அத்தியாயம் 13
"பொண்ணு வீட்டுல எல்லாம் சொல்லிட்டிங்க தானே?" என்ற சுதாகரின் கேள்வியில் அனைவரும் புரியாமல் பார்க்க, பானுமதி என்ன சொல்கிறான் என்று குழம்ப, சிவலிங்கம் தன் மகனை அப்போதே சரியாக கவனித்திருந்தவற்கு அவனின் விளையாட்டு நன்றாய் புரிந்தது.
இனி அவன் பார்த்து கொள்வான் என்பதை போல ஒரு அமர்ந்த சிரிப்புடன் நடப்பதை வேடிக்கை பார்த்தார் சிவலிங்கம்.
"உனக்கு தான் வரதட்சணை வாங்குறது பிடிக்காதே சுதா! அதெல்லாம் அப்பவே பேசிட்டேன்" இதை தான் கேட்கிறான் என பானுமதி அவரே தீர்மானித்து கேட்டார். திருமணத்திற்கு பின் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.
"ஹ்ம்ம்! எனக்கு ரெண்டாவது கல்யாணம் கூட தான் புடிக்கல... ஆனால் அதுக்கு தானே வந்திருக்கோம்? எல்லாருக்கும் சம்மதம் தானே?"
'முதல் பந்து... இதுவே போதும் சிக்ஸர் தான்' சிவலிங்கம் நினைத்துக் கொண்டிருக்க, சாந்தி கொதித்து எழுந்தார்.
"ரெண்டாவது கல்யாணமா? யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? என் பொண்ணுக்கு என்ன குறை இருக்குன்னு நான் அவளை ரெண்டாந்தரமா கொடுக்கணும்? அண்ணி உங்க பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டுன்னா ஏன் ரெண்டு வருஷமா எங்களை வேற சம்பந்தம் பார்க்க விடாமல் தடுத்தீங்க? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?"
ஆசைக்கு அந்தஸ்துக்கு என ஒரே பெண் ரஞ்சனா. அழகிலும் அறிவிலும் கூட சிறந்தவள் தான். எந்த குறையும் இல்லாமல் இளவரசியாய் இருப்பவளை என்ன வார்த்தை சொல்லிவிட்டான் எனும் கோபம் அவருக்கு.
சாந்தி கணவருக்குமே அதே கோபம் தான். மனைவி பேசுவதில் எந்த தவறும் இல்லை என்பதால் அமைதியாய் தீர்க்கமாய் பார்த்து அமர்ந்திருந்தார்.
பூ வைக்க சொல்லிய பெரியவருக்கும் கூட சிவலிங்கம் மேல் கோபம் வந்தது சுதாகர் பேச்சில்.
"ஏப்பா உன் மகன் என்ன பேச்சு பேசிட்டு இருக்குறான்? பார்த்துட்டு இருக்குற?" சிவலிங்கத்திடம் அவர் கேட்க,
"எனக்கு அப்பவே தெரியும். அந்த கடங்காரி தான் நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்த இப்படி செய்ய சொல்லி அனுப்பி விட்டிருப்பா. நான் அப்பவே சொன்னேனே கேட்டியா பானு?" வசந்தா பானுமதியை ஏற்றிவிட, நியாயம் தெரிந்த கல்பனாவின் தந்தை செல்லதுரை, சிவலிங்கம் என ஆண்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர்.
இது பழகிவிட்ட ஒன்று தான். மனைவிமார்கள் பேசும்போது இவர்கள் எதிர்த்து பேசினால் அந்த இடத்திலேயே குடும்பம் ரெண்டுபடும் அளவுக்கு சண்டை பெரிதாகும்..அதனாலேயே இந்த அமைதி.
இத்தனை பேச்சுக்களுக்கு நடுவிலும் சுதாகர் அமைதியாய் அமர்ந்திருக்க, நம்பவைத்து கழுத்தை அறுத்த மகன்மேல் அவ்வளவு கோபம் பானுமதிக்கு.
ரஞ்சனாவிற்கு பெரிதாய் எந்த வருத்தமும் இல்லை. தன்னை வைத்து ஒரு குழப்பம் என்று புரிந்தவளுக்கு சுதாகர் ஏன் இப்படி இவ்வளவு தூரம் வந்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அனைவரின் வார்த்தைகளும் தடித்துக் கொண்டே போக "ஒரு நிமிஷம் நிறுத்துறிங்களா!" என எழுந்தான் சுதாகர்.
"சாரி ரஞ்சனா! இந்த வீட்டுல இருக்குற உங்களையும் என் கூட வந்த உறவுகள் உங்களையும் இப்படி நிற்க வைக்கணும்னு நான் நினைச்சதே இல்லை..மை மம்மிக்கு சின்ன லெசன் எடுக்கணும் நினச்சேன்.. அவங்க இப்படி ஊரை கூட்டுவாங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணல" சுதாகர் சொல்ல, குண்டுசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி அங்கே.
"அப்ப என்னை அசிங்கப்படுத்தனும்னு தான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த... இல்ல?" பானுமதி கேட்க,
"நிச்சயமா இல்லை ம்மா. உங்களுக்கு புரிய வைக்கணும்னு நினச்சேன்.. அண்ட் இவ்வளவு பேர் நான் எக்ஸ்பெக்ட் பண்ணல நிஜமா. இனி என்னை இந்த மாதிரி யோசிக்க வைக்குற எதுவும் செய்ய மாட்டிங்கனு நம்புறேன்" சுதாகர்.
"இப்ப என்ன தான் சொல்ல வர்ற பா நீ? நிஜமாவே உனக்கு கல்யாணம் முடிஞ்சுட்டா?" பெரியவர் கேட்க,
"இல்ல தாத்தா! ஆனால் நான் யாரை கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். இதை வீட்லயே பேசி முடிச்சிருக்கலாம்னு நீங்க நினைக்கலாம்.. ஆனால் நாலு சுவத்துக்குள்ள என் அம்மாகிட்ட பேசியிருந்தா நான் இருக்குற இடத்துக்கு வந்து பிரச்சனை பண்ணியிருப்பாங்க.. இப்ப நான் சொன்னதுக்கு நீங்க எல்லாம் தான் சாட்சி. நான் எப்ப கல்யாணம்னு சொல்றேன். அப்ப கண்டிப்பா எல்லாரும் வந்து வாழ்த்தனும்" என்றவன் கைக்கூப்பி வணங்க, கூட்டம் அப்படியே கலைந்து வேனில் ஏறி சென்றுவிட்டது.
"அப்ப நீ அந்த...." வசந்தா பேசும்முன்பே தடுத்திருந்தான் சுதாகர்.
"ஒரு வார்த்தை.... ஒரு வார்த்தை கல்பனாவை பத்தி தப்பா வந்துச்சி.... நான் மனுஷனா இருக்கமாட்டேன்" கர்ஜித்தவன் மீண்டும் ரஞ்சனா மற்றும் அவள் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு வெளியேறிவிட்டான்.
"அவளால இன்னும் எத்தனை பேரு தான் சீரழிய போறாங்களோ... நீ பார்த்துட்டே இரு" என்ற வசந்தாவும் கணவனுடன் சென்றுவிட தனியாய் நின்றார் பானுமதி.
சிவலிங்கம், செல்லதுரை இருவருக்குமே இதில் நிம்மதி தான். ஒரு பெண் வாழ்வை காப்பாற்றிய நிம்மதி. அவன் கூறிய அனைத்தும் கல்பனாவை மனதில் வைத்து என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் அனைவரும்.
அது சுதாகருக்கு தெரிந்தாலுமே இப்போது எதையும் சொல்லி மாற்றிவிட முடியாது என்பதால் அமைதியாய் கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு சென்றவன் அந்த நிமிடமே பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே வர அவன்முன் வந்தனர் சிவலிங்கம், செல்லதுரை.
"ரொம்ப சந்தோஷம் பா" செல்லதுரை மகள் கல்பனாவிற்காக சொல்ல,
"அவ்வளவு சந்தோஷம் எல்லாம் வேண்டாம் மாமா. இன்னும் நிறைய நாம பட வேண்டியது இருக்கு. கல்பனாவை அவ்வளவு பேசுறாங்க.. அந்த இடத்துல கூட மகளுக்காக உங்களுக்கு பேசணும்னு தோணலையா?" சூடாகவே கேட்டான்.
"நான் அப்படியே இருந்துட்டேன் பா. இனிமேலும் பேசினால் எங்கே அவளை தேடி போய் எதுவும் பண்ணிடுவாளோன்னு தான்..."
"வேண்டாம் மாமா. நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. எத்துக்கவே மாட்டேன். இதுவே கல்பனாவோட அம்மா உயிரோட இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா? எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்.. நீங்க ஒழுங்கா இருந்திருந்தால்...." என்றவன் ஒரு பெருமூச்சோடு "ஜீவா என்னை தேடுவான் நான் கிளம்புறேன்" என்றவனை கொஞ்சம் பெருமையாகவே பார்த்தார் சிவலிங்கம்.
வேலை முடிந்து இரவு ஏழு மணிக்கு யுவா வீட்டின் கேட்டை திறக்க, அதே நேரம் அங்கே வந்திருந்தான் ஜீவி.
இருவரும் பார்த்துக் கொண்டனர் பேசிக் கொள்ளவில்லை. ஆபீஸ்ஸிலும் வேலை சம்பந்தமாய் பேசிக் கொள்வது உண்டு. அதற்குமேல் ஜீவி நெருங்க முயற்சிக்கவில்லை. அதற்கு யுவாவும் இடம் கொடுக்கவில்லை.
"ஹாய் ண்ணா! நான் வந்துட்டேன்" வீட்டிற்குள் நுழைந்த யுவாவை பார்த்து சந்தோஷித்தாள் சூர்யா.
"எப்ப வந்த சூர்யா? சந்தியா பிக்கப் பண்ண வந்தால்ல? முக்கியமான மீட்டிங் டா அதான் வர முடில" யுவா.
"நோ ப்ரோப்லேம் ணா. அதெல்லாம் சந்தியா அண்ணி கரெக்ட்டா கூட்டிட்டு வந்துட்டாங்க" சூர்யா சொல்ல அந்த அண்ணி என்ற அழைப்பில் அமைதியானான் யுவா.
"நாயா பேயா அலைஞ்சு கூட்டிட்டு வந்தது நானு.. பாசம் மட்டும் அந்த பக்கம் பொங்குது.. இதுங்களுக்கு ஜால்ரா அடிச்சே சென்னை வாழ்க்கை ஓடிடும் போலயே!" தனக்குள் நொந்து கொண்டாள் சந்தியா.
"அண்ணி ஏன் வீடு இவ்வளவு சின்னதா இருக்கு? ஏதாச்சும் ஃப்ளட் பார்த்திருக்கலாம்ல?" சூர்யா கேட்க,
"ஆமா! நாங்க தனிக்குடித்தனம் நடத்துறோம் பாரு வீடு பத்தலனு சொல்றதுக்கு... யாரோ ஒரு புண்ணியவான் ஓசில தங்கிக்க டபுள் பெட்ரூம் கொடுத்து பாதுகாப்பான இடம் கொடுத்தா உனக்கு அது கசக்குது இல்ல?" சந்தியா.
"ப்ச்! அட்லீஸ்ட் கிரௌண்ட் புளோராச்சும் கேட்ருக்கலாம்ல?"
"அடியேய்! அப்ப அங்கே வாடகைக்கு இருக்குறவங்களை தெருவுக்கு பத்திடலாமா? போய் தூங்கு போ.. வந்ததும் அதை மாத்து இதை மாத்துன்னு"
"சரி! விடுங்க கீழே யாரு இருக்காங்க? நல்ல பேமிலியா? நல்லா பேசுவாங்களா?" சூர்யாவின் கேள்விகளையும் சந்தியாவின் பதிலையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான் யுவா.
"ம்ம் அதெல்லாம் நாம பேசினால் நல்லா தான் பேசுவாங்க! நான் தான் அப்பாடக்கர்னு சீன் போட்டால் அவங்களும் அதுக்கு மேலே பண்ணுவாங்க" யுவாவிற்கு கேட்கவேண்டும் என சத்தமாய் கூறினாள்.
"என்ன அண்ணி உளறுற? யாரெல்லாம் இருக்காங்க கீழே? அன்னைக்கு வீடியோ கால்ல ஒரு குட்டிய பார்த்தோமே அது கீழ் வீடா? நாளைக்கு நாம போய் பார்க்கலாமா?" சூர்யா எதேட்சையாய் கேட்க,
"ம்ம் போலாமே!" ஆப்பை தனக்கு தானே சந்தியா வைத்துக் கொள்ள,
"சூர்யா! என்ன இது? அவ தான் வேலை இல்லாமல் ஊர் சுத்துறா அங்கே இங்கேன்னு போறா! உனக்கு வேலை இல்லை? வந்த வேலையை மட்டும் பாரு" என்றவன் உள்ளே சென்றுவிட்டான்.
அண்ணன் சத்தமாய் பேசியதில் சூர்யாவிற்கும் முகம் சுருங்கிவிட அவளும் சந்தியா அறைக்குள் சென்றுவிட்டாள்.
"இப்ப ஏன் அவ பேசினதுக்கு இவன் என்னை அசிங்கப்படுத்திட்டு போறான்? இதுக்கு நான் தும்பை பூவுல தூக்கு மாட்டி செத்துருக்கணுமே இந்த நேரம்?" என்றவள்
'எப்பா ஏய் வக்கீலு! எப்பப்பா வருவ? பொண்ணு பார்க்க போனியா இல்லை கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்ததும் தான் வருவியா?" சுதாகரை நினைத்தவள் யுவா கல்பனாவிற்காக சூர்யாவிடம் பேசிடலாமா என யோசித்தாள்.
ஜானகி என்றவரைத் தாண்டி சூர்யா தான் சொல்வதை நிச்சயம் நம்பமாட்டாள். தனியாய் பேசுவதைவிட சுதாகர் வந்ததும் சேர்ந்து பேசுவதுதான் சரி என்ற முடிவிற்கு வந்தாள்.
யுவா நேற்று மாலை சுந்தரத்தை சந்தித்த போது அவர் அவனிடம் சொல்லியிருந்தார் "சுதாகர் ஊருக்கு போயிருக்கான் பா.. கீழே அந்த பொண்ணு தனியா இருக்கும் கொஞ்சம் சந்தியாவை பார்த்துக்க சொல்லு" என்று.
அவர் பேச்சிற்காக சந்தியா இன்று அங்கே செல்வதை தடுக்க கூடாது என இவன் நினைத்திருக்க அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இவன் வந்ததில் இருந்து சந்தியா அந்த பக்கம் செல்லவே இல்லை.
இப்போது கீழே ஜீவியை பார்த்தவன் புரிந்து கொண்டான். அவன் வருவதால் இவள் உதவியை அவள் வேண்டாம் என்று மறுத்திருப்பதாய்.
சந்தியாவிற்கு உண்மை தெரியுமா தெரியாதா என்ற கேள்வி எல்லாம் இல்லை.. இப்போதும் எப்போதும் அவன் எதுவும் மாறிடாது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
மாறிடுமா?
ஆசை தொடரும்...