கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அழற்கதிரின் முகிழவள்-முகிழ்

எல்லோரும் அவரரவர் வேலையை பார்க்க போனதும் மித்ரன் நிவியை பார்த்து "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் அவருக்கு மட்டும் கேக்குமாறு

"லாரா நீ போய் குளிச்சிட்டு, பாப்பாவையும் குளிக்க வை நான் வெளியே அப்படியே காத்தாட போய்ட்டு வரேன் "என்று சொல்லவும் ,

"சரி " என்றாள் லாரா

அவள் போனதும் இருவரும் வெளியே வர மித்ரன் நிவியிடம் " எதுக்கு அக்கா, அவளை இங்க அழைச்சிட்டு வந்துருக்கீங்க?? " என்றான்

"நான் என்ன பண்ணட்டும் மித்ரன், லிசா உன்னை பார்க்கணும்னு ஆசைபட்டு அடம் பிடிச்சதும், எங்களுக்கும் இந்தியால வேலை இருக்குனு, அதையும் பார்த்துட்டு உன்னையும் பார்த்துட்டு போலாம்னு லிசாவை கூட்டிட்டு வரலானு இருந்தேன், இதை தெரிஞ்சிகிட்ட லாரா, நானும் கூட வந்தே தீருவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம், அப்பறம் அவங்க அண்ணா தான் கூட்டுட்டு போனு சொல்லிட்டாங்க அதுக்கு அப்புறம் நான் அவளை விட்டுடு வர முடியுமா"?? என்றார் நிவி

"எனக்கு கல்யாணம்னு தெரிஞ்சி தான் இங்க வந்துருக்கா, மிருணா வந்தப்ப அவ முகம் எப்படி போய்டுசி பார்த்திங்கள.... அவளால இங்க ஏதாவது பிரச்சனை வருமோனு தோணுது, அவ பண்றது என்னை பாதிச்சா நான் சமாளிச்சிப்பேன் , ஆனா வீட்டுல இருக்கறவிங்கல பாதிச்சிதுனா என்னால சும்மா இருக்க முடியாது, அப்பறம் அவளை உண்டு இல்லைனு பண்ணிடுவேன் , அதனால் அவளை கூட்டிட்டு நீங்க சீக்கிரம் கிளம்புங்க" என்றான்

"எனக்கு புரியுது மித்ரா .. நானும் அவளை அவாய்டு பண்ணத்தான் ட்ரை பண்ணேன் , முடியலை" என்றார்

"நீங்க கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணிருந்திங்கனா ?? நான் வர வேண்டாம்னுதான் சொல்லிருப்பேன்" என்றான்

"சரி, இன்னிக்கு ஒரு நாள் எப்படியோ சமாளிச்சா போதும் , நாளைக்கு காலைல எங்களுக்கு பிளைட்"...என்றார் நிவி

"இன்னிக்கு ஒரு நாள் தானே நான் பார்த்துக்கறேன்" என்றான்

அதன்பின் இருவரும் உள்ளே சென்றனர்..

மிருணா, கருணா இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை , இருந்தும் முகத்தில் அவள் வேதனைகாட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள் ,

"அவர் ஏதோ கோவத்துல சொல்லிட்டாரு விடுடி" என்று அவள் பின்னால் வந்த ஆரூ சொல்லவும்

"ப்ச்" என்று முகம் சுளித்தாள் மிருணா

இருவரும் தோட்டத்தில் இருந்தனர்

வேணி இவர்கள் இருவரையும் தேடிக்கொண்டு தோட்டத்திற்கு வர.. "இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? 2பேரையும் எங்களலாம் தேடறது, வாங்க காபி குடிக்கலாம்" என்றார்

"வரோம் ஆண்ட்டி" என்றாள் ஆரூசா

"மிரு கருணாவுக்கு பள்ளிபாளையம் சிக்கன் பிடிக்கும்ல, அதைதான்செய்ய போறேன் நீ கருணாகிட்ட சிக்கன் வாங்கிட்டு வர சொல்றியா? " என்று வேணி கேட்கவும்

ஆரூசாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது...

மிருணா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு " அதுலாம் ஒன்னும் வேண்டாம், போய் தோசையை ஊத்து நான் வரேன்" என்றாள்

"இவளுக்கு என்னாச்சி "?? என்று ஆரூவிடம் கண்களால் வேணி கேக்க... "சொல்றேன் ஆண்ட்டி "என்றாள் அவளும் உதட்டசைவில்

"ஆரூ வந்து காபி எடுத்துட்டுபோ வா" என்று அவளை வேணி அழைத்து சென்றுவிட

மிருணாவிற்கு கருணா பேசியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது..

நிவியிடம் பேசிவிட்டு மித்ரன் அவள் போன பக்கம் வந்தான் அவள் தொட்டியின் மீது உக்கார்ந்திருப்பதை பார்த்தவன் ...

அவள் பக்கதில் சென்று. என்ன அம்லு பீல் பண்ணிட்டு இருக்கியா

"உங்களை யார் இங்கே வரச் சொன்னது?? "

"யார் சொல்லணும்"

"நான் ஏற்கனவே செம டென்ஷன்ல இருக்கேன், என்னை மேலும் டென்ஷன் பண்ணாம போயிருங்க"

"அதான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்குல்ல, அப்புறம் நான் என்ன டென்ஷன் பண்ண போறேன்"

" உங்களுக்கு இப்ப என்ன வேணும்"??

"என்ன வேணும்னு கேட்டா நீ கொடுத்துடுவியா"?

"ம்ம் கொடுக்கிறேன் கன்னத்தில் ரெண்டு "

"என்னது முத்தம்மா"?? என்று கண்ணடித்தான்

"டேய் உன்னை "என்று பல்லைக் கடித்தவள் மரியாதை எல்லாம் காற்றில் பறக்க விட்டிருந்தாள்..

"சரி, சரி ரொம்ப டென்ஷன் ஆகாத, அவன் ஏதோ கோவத்துல சொல்லியிருப்பான் விட்டுத்தள்ளு உன் மேல அவன் கோவமாவா இருப்பான்".

"எனக்கு தெரியும் உங்க வேலையை பார்த்துட்டு போங்க .... அவன் என்னோட பிரண்ட் .... அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், எங்களுக்கு இடையில யாரும் வர வேண்டாம் " என்றவள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்

போகும் அவளையே பார்த்துகொண்டிருந்தவன் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் தோன்ற அதை எல்லாம் புறம் தள்ளியவன் வீட்டிற்கு சென்றான்

மிருணா வீட்டுக்கு போனதும் சோபாவில் கொஞ்ச நேரம், பெட்டில் கொஞ்ச நேரம் திண்ணையில் கொஞ்ச நேரம் என்று இடம் மாத்தி இடம் உக்கார்ந்து எதையே சிந்திக்க....கருணா ஏன் கோவமாக இருக்கிறான் என்று ஓரளவிற்கு புரிந்துக்கொண்டாள்,

சாப்பிட வேணி கூப்பிடும் போது கூட ஏதோ யோசனையில் இருக்க அவளை கடந்து உள்ளே போன கருணாவை பார்க்கவில்லை

"அத்தை என்ன இன்னிக்கு பள்ளிபாளைய சிக்கன் போல" என்று சொல்லவும்

"நீதானே கருணா சிக்கன் வாங்கி தந்தட்டு போன" என்றார் வேணி

அவன் வெளியே இருந்த மிருணாவை எட்டி பார்த்துவிட்டு வாயில் கை வைத்தான்...

"இன்னிக்கு காலைல இருந்து செம பசி , டீ கூட குடிக்கல" என்றவன் "போடுங்க போடுங்க" என்றான் வேகமாக

இவன் குரல் கேட்டதும் முகத்தில் சந்தோசத்துடன் மிருணா உள்ளே வர

அவளை ஒரு பொருட்டாககூட மதிக்கவில்லை கருணா...

"நான் வைக்கட்டுமா டா?? " என்று அவனுக்கு பிடித்த பீஸை எடுத்து வைக்க போனவளை தடுத்தவன் "அத்தை நீங்க வைங்க "என்றான்

"நான் வைக்கட்டுமா?? " என்று ஆரூசா முன்னால் வரவும்

"ம்ம் வை ஆரூ" என்றவன் மிருணாவை நக்கலாக பார்த்தான்

அவள் எதுவும் சொல்லாமல் எழுந்து நின்றவள் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க ஆரம்பித்தாள்... அவளுக்கு ஓரளவுக்கு இதுதான் காரணம் என்று தோன்றியது இப்போதான் கன்பார்மாக அது தான் என்பதை புரிந்துக்கொண்டவள்

"கருணா கோவமா இருந்தாலும் இப்போதைக்கு என்கிட்ட இருந்து நீ எந்த விசியத்தையும் வாங்க முடியாது, நேரம் வரும் போது நானே சொல்லுவேன்" என்று நினைத்தவள் அவன் பக்கதில் உக்கார்ந்துகொண்டு "அம்மா எனக்கும் பசிக்குது" என்றாள் வயிற்றில் கை வைத்துக்கொண்டு

அவளுக்கும் தட்டு வைக்க, கருணா எழ போகவும் அவனை அழுத்தி பிடித்து அமரவைத்தவள்

"நீ சாப்பிடு நான் வெளியே போறேன்" என்று மொபைலையும் தட்டையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டாள்

"நான் எதுக்கு கோவமா இருக்கேனு இவளுக்கு தெரிஞ்சிருக்குமா, இல்லை இவன் என்ன பெரிய ஆளானு நினைச்சிட்டாளா, 2நாள் போனா வந்து பேசிடுவான்னு திமிறா நினைச்சிருப்பா, இருக்கட்டும் எவ்வளவு நாள் ஆனாலும் அவளா வந்து எல்லாத்தையும் சொல்லி பேசனா தான் பேசுவேன், என்று நினைத்தவனுக்கு சாப்பாடு இறங்கவில்லை சாப்பிடாமல் எழுந்தவனை கேள்வியாக வேணி பார்க்கவும்

"போதும் அத்தை அதையும் அதோ கொட்டிக்கிறாளே, அவளுக்கே கொட்டுங்க" என்றவன் கை கழுவி விட்டு சென்றுவிட்டான்.

அன்று மதியம் வரைக்கும் லாரா கூடவே இருந்த மித்ரன் மதியம் கம்பெனி வேலை வந்ததும் சென்றுவிட்டான்...

நிவி லிசாவை தூங்க வைக்க போகவும் லாரா மெதுவாக நடந்து மிருணாவை பார்க்க போனாள்

எந்நேரமும் ஆரூ மிருணா கூட இருந்ததால் லாராவால் மிருணாவிடம் பேச முடியாமல் போனது....

லிசாவை தூங்க வைக்க போன நிவியும் தூங்கி போக லாராவிற்கு சாதகமாக போனது, எப்படியும் மிருணா வெளியே வந்தானே ஆகணும் என்று நினைத்தவள் வெளியவே சுத்திக்கொண்டிருந்தாள்.

மிருணா எதற்கோ வெளிய வரவும் , லாரா அவளை பார்த்து "ஏய் கம் ஹியர்" என்றாள் திமிராக

அவள் அழைத்ததில் காண்டு ஆனா மிருணா பேச வாய் எடுக்கும் போது லாரா கையில் இருந்த ஒரு பேப்பரை காட்டினாள் , அவள் காட்டிய பேப்பரை பார்த்த மிருணாவிற்கு கோவம் தலைக்கு ஏற

"என்னடி இது" என்றவள் அவளை ஒங்கி ஒரு அறைவிட்டாள்

அவள் அழுவாள் என்று பார்க்க இப்படி அடிப்பாள் என்று எதிர்பார்க்காமல் மிருணாவை முறைத்த லாரா "ஹொவ் டேர் யூ "... என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள்

அவளை பார்த்த மிருணா

"கையாள அடிச்சேன்னு சந்தோசப்படு... உன்னை எல்லாம் செருப்பால அடிக்கணும்" என்று கத்தியவள் " இதுக்குலாம் காரணம் அந்த மித்ரன் தானே வரட்டும் அவனுக்கும் இருக்கு "என்றாள்

மித்ரனுக்கு விசியம் தெரிந்தால் இவள் போட்ட பிளான் எல்லாம் சொதப்பி விடுமே என்று நினைத்தவள் மிருணாவிடம் இருந்து விலகி உள்ளே சென்றுவிட்டாள்...
 
Top