அத்தியாயம் 11
"இங்கே பாரு சூர்யா! நீயும் உன் அண்ணனுக்கு ஜிங்ஜா போடாமல் கொஞ்சம் எடுத்து சொல்லு. அவனுக்காக தான் உன்னை அனுப்பவே சம்மதிச்சேன்" கிளம்பிக் கொண்டிருந்த சூர்யாவிடம் நூறாவது முறையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார் ஜானகி.
"ம்மா! என்னை இப்படி இரு.. அப்படி இருன்னு சொல்லுங்க கேட்டுக்குறேன். அண்ணாகிட்ட பேச சொல்லாதீங்க. அண்ணாக்கு சந்தியா அண்ணிய புடிக்கும்னா நான் ஏன் மறுக்க போறேன். நீங்க என்ன சொன்னாலும் நான் அண்ணா பக்கம் தான்" தெளிவாய் அவள் சொல்லிவிட,
"அப்ப உன் அண்ணா இப்படியே தனியா இருந்துடட்டுமா சூர்யா? நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டான். அவனுக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?" ஜானகி.
"அது அண்ணாக்கு தோணனும். கட்டினவளும் சரியில்லை.. பெத்த நீங்களும் புரிஞ்சிக்கலனு தான் நம்ம முகத்துல முழிக்காமல் எங்கேயோ போய் தனியா இருந்து அண்ணா கஷ்டப்படுறாங்க. அவங்களை நானும் கஷ்டப்படுத்த விரும்பல. யுவா அண்ணா என்ன முடிவெடுத்தாலும் அது தான் எனக்கும் சரி"
"அப்ப ஏன் நீ அங்கே போற? உனக்கும் என்கூட இருக்க புடிக்கலையா?" ஆயுதமான கண்ணீரைக் கையில் எடுத்தார் ஜானகி.
"ம்மா! இப்ப ஏன் நீங்க அழறீங்க? நான் அப்படி நினைக்கவே இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்னு என்னை தள்ளிவிட்டுடுவீங்க. அதுவரையாச்சும் அண்ணாகூட சந்தோசமா இருந்துக்குறேன். அண்ட் அண்ணா பத்தி நீங்க கவலைபடவே வேண்டாம். அவங்க லைஃப் அவங்க பார்த்துப்பாங்க" திடமாய் சொல்லியவள் அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கவும் மறக்கவில்லை.
"நான் கிளம்புறேன் மா. பத்திரமா இருங்க. முடிஞ்சா.. அண்ணா சம்மதிச்சா அண்ணாவையும் கூட்டிட்டு வர்றேன் வரும்போது" கொஞ்சம் ஆறுதல் படுத்திவிட்டு கிளம்பினாள் அவள்.
"கல்ப்! அம்மாக்கு உடம்பு சரியில்லைனு அப்பா கால் பண்ணினாங்க. நான் ஊருக்கு போய்ட்டு வர்றேன். நீ ஒரு ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்றியா? வேணும்னா ஜீவிய ரெண்டு நாள் இங்கே வந்து தங்க சொல்லவா?" சுதாகர்.
"ஏன் அத்தைக்கு என்னாச்சு சுதா? நான் வேணா வரவா?" வேகமாய் அவள் கேட்டுவிட, துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.
"எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டியா கல்ப்? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சின்னதா முள்ளு குத்தினதுக்கு தான் ஆர்ப்பாட்டம் பண்ணி வர சொல்லியிருப்பாங்க. நான் போய்ட்டு வர்றேன். நீ ஜீவாவை பார்த்துக்கோ. ஜீவிய போன் பண்ணி வர சொல்றேன். அவன் பார்த்துக்குவான். அந்த சந்தியாவை இங்கே வரவே கூடாதுன்னு திட்டிட்டேன். சோ உன்னை யாரும் டிஸ்டப் பண்ண மாட்டாங்க. பீ சேஃப்" அவன் சொல்லி முடிக்க,
"அந்த பொண்ணு பாவம். சாரி எல்லாம் கேட்டா தெரியுமா? இருந்தாலும் இப்ப எல்லாம் ரொம்ப கோபம் வருது மாமா உங்களுக்கு" என்றாள் கல்பனா.
"இதெல்லாம் நல்லா பேசு. பேச வேண்டிய நேரத்துல பேசிடாத. டேக் கேர் ஜீவாவை பத்திரமா பார்த்துக்கோ" என்றவன் சந்தியாவிற்கும் குறிப்பாய் ஒரு குறுந்செய்தி அனுப்பிவிட்டு தான் கிளம்பினான்.
கல்பனாவிற்கு இது புதிதல்ல. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு சென்று வருவான் சுதாகர். அந்த நேரங்களில் தனியாய் இருக்க பழகிக் கொண்டாள். சுதாகர் தனியே அவளைவிட தயங்கினாலும் அவளே அனுப்பி வைப்பாள்.
மறந்து கூட என்னோடு வா என்று அழைத்து செல்ல மாட்டான். தன் அன்னையை பற்றி அறிந்தவன் ஆயிற்றே!
சுதாகர் சென்றதும் கல்பனா ஜீவாவினை விளையாடவிட்டு சமையல் வேலையில் இருந்தாள். மனதில் சந்தியாவை பற்றிய எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது.
"நீ வராமல் இருந்திருந்தால் என் மகன் சந்தியாவோட சந்தோசமா இருந்திருப்பான். எங்கிருந்து தான் வந்து சேர்ந்தயோ" ஜானகி சொன்னது ஞாபகம் வந்தது.
சந்தியாவை இதற்குமுன் பார்த்தது இல்லை என்றாலும் ஜானகி சொல்ல சிலமுறைக் கேட்டிருக்கிறாள்.
முதலிலேயே அவளை திருமணம் செய்திருந்தால் தேவையில்லாத கஷ்டங்கள் எல்லாம் என்னோடே போயிருக்கும்.
ஊரிலேயே இருந்திருந்தால் மட்டும் உன் நிலை என்ன? என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை அவள் மனதிடம்.
இப்போதும் யுவா சந்தோஷமாய் இருந்தால் போதும் என நினைத்தவளுக்கு அருகருகே இருப்பது எப்படி என்று தான் புரியவில்லை.
தான் இல்லாத குறையே அவனிடம் இல்லை என்பதும் மனதின் ஓரத்தில் வலி ஏற்படுத்தாமல் இல்லை.
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றிவர, ஜீவா சத்தத்தில் அவனிடம் வந்தாள்.
"அக்கா உள்ளே வரவா?" சந்தியா வாசலில் நின்று கேட்க,
"வா சந்தியா" என்ற கல்பனாவிற்கு இப்போது தான் ஒரு சந்தேகம் வந்தது.
இதுவரை யுவா, சந்தியா ஜோடியாய் வெளியே சென்று வந்து பார்த்தது என்ன கேள்விப்பட கூட இல்லையே. சென்னையில் ஒரு வீட்டில் நடப்பது இன்னொரு வீட்டிற்கு தெரிவதில்லை என்றாலும் இந்த காலனியில் அப்படி இல்லையே!
தோண்டித் துருவும் பெருசுகளும், கிண்டல் செய்யும் இளைஞர்களும், புறணி பேசும் பெண்களும் என ஒரு வீட்டில் நடப்பது அப்படியே காலனி முழுதும் பரவிடுமே!
அந்த வரையில் சுதாகர், கல்பனாவை சந்தேகமில்லாமல் அந்த காலனி ஏற்று கொண்டது கூட ஆச்சர்யம் தான்.
யுவா சந்தியா கணவன் மனைவியாய் வெளியில் சுற்றி திரிய வேண்டும் என்றில்லை. இருவரும் பேசிக் கூட சுதாகர் எதுவும் சொல்லியதில்லை.
அப்படி தெரிய வந்திருந்தால் அதை சாதாரணமாக கடந்து சென்றிருப்பாளா இவள்? கேள்வி தான்!.
குழப்பமாய் யோசித்தவள் ஏன் இவ்வளவு யோசிக்கிறோம் என்றும் யோசித்திருக்கலாம்.
"லாயர் போயாச்சா?" சந்தியா கேட்க,
"ம்ம்! இப்ப தான் கிளம்பினாங்க. அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை அதான் ஊருக்கு போறாங்க. வர ரெண்டு நாள் ஆகும்" என்றாள்.
"உங்களுக்கும் நான் வர்றது புடிக்கலையா அக்கா?" பாவமாய் கேட்பவளை பார்த்து இன்னும் பாவமாய் போனது கல்பனாவிற்கு.
கூடவே இவ்வளவு செகுளியாக இருக்கிறாளே என்றும்.
ஒட்டு மொத்த கதைக்கும் திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் சந்தியா, சுதாகர் இருவருடையது என தெரியும் போது என்ன செய்வாளோ கல்பனா.
"அப்படியெல்லாம் இல்லை சந்தியா. மாமா எதாவது கோபத்துல பேசியிருப்பாங்க. மனசுல வச்சுக்காத"
"அதெல்லாம் ஒன்னும் நினைக்கல அக்கா. ஊருக்கு போயிருக்காங்களா எப்ப வருவாங்க?" தெரிந்தும் தெரியாதது போல அவள் கேட்க,
"ம்ம் ரெண்டு நாள்ல வந்துடுவாங்க" என்று தலையாட்டினாள் கல்பனா.
"ஒஹ்! யுவா சிஸ்டர் நாளைக்கு ஊர்ல இருந்து வர்றா. யுவாக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்காம். பிக்கப் பண்ண லாயர் சாரை கூட்டிட்டு போலாம்னு நினச்சேன். இப்ப என்ன பண்றது?" வந்த வேலையை சரியாய் முடித்தாள்.
'சூர்யா வர்றாளா?' என நினைத்த கல்பனாவிற்கு இன்னும் இன்னுமே பாரம்.
அவளும் அன்னையை போலவே தானே தன்னை பேசுவாள். ஒருவேளை அதற்காக தான் வருகிறாளா? தன்னால் கேட்க முடியாததை தங்கையை விட்டு கேட்க வைக்கப் போகிறானா? சுதாகரும் இந்த நேரத்தில் இங்கில்லையே. முதலிலேயே சுதாவிடம் சொல்லியிருக்க வேண்டுமோ!
நாளை வருபவளை நினைத்து இன்றே மனம் அடித்துக் கொண்டது கல்பனாவிற்கு.
"சரி நானே போய் பிக்கப் பண்ணிக்குறேன். நீங்க தனியா எப்படிக்கா இருப்பிங்க. நான் வேணா நைட்க்கு இங்கே வந்திடவா?"
யுவா விடமாட்டான் என தெரிந்தாலும் கல்பனாவிற்காக கேட்டாள் சந்தியா.
"இல்லை சந்தியா. மாமா ஊருக்கு போகும்போது எப்பவும் நானும் ஜீவாவும் தான் இருப்போம். பழகிடுச்சு. என்னோட தம்பி இப்ப சென்னைல தான் இருக்கான். அவன் நைட்க்கு வந்திடுவான்" என்றவளுக்கு ஜீவிக்கு சூர்யாவை தெரியும் என்ற நியாபகம் வர,
யுவாவை பார்க்க விடாதது போல அவளையும் பார்க்க விடக் கூடாது. அதற்கு மேல் வருவதை சமாளித்து தான் ஆக வேண்டும் என நினைத்து இப்போதே பெருமூச்சு எழுந்தது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரத்தில் இருக்கும் தனது கிராமத்திற்கு வந்திருந்தான் சுதாகர்.
"இப்படி பொய் சொல்லி வர சொல்லிருக்கியே... அவன் வந்து ஆட போறான்" சிவலிங்கம் தன் மனைவி பானுமதியிடம் கூறிக் கொண்டிருக்க, அதை காதில் வாங்கிக் கொண்டு உள்நுழைந்தான் சுதாகர்.
"உண்மைய சொன்னா மட்டும் வந்துடுவானாக்கும் உங்க சீமந்தப்புத்திரன். ஓடிப்போன..." சொல்ல வந்த வார்த்தை அப்படியே உள்ளே சென்றது பானுமதிக்கு.
வாசலில் ஒரு தோளில் பேக்கை தொங்கவிட்டு கைகளைக் கட்டி தூணில் சாய்ந்து நின்ற சுதாகரை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
"வா டா. அம்மாக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னா தான் வருவ இல்ல? உன்னை சொல்லி என்ன பிரயோஜனம்.. ஆட்டுறவள சொல்லணும்" சத்தமாய் ஆரம்பித்தவர் பின்பாதி அவன் காதில் விழாதவாறே முடித்தார்.
"இப்ப கூட வரணும்னு தோணல மா. கல்ப் தான் போடானு துரத்தி விட்டுட்டா" அன்னையை சீண்டி விட்டான் மகன்.
"எடு துடைப்பக்கட்டைய! என்னை பார்க்க என் மவன் அவகிட்ட கெஞ்சனுமாக்கும். அவ இந்த மானங்கெட்ட பொழப்புக்கு..." ஒரு உத்வேகத்தில் சத்தமாய் சொல்லிவிட, சுதாகர் தூக்கி எறிந்த பேக் விழுந்த வேகத்தில் அவன் கோபம் புரிந்து வார்த்தையை அடக்கினார்.
"ரெண்டு நாள் தான் லீவ். சீக்கிரம் பொண்ணு பார்த்துட்டு வந்துடலாம். நாளான்னைக்கு நான் கிளம்பனும்" சொல்லியவன் தன் அறைக்கு சென்றுவிட அப்படி ஒரு பூரிப்பு அன்னைக்கு.
பெண் பார்க்க செல்ல தான் அவனை பொய் சொல்லி வர வைத்திருந்தார் பானுமதி. அவனும் அதையே இவர் கேட்காமல் சொல்லி செல்ல,
"பார்த்திங்களா! பார்த்திங்களா! நான் சொன்னேன்ல.. ஒரு நாள் நம்மகிட்ட வருவான்னு.. இப்ப தான் புத்தி வந்துருக்கு.. நாளைக்கே வர்றோம்னு சாந்தி வீட்டுக்கு போன் போடுங்க" என்ற பானுமதி அடுத்த வேலையை பார்க்க விரைந்தார்.
"நான் கல்பனாவை தான் கட்டிக்க போறேன்" போன மாதம் வரை வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் அதுவும் திருமணம் என அழைப்பு வந்தால் இதுவாய் தான் இருக்கும் சுதாகர் பதில்.
இன்று நேரில் வந்ததோடு அவனே சம்மதமும் சொல்லிவிட நிஜமாய் அவனை நம்பிவிட்டார் பானுமதி.
தன் அன்னை சொல்லி புரிந்து கொள்பவர் அல்ல என தெரிந்த சுதாகர் நாளை செய்ய போகும் செயலில் அடுத்து அவனுக்கு பெண் கொடுப்பார் தான் யாரோ?
ஆசை தொடரும்..