அதன் பாக்ரௌண்ட்டில் யாழினி இண்டியன் டெக்ஸ்டைல் ப்ரொவைட் லிமிடெட் என்ற போர்டை தாங்கிய பெரிய கட்டிடம் இருந்தது....
"இதை ஓபன் பண்ணப்ப தான் அவ என்னை ஹக் பண்ணா .... ஆனா இதை ஏன் வீடியோவா எடுத்தான்னு அப்போ எனக்கு தெரியாது இப்போ தான் தெரியுது" என்றான்
அவனை இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர்
"என்ன சொன்ன , நான் நீ என்னோட மாமா பொண்ணுகிறதாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இதே ஒரு வேலைக்காரியா இருந்தா கல்யாணம் பண்ணிருப்பானான்னு தானே?? பண்ணிருப்பேன் ஏன் தெரியுமா?? "பிக்காஸ் ஐ லவ் யூ, என்றவன் சில நொடி அமைதியாக இருந்துவிட்டு "நான் உன்னை காதலிக்கிறேன்" என்றான்
இதை கேட்ட கருணாவிற்கு பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை ஆனால் மிருணா மயங்கிவிழாத குறைதான் அவள் தொய்ந்து போய் அதே இடத்தில் கீழே அமர்ந்தவள் அவனை நிமிர்ந்துப்பார்த்தாள்
"என்ன அப்படி பார்க்கற?, ஒரு வேலைக்காரியை போய் நான் கல்யாணம் பண்ணிப்பானானு அன்னைக்கு சொன்னதுக்காக அர்த்தம் இதுதான் ... நீ 2கம்பெனிக்கு சொந்தக்காரிடி" என்றவன்
"என்னடா திடீர்னு வந்து காதலிக்கறேன்னு அப்படி, இப்படினு பிணாத்துறான், ஒரு வேளை என்னை கன்வெண்ஸ் பண்றதுக்கு பொய் சொல்றானோனு கூட நீ நினைக்கலாம்" என்று மித்ரன் மிருணாவை பார்த்துக்கொண்டே சொல்ல
"அவள் முகம், தான் அப்படிதான் நினைத்தேன்" என்று சொல்லாமல் சொல்லியது,...
"நீ சந்தேகப்படறது தப்பு இல்லை , ஏன்னா, எனக்கே உன்னை நான் எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சேனு கேட்டா தெரியாது... இதை உன்கிட்ட சொன்னா நீ மட்டும் நம்பிடுவியா என்ன? " என்றவன்
"நான் உன்னை லவ் பண்றது உண்மை அதுல நான் எப்போமே பொய் சொல்லமாட்டேன்... அப்பறம் ஏன் என்கிட்ட ஹார்ஸ்ஸா நடந்துக்கிட்டனு நீ கேக்கலாம், அதுக்கு காரணம் நான் உன்னை சின்ன வயசுல படுத்தி எடுத்ததுதான் "
அவன் சொல்ல சொல்ல அவள் கண்கள் கலங்கியது
"லிசா குட்டி குழந்தையா இருக்கும் போது தான், நான் அவங்க வீட்டுக்கு போனேன் அவங்க வீட்டுக்கு மேல் தான் நான் தங்கியிருந்தேன், அப்போ லிசாவை பார்க்கும் போதுலாம் எனக்கு நீ கை குழந்தையா இருந்ததுதான் என் கண் முன்னாடி வரும்"...
"நம்ப வாழ்க்கை முழுக்க எத்தனையோ குழந்தைகளை பார்ப்போம், ஒரு குழந்தையை பார்க்கும் போது இன்னொரு குழந்தை முகம் நினைவு வரலாம் , ஆனா எனக்கு லிசாவை மட்டும் இல்லை அங்க இருந்த 1வயசுல இருந்து 12வயசு குழந்தை வரை யாரை பார்த்தாலும் எனக்கு உன் நினைவுதான் வரும்....ஒவ்வொரு பருவமா உன்னை நான் நினைச்சி பார்த்துட்டுதான் இருப்பேன்,"
"நீ இப்போவும் குழந்தை இல்லை வயசுபொண்ணு ஆயிட்டனு நினைச்சி என் மனசு சந்தோசத்துல குதிச்ச நாள் தான் அதிகம், அப்போல இருந்து இப்போ வரைக்கும் குதிச்சிட்டே தான் இருக்கு" என்றவன் கீழே அமர்ந்திருந்த அவளை தூக்கி நிறுத்தி அவள் கண்களை துடைத்துவிட்டவன் அங்கு கருணாவும் இருக்கிறான் என்பதை உணராமல் அவள் நெற்றி இதழ் பதித்தவன்
"எனக்கே தெரியாமல் என்னை நீ எந்த அளவுக்கு பாதிச்சிருக்கனு அப்போதான் நானே உணர்ந்தேன்.... இது காதலா இருக்குமானு எனக்கு அப்போ தெரியாது ஆனால் இவ்வளவு நாள் உன்னாலதான் எனக்கு அம்மா பாசம் கிடைக்கலனு நான் உன்மேல் கோவமா இருந்ததுக்கு காரணம் எல்லாம் எனக்கு அப்போதான் கொஞ்சம், கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது"... உன்மேல எனக்கு இருந்த காதலோட அளவை அப்போதான் உணர்ந்தேன்
"கை குழந்தையா நீ இந்த வீட்டுக்கு வந்தபோது வேணி எனக்கு மட்டும்தான் இவ்வளவு நாள் எல்லாம் செஞ்சிட்டு இருந்தது, இப்போ உனக்கும் செய்யும்னு நினைக்கும் போது வந்த பொறாமை தான், உன் பக்கதுல என்னை நெருங்கவிடல
ஆனால் நீ குழந்தையா பண்ற ஒவ்வொரு சேட்டையும் பார்த்துட்டு வந்து இவன் சொல்லும் போது, நானும் உன்னை பார்க்கணும்னு ஆசைப்பட்டுருக்கேன் , ஆனா பாட்டிதான் விட மாட்டாங்க, அவங்களுக்கு தெரியாம உன்னை நான் மறைஞ்சி இருந்து பார்த்துருக்கேன்,
"உன்க்கூட சேர்ந்து விளையாட போலாம்னு கிளம்பும் போதுலாம் பாட்டி ஏதாவது சொல்லி என் மனசை மாத்திடுவாங்க" என்றவன் " அதுக்கு தகுந்த மாதிரி, நீயும் என்னை கண்டா பயந்து ஒதுங்கி போயிருவ, ஆனா கருணா கூட மட்டும் நல்லா விளையாடுவ அந்த பொறாமை எல்லாம் சேர்ந்துதான் உங்கிட்ட என்னை தப்பா நடக்க வெச்சிருக்கு, அதலாம் உன்னை நான் காதலிக்கறேன்னு புரிஞ்சிக்கிட்டப்பதான் எனக்கே தோணுச்சு...எனக்கு . உன்மேல இருந்த அன்பின் வெளிப்பாடுதான் அந்த கோவம் எல்லாம்னு லவ் வந்த அப்புறம் தானே புரியுது என்று அவளைப் பார்த்து கண் அடித்தான்....
கருணா இங்க நிற்கலாமா போலாமா என்று மண்டையை போட்டு குழப்பிக்கவும் அவனை பார்த்த மித்ரன், இருவரையும் அழைத்துக்கொண்டுப் போய் அங்கிருந்த கல் பெஞ்சில் அமரவைத்தான்
அமலு என்று மிருணாவை பார்த்தவன் இந்த வீட்டை விட்டு வெளியே போன போது..உன்மேலையும் அம்மா மேலையும் தான் எனக்கு கோவம் அதிகம் இருந்துது.... ஆனா இப்போ இந்த 2பொண்ணுகளையும் தான் நான் உயிரா நேசிக்கறேன்... நீ சின்ன பொண்ணா இருக்கும் போது உன் கன்னம் இரண்டும் அமுல் பேபி மாதிரி இருக்கும் என்று அவள் கன்னங்களை பிடித்து ஆட்டியவன்... இதுலாம் பொய்யா இருக்கோம்னு தோணுதா என்னோட கண்ணுல பாருடி உன்மேல இருக்கற ஒட்டு மொத்த காதலும் தெரியும் , என்று சொல்ல
அவள் நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்க்க அதில் தெரிந்த காதலில் பிரமித்துவிட்டாள் மிருணா
அண்ணா நான் உள்ளே போறேன் என்று கருணா இவர்கள் செய்யும் காதலை பார்க்க முடியாமல் தவித்தவன் கண் முன்னால் வந்து நின்றாள் ஆரூசா
கருணாவிற்கு பக்கென்று ஆனது.... ஐயோ இவங்க கூட இருந்தா நான் கெட்டுப்போயிருவேன் போலவே என்ற எண்ணம் வர
அடப்பாவி நீ ஆல்ரெடி கெட்டு போய்ட்ட...நீ ஆரூசாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட என்று மனம் சொல்ல கருணா தனி உலகில் மிதக்க ஆரம்பித்தான்
மித்ரன் அவனை பற்றி எல்லாம் கவலை படாமல் மிருணாவை பார்த்தவன்
"நீ பெரியப்பொண்ணு ஆய்ட்டனு விழா வெச்சி அதை வீடியோ எடுத்து எனக்கு அப்பா அனுப்பினாரு அதை அப்போ பார்க்க எனக்கு விருப்பம் இல்லை அதனால நான் பார்க்கவும் இல்லை"
"ஆனா எப்போ உன்னை காதலிக்கறேன்னு உணர்ந்தேனோ அப்போல இப்போ வரைக்கும் ஒரு 1000முறை அந்த வீடியோவை பார்த்துருப்பேன்"
"நீ வேண்ணா என்னைய பத்தின செய்தியை கேக்காமலும் பார்க்காமலும், இருந்துருக்கலாம் ஆனா உன்னை பத்தின செய்தியை நான் பாட்டி மூலமா வாங்கிட்டுதான் இருந்தேன் அது ஒன்னு அவங்க உன்னை திட்ற மாதிரியா இருக்கலாம் இல்லை உன்னை பத்தி என்கிட்ட சொல்லணுமேனு சொன்னது போலக் கூட இருக்கலாம் ஆனா பாட்டி சொல்லிட்டே இருக்கும்".....
"நான் அங்க படிச்சப்ப என்னோட சொந்த பணத்துல ஒரு கம்பெனி ஆரம்பிக்கணும் எனக்கு ஆசை.... அதை அப்பாகிட்ட சொன்ன அவங்க பணம் கொடுக்கறேன்னு சொல்லுவாங்க அதான் ... நான் யார்கிட்டயும் சொல்லாம ... பார்ட் டைம் ஜாப் போனேன் அதுல வந்ததை சேர்த்துவைத்து தான் குட்டியா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணேன், அப்போ என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சபோது தான் என்னோட கண் முன்னாடி வந்து நின்னது, உன் பேர் மட்டும்தான்
அப்போதான் தோணுச்சு.... உன்னை நான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கனு நான் போய் நின்னா கண்டிப்பா யார் எதிர்க்கறாங்களோ, இல்லையோ பாட்டி கண்டிப்பா சத்தம் போடும்"
அப்போ உன் தகுதியை நான் உயர்த்தி காட்டினால் கண்டிப்பா பாட்டி சம்மதிக்கும்னு அதனால கொஞ்சம் கூட யோசிக்கலை உன் பெயரை வெச்சேன் ".
என்னோட காதலும் எனக்குள்ள அதிகமாகிட்டே போயிட்டே இருக்க லாராவும் என்கிட்ட இருக்கற பணத்தை பார்த்துகிட்ட என்னை நெருங்க ஆரம்பிச்சா
என்கிட்ட காதலை சொல்லு போதும் நான் எனக்கு விருப்பம் இல்லைனு மட்டும்தான் சொன்னேன் ஆனா அவ என்னை பத்தின தகவலை திரட்டி நான் பணக்காரங்கறதை தெரிஞ்சிட்டுது என்னைவிடாம துரத்திட்டே இருந்தா...என்று மித்ரன் சொல்லிக்கொண்டிருக்க சொர்ணம் இவர்களை தேடி தோட்டத்திற்கு வந்தார்
"நீ என்னை முழுசா வெறுக்கற... என்னோட முகத்தை பார்க்ககூட உனக்கு பிடிக்கல, நான் செஞ்ச காரியத்தால இன்னும் நீ வீட்டுக்குள்ள கூட வரலனு, ஒவ்வொன்னா பாட்டி சொல்லும்போது .... எனக்கு உன்னை பத்தின நியாபகம் என்னோட மனசுல பேயாட்டம் போடும் "
"உன்னை கல்யாணம் பண்ணிக்க அப்போதைக்கு எனக்கு ஏதாவது வழிகிடைக்காதானு நினைச்சிட்டு நான் இருந்தப்பதான் நானே அதுக்கு வழி செஞ்சிக்கொடுக்கறேன்னு நீயும் அபியும் எனக்கு லட்டு கணக்கா சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திங்க... நான் அதை விடுவானா கப்புனு பிடிச்சிக்கிட்டேன்"...