"நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட ரெஜிஸ்டர் பேப்பர் அதை தான் அவ காட்டுனா" என்றாள்
அவள் சொன்னதை கேட்டவன் "சரி நீ சொல்றபடியே வரேன்... அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட நான், எதுக்காக உன்னையும் கல்யாணம் பண்ணிக்கணும்??" ... என்றான்
"எல்லாம் வேற எதுக்கு என்னோட சொத்துக்காக தான், உங்க மாமா அவரை நல்லவரா காட்டிக்க உன்னோட கம்பெனில பாதி ஷேரை என் பேர்லதானே வாங்கிருக்காரு... அதை உன்பேர்ல மாத்தணும்ல அதுக்குதான்" என்றாள்
அவள் சொன்ன அடுத்த நொடி அவள் கன்னத்தில் இடியாக இறங்கியது கருணாவின் கை
மிருணா அதிர்ச்சியிலும் , வலியிலும் கன்னத்தில் கை வைக்கவும்
"அண்ணா என்னை மன்னிச்சிடுங்க என்னதான் இவ என்னோட பிரண்ட்டா இருந்தாலும் உங்க மனைவி ஆனா பிறகு உங்க அனுமதி இல்லாம நான் அடிச்சிருக்க கூடாது"...
"நானும் எவ்வளவு நேரம் தான் பொறுமையா இருக்கறது, என்னால முடியலை அண்ணா" என்று மித்ரனிடம் சொன்னவன்
"ஏய் யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன ... உங்கிட்ட இருக்கற சொத்துக்காகவா அண்ணா உன்னை கல்யாணம் பண்ணிகிட்டாங்க? " என்று மீண்டும் அடிக்க போனவனை மித்ரன் கை தடுத்தது
"ப்ளீஸ் கருணா எதா இருந்தாலும் பேசியே தீர்த்துக்கலாம்".... என்றவன் குரல் சோர்ந்து இருந்தது "இரு இன்னும் அம்மிணிக்கு என் மேல என்ன அபிப்ராயம் இருக்குனு கேக்கலாம்"என்றான்
ஒரு கணம் அவன் சொன்னதில்
" தான் தான் தப்பாக நினைத்துவிட்டோமோ? " என்று நினைத்தவள் அன்று அவன் சொன்ன வார்த்தைகள் காதில் வந்து ஒலித்து என்னை பற்றியும் கொஞ்சம் நியாபகப்படுத்து என்றது
"எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்னா, அதுக்குன்னு ஒரு தகுதி வேண்டும்... வேலைக்காரி எல்லாம் என்னோட பொண்டாட்டி ஆக முடியாது" என்ற வார்த்தை நியாபகம் வரவும்
"இப்படிலாம் பேசுனா மட்டும் நான் நம்பிடுவனா? , என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணமே, நான் உங்க மாமா பொண்ணுங்கறதால தான்..இதுவே நான் வேலையைக்காரியாவே இருந்திருந்தால் உங்களோட பார்வை கூட என்னை சீண்டிருக்காது" . என்றவள் "அது மட்டும் இல்லை" என்று அவள் கையில் இருந்த போன்னில் ஒரு ஆடியோவை ஆன் செய்தாள்...
அதில் மித்ரன் மிருணாவை கல்யாணம் பண்ணிக்கறது .... சக்திவேல் அவள் பெயரில் எழுதிவைக்கும் சொத்திற்காக தான் என்பது போலவும்... அவனுக்கு அந்த சொத்து ரொம்ப தேவை என்பது போலவும் பேசிருந்தான்...
நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிட்டு, கூடிய சீக்கிரம் சொத்தை வாங்கிவிட்டு மிருணாவை துரத்தி விட்டுருவேன் என்பது போலவும் இருந்தது அந்த ஆடியோ
அதை கேட்ட மித்ரன் தலையில் அடித்துக்கொண்டான்
அதைப் பார்த்தவள் "இந்த ஆடியோகூட பொய் சொல்லுதா"? என்றாள் கோவமாக
"காதால் கேட்ப்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய்னு தெரியாதா இது என்னோட வாய்ஸ் மாதிரி தான் ஆனால் என்னோட வாய்ஸே இல்லை சரியா?? " என்றான்
அவள் புரியாமல் முழிக்கவும்...
"என்ன முழிக்கற ... இது அண்ணாவோட வாய்ஸ் இல்லனு சொல்றாங்க, புரியுதா? " என்றான் கருணா
"ஓ இப்போ இந்த ஆடியோவும் பொய் அப்போ அந்த செர்டிபிகேட், அது என்ன?? "
"உங்கிட்ட அவ கல்யாண செர்டிபிகேட் காட்டும் போதே நீ ஏன் அதை பத்தி அப்போவே என்கிட்ட கேக்கல??? "
"அது"...... என்று இழுத்தவள் , "அதுக்கு காரணம் நிவி சிஸ்டர் தான், அவங்க வந்து என்னைப் பார்த்து பேசுனாங்க ... அப்போ அவங்க சொன்னது லாரா மித்ரனை லவ் பண்ணறா , அதுக்காக உங்க கல்யாணத்தை நிறுத்த என்ன வேணாலும் பண்ணுவான்னு சொன்னங்க, அவங்க காலைல சொல்றாங்க, இவ ஈவினிங் என்கிட்ட செர்டிபிகேட் காட்டுனதும் அவங்க சொன்னதுதான் என்னோட மூளைல ஓடிட்டு இருந்துச்சி அதான் கோவத்துல அவளை அடிச்சேன்"என்றாள்
"அப்பக்கூட அது என் மேல இருந்த நம்பிக்கைல அவளை அடிக்கல" என்று கேட்டவன் குரல் இறுகி இருந்தது
"நம்பிக்கையா ? அதும் உங்க மேலையா? .... காமெடி பண்ணாதீங்க .. நீங்களே சொல்றிங்க நான் தினமும் ஒரு பொண்ணோட டேட்டிங் போறேன்னு அப்புறம் எனக்கு மட்டும் எப்படி உங்கமேல நம்பிக்கை வரும்" என்றவள்
"இது மட்டும் இல்லை அவ போகும் போது சொன்னா இதை நீ நம்பல்லைனா , நீ நம்புற மாதிரி நான் உனக்கு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் தரேன்னு சொன்னா , அப்போ அவளை நான் ஒரு பொருட்டாவே மதிக்கலை , ஆனா கல்யாணத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடி தான் இந்த ஆடியோ வந்தது
அதுவோட இதுவும்" என்று ஒரு வீடியோவை காட்ட அதில் மித்ரனும் லாராவும் ஹக் பண்ணற மாதிரியும் அவள் இவன் கன்னத்தில் கிஸ் பண்ண மாதிரியும் இருந்தது....
" இதுக்கு மேலையும் யாராவது நம்பாம இருப்பாங்களா"??? என்றாள்
"அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?? "
"அது"...
"அது ஏன்னு எனக்கு தெரியும் அண்ணா" என்று கருணா எதையோ சொல்லவர
"கருணா உன் வாயை.மூடறியா?? இல்லனா கொன்னுடுவேன், என்மேல உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தா வாயை திறக்காத" என்றவள்
மித்ரனிடம் திரும்பி "என்னோட அம்மாக்காக தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ...அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்... உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவங்க என்னை வற்புறுத்துனது இல்லை ஆனால் கண்ல ஒரு எதிர்பார்ப்புடன் என்னை பார்ப்பாங்க, அதான் அவங்களை ஏமாத்த எனக்கு மனசு வரல" என்று ஒரு மொக்கை காரணத்தை சொன்னாள்
"இந்த காரணத்தை, வாயில விரல் வெச்சிருக்க பச்சை குழந்தைக்கூட நம்பாது" என்ற கருணா.. அவளை முறைக்கவும்
"நம்பறதும், நம்பாததும் உங்க இஷ்டம் அது பத்தி எனக்கு கவலை இல்லை" என்றாள்
"சரி இப்போ உன்னை நான்ஏதோ ஒரு காரணமா தானே கல்யாணம் பண்ணிருக்கேன்" என்றவன் கருணாவை பார்த்து "நீ உள்ளே போ கருணா" என்றான்
"இல்லை அண்ணா,இவ இன்னும் எவ்வளவு தான் பேசுறானு, நானும் பார்க்கறேன், நான் உள்ள போக மாட்டேன் அண்ணா, இவளுக்கு திமிரு அதிகம் ஆயிடுச்சி"
என்றவனை
"உள்ளே போ கருணா" என்றான் மீண்டும்
"முடியாது அண்ணா " என்று அவனும் பிடிவாதமாக இருக்கவும்
"சரி கொஞ்ச நேரம் திரும்பி நில்லு" என்றான்
அவன் திரும்பி நிற்கவும் மிருணாவை நெருங்கினான், அவனும் அடிப்பான் என்று எதிர்ப்பார்த்து கன்னத்தில் கை வைத்தாள் மிருணா
ஆனால் மித்ரனோ அவளை ஆவேசத்துடன் இழுத்து வேகமாக இதழோடு இதழ் சேர்த்தவன்.... அதே வேகத்தில் அவளை விடுவித்தும் விட்டான்
நடந்தது முடிந்த நிகழ்வு கனவு போல மிருணாவிற்கு தோன்றும் அளவிற்கு இருந்தது அவன் வேகம்... முதல் முத்தம் அவள் உடலில் சில மாற்றத்தை கொடுத்தாலும் மிருணாவின் மனமோ மித்ரனை தப்பாக நினைத்தது
தன்மனதை மாற்ற அவன் எடுத்த அடுத்த ஆயுதம் தான் இந்த முத்தம் என்று மனதில் கண்டதையும் நினைத்தாள்
"கருணா திரும்பு"
"சரிண்ணா"
"என்ன சொன்ன உன் பேர்ல இருக்க அந்த சொத்தை வாங்கதான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டானா? " என்றவன்
"அமெரிக்கால உன் பேர்ல எனக்கே தனியா சொந்தமா 2கம்பெனி இருக்கு தெரியுமா? உனக்கு " என்றான்
இது கருணாவுக்கே ஷாக் என்றால் மிருணாவின் நிலை சொல்லவே வேண்டாம் அவளின் நிலை பேயறைந்தது போல் இருந்தது
"என்னது என்னோட பேரலையா?? "
"உன் பேர்தான் மிருணாளினி ... நான் யாழினினு உன்னோட கடைசி பேரை மட்டும் வெச்சிருக்கேன்....ஏன்னா? எல்லாத்துலயும் இருந்து நான் எப்பவும் தனியா தெரியணும் அதுக்காக தான்" என்றான்
"எனக்கு எதுவும் புரியலை"? .....
"உனக்கு புரியாது" என்றவன்...அவள் கையில் இருந்த போன்னை வாங்கி அதில் அவள் போட்டு காட்டிய வீடியோவை இவன் மீண்டும் திரும்ப போட்டான்
அதில் இருவரும் ஹக் பண்ணும் இடத்தில் நிறுத்தி ஜூம் பண்ணிக் காட்டினான்...