கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ் 8

மித்தி 4வருட காலேஜ் படிப்பையும் டெல்லியிலையே படித்தான். அதே போல, மிருணாவுக்கு பல கஷ்டங்கள் வந்தாலும் அதை தாண்டி 12ம் வகுப்பு வரை படிக்க வைத்துவிட்டாள் வேணி......

கருணா வெளியே எங்கையும் போகாமல் உள்ளூரிலையே காலேஜ் படித்தான்...

இதற்கு இடையில் கதிர் தொடங்கிய ஸ்பின்னிங் மில் நல்லா வெற்றிகரமாக ஓடியது... பல ஐடியாகளை மித்தியும் சொல்லி குடுத்தான்... அதன்படி நடத்த அதன் வளர்ச்சி விஸ்பரூபம் எடுத்தது...

4வருடங்களில் இன்னும் 2கிளைகளை தொடங்கினார் கதிர்

வருமானம் கூட கூட வீட்டை இடித்து பெரிய பங்களாவாக மாற்றி அமைத்தனர்... கீழே 4 பெட் ரூம். கிச்சன், பெரிய ஹால், பெரிய டைனிங்ஹால். ஸ்டோர் ரூம். ஸ்டடி ரூம் என்று இருக்க மேலையோ 4பெட் ரூம்.. ஒரு ஹால்லும் இருந்தது.... மித்தி சொன்னதால் எக்ஸ்ட்ராவாக ஆபிஸ் ரூமையும் வைத்திருந்தனர்...அதன்மேல் மொட்டை மாடியும் ஒரு ரூம்மும் இருந்தது..

அதோடு வேணியின் குடிசையையும் இடித்துவிட்டு 3ரூம் இருப்பது போல ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தனர்..... வீடு கட்டும் வரைக்கு பக்கதில் வாடகை வீட்டில் இருந்தனர் கதிரின் குடும்பம்.... அதனால் சீக்கிரம் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய முடிவு செய்தனர்... அந்த நேரம் மித்திக்கு செமஸ்டர் எக்ஸாம் இருந்ததால் அவனால் கிரகபிரவேசத்துக்கு வரமுடியவில்லை... அவன் வரமாட்டான் என்று கருணாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட மிருணா சந்தோசத்தில் துள்ளிக்குதித்தாள்...

அப்போது கூட அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை மிருணா... இப்படியே 4வருடம் சென்றது... முடிவாக மிருணா 12ம் வகுப்பில் நல்லா மார்க் வாங்கியிருந்தாள்.

அடுத்து காலேஜ் படிக்கவைக்க கதிரிடம் வந்து நின்றனர் வேணியும் மிருணாவும் . ஆனால் அதற்குள் சொர்ணம் மிருணாவிற்கு ஒரு மாப்பிளையை கொண்டுவந்து நிறுத்தினார்...

உன் பிள்ள படிச்சது போதும் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை கொண்டு வந்திருக்கேன் அவளை முதல கல்யாணம் பண்ணி அனுப்பி வை என்றார்

இதை கேட்ட வேணி இல்லை பெரியம்மா பிள்ளைக்கு இப்போதுதான் 17வயசு ஆகுது அதனால இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் அதுவும் இல்லாமல் இன்னும் படிக்க வைக்கணும்னு ஆசைபடறேன்.... படிச்சி அவ ஒரு வேலைக்கு போனதான் வெளி உலகம் என்னனு தெரிஞ்சிக்க முடியும் என்ன மாதிரி வெளி உலகமே தெரியாமல் இருக்கறதை போல அவளும் இருக்க கூடாது என்றார் வேணி

வெளி உலகம் தெரியாம இருந்த நீயே வயசு ஆனதும் ஒரு ஆம்பளையை தேடிக்கிட்ட இதுல உன் பொண்ணை வெளி உலகம் தெரியறமாதிரி வளர்க்க போறியா... உன் பொண்ணு உன்னை மாதிரிதானே இருப்பா என்றார் கொஞ்சம் கூட நா கூசாமல்

வேணிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கண்களில் கண்ணீருடன் நிற்கவும்... சொர்ணம் சொன்ன வார்த்தைகள் மிருணாவிற்கு புரிய ஆரம்பித்தது.. பெரிய பெண் ஆகிவிட்டால் அல்லவா? அதுவும் இல்லாமல் சின்ன வயசில் ஸ்கூல் படிக்கும் போதே ஸ்கூலில் பிள்ளைகளை அவர்களது அப்பா கொண்டு வந்து விட்டுவிட்டு செல்லும்போது தான் மட்டும் அப்பா இல்லாமல் இருக்கிறோமே என்று நினைத்த மிருணா... அன்று இரவு வேணியிடம் கேட்டாள்... அம்மா அப்பா சாமிகிட்ட போயிருச்சுனு சொன்னில.... அப்பா போட்டோ இருந்தா காட்டும்மா நான் பார்க்கணும் என்றாள்..

அப்பா போட்டோலாம் இல்லை மிருணா இனி இன்னொரு தடவை நீ இந்த மாதிரி கேட்டீனா சத்தியமா நான் உன்கூட பேச மாட்டேன் என்றார்

அதன்பிறகு மிருணா எதுவும் கேட்கவில்லை....நிறைய தடவை வேணியை தப்பாக பேசுவதை கேட்டிருக்கிறாள்.... அதுலாம் அப்போது புரியவில்லை இப்போது புரியும் போது தனது அம்மாவை வேற மாதிரி பார்க்க ஆரம்பித்தாள் மிருணா.

என்னோட பொண்ணு அப்படி எதுவும் செய்யமாட்டாள்... என்று சொர்ணத்திடம் சொன்னவர்.... கதிரிடம் ஐயா என்னோட பொண்ணை காலேஜ் சேர்த்தி படிக்க வைக்கணும் என்றாள்

சரி நான் நாளைக்கு போய் பார்க்கறேன் என்றார்.

சரி என்று இருவரும் வீட்டிற்கு வரவும் அம்மா உன்னை எதுக்கு அந்த கிழவி அப்படி சொன்னிச்சி என்றாள்

அவங்களை விடு மிரு பக்கதுல மெடிக்கல கேட்டு வெச்சிருக்கேன் காலேஜ் போற வரைக்கும் நீ அங்க வேலைக்கு போறியா என்றார்

அதை பற்றி அப்புறம் பார்க்கலாம் நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எதுக்கு அந்த கெழவி உன்னை அப்படி சொன்னது.. அது சொல்லறதை பார்த்தால் நான் தப்பான வழியில் பொறந்தவளா என்றாள் வேகமாக

அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த வேணி கீழே உக்கார்ந்து அழுக ஆரம்பித்தாள்....

கன்னத்தில் கையை வைத்தவாறே அவரை பார்த்தவள் வெளியே சென்றுவிட்டாள்...

இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நின்று போனது...

அடுத்த நாள் கதிர் வந்து காலேஜ் சேர்க்க கூப்பிட்டதும் மிருணா வேகமாக வெளியே வந்தவள் மாமா போலாம் என்றாள்

இரும்மா வேணியும் வரட்டும் என்றார் அவர்

வேண்டாம் மாமா நம்ப மட்டும் போலாம் வாங்க என்றாள்..

வேணி அப்ளிகேஷன்ல சைன் பண்ண வரணும்ல என்றார்

வேண்டாம் மாமா எனக்கு நீங்க என்னோட கார்டியன்னு போட்டு சேர்த்துவிடுங்க என்றாள்

அவள் பேசும் விதமே ஏதோ சரி இல்லை என்பதை புரிந்துகொண்ட கதிர் சரி வா போலாம் என்று அழைத்து போனார்....

இருவரும் காலேஜ் சென்றதும் அவரிடம் மெதுவாக மாமா நான் ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறேன் மாமா என்றாள்

என்னம்மா சொல்ற வீடு 5கிலோமீட்டர்ல இருக்கும்போது எதுக்கு ஹாஸ்டல் என்றார்

நான் இங்க இருந்தே படிக்கிறேன் மாமா ப்ளீஸ் என்றாள்

எனக்கு நீ ஏன் சொல்லறன்னு தெரியலை ஆனா நேத்து எங்க அம்மா பேசுனதுல உனக்கும் உங்க அம்மாவுக்கு ஏதோ பிரச்சனைனு மட்டும் புரியுது என்றார்

அவள் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்த வண்ணம் இருக்கவும் அப்போ நான் நினைச்சதுதான் உண்மை போல இங்க பாரு மிரு நீ சின்ன பொண்ணு இன்னும் சில விசியங்களை உன்னால புரிஞ்சிக்க முடியாது இருந்தாலும் சொல்றேன் வேணி தங்கமான பொண்ணு. அவளை தப்புனு இந்த உலகம் சொல்லுச்சினா கண்டிப்பா அவங்க தப்புதான் அது.... நீ வேணியை சந்தேகப்பட்டு தான் இந்த முடிவு எடுத்துருக்கினா இதுக்கு நீ படிக்காமலே இருந்துரு என்றார்...

நான் என்ன பண்ணட்டும் மாமா எனக்கும் என்னோட அப்பாவை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல அதை தானே அவங்ககிட்ட சொல்றேன்..

நீ படிச்சி முடி நானே உனக்கு எல்லாம் தெளிவா சொல்றேன் அதுவரைக்கும் நீ உங்க அம்மாவை தப்பா நினைக்க கூடாது.... எனக்கு ப்ரோமிஸ் பண்ணிகுடு என்றார்...

சரிங்க மாமா என்று அவர் கையில் தான் கையை வைத்து அடித்தாள் அவள் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அதை எதையும் இப்போதைக்கு கேக்க வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டாள்... பிபிஏ பிஸ்னஸ் சமந்தபட்டதை தேர்ந்து எடுத்தவள்... அம்மா பெயர் வேணி என்று கொடுத்து அவர்களிடம் சைன் வாங்கி கொண்டு நாளை வந்து தருவதாக சொல்லிவிட்டு வந்தாள்

அவள் செய்ததை பார்க்கும் போது கதிருக்கு மனம் லேசானது...

வீட்டிற்கு போனதும் மிருணா வேணியை கட்டிக்கொண்டு அம்மா நான் காலேஜ் சேர்ந்துட்டேன் இந்தா நீதான் சைன் பண்ணனும் என்று கொடுத்த அப்ளிகேஷனை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது வேணிக்கு

பிறகு வந்த நாட்கள் கருணாவே மிருணாவை அழைத்துக்கொண்டு சென்று அவனே வீட்டிற்கு கொண்டு வந்து விட்டான்...

மித்தி 2வருடம் மேல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்றான் அவன் எங்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கதிர் அதை மறுக்கவில்லை சாந்திக்கு தான் வயசாக, வயசாக பிள்ளையை பிரிந்து இருக்க மனம் வேதனை பட்டது...அன்றோ அவன் திருந்த வேண்டும் என்று அனுப்பி வைத்தனர் ஆனால் இன்றோ அவன் இவர்கள் அன்று அனுப்பியதுக்கு பழிவாங்க சமயம் கிடைத்தது என்று வைத்து செய்துகொண்டிருக்கிறான்.

அவன் மேல் படிப்பிற்கு செல்ல இங்கோ கருணாவும் MBA படிக்க போனான்... வருடங்கள் ஓட முதலில் படிப்பை முடித்த மித்தி அப்பாவுக்கு துணையாக அங்கே இருந்துகொண்டே பல எஸ்க்போர்ட் ஆடர்களை பிடித்து கதிருக்கு கொடுத்தான்...அவன் அனுப்பும் பல ஆடர்களை இங்கு தனது 5கம்பெனிகளுக்கும் பிரித்து கொடுத்து வேலை வாங்கிகொண்டிருந்தார்...

மிருணா கடைசி வருஷபடிப்பில் இருக்க.. அப்போது பார்த்து முதன் முதலாக ஆரம்பித்த கம்பெனியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.
 
Top