அத்தியாயம் 16
அடுத்த நாள் காலையும் குழத்துடன் தான் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சூர்யா. இன்னும் சூர்யாவிடம் பேசயிருக்கவில்லை சந்தியா.
அண்ணனின் வாழ்க்கை பற்றி கொஞ்சம் அதிகமாய் யோசனையில் இருந்ததால் சூர்யாவும் சந்தியா பேசாததை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
"யார் பெற்ற மகளோ இவள் யார் பெற்ற மகளோ.. இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவள்" தனக்கு தானே சாங் டெடிகேட் செய்து ஹாலில் சிவனே என அமர்ந்திருந்தாள் சந்தியா.
யுவா, சூர்யா இருவரும் அவரவர் அறையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அறையில் இருந்த சந்தியாவின் மொபைலை குறுந்செய்தி வந்ததற்கான டோனில் அதிர, அதைவிடவும் அதிர்ந்து எழுந்து அறைக்குள் ஓடினாள் சந்தியா.
கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைத்தது போல இப்போதெல்லாம் சுதாகர் எப்போது என்ன சொல்லி அழைப்பனோ! யுவாவிடம் எப்போது மாட்டுவோமோ! என்று தான் போய்க் கொண்டிருந்தது அவள் வாழ்க்கை.
நினைத்தது போலவே அவன் தான் அனுப்பியிருந்தான். மாலை சூர்யாவுடன் எப்போதும் சந்திக்கும் அந்த காபி ஷாப்பிற்கு வர சொல்லி.
'அதானே! விடிஞ்சி இவ்வளவு நேரம் ஆச்சே.. நம்ம பொழப்பு இன்னும் ஆரம்பிக்கலையேனு நினச்சேன்.. இந்தா ஆரம்பிச்சுட்டான்ல... இன்னைக்கு பொழுதும் கலவரமா தான் முடிய போகுது'
தனக்கு தானே பேசிக் கொள்வது தான் சந்தியாவின் வாடிக்கை ஆனதே! அதே போல பேசிக்கொண்டு மொபைலுடன் ஹாலிற்கு வர, தோள்பையை தோள்களுக்கு குறுக்காக மாட்டிக் கொண்டு வெளிவந்தான் யுவா.
"என்ன இன்னைக்கு இன்னும் ஊர் சுத்த போலையா?" வாட்சை கைகளில் மாட்டிக் கொண்டே அவன் கேட்க,
"ஏன் கூட வந்து சுத்திக் காட்ட போறியா?" என்ற பதில் கேள்விக்கு யுவா அவளை முறைக்க,
"இல்லைல்ல! அப்புறம் என்ன கேள்வி? கிளம்பு கிளம்பு! காத்து வரட்டும்" என்றவள் சூர்யாவை என்ன சொல்லி அழைத்து செல்வது என்ற யோசனைக்கு சென்றாள்.
'எப்படியோ போ' என்று பார்த்தவன் "சூர்யா! டைம் ஆச்சு" என்று அழைக்க, "தோ வரேன்ண்ணா" என ஓடி வந்தாள் சூர்யா.
"போலாமா?" யுவா.
"ம்ம் போலாம் அண்ணா!" என்றவள், "அண்ணி" என்று சந்தியாவை அழைக்க, பேசாமல் திரும்பி அவளை பார்த்தாள் சந்தியா.
"எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும். ஈவினிங் நீ பிரீயா?" சூர்யா கேட்க,
ஆடு தானாய் தலையை கொடுத்ததில் சந்தியா மகிழும்முன் "அவ வெட்டியா தானே இருக்குறா அதெல்லாம் கூட்டிட்டு போவா" என்றவன் பின் யோசித்து "வேண்டாம்! நான் ஈவினிங் சீக்கிரமா வர்றேன். நாம போகலாம்" என்றுவிட்டு வெளியே செல்ல, சூர்யாவும் பை அண்ணி என்றவாறு ஓடினாள்.
'இவனுக்கு இதே வேலையா போச்சு.. இருடி நீ கல்பனா அக்காகிட்ட கரண்டில அடி வாங்குறத பார்க்காமல் ஓய மாட்டேன்' சபதம் எடுத்த சந்தியாவும் கல்பனா வீட்டிற்கு சென்றாள்.
இதுவரையுமே யுவாவிற்கு சந்தியா பகல்பொழுது முழுதும் என்ன செய்கிறாள் என்றே தெரியாது. அவனை பொறுத்தவரை வெட்டியாய் ஊர் சுற்றுகிறாள் அவ்வளவுதான்.
வெளியே வந்த சூர்யா கீழே படியில் இறங்கிக் கொண்டே அந்த காலனி முழுதும் பார்வையால் வலைவீச, யுவாவும் அதை கவனித்தவன் நீண்ட நேரம் அங்கே அவளை நிற்க வைக்கவில்லை.
"கல்பனா அக்கா" - சந்தியா.
"வா சந்தியா!"
சந்தியாவை பார்த்ததும் அவளிடம் கல்பனா கையில் இருந்து ஜீவா தாவ, ஜீவியும் வெளிவந்தான்.
"ஏய் நில்லு! உன்னை தான் இங்கே வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?" ஆஜர் ஆனது சுதாகரே தான்.
"மாமா!"
"நீ சும்மா இரு கல்ப் உனக்கு ஒன்னும் தெரியாது. இவ வந்தா பின்னாடியே பிரச்சனையோட இவ புருஷனும் வருவான்" சொல்லிவிட்டு சந்தியாவை பார்த்து அவன் கண்ணடிக்க, கொலைவெறியில் நின்றாள் சந்தியா.
ஜீவிக்கும் இவர்களை தெரியும் என்பதால் ஒரு சிரிப்பு வரத்தான் செய்தது.
"அக்கா! இப்ப சொல்றேன். தோ! இந்த வக்கீலு அவரா வந்து வாமானு கூப்பிடாமல் இனி இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன். இது..." அவள் தலையிலேயே சத்தியம் என்று அடிக்க சென்றவள் 'வேணாம் எதுக்கும் யுவா தலையிலே அடிச்சு வைப்போம்' என ஒரு நொடி நிறுத்தி யோசித்து பின் "இது ஜீவா அப்பா மேல சத்தியம்" என்று முடித்து மாடியேற, அதிர்ந்தது கல்பனா மட்டுமே!
ஜீவிக்கும் சுதாகர்க்கும் அப்படி ஒரு சிரிப்பு வர, அந்த இடத்தில் சிரிக்கவும் முடியாமல் அடக்கியே நின்றனர்.
"ஏன் மாமா இப்படி பண்றீங்க. சும்மா சும்மா அந்த பொண்ணை இன்சல்ட் பண்றீங்க. இனி என்ன பிரச்சனை வர போகுதோ!" கல்பனா கோபம் கொண்டதை சட்டை செய்யவே இல்லை சுதாகர்.
"சரிக்கா நான் கிளம்புறேன்.. வீக்கெண்ட் பார்க்கலாம்" ஜீவி கிளம்பிவிட சுதாகர் அப்போது தான் குளிக்க சென்றான்.
"டெவில்" என்ற பெயரில் சுதாகரின் மொபைல் அழைப்பு சத்தம் கேட்க, அவன் குளித்துக் கொண்டிருந்ததால் முதல் அழைப்பை கண்டு கொள்ளவில்லை கல்பனா.
மீண்டும் அடிக்கவே சமையலறையில் இருந்து வந்து போனை கையில் எடுக்கவும் மீண்டும் கட் ஆனது.
'மிஸ்டு கால் பிரம் டெவில்' என்பதை நெற்றி சுருங்க பார்த்தவள் பின் அதனிடத்தில் வைத்துவிட்டு யோசனையோடே வேலையை தொடர்ந்தாள்.
"இவன் வான்னா வரணும்.. போன்னா போகணுமா? என்னென்ன சொல்லி அசிங்கப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தறான். எல்லாம் இந்த யுவானால தான். கல்பனா அக்கா! உங்களுக்காக தான் பொறுத்து போறேன். உங்களை இந்த சிரிக்க தெரியாதவனை மேய்க்க விட்டுட்டு இந்த ஊருக்கே பெரிய கும்பிடா போட்டுட்டு போய்டணும்... இவனுங்க சங்காத்தமே வேணாம்" சந்தியா தான் சுதாகர் தன் அழைப்பை எடுக்காததால் தனியாய் பேசி கோபத்தை தீர்த்துக் கொண்டாள்.
ஆபீஸ் சென்ற ஜீவி தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க டிஎல் அவனை அழைப்பதாய் வந்து ஒருவர் சொல்லிச் செல்லவும் கொஞ்சம் பதட்டம் தான் ஜீவிக்கு.
இதுவரை யுவாவை தனியாய் சந்தித்தது இல்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. இன்று மட்டும் என்ன என்று தான் தோன்றியது.
"குட் மார்னிங் சார்" என்று யுவா முன் நிற்க,
"மார்னிங்! இன்னைக்கு மது லீவ் சொல்லியிருக்காங்க. இந்த ப்ராஜெக்ட் இன்னைக்கு டெஸ்டிங் போய் ஆகணும். சோ நீங்க கம்ப்ளீட் பண்ணிடுங்க" என்ற யுவா அதை ஜீவிக்கு மெயில் செய்ய, ஓகே சார் என்று கேட்டுக் கொண்ட ஜீவிக்கு ஏமாற்றம் தான்.
சுதாகரின் பேச்சில் கொஞ்சம் தெளிவுக்கு வந்து யோசித்து பார்த்தபின் ஜீவிக்கும் யுவாமேல் தவறு இருக்காதோ என்று தான் தோன்ற ஆரம்பித்திருந்தது.
யுவாவிடம் தனியாய் பேசும் அளவு தைரியமும் இல்லை.. மேலும் சொதப்பி வைக்க வாய்ப்பும் இருப்பதால் எப்போதும் போலவே ஆபீஸ்ல் இருந்து கொள்வான்.
சூர்யாவை பார்த்தால் கடந்து விடுமாறு ஜீவியிடம் சொல்லலாமா? என ஒரு நொடி தோன்ற தான் செய்தது யுவாவிற்கும். அதன்பின் தன்னிலையில் இருந்து இறங்கி செல்ல மனம் இல்லை. வருவது வரட்டும் என்று அமைதியாகிவிட்டான்.
ஜீவி தனது வேலையை முடிக்க ஏழு மணியாகிவிட யுவாவும் அங்கேயே இருக்கும்படி ஆனது. சூர்யா போன் செய்தபோதும் ஒருநாள் தானே என நினைத்தவன் 'சந்தியாவை கூட்டிட்டு போய்ட்டு வா' என்று சொல்ல அவளும் சரி என்றுவிட்டாள்.
மாலை ஆறு மணி! தேவையான அனைத்தும் வாங்கிய சூர்யாவை அந்த காபி ஷாப்பிற்கு அழைத்து வந்தாள் சந்தியா.
இருவரும் அமர்ந்திருக்க, அடுத்த பத்து நிமிடத்தில் ஜீவி வர முடியாத காரணத்தை சொல்லவும் சுதாகர் மட்டும் தனியே வந்துவிட்டான்.
வந்தவன் நேராய் சந்தியா அருகில் இருந்த சேரில் அமர்ந்து "எனக்கு எதுவும் வாங்கலையா தியா?" என்று எடுத்ததும் அவளை சீண்டி கேட்டு வைக்க, சூர்யா புரியாமல் முழித்தாள்.
"ஹெல்லோ சூர்யா! எப்படி இருக்கீங்க?" மீண்டும் அவனே ஆரம்பிக்க,
"ஹான்! பைன்.. நீங்க.. கீழ் வீட்டுல..." சூர்யா இழுக்க,
'இன்னைக்கு என்ன சம்பவம் நடக்க போகுதுன்னு தெரியலையே!' சந்தியா நினைத்துக் கொண்டிருக்க,
"பரவால்லையே மார்னிங் தான் பார்த்தோம் ஞாபகம் வச்சிருக்கீங்களே! நல்ல ஞாபகசக்தி தான் உங்களுக்கு" சாதாரணமாகவே பேசினான்.
"எனிவே ஐம் சுதாகர்" கைகளை அவன் நீட்ட,
'உனக்கு தைரியம் இருந்தால் கல்பனாவோட மாமா சுதாகர்னு அறிமுகப்படுத்தி பாரேன்' சந்தியா முணுமுணுக்க,
"ஓஹ்! நைஸ்! நான் சூர்யா" என்றவளுக்கு அவனின் தியா என்ற அழைப்பு முதல், அவனின் நட்பான பேச்சு வரை சந்தேகத்தை தான் கொடுத்தது. அதே யோசனையோடு தன் பெயரையும் சொல்லி வைத்தாள்.
"ஐ க்நோ சூர்யா. மேடம் என்னை பத்தி உன்கிட்ட எதுவும் சொல்லலயா?" சந்தியாவை பேச்சிற்குள் அவன் இழுக்க, இவ்வளவு நேரம் இருந்த தைரியம் எல்லாம் காற்றில் போய்க் கொண்டிருந்தது சந்தியாவிற்கு.
சுதாகர் கேள்வியில் சூர்யாவும் சந்தியாவை பார்த்தாள்.
"அது.. அதுவந்து.. நம்ம யுவா இருக்கான்ல... யுவாவோட... இல்ல இல்ல.. இந்த கல்ப..." இழுத்து இழுத்து சந்தியா திக்கி திணற, கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் கொஞ்சமும் கவலை இல்லாமல் அவளருகில் அமர்ந்து பேரர் கொடுத்த காபியை உறிஞ்சினான் சுதாகர்.
"ஹ்ம்ம்! எனக்கு புரிஞ்சிடுச்சி" சூர்யா சொல்ல, சந்தியா "ஹான்" என முழிக்க, "வாய்ப்பில்லையே! ஏதோ தப்பா புரிஞ்சிடுச்சு போலயே!" என சுதாகர் நினைத்த நேரம் அவன் கையை பற்றி குலுக்கினாள் சூர்யா.
"காங்கிரட்ஸ் சுதாகர் சார்! ஏய் அண்ணி! இதை ஏன் வந்த அன்னைக்கே சொல்லல? நான் வேற உன்னை தப்பு தப்பா நினச்சு சண்டை போட்டுட்டேன். எப்டியோ அண்ணாவை புரிஞ்சிகிட்டு உனக்கு ஏத்தமாதிரி ஒருத்தரை செலக்ட் பண்ணிட்டல்ல! அதுவே எனக்கு போதும்"
'என்னை பத்தி சொல்லலையா?' என்ற சுதாகரின் கேள்வியையும் சந்தியாவின் திணறலையும் அழகாய் முடிச்சிட்டு இருவருக்குமான காதல் முடிச்சை சூர்யா போட்டுவிட,
"அய்யயோ! ஏய் அரை லூசே..." என சந்தியா வேகமாய் தடுக்க வந்த நேரம் அவள் கைகளைப் பிடித்துத் தடுத்திருந்தான் சுதாகர்.
கேள்வியாய் சந்தியா அவனை பார்க்க, நிம்மதியாய் அவர்களை பார்த்திருந்தாள் சூர்யா.
அவளுக்கு தன் அண்ணனுக்கு பிடிக்காத திருமணம் என்ற பேச்சின் வழியில் சந்தியா இனி இல்லை என்ற நிம்மதி.
இப்படி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்க, அந்த வழியாய் சென்ற கல்பனாவும் இவர்களை பார்த்து அதிர்ந்தாள்.
ஆசை தொடரும்..