கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 43

"உனக்கு புரியாத வரைக்கும் எனக்கு நல்லது" என்றவள் "போய் பொழப்பை பாரு" என்று சொல்லிக்கொண்டே தலையை வாறிக்கொண்டிருந்தாள்..

"மிரு விளையாடம அம்மா எப்படி காரணம்னு சொல்லு"என்றவன் குரலில் தடுமாற்றம் இருந்தது

"ஓ உனக்கு அவங்க அம்மானு நியாபகம் கூட இருக்கா" என்றாள் நக்கலாக....

அவளை முறைத்தவன்...."நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான் அவன் குரலில் கடுமை இருந்தது...

"அவங்க உனக்கு அம்மாங்கறதே மறந்துபோயிருக்குமே, ஏன் சொல்றனா?? நீதான் அவங்களை அம்மானு கூப்பிட்டே பல வருஷம் ஆயிடுச்சில" என்றாள்

"அதுக்குன்னு அவங்க எனக்கு அம்மா இல்லைன்னு ஆகிடுமா, நான் என்ன உன்னை மாதிரி அவங்களை கஷ்டப்படுத்திட்டா இருக்கேன்" என்றான்

"நான் யாரை கஷ்டப்படுத்துனேன்"??

"ஏன் உனக்கு தெரியாதா?? "

"எனக்கு தெரியறது இருக்கட்டும் அதான் உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கே .... உனக்கு தெரிஞ்சதை சொல்லு" என்றாள்

"வேற யாரை எல்லாம் சக்தி மாமாவை தான்" என்றவன்... "அவரை நீ கஷ்டப்படுத்துன மாதிரி நான் ஒன்னும் எங்க அம்மாவை கஷ்டப்படுத்தலையே" என்று சொல்லிக்கொண்டே குளிக்க போனான்

அவன் வெளியே வருவதற்குள் ரூமை விட்டு சென்றுவிட வேண்டும் என்று வேகமா ரெடி ஆகியவள் கீழே சென்றுவிட்டாள்

காலை 7மணி ஆகியதால் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தனர்...

எல்லோருக்கும் சாந்தி காபி கொண்டு வந்து கொடுத்தார், சொர்ணம் இவளை பார்த்ததும் கண்களால் " இங்க வா "என்று அழைக்க ... அவர் அருகில் போனவள் "என்ன கிழவி" என்றாள் கிசுகிசுவென்று

அவளையே பார்த்த சொர்ணம் " நைட் உங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலையா?? " என்றார்....

அவர் என்ன கேக்கிறார் என்பதை புரிந்துகொண்ட மிரு.... அவர் பக்கதில் உக்கார்த்தவள் " ஏன் நடக்கல நடந்ததே" என்றாள்

"உன்னோட வயசை விட 2மடங்கு அனுபவம்டி இருக்குடி எனக்கு , உன்னை பார்த்தால் எனக்கு தெரியாதா?? " என்றார்

"நானும் பொய் சொல்லலையே எங்களுக்குள்ள எப்பவும் போல சண்டை நடந்துது" என்றவள்.... அவர் கையை பிடித்துக்கொண்டு " நாங்க ரெண்டு பேருமே உங்களுக்காகதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.... எங்களுக்குனு டைம் வேணும் கிழவி அப்போதான் எல்லாம் நல்லபடியா நடக்கும் நீ அதை நினைச்சி பீல் பண்ணதா சரியா" என்றாள்

"எப்படியோ நாங்க கண்ணை மூடறதுக்குள்ள என்னோட கொள்ளு பேரனை பார்த்துட்டா போதும் 4 தலைமுறை பார்த்த சந்தோசத்துல நானும் அவரும் கண்ணை மூடுவோம்" என்று குழந்தைக்கு அடிப்போட்டார்..

"ஓ நீ அப்படி வரியா, ஆனா அதுக்காக எல்லாம் குழந்தை பெத்துக்க முடியாது" என்று அவள் பேசிக்கொண்டிருக்கவே மித்ரன் மேலே இருந்து இறங்கி வந்தான் , அவனை பார்த்தவளுக்கு அவன் கம்பீரம் என்னவோ செய்தது... அவனையே வெச்சிக்கண்ணு எடுக்காமல் பார்த்தாள்...

அதை பார்த்த சொர்ணம் அவளை இடித்து "நான் கேட்டது சீக்கிரம் நடந்துரும்" என்று விஷமமாக சிரித்துவிட்டு உள்ளே சென்றார்

பாட்டி எழுந்து போனதையே பார்த்தவாறு அவளை உரசிக்கொண்டு அவள் பக்கதில் உக்கார்ந்தவன் "என்னடி பாதியோட ஓடியாந்துட்ட" என்றான் கொஞ்சம் சத்தமாகவே

அவன் சொன்னதை கேட்ட பக்கதில் இருந்தவர்கள் எல்லோரும், மிருணாவை கிண்டல் கேலிகளுடன் பார்க்கவும் ....

"ஐயோ!!! ஐயோ , !!! இவனை என்ன பண்றது கொஞ்சமாவது அறிவு இருக்கா எங்க எதை பேசணுன்னு " என்று கறுவினாள்

மித்ரன் சொன்னதை கருணாவும் கேட்டுவிட்டு அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கவும்

இவளுக்கு தான், தன் தலையை கொண்டுப் போய் எந்த சுவற்றில் முட்டிக் கொள்ளவது என்று இருந்தது

மித்ரனிடம் "என்ன பேசறீங்கன்னு நல்லா புரிஞ்சி தான் பேசரீங்களா?? " என்றாள் கோவமாக

"ம்ம் நீதான் என்னோட அம்மாதான் காரணம் சொன்ன, ஆனா அது எப்படினு சொல்லாமல் பாதியலையே ஓடிவந்துட்ட" என்றான் மெதுவாக

"இதை மட்டும் மெதுவா சொல்லுவான் இவன் வேணும்னேதான் பன்றானு நினைக்கறேன்" என்று நினைத்து .... வாய்க்குள்ள முனவியவள்... அவனை முறைக்க... அப்போது சாந்தி இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார்

"எனக்கு வேண்டாம் அத்தை நான் அம்மாவை பார்த்துட்டு அங்கையே குடிச்சிக்கறேன்" என்று எழப்போனவள் என்ன நினைத்தாளோ மீண்டும் சோபாவில் உக்கார்ந்தாள்

வீட்டு சொந்தங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதை பார்த்தவள்... இது தான் சரியா நேரம் என்று மனதில் நினைத்துக் கொண்டு சாந்தியையே பார்க்க

அவரோ மித்ரனுக்கு பால் கொண்டு வந்து கொடுத்தார்...

அவன் அதை எடுத்துக்கொள்ளவும் சாந்தி அவளை தாண்டி கிச்சனுக்கு போக போனவரின் காலுக்கு இடையில் மிருணா காலை விட்டாள் அதை கவனிக்காத சாந்தி தடுமாறி கீழே விழுந்தார்...

மிருணாவிற்கு முன்னாடி "அம்மா" என்று கத்திய மித்ரன் வேகமாக அவருக்கு அருகில் சென்று அவரை தூக்கி நிறுத்தினான்

"அம்மா உனக்கு ஒன்னும் ஆகலைல"? என்று அவன் கேக்க அதை எல்லாம் கவனிக்காமல் அவன் முகத்தையே கண்களில் கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தார் சாந்தி

"எம்மா உங்கிட்ட தான் கேக்கறேன்" என்றவன் மிருணாவை பார்த்து "எதுக்குடி காலை குறுக்கவிட்ட" என்றான்

"நான் எங்க விட்டேன், அவங்கதான் என்னோட கால் இருக்கறதை பார்க்காமல் போய் விழுந்துட்டாங்க" என்றவள்... !ரொம்பதான் அம்மா மேல அக்கறை" என்றாள்

"என்னோட அம்மா மேல எனக்கு அக்கறை இருக்காம , வேற யாருக்கும் இருக்கும்" என்றவன் சாந்தியை சோபாவில் உக்கார வைத்தான், இதை வீட்டில் இருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.

"எனக்கு ஒன்னும் ஆகல மித்தி, நீ என்னை அம்மானு கூப்பிட்டு எவ்வளவு வருஷம் ஆயிடுச்சு தெரியுமா? "என்றார் கண்ணீர் வடிய

"அதை விடுமா வா ஹாஸ்பிடல் போலாம்" என்று அவன் சொல்ல

"அம்மாவும் பையனும் ரொம்ப பண்ணாதீங்க... கீழ விழுந்ததுக்கு எல்லாம் ஹாஸ்பிடல் போகணுமா? " என்று அவனை உசுப்பேத்தி விட்டாள்

"உன் வேலையை பார்த்துட்டு போடி" என்று அவளிடம் கத்திவிட்டு கால் வலிக்கு ஸ்பிரே அடிக்க அதை எடுக்க போனான்

அவனுக்குள் இருக்கும் அம்மா பாசத்தை இன்று காலை சாந்திதான் காரணம் என்று சொல்லும்போது அவன் கண்ணில் பார்த்தாள்

அம்மாவா என்று அவன் சொல்லும்போது அதில் இருந்த தவிப்பு அம்மா இதுக்கு காரணமா இருக்கக்கூடாது என்ற பதட்டம் எல்லாமும் தான் மிருணாவை இந்த செயலை செய்ய தூண்டியது...

எதற்கு கல்லை வீசிப்பார்ப்போம் என்றுதான் சாந்தியின் காலுக்கு இடையில் காலைவிட்டாள்

இதனால் அவனுக்குள் இருந்த பாசம் வெளியே வந்துவிட்டது... "சரி அத்தை நீங்களும் உங்க மகனும் கொஞ்சிக்கோங்க நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்" என்றாள்

அவள் கையை பிடித்த சாந்தி "நன்றி மிரு "என்றார் அவர் குரலில் ஏக்கம் தீர்ந்த சந்தோசம் இருந்தது

"அத்தை இதுக்கு எல்லாம் நன்றி சொல்லுவிங்களா"? ... என்றவள் அவர் கையை எடுத்துவிட்டு வேணியை பார்க்க போனாள்

போகும் அவளை பார்த்த கருணா எல்லோர் மனசையும் புரிஞ்சு நடந்துக்கறா எனக்கு அவகிட்ட என்ன தேவைன்னு அவளுக்கு தெரியலையா? இல்லை தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாளா? என்று நினைத்தவன்.... அவன் கையில் இருந்த பேப்பரை தூக்கி சோபாவில் கிடாசிவிட்டு அவன் ரூமிற்கு சென்றான்

அதன்பின் மித்ரன் சாந்தியிற்கு ஸ்ப்ரே செய்துவிட்டு அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றும் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியும் அவர்கள் ரூமில் விட்டுவிட்டு வந்தான்

வேணியை பார்த்துவிட்டு வந்தவளிடம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏத்த சொல்லி சொர்ணம் சொல்லவும்

"எங்க உன் பேரன் அவரையும் கூப்பிடு"?

"எதுக்குடி ? நேத்துதான் அவன் உனக்கு உதவுனானா இன்னிக்கு உனக்கு பதிலா அவன்தான் விளக்கு ஏத்தணுமா? " என்றார் கிண்டலாக

"கிழவி ரொம்ப பண்ணாதா...அவரை கூப்பிடு" என்று அவள் சிணுங்கவும் ....

"எதுக்குடி?? " என்றார்

"வேணும் கூப்பிடு"

"சரி இரு" என்று மித்ரனை அழைத்து வந்தார்...

அவனும் உடன் இருக்க... பூஜை அறையில் விளக்கை ஏத்தி சாமி கும்பிட்டாள்

அவனும் சாமி கும்பிட ஆரத்தி காட்டி அவனுக்கும், சொர்ணத்திற்கும் காட்டினாள்

அவர்கள் தொட்டு கும்பிட்டவுடன் மித்ரனை நிமிர்ந்து பார்த்தாள் மிருணா

அவளின் பார்வை அவனுக்கு என்ன உணர்த்தியதோ அவன் தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் இட்டான்....

இதை பார்த்த சொர்ணத்திற்கு மன நிறைவாக இருந்தது...

பார்க்க ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருந்துட்டு... எப்படி கண்ணாலையே இப்படி பேசிக்கிறாங்க.... நாங்க சொன்னதுக்காக தான் இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணிகிடுச்சிங்களாம் இதுங்களுக்குள்ள காதல் இல்லையாம் ... இதை சொன்னா யாராவது நம்புவார்களா என்று நினைத்து மகிழ்ந்துகொண்டார்...
 
Top