கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 19

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 19

"இப்பவும் சொல்றேன் நீ என்ன ரீசன் சொன்னாலும் கல்பனா அக்கா மேல நீ கோபமா இருக்குறதை என்னால ஏத்துக்க முடியாது. உன்னாலையும் உன் குடும்பத்தாலையும் அவங்க எவ்வளவு...."

சாதாரணமாய் ஆரம்பித்த சந்தியா முழுதாய் அவன் கேட்டிட வேண்டும். கல்பனா மேல் தவறில்லை என புரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் அவளறியாமல் சத்தமாய் பேச, அவளின் பாதி பேச்சில் கையை ஓங்கி இருந்தான் யுவா.

அதில் ரத்த ஓட்டம் நிற்கும் அளவுக்கு அதிர்ந்து பயந்து அவனையும் அவன் கையையும் பார்த்தவாறு நின்றுவிட்டாள் சந்தியா.

"யார் நீ? என்ன தெரியும் உனக்கு? என்னை பத்தி என்ன தெரியும்னு கேக்குறேன்? உனக்கே தெரியுதுல்ல நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு.. போய்டு... மரியாதையா இங்கேர்ந்து போய்டு... நிம்மதியா இருந்த நான் இப்ப பைத்தியம் மாதிரி அலைய காரணமே நீங்க தான். எனக்கு யாரும் வேணாம் எதுவும் வேணாம். புருஷன், குழந்தைனு இருக்குறவளை நான் எந்த தொல்லையும் பண்ண மாட்டேன்.. அதுக்காக அவ நியாயம் தர்மம்னு உன்னை ஏவிவிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்.. நாளைக்கு விடிஞ்சதும் இந்த இடத்தை நீ காலி பண்ற. அண்ட் நொவ் கெட் அவுட் ஆப் மை பிளேஸ்" என்றவன் அவள் அடுத்து பேச வந்ததை கொஞ்சமும் மதியாமல் கழுத்தை பிடித்து தள்ள வேண்டியவன் கையைப் பிடித்து இழுத்து அவன் அறைக்கு வெளியேவிட்டு அறைக் கதவை அறைந்து சாற்றினான்.

அந்த மூடிய கதவை பார்த்தவள் தன் தலையிலேயே ஓங்கிக் கொட்டிக் கொண்டாள்.

'அட அறிவு கெட்டவளே! டயலாக்க கரெக்ட்டா பேசின சரி.. ஆனா மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டியே! இந்த உம்முனா மூஞ்சி தான் கல்பனா அக்காக்கு கல்யாணம் ஆனதா நினைச்சுட்டு இருக்கே! அதல்ல முதல்ல சொல்லியிருக்கணும்... இப்ப நடந்தத போயி வக்கீலுகிட்ட சொன்னா கேவலமால்ல ஒரு லுக்கு விடும்' இன்னும் இரண்டு முறை தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள் சூர்யாவை போய் பார்க்க ஏதோ யோசனையில் மேலே பார்த்து படுத்திருந்தாள் அவள்.

"அப்ப எல்லாம் தெரிஞ்சு தான் இப்படி விளையாடிட்டு இருக்கீங்களா மாமா?" என கோபமாய் சுதாகரை கேட்ட சந்தியா,

"நீயும் இதுக்கு உடந்தையா டா?" என்றாள் ஜீவியை நோக்கி.

"அக்கா நான்...." ஜீவி பேச வர,

"இப்ப ஏன் அவனை முறைக்குற? அவனுக்கு எதுவும் தெரியாது.. அந்த யுவா வந்ததுல இருந்து நீ நீயா இல்ல.. அது உனக்கு தெரிஞ்சதோ இல்லையோ! எனக்கு நல்லா தெரிஞ்சது. அப்பவும் யுவா தான் ஜீவா அப்பானு நான் நினைக்கவே இல்லை.. ஒவ்வொன்னா கண்டுபுடிச்சுட்டே வந்தேன்.. அதுக்குள்ள யுவா சிஸ்டரை பார்த்துட்டேன்.. நீ தெரியக்கூடாதுனு நினைச்சதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்" உண்மை பாதி பொய் பாதி என சுதாகர் கல்பனாவிடம் சொல்ல,

இவனுக்கு என்னென்ன தெரியும்? இதனால் யார்யார் வாழ்க்கையில் பிரச்சனை வரும்? சந்தியாவிற்கு என்னை தெரிந்திருக்குமா? சந்தியா யுவா வாழ்க்கை? என பலதையும் யோசித்து பயந்து நடுங்க,

"நீ ஏன் இப்ப இவ்வளவு எமோஷனல் ஆகுற? அதான் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சே! உனக்கும் கல்யாணம் ஆனதா தான் அவன் நினைச்சுட்டு இருக்கான். இனி நீ மறைக்குறதுக்கும் பயப்படறதுக்கும் என்ன இருக்கு?" சுதாகர் நிறுத்தி நிதானமாய் அவள் வழியிலேயே கேள்வியினை கேட்க, அதற்கு பதில் தான் இல்லை.

'அந்த பொண்ணு... சூர்யாகிட்ட என்ன.. பேசுனீங்க?' மூவரும் சிரித்தபடி தானே பேசியிருந்தார்கள்! அந்த சந்தேகத்தை கல்பனா கேட்க,

"நான் யாருனு எல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியாது. மார்னிங் வீட்டுக்கு வெளில பார்த்த நியாபகம் அதான் ஜஸ்ட் அங்கே பார்த்ததும் ஃபார்மாலிட்டிக்கு சிரிச்சு வச்சேன்.. ரெண்டு நிமிஷம் பேசினேன்.. அந்த கேப்புல தான் நீ பார்த்திருக்க" லாயர் அவன் வேலையை சரியாய் செய்தவன் அவளிடம் பேசிக் கொண்டே மொபைலை நோண்ட, சந்தியா அனுப்பிய செய்தி வந்தது.

அய்யோ பாவம் அவள் என்று தான் இவனுக்கு தோன்றியது. எந்த சம்பந்தமும் இல்லாமல் இவர்களுக்காக அவள் அதிகமாய் மெனக்கெடுகிறாளே! என்ற எண்ணம்.

கல்பனாவிடம் பொய் சொல்லி சமாளிப்பது வெளியில் இருந்து பார்க்க சாதாரணமாக இருந்தாலும் சட்டென அவள் கேட்கும் கேள்விகளுக்கு நொடியில் இவன் மூளை பதிலை யோசித்து அவன் அதை கல்பனாவிடம் சொல்வது எல்லாம் அவனுக்கு பழகிய ஒன்று என்பதால் பெரிதாய் தெரியவில்லை.

'இதே நிலை தானே சந்தியாவிற்கும்? இங்காவது கல்பனா மட்டும். அங்கே யுவாவுடன் சூர்யா வேறு' நினைத்தவன் "தூங்கிட்டியா?" என சந்தியாவிற்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்து பார்க்க, இன்னும் குழப்பமாய் நின்று கொண்டிருந்தாள் கல்பனா.

"இப்ப என்ன உனக்கு? எனக்கு உன்னை பத்தி தெரியும்ன்றதை தவிர வேற எதாவது மாற போகுதா? இல்ல மாற தான் விட்டுடுவியா?" சுதாகர் கேட்ட கேள்வியில் இவளுக்கு அழுகை கூட வரும் போல இருந்தது.

"ஜீவா அப்பா யுவான்றதை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. நீ எதுவும் சொல்ல போறதும் இல்ல.. சோ எப்பவும் போலயே இரு.. இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ யுவா பேமிலி இங்கேருந்து போய்ட்டா எல்லாம் பழையபடி மாறிடும்" கல்பனா மேலும் கோபம். இன்னும் மறைக்கவும் மறுக்கவும் தானே பார்க்கிறாள் என்று.

அதனாலேயே இவ்வாறு கூறியவன் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட, ஜீவியும் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

தன்னை சுற்றி நடப்பது அனைத்தும் குழப்பமாய் சூழ அங்கேயே நின்றவள் கண்ணீரை மட்டும் நிறுத்தவில்லை.

மூன்றே மாதங்கள் என்றாலும் அவனுடன் வாழ்ந்த காலங்கள் அவளின் பொக்கிஷ நினைவுகள் அல்லவா? அனைத்தையும் அல்லவா தூசிதட்டி மேல் எழுப்பியிருக்கின்றனர் அனைவரும்.

"தூங்க விடுவாங்களா இந்த படுபாவிங்க!" சூர்யா அருகில் படுத்துக் கொண்டு சந்தியா சுதாகருக்கு அனுப்பினாள்.

"என்னாச்சு தியா? சூர்யா ஏதாவது கேட்டாளா?" மீண்டும் அனுப்பினான் சுதாகர்.

"யோவ் போயா! ஏதாச்சும் சொல்லிட போறேன்.. அவன் என்னடான்னா கைய ஓங்குறான்.. இவ விட்டத்த பார்த்துட்டு இருக்குறா... இதுங்களுக்கு நடுவுல நீ வேற! ஏதாச்சும் பண்ணி இதை முடிச்சு விடு.. இல்ல கூண்டுக்குள்ள இருந்தாலும் பரவால்ல மூணு நேரம் சோறு தந்தா போதும்னு என் வீட்டுக்கே நான் போய்டுவேன்" - சந்தியா.

"வாட் கைய ஓங்கினானா? என்ன நீ சொல்ற? அதுவரைக்கும் சும்மாவா இருந்த?" அவள் கூறிய மற்ற அனைத்தையும் விட்டு இதை மட்டும் பிடித்துக் கொண்டான்.

"இல்லையே! அடிச்சுடுவானோனு அவனையே தான் பார்த்துட்டு இருந்தேன். ஜஸ்ட்டு மிஸ்ஸு! செம்ம கோவத்துல இருக்கான். விடிஞ்சதும் பெட்டிய பேக் பண்ணிடுன்னு சொல்லிருக்கான். காலைல அவன் ஆபீஸ் போற வர ஒளிஞ்சிகிட்டா போதும். தப்பிச்சுப்பேன்"

ஒரு நேரம் சீரியஸாய் பேசிவிட்டு மறுநேரம் இப்படி பேசுபவளை என்ன செய்ய? 'இவளையெல்லாம் இன்னும் கூட வச்சு செய்யலாம். தப்பே இல்ல!' நினைத்தவன் இன்னும் இரண்டு நாட்களுக்கான சந்தியா சூர்யா சந்திப்பை தள்ளி வைத்தான்.

"அண்ணி! அந்த அவனுக்கும் சுதாகருக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?" அவ்வளவு நேரம் மேலே பார்த்து யோசனையில் இருந்த சூர்யா, மொபைலை ஆப் செய்துவிட்டு தூங்க தயாரான சந்தியாவிடம் கேள்வியை முதலில் இருந்து எழுப்ப,

"கடுப்ப கிளப்பாத டி! இப்ப தான் அசிங்கப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி வந்திருக்கேன்! ஏதாச்சும் பேசின கடிச்சு வச்சாலும் வச்சிடுவேன்! படுத்திடு!" என்றவள் திரும்பிக் கொள்ள,

"அட்லீஸ்ட் சுதாகர் நம்பராவது கொடு.. நானே கேட்டுக்குறேன்!" என்றாள் சூர்யா.

"நான் தூங்கிட்டேன்! உனக்கு வேணும்னா நாளைக்கு நீயே போய் நம்பர் வாங்கிக்கோ! இல்ல கட்டிப் புரளு" என்னவோ பண்ணித் தொலை என்பதாய் சந்தியா சொன்னதை சீரியஸ்ஸாய் எடுத்து காலையே சுதாகர் வீட்டிற்கு செல்வது என முடிவெடுத்தாள் சூர்யா.

"இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அண்ணி!" தூங்க முயன்றவளை தூங்க விடமால் சூர்யா எழுப்ப,

"என்ன நான் எப்ப சாவேன்னா?" என்றாள் கண்களை திறவாமலே!.

"ப்ச்! இல்ல இன்னைக்கு நடந்ததை அம்மாகிட்ட சொல்லவா? இல்ல அண்ணாவே பாத்துக்கும்னு விட்டுடவா?" குழப்பதை முகத்தில் தேக்கி சூர்யா கேட்க, அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் சந்தியா.

'இதுக்கு நான் சொன்னதையே என்கிட்ட கேட்ருக்கலாம் சாத்தானே!' மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டவள்,

"அம்மா தாயே! இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு.. தயவு செஞ்சு விளையாடிடாதே!" என்று சொல்ல,

"ஓஹ் ஆமால்ல! சரி நான் அண்ணாகிட்ட பேசிக்குறேன்" என்று கூறி படுத்துக் கொண்டாள்.

"ஒரே ஒரு உயிரை வச்சுக்கிட்டு நான் யாருக்கெல்லாம் டா பயந்து சாகுறது" புலம்பிய சந்தியா நடுஉறவு தாண்டி தான் உறங்கவே ஆரம்பித்தாள்.

அந்த நடுஇரவுக்கு பின்னும் உறங்காமல் அலைபாய்ந்த மனதோடு உலவியது யுவா கல்பனாவின் நினைவுகள்.

சுதாகர் வழக்கறிஞராய் பட்டம் பெற்று வாழ்க்கையை பற்றிய பாடம் அறிய சென்னை சென்றிருந்த நேரம் அது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு அருகே உள்ள தன் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பியது செல்லதுரை குடும்பம்.

செல்லதுரை, வசந்தா உடன் ஜீவி, கல்பனா, பானுமதி, சிவலிங்கம் என ஆறு பேர் சூர்யாவின் அந்த காரில் பயணமானர்.

அம்மனை தரிசிக்க இன்னும் ஐந்து கிலோமீட்டர் இருக்க அந்த நடுவழி காட்டில் காலை வாரி வண்டி நின்றுவிட்டது.

"எல்லாம் இவ வந்த நேரம்! சாமி கும்பிட போகும்போது என் எதிர்ல இவ தான் வந்தா... அப்பவே நினச்சேன்!" வசந்தா எப்போதும் போல கல்பனா மேல் பழியை தூக்கிப் போட, பாவமாய் மட்டுமே நின்றாள் கல்பனா.

பள்ளி இறுதியில் ஜீவி அப்போதெல்லாம் பெரிதாய் அன்னை கல்பனாவை திட்டுவதை கண்டு கொள்ளமாட்டான். தந்தையும் வசந்தாவை மீறி பேசாதவர்.

புல்லட் வண்டியில் வந்த ஒருவரை நிறுத்தி உதவி கேட்க, அவரால் அப்போதைக்கு அங்கே இருந்த ஹோட்டலிற்க்கு வழி சொல்ல மட்டுமே முடிந்தது.

"சரி அங்கேயே போய்ட்டு எதாவது கார் புக் பண்ணிக்கலாம். சூர்யாக்கு கால் பண்ணி கார் சொல்ல சொல்லுங்க" பானுமதி சிவலிங்கத்திடம் சொல்ல அவரும் அதையே செய்தார்.

அங்கே தான் கல்பனாவை சந்தித்தான் யுவா!

ஆசை தொடரும்...
 
Top