்டில் அவளுக்காக காத்திருக்க...வெளியே வந்தவள் தலையை துவட்டிக்கொண்டே "உனக்கு என்ன தெரியணும் "என்றாள்

"அதான் கேட்டேனே" என்றவன் அவன் முகத்தையே பார்த்தான்

ஆமா நானும் அபியும் சேர்ந்துதான் இவ்வளவும் செஞ்சோம் என்றவள் செஞ்சதுக்கு காரணம் நீதான் என்றாள்

"நானா நான் என்ன பண்ணறேன் "?

நீனா நீதானு அர்த்தம் இல்லை . நீயும் ஒரு காரணம் தான் ஆனா முழுக்காரணம் அத்தை என்றாள்

அம்மாவா

ம்ம்

அவங்க எப்படி... எனக்கு புரியலை

உனக்கு புரியாத வரைக்கும் எனக்கு நல்லது என்றவள் போய் பொழப்பை பாரு என்று தலையை வாறிக்கொண்டிருந்தாள்
 
Top