அத்தியாயம் 17
சந்தியா கைகளைப் பற்றி சுதாகர் தடுத்திருக்க, சூர்யா அவர்களை ஒரு நிம்மதியான சந்தோசத்தோடு பார்த்திருந்தாள்.
"ஏன்யா நீ வேற புதுபுது பாலா போடுற? ஆல்ரெடி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுல சிக்கி சின்னாபின்னமாகி கிடைக்குறேன்.. இதுல நீ வேறயா?" என சுதாகர் காதுக்குள் முணுமுணுத்தாள் சந்தியா.
"அமைதியா இரு சந்தியா. முதல் நாளே எல்லாத்தையும் பேசி சூர்யாக்கு புரிய வைக்க முடியாது.. ஒருவேளை அவ போய் யுவாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா என்ன பண்றது?" சுதாகரும் அவளை போலவே அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.
"அதுக்கு!" கோபத்தை காட்டமாய் கேட்க முடியாமல் பல்லை கடித்து சந்தியா மீண்டும் அவன் காதில் கேட்க,
"இப்போதைக்கு சூர்யா இப்ப என்ன நினைக்குறாளோ அப்படியே நினைச்சுக்கட்டும். அப்ப தான் கல்பனா பத்தியும் நாம கொஞ்சம் கொஞ்சமா அவகிட்ட பேச முடியும்" சந்தியாவிற்கும் ஒரு செக் வைத்தான்.
"சத்தியமா சொல்றேன் வக்கீலு! அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால் மனுஷனா மட்டும் பொறக்கவே மாட்டேன்!" தலையை முழுதாய் கொடுத்தபின் பாதியில் கழண்டு கொள்ள முடியாமல் அவள் புலம்ப அதையும் ரசித்தவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
இதை பார்த்திருந்த சூர்யா தான் நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள். சுதாகரின் முகபாவம் தான் அதற்கு காரணமும் கூட. அவன் பார்வை அப்படி இருந்ததும் கூட.
இருவரும் சூர்யா பக்கம் திரும்ப, "ஐம் வெரி ஹாப்பி அண்ணி!" என்றாள் அவள்.
"அட நீ வேற! போம்மா" நினைத்துக் கொண்டாள் சந்தியா.
"ஹ்ம்ம் ஓகே சூர்யா. ஜஸ்ட் என்னை இன்ட்ரோ பண்ணிக்கலாம்னு தான் வந்தேன். சென்னைல எல்லாம் ஓகே தானே உனக்கு?" சுதாகர் கேட்க,
"ம்ம் எல்லாம் ஓகே தான் ண்ணா! அப்புறம் நீங்க என்ன பண்றிங்க? எப்படி உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு?" சுவாரஸ்யமாய் கேட்டு அவன்புறம் சூர்யா சாய்ந்து அமர,
'மாட்னடி மகனே!' குத்தாட்டம் போட்டாள் சந்தியா. இந்த நேரம் தான்! சரியாய் இந்த நேரம் தான் அந்த ஓபன் காபி ஷாப்பை கடந்த கல்பனா கண்களில் விழுந்தனர் மூவரும்.
எதுவுமே புரியவில்லை கல்பனாவிற்கு. அதிர்ச்சி மட்டுமே! சந்தியாவுடன் காலை சண்டையிட்டவன் என்பது ஒருபுறம் இருக்க, சந்தியா அருகில் சூர்யாவும் இருப்பது இன்னும் குழப்பம். கூடவே மூவரின் முகத்திலும் இருக்கும் புன்னகை இன்னும் மர்மம்.
அவர்களை பார்த்தவாறே கடந்து வீடு வந்து சேர்ந்தாள். எவ்வளவு யோசித்தும் கூட்டணியின் காரணம் அவளுக்கு புரியவில்லை. புரிந்த காரணம் அவ்வளவு உவப்பானதாய் இல்லை. சுதாகர் வரும்வரை காத்திருக்க ஆரம்பித்தாள்.
சூர்யாவிடம் சிலபல நாடக காதல் கதைகளை தங்களுடையதாய் சுதாகர் அவிழ்த்துவிட, அதையும் உன்னிப்பாய் சூர்யா கவனிக்க, பொய்களை வாரி வழங்கும் அந்த வழக்கறிஞனை மனதார சாபமிட்டு எப்போதும் போல சிவனே என அமர்ந்திருந்தாள் சந்தியா.
சந்தியா மனதுக்குள் இப்பொழுது ஒரு சந்தேகம் கூட வர ஆரம்பித்திருந்தது. சுதாகரை பற்றிய சந்தேகம் தான். அவனின் தியா என்ற சில நாட்களான அழைப்பும் அவனின் பேச்சும் அதை மழுப்பும் விதமும் என சிறு பொறியை அவளுக்குள் அவன் தூவிச் சென்றான் சூர்யாவிடம் அவன் அளந்த கதைகளின் மூலம்.
'ஒருவேளை நிஜமாகவே காதலிக்கிறானோ?' மைண்ட் வாய்ஸ் கேட்க, 'வேணாம் சாமி! சொல்றது பூராம் பொய்யி.. இவனை யாரு லவ் பண்றது' என அவளே மனதுக்கு பதில் சொல்ல, மீண்டும் 'இதுவும் உன் கற்பனை தான்.. அவன் தான் எல்லா கதைகளையும் உண்மை போலவே பேசுகிறானே.. அதனால் தான் நமக்கு அப்படி தோன்றுகிறது போல' என நினைத்துக் கொண்ட நேரம் அவளை பிடித்து உலுக்கினாள் சூர்யா.
"உன் ட்ரீம்ஸ்ஸ வீட்ல போய் பார்த்துக்கலாம். கிளம்பலாம் வாங்க" சூர்யா சொல்ல, சுதாகர் சிரிப்போடே எழுந்து கொண்டான்.
"வக்கீலு! இதர் ஆவோ!" சந்தியா அழைக்க, அவள் அழைத்த விதத்தில் மென்னகையுடனே அவளருகில் சென்றான் சுதாகர். அதை கண்ட சூர்யா நாசுக்காய் நகர்வது போல செல்ல,
"இவ ஒருத்தி! அவளா எதையாவது கற்பனை பண்ணி பல்ல காட்டிட்டு போறா" என தலையில் அடித்துக் கொண்டாள் சந்தியா.
"சொல்லுங்க மேடம்!" - சுதாகர்.
"என்ன தான் வக்கீலா இருந்தாலும் இவ்வளவு பொய்யி உடம்புக்கு நல்லது இல்ல.. நான் சொன்னது என் உடம்புக்கு.." என்றவள் "ஏன்யா பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? ரெண்டு மாசத்துல நான் உன் காலடியில கிடக்குற அளவுக்கு கதை சொல்றியே... இப்ப தான் தெரியுது நீ எப்படி பாப்புலர் வக்கீல் ஆனன்னு... ஆனாலும் என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ.. இதுக்கு பதிலடி கொடுக்காமல் இந்த சென்னைய விட்டு போக மாட்டேன்" அவள் மிரட்ட,
"இல்லைனாலும் நீ சென்னைய விட்டு போக மாட்ட தியா! சூர்யா ரொம்ப நேரமா வெயிட் பண்றா. வா போலாம்" என்றவன் அதே புன்னகையோடு நகர, தலை சுத்தி போய் பின்னே நடந்தாள் சந்தியா.
சுதாகர் வந்த ஐந்து நிமிடத்தில் சூர்யாவோடு வீடு வந்து சேர்ந்த சந்தியாவை ஜன்னல் வழியே பார்த்தாள் கல்பனா.
"ஏன் மாமா லேட்?" வந்ததும் கல்பனா கேட்க, புதிதாய் அவளை பார்த்தான் சுதாகர். இதுவரை இப்படி கேட்டதில்லை அவள்.
"இல்ல! ஜீவா ரொம்ப நேரமா அழுதான் உங்களை கேட்டு.. அதான் கேட்டேன்" அவள் சொல்ல,
"ஒரு கிளையண்ட்ட பார்க்க போனேன் கல்ப் அதான்.. சாப்பிட்டியா?" சாதாரணமாய் பொய் சொல்லி அவன் அடுத்த பேச்சிற்கு தாவ, அது இன்னும் அதிசயம் பிளஸ் அதிர்ச்சி கல்பனாவிற்கு.
"ஓஹ்!" என்றவள் கேட்டு விடலாமா என நினைத்த நேரம் அவன் போனில் யாருடனோ பேசிக் கொண்டு ஹாலிற்கு சென்றுவிட, அவள் எண்ணம் இன்னும் வலுபெற்றது.
"அண்ணி! கேட்க மறந்துட்டேன்... அன்னைக்கு வீடியோ கால்ல பார்த்த பேபி யாரு? சப்பியா ஸ்மார்ட்டா இருந்துச்சு.. நான் கீழ் வீட்டு பேபினு நினச்சேன்.. ஆனா கீழ சுதாகர் பிரதர் தானே இருக்காங்க? அப்ப அந்த பேபி எங்க இருக்கு? யாரோட பேபி அது?"
வீட்டிற்குள் நுழையும்முன் சூர்யா கேட்ட கேள்வியில் சந்தியாவிடம் பதில் இல்லை. பொய் சொல்லி சென்னை வரை வந்ததெல்லாம் சாதாரணம் என்பது போல மேலும் மேலும் அவளை பொய் சொல்ல வைத்துக் கொண்டிருந்தான் சுதாகர்.
"அவன்கிட்ட மட்டும் ப்லொவ்வா கதை சொல்ற மாதிரி ஈஸியா கேள்வி கேட்டுட்டு என்கிட்ட இப்படி கஷ்டமான கேள்வி கேட்குறாளே... அது சரி! யுவா சிஸ்டர் எப்படி இருப்பா? கோர்த்து விட்ருவோம்" என நினைத்தவள்
"ஜீவாவும் லாயர் சார் வீட்ல தான் இருக்கான் சூர்யா..." என்று கூறவும்
"வாவ்! அப்ப நான் போய் அந்த க்யூட்டிய் தூக்கிட்டு வர்றேன்" என அவள் கீழே ஓட,
"அடியேய்!" என அவள் பின்னே ஓடினாள் சந்தியா.
ஜீவி வேலையை முடித்து கிளம்பிய நேரம் யுவாவும் கிளம்பிவிட இருவரும் ஒன்றாகவே கிளம்பி வெளியே வந்தனர். யுவா வண்டியின் பின் தான் வந்து கொண்டிருந்தான் ஜீவி.
யுவாவை பார்த்தவாறே தனது வண்டியை இயக்கிய ஜீவிக்கு பல யோசனைகள் மண்டைக்குள். கல்பனாவிற்கு என எதையுமே செய்யாத உறுத்தல்.. சுதாகர் அவளுக்கு பக்கபலமாய் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது கல்பனா நிலை? இப்படி நினைத்தவன் பின் ஜீவாவிற்காக எதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவிற்கு வந்தான்.
யுவாவும் பின்னால் வந்து கொண்டிருந்தவனை கண்ணாடியில் பார்த்தவன் மனதில் பல எண்ணங்கள். எப்படியாம்? தன்னை பார்த்த பின்னும் அவளால் அந்த வீட்டில் நிம்மதியாய் இருக்க முடிவது எப்படியாம்? கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லையா அவளிடம்? நேரில் பார்த்து கேட்க துடித்த மனதை சமன்படுத்த முடியவில்லை அவனுக்கு. வேண்டாம் என நினைத்தாலும் அந்த நாள் திருமணம் நடந்த நாள் அவன் கண்களுக்குள் வந்து போனது.
பளிங்காய் அவள் முகம் சிறிதும் மாசு மரு இன்றி ஒளிவீச, பாவாடை தாவணியில் அழகாய் தெத்து பல் தெரிய சிரித்த முகமாய் ஓடி வந்தவள்... அவள் கல்பனா.
மனதில் அவளை நினைத்து வந்தவன் காலனி உள்ளே வந்து வண்டியை அதன் இடத்தில் நிறுத்தி, வீட்டு மாடிப்படி ஏறும் வரை கூட உணர்வின்றி வேறு நினைவின்றி தான் வந்தான்.
அவன் பின்னோடு வந்த ஜீவியும் தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்வது என்ற எண்ணத்தில் வண்டியை நிறுத்தி வீட்டு வாசலுக்கு வந்தான்.
ஜீவாவை பார்க்கவென வேகமாய் இறங்கிய சூர்யாவும் அவளை தடுக்க அதைவிட வேகமாய் இறங்கிய சந்தியாவும் யுவாவின்மேல் முட்டி மோதி நிற்க, அதில் தான் தன்னிலை அடைந்தான் யுவராஜ். கல்பனா முகம் காற்றில் கலைந்து போனது போல ஆனது அவனுக்கு அந்த நொடியில்.
"சாரி சாரி ண்ணா! நான் ஜீவா பேபிய பார்க்க தான் ஓடி வந்தேன். உங்களை கவனிக்கல.. சாரிண்ணா!" யுவா முகத்தில் தெரிந்த கோப சாயல் பார்த்து சூர்யா முழுதாய் சொல்ல,
"போச்சு! அடுத்து புலிவாலை புடிச்சாச்சு.. எந்த நேரத்துல பொறந்தேனோ!" - சந்தியாவே தான்.
'நிஜமோ கனவோ நினைவோ எதுவுமே தனக்கு நிரந்தரம் இல்லையா' அந்த நொடி அப்படி தான் தோன்றியது யுவாவிற்கு.
மூவரின் சத்தம் கேட்டு சுதாகர் ஜீவாவுடன் வீட்டினுள் இருந்து வெளிவர, அப்போது தான் வாசலில் வந்து நின்றான் ஜீவி.
யுவாவிற்கு பின் ஜீவியை கண்டவள் மிரண்டு தான் போனாள். அந்த நேரத்தில் யாருக்கும் ஜீவியை பற்றிய நினைவு இல்லை.
"இப்ப தான் வீட்டுக்கு வர்றியா? இவ்வளவு நேரம் எங்கே போன நீ?" பேக்குடன் நின்ற தன் தங்கையை யுவா கேட்க, சந்தியா சூர்யாவிற்கு முன் பதில் கொடுத்தாள்.
"நீ தானே வர முடியாதுன்னு சொன்ன? அதான் ஷாப்பிங்கு என்கூட வந்தா" என்றவள் அவர்கள் பர்ச்சேஸ் செய்த கவரை தூக்கிக் காட்ட, யுவா எதுவும் சொல்லாமல் தங்கையை பார்த்தான்.
அவள் பார்வையில் தெரிந்த பயம், கோபம் என அனைத்தையும் பார்த்தவன் அந்த பார்வை செல்லும் திசையை திரும்பி பார்க்க, அங்கே சூர்யாவை முறைத்தபடி ஜீவி.
சந்தியாவுடன் அங்கே பார்வையாளனாய் நின்ற சுதாகரும் அப்போது தான் ஜீவியை கண்டனர்.
"ஹாஹாஹா! வா டா வா டா என் தங்கமே! மாட்னீங்களா? மொத்த குரூப்பும் மாட்னீங்களா!!" சந்தியா மனதுக்குள் சபாஷ் போட்டுக் கொள்ள யுவா முழுதாய் அதிர்ந்தான் என்றால் சுதாகருக்கு கொஞ்சம் அதிர்வு தான்.
அரைமணி நேரம் முன் சூர்யாவிடம் பேசி வந்தது வேறு. இப்போது ஜீவியை சுதாகருடன் பார்த்தால் சூர்யா எண்ணம் என்னவாக இருக்கும்?
ஆசை தொடரும்..