சொர்ணம் வீட்டுக்குள் போகவே இல்லை வெளியையே உக்கார்ந்திருந்தார்....
நேரம் ஆக ஆக வீட்டுக்குள் அவரை காணமால் தேடிவந்த சொக்கலிங்கம் வெளியில் இருக்கும் சொர்ணத்தை பார்த்து அவரிடம் சென்றார் சொக்கலிங்கம்
ஏய் இங்க என்னடி பண்ற... எனக்கு மாத்திரை குடுக்கற நேரம் ஆயிடுச்சினு கூட உனக்கு தெரியலையா... இங்க வந்து உக்காந்துருக்க என்றார்
அவர் கேட்டதும் மடைதிறந்த வெள்ளம் போல கதிர்வேலன் பேசிய அனைத்தையும் கோவமாக கொட்டித்தீர்த்தார் சொர்ணம்.
நீ செய்வதும் சரியாடி, சின்ன குழந்தை அந்த மிருணா பாப்பா, நம்ப வீட்டுல பெண் குழந்தைகளே இல்லை என்ற குறையை அந்த குழந்தை தான் தீர்த்திட்டு இருக்கு, அதை போய் இப்படி கொடுமை படுத்துவது எனக்கும் கூட பிடிக்கலைடி
என்னங்க பேசுறீங்க கொஞ்சமாவது அறிவோடதான் பேசுறிங்களா... அந்த கழுதையை போய் நம்மளோட பேரன்கள்கூட ஒப்பிட்டு பார்க்கிறிங்க அவ ஒரு பண்ணையத்துல இருக்கறவ அவள் படித்தால் நமக்கு சமமாக வந்துவிடுவாளோனு நான் அவளை படிக்க இருக்க என்னென்ன வேலை செஞ்சிருக்கிறேன்னு உங்களுக்கு என்ன தெரியும், இந்த கதிர் பையன் வேற இந்த வேணிக்கு சப்போர்ட் பண்ணறதை பார்த்தால் எங்கே ஒரு நாள் அந்த குட்டிக்கு நான்தான் அப்பான்னு சொல்லிடுவானோனு நானே ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு படாதபாடு பட்டுகொண்டிருக்கிறேன்...உங்களுக்கு இதை பற்றி ஏதாவது கவலை இருக்கா கொஞ்சமாவது என்றார் வேகமாக
உன்னுடைய பயம் அநாவசியமானது சொர்ணம்... கதிர் ஒரு நாளும் அப்படி சொல்ல மாட்டான் நீ பயப்படமா இரு... இன்னும் மித்திகிட்ட வேணி, மிருணா பற்றி தப்பு தப்பா சொல்லாத சரியா?? சின்ன குழந்தை மனசுல நீ விஷத்தை விதைச்சனாலதான் இப்போ அதோட பாவமா நம்ப பேரனையே பிரிஞ்சி இருக்கற நிலைக்கும் வந்துருக்கோம்..
இன்னும் அந்த மிருணாவை ஏதாவது செய்யறேன்னு இங்க இருக்கற பேரனையும் பிரியவெச்சிடாத... இந்த வயசான காலத்துல என்னால அதை தாங்க முடியாது என்றார் கவலையாக
ம்ம் என்றவர் அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவனா? என்று மட்டும் மனதில் நினைத்துகொண்டு வெளியில் மட்டும் சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டினார்...
இருவரும் பேசிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்...
சக்திவேல் வீட்டிற்கு சென்ற மித்ரனுக்கு முதலில் எதுவுமே ஒத்துவரைவில்லை.. எதற்கு எடுத்தாலும் கோவம் கொண்டான்... சக்திவேலின் ஒரே பையன் கண்ணன் அவனிடம் கூட கோவத்தை தான் காட்டிக்கொண்டிருந்தான் மித்ரன்..
கண்ணன் அம்மா பத்மா இந்த விசியத்தில் பொறுமையாக இருந்தார்
ஒவ்வொரு தடவை கோவப்படும் போதும் அதற்கு காரணம் குட்டி சாத்தான் தான் என்று மிருணாவின் மீதே பழியை போட்டு அவள்மீது வெறுப்பை உமிழ்ந்தான் மித்ரன்
10 ம் வகுப்பு இறுதில் இருந்தவன் நடந்த விஷயத்தால் பாடத்தில் கவனத்தை செலுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்தான் .. அந்த வருஷம் மார்க் மிகவும் குறைவாகதான் வாங்கியிருந்தான்...
அவனது மார்க்கை பார்த்த கதிர் அவனிடம் சென்று அட்வைஸ் செய்துவிட்டு போகலாம் என்று வந்திருந்தார்..
என்ன மார்க் வாங்கியிருக்க மித்தி. இதுக்குதான் நான் உன்னை இவ்வளவு பணம் கட்டி படிக்கவைக்கிறேனா? மிருணா போல உன்னையும் கவெர்மென்ட் ஸ்கூல்லில் சேர்த்திருக்கலாம்.. மிருணா உன்னை விட நல்லா படிக்கறா... தெண்டமா பணத்தை வெஸ்ட் பண்ணிட்டேன் என்றார்
இங்கு வந்தும் அந்த மிருணை பற்றியே பேசுகிறாரே இவரை என்று பல்லை கடித்தவன், நான் இப்படிதான் படிப்பேன் உங்க இஷ்டப்படி என்னை இங்க கொண்டு வந்துவிட்டுட்டீங்கள... அது மாதிரி என்னோட இஷ்டபடி நான் இப்படிதான் படிப்பேன், என்றான் திமிராக.
என்ன மித்தி இப்படி அப்பாவை எதிர்த்து பேசற என்று சக்தி சொல்லவும் தான்... அமைதியானான்.
12 வதுல மட்டும் மார்க் கம்மியா வாங்கிருந்த உன்னை என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது என்று கத்திவிட்டுதான் சென்றார் கதிர்
மிருணா, கருணாவுடன் சேர்ந்துகொண்டு சுத்தியதால் மித்தியை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தாள்.அப்படி இருந்தும் காயைத்தை பார்க்கும் போது அவன் நினைவு வந்துவிடும். ஆனால் சிறுபிள்ளையாக இருந்தாலும் அந்த சம்பவம் நடந்தபிறகு அந்த வீட்டிற்கு இனி எப்போதும் போகமாட்டேன் என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தவள் அதை செயலிலும் காட்டினாள்..
வருடங்கள் செல்ல மிருணா பெரிய பெண் ஆனாள்...
மிருணா சொன்ன செய்தி கேட்டு வேணி கண்களில் கண்ணீர் வந்தது....
அவளால் இன்ப அதிர்ச்சியில் எதுவும் செய்யமுடியவில்லை
சாந்திதான் எல்லா விசயங்களையும் பார்த்துக்கொண்டாள்.ஆனால் சடங்களை அந்த பெரிய வீட்டிற்குள் வைத்துகொள்ளலாம் என்று கதிர் சொல்லவும்...
மாமா நான் சின்ன பொண்ணு.... அதிகம் பேசக்கூடாது அம்மா சொல்லிருக்காங்க ஆனால் நான் ஒன்று சொல்லியே ஆகவேண்டும்... எனக்கு எது செய்வதாக இருந்தாலும் எங்களுடைய குடிசையிலையே செய்ங்க. நான் அந்த வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று உறுதியாக சொன்னவளை மீறி எதுவும் செய்யமுடியாமல் வீட்டுக்கு வெளியே வாசலில் பந்தல் போட்டு விழாவை நடத்தினர்... அதற்கு கூட மித்தியை அழைக்கவில்லை யாரும்... ஆனால் வேணி மட்டும் சாந்தியிடம் மித்தி தம்பியை கூட்டிட்டு வாங்கம்மா தம்பி போய் 2வருஷம் ஆகுது... இது மாதிரி இனி எந்த விசேஷம் வைக்க போறோம் சொல்லுங்க என்றவளை முறைக்க செய்தாள் சாந்தி...
அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை வேணி... சக்திவேல் வந்து ஒரு தங்க செயின் ஒன்றை மிருணாவின் கழுத்தில் போட்டுவிட்டு... இது என்னோட பரிசும்மா... எங்க பரம்பரையிலையே சாந்தி மட்டும் தான் பொண்ணு... எனக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு எனக்கு கவலையா இருந்துது.... உன்னை பார்க்கும் போது எனக்கு அந்த கவலை போனது போலருக்கு.. எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தால் உன்னோட வயசுதான் இருக்கும்... அதனால இந்த செயினை நீ கழுடவே கூடாது என்றார்
அவள் வேணியை பார்க்க வேணி எதுவும் சொல்லாமல் இருக்கவும் சாந்தி அதுலாம் உன் அம்மா எதுவும் சொல்லமாட்டாங்க நீ சரினு சொல்லு என்றாள்
சரி என்று தலையை ஆட்டினாள் மிருணா
எல்லோரும் சந்தோசமாக இருக்க சொர்ணத்திற்கோ அதில் ஏக கடுப்பு தான் ஆனால் அன்று சொக்கலிங்கம் சொன்னபிறகு சொர்ணத்திடம் கொஞ்சம் மாற்றம் இருக்கதான் செய்தது இருந்தாலும் ஒரு பண்ணையத்துல இருக்கறவ பொண்ணு எப்படி நமக்கு சமமாக இருப்பது என்ற எண்ணம் உள்ளுக்குள் கனன்றுகொண்டு தான் இருந்தது .
இவர் இப்படி நினைப்பது யாருடைய தப்பு சொர்ணம் வளர்ந்த முறை அப்படி என்பதால் கூட இருக்கலாம்.. பண்ணையத்தில் இருப்பவர்கள் நமக்கு அடிமை என்ற எண்ணம் சொர்ணத்தின் தாத்தா, பாட்டியோ இல்லை அப்பா, அம்மாவோ சொல்லி குடுத்து வளர்த்திருக்க வேண்டும் வளர்த்தாமல் தானாக வந்திருக்காது.. அந்த காலத்தில் பண்ணையத்தில் இருப்பவர்கள் முதலாளியிடம் ஒரு காபி வாங்கி குடிக்க வேண்டும் என்றால் கூட தொடங்குச்சியில் தான் (தேங்காய் தொட்டி, சிரட்டை )ஊத்துவார்கள்.. முதலாளி இருக்கும் போது உக்கார கூடாது, கை கட்டிதான் இருக்கவேண்டும், முதலாளி குழந்தைகள் மட்டும்தான் படிக்க வேண்டும்..முதலாளி வீட்டின் வாசலை தாண்டி பண்ணையாள் செல்ல கூடாது என்று இன்னும் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது
அந்தமாதிரி சூழ்நிலையில் வாழ்ந்த சொர்ணத்திற்கு இன்று வேணியும் மிருணாவும் அதற்கு எதிராக இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
அந்த கோவத்தை வேணியின் மீது காட்டுவாரே தவிர, இப்போதுலாம் மிருணா இருந்த பக்கம் சொல்வது இல்லை சொர்ணம்....
அந்த வருடம் மித்தி 12வது வகுப்பில் பள்ளியில் முதல் இடம் பெற்றிருந்தான்
அதற்கு காரணம், நீ நல்ல மார்க் வாங்கினால் நம்ப வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன்னு என்று போன் பேசும்போது ஒரு நாள் கதிர் சொன்னதால் தான்... எப்படியாவது அவர் சொன்னதை செய்து வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தவன் அதை செய்துகாட்டியும் விட்டான்..
இதுநாள் வரைக்கும் விவசாயத்தை பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு ஒரு ஸ்பின்னிங் மில் தொடங்க வேண்டும் என்ற ஆசை வரவும். அதை சக்திவேலிடம் சொன்னார்... அவர் ஏற்கனவே அந்த தொழில் செய்வதால் கதிருக்கு தேவையான அளவுக்கு உதவிகளை செய்தார்... அந்த வேலைக்காக இருவரும் அலைந்த போது இதை பற்றி மித்தியும் தெரிந்துக்கொள்ளட்டு என்று அவனையும் உடன் அழைத்து சென்றனர்....
தொழிலின் நுணுக்கங்களை சக்திவேலிடம் இருந்து கதிரை விட மித்ரன் வேகமா கற்றுகொண்டான். கற்றுக்கொண்டான் என்பதை விட புரிந்துகொண்டான் என்பதுதான் உண்மை.. இதற்கு இடையில் 2தடவை வீட்டிற்கு அழைத்து வந்தார் கதிர்... வந்த 2முறையும் அவன் கண்கள் மிருணாவைத்தான் தேடியது ஆனால் அவனின் துருதிஷ்டமோ இல்லை மிருணாவின் அதிஷ்டமோ அவள் வீட்டில் இல்லாமல் வெளியே விளையாட போயிருந்தாள்...
யாரிடமும் கேக்க முடியாமல் முடிந்த அளவுக்கு கண்களால் தேடிவிட்டு சென்றுவிட்டான்....
காலேஜ் படிப்பிற்காக மித்ரன் டெல்லிக்கு சென்றான்.......