அத்தியாயம் 22
காலை ஏழு மணி.. ஜீவா தூக்கத்தில் இருக்க, கல்பனா சமையலறையில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருக்க, ஒரு கேஸ்ஸிற்காக கோர்ட்டுக்கு அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தான் சுதாகர்.
"கல்பனா டிபன் வேண்டாம்.. நான் ஆபீஸ் போய்ட்டு கோர்ட் போகணும்.. லேட் ஆகிடும்" சொல்லிக்கொண்டே அவன் வெளியே ஹாலுக்கு வர, ஆவி பறக்க இட்லியுடன் வந்தாள் கல்பனா.
"ஹ்ம்ம்! நேத்து போட்ட சண்டை மறந்து சமாதானம் ஆகிட்ட போல! இனி வீட்டு சாப்பாடே கிடைக்காதுன்னு நினச்சேன்" கிண்டலுடன் சுாகர் சொல்ல,
"அதெல்லாம் மறக்கல.. சாப்பிட்டு கிளம்புங்க" என்றவள் மீண்டும் சமையலறை உள் செல்லவும் காலிங் பெல் அடித்தது.
"ஜீவி எங்கே கல்ப்?" சுதாகர் கேட்க,
"அவன் லேட்டா தானே வந்தான்.. இன்னும் எழுந்திருக்க மாட்டான்.. அது யாருன்னு பாருங்க சுதா" என்றாள் உள்ளிருந்தே.
"நான் பார்க்குறேன்" என்றவன் கதவை திறக்கவும் வெளியில் நின்றவளை சுத்தமாய் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தான்.
"சூ... சூ... சூ.." அதற்கு மேல் பேச வார்த்தை வரவில்லை. இப்படி காலையிலே அவளை எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு பத்து நிமிடம் லேட்டாய் வந்திருந்தாலும் கல்பனா தானே கதவை திறந்திருப்பாள்?
"சூர்யா. யுவராஜ் சிஸ்டர்" கொஞ்சம் அதிகாரமாய் தான் கூறினாள் சூர்யா.
"சூர்யா! நீ என்ன காலையிலே?" வாயடிக்கும் வக்கீல் வார்த்தையை யோசித்து பேசும் நிலை.
அவளுக்கு பின்னால் பார்த்தவன் இரு புறமாய் தலையை இடதும் வலதுமாக திருப்பி பார்க்க வேறு யாரும் இல்லாமல் அவள் மட்டுமே தனியாய் வந்திருக்கிறாள் என்பது உறுதியானது.
"தியா! எங்கம்மா போன? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா' அவன் மனம் புலம்பிட,
"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் சூர்யா.
"ஹ்ம்ம் பேசலாம் சூர்யா! ஆனா இப்ப...?" அவன் கேள்வியாய் இழுக்க,
"ப்ளீஸ்! கொஞ்சம் அர்ஜென்ட்" என்றாள் அவள்.
"ஓஹ்! ஒரு நிமிஷம்" என்றவனுக்கு இவ்வளவு காலையில் இவளுக்கு என்ன வேண்டுமாம் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
நேரே கல்பனாவிடம் வந்தவன் "கல்ப் தயவு செஞ்சு ஒரு பத்து நிமிஷத்துக்கு நீ வெளியில் வந்துடாதே!" என்று சொல்ல,
"ஏன்? யார் வந்திருக்காங்க" என்றவளிடம்
"உன் நல்லதுக்கு தான் சொல்றேன்! ப்ளீஸ்" என்றவன் வீட்டிற்கு வெளியே வந்தான். சூர்யாவை வீட்டினுள் அழைக்கவே இல்லை.
"சொல்லு சூர்யா என்ன விஷயம்?"
"அது... இல்ல நேத்து.. அந்த.. அது அன்னைக்கு ஒரு குட்டி பையன் வீடியோ கால்ல பார்த்தேன்.. அது.. அது யாரு?" தைரியமாய் ஆரம்பித்த சூர்யாவிற்கு யுவா, சந்தியாவை கேட்டது போல் மிரட்டி கேட்டிட முடியவில்லை.
சந்தியா காதலிப்பவன் என்பது ஒரு புறம், கல்பனா தம்பியுடன் சுதாகருக்கு என்ன உறவு எனும் கேள்வி ஒரு புறம், யுவராஜ் கூறிய சந்தியாவிற்கு எதுவும் தெரியாது எனும் வார்த்தை ஒரு புறம்.
சுதாகரை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் இருப்பதோடு ஜீவியும் இவனுடன் இருக்கிறானே! எதை தான் ஏற்று கொள்வது என அவள் மூளைக்கே தெரியவில்லை.
சுதாகர் கூட என்னென்னவோ நினைத்தவன் இவ்வளவு தானா? என்று மகிழ்ச்சி அடைந்தான்.
"ஏன் கேட்குற சூர்யா?" அவன் வேலையை காட்டத் துவங்கினான்.
"இல்ல.. அந்த குழந்தை அழகா இருந்தான் அதான்..."
'ச்ச! தனியா வராமலே இருந்திருக்கலாமோ?' சூர்யா எண்ணத் துவங்க,
"இவ்வளவு தானா? அதுக்காகவா காலையிலே வந்த? ஜீவா தூங்குறான்.." என்றவன் இவளிடம் உண்மையை கூறினாள் என்ன என்ற எண்ணம் ஓட துவங்கியது அந்த லாயரானவன் மனதில்.
அவன் பேரு ஜீவா யுவராஜ்னு சொன்னா என்ன நடக்கும்? அதிர்ச்சியாவாள்.. யுவாவிடம் போய் கேட்பா.. அவன் அதிர்ச்சியாவான்... அடுத்து? யூகிக்க முடியவில்லை.
எப்படி கொண்டு சேர்ப்பது இந்த ராதையை அந்த கண்ணனிடம்.. இதை தான் இரவில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.
"ஜீவா யார் பேபி?" ஒரு வழியாய் கேட்டு விட்டாள்.
"என் பிரதர் பேபி" யார் கேட்டாலும் என் மகன் என்று சொல்லி வந்தவன் தயங்காமல் யோசிக்காமல் நொடியில் சொல்லிவிட, அடுத்து எப்படி கேட்பதென அவள் யோசித்து நிற்க,
'அடுத்து மட்டும் பிரதர் பேர் என்னனு கேட்கட்டும்.. சொல்லிட வேண்டியது தான்' என நினைத்து சுதாகர் பார்த்து நின்றான்.
அவளுக்குள்ளும் அதே கேள்வி தான். பிரதர் யாரு? அந்த கல்பனா தம்பி இவனுக்கு யாரு? தலை வெடிப்பது போல ஆனது சூர்யாவிற்கு.
"எதாவது கேட்கணும்னா கேளு சூர்யா.. ஏன் தயங்குற?" சுதாகர் எடுத்து கொடுக்க,
"அது வந்து.. ஃபர்ஸ்ட் சாரி! நேத்து நைட் கொஞ்சம் எமோஷனல் ஆகி கத்திட்டேன். அண்ட் அவங்க உங்களுக்கு...?" சரியாய் சூர்யா கேட்க வர, படிகளில் தடதடவென ஓடி வந்தாள் சந்தியா.
"அடியேய்!"
'ஹப்பா வந்துட்டா! எவ்வளவு நேரம் தான் சொல்றதா வேணாமானு குழம்புறது' சுதாகர் குழப்பத்தில் நின்றவன் இனி சந்தியா பார்த்துக் கொள்வாள் என நம்பி அமைதியானான்.
நைட் டிரஸ்ஸில் முடி கலைந்து தூங்கி எழுந்தவள் சூர்யா யுவா இருவரும் வேலைக்கு சென்று விட்டதாய் நினைத்து வாசற்கதவை பூட்ட வர, கீழே நின்ற இருவரையும் பார்த்து அப்படியே ஓடி வந்திருந்தாள்.
"இங்கே என்ன பண்ற சூர்யா?" சந்தியா கேட்க,
"நீ தானே அண்ணி சுதாகர்கிட்ட நீயே பேசிக்கோனு சொன்ன? அதான் பேசலாம்னு வந்தேன்" என போட்டுக் கொடுத்தாள் சூர்யா.
'அடிப்பாவி நீ தான் என்னை கோர்த்து விட்டதா?' சுதாகர் நினைத்தவன் சந்தியாவை பார்த்து நிற்க, அவனை பார்த்து அசடு வழிய சிரித்தவள்
"உன்கிட்ட பேச்சுக்கு கூட இனி எதுவும் பேச மாட்டேன் தாயே! உனக்கு என்ன வேணும்? என்ன தான் பிரச்சனை? காலையிலே வெள்ளையும் சொள்ளயுமா கோர்ட்க்கு கிளம்புன மனுஷன நிற்க வச்சு கேள்வி கேட்குறீயே! உனக்கெல்லம் அறிவுன்றது இருக்குதா?" சந்தியா திடமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டு சூர்யாவை பேச விடாமல் கேள்வி கேட்க,
"நோ ப்ரோப்லேம் சந்தியா! ஜீவாவை தான் சூர்யா கேட்டுட்டு இருந்தா.. இன்னும் ஜீவா எழுந்துக்கல.. அப்புறம் பார்க்கலாம்" என்றவன் வீட்டிற்குள் செல்ல, சூர்யாவை கையை பிடித்து இழுத்து வந்தாள் சந்தியா.
"திஸ் இஸ் டூ மச் சூர்யா.. காலங்காத்தால உனக்கு சுதாகர் கூட என்ன பேச்சு? நான் கடுப்புல சொன்னதை கூட அப்படியே செய்ய நீ என்ன பச்ச புள்ளையா? உனக்கு உன் அண்ணா லைஃப் க்ளரிஃபை ஆகணும்னா உன் அண்ணன்கிட்ட தான் அதை பத்தி பேசணும்.. சும்மா மத்தவங்களை டிஸ்டர்ப் செய்யாத" கோபமாய் சொன்ன சந்தியா பதில் எதிர்பாராமல் பாத்ரூம் சென்றுவிட்டாள்.
"அய்யோ!" என தலையை பிடித்து அமர்ந்து விட்டாள் சூர்யா.
"நீங்க பேசினதை நான் கேட்டுட்டேன் மாமா" என சுதாகர் முன் நின்றாள் கல்பனா.
"என்ன கேட்ட?"
"நீங்க என்கிட்ட எதையோ மறைக்குறிங்க! சூர்யாவையும் அந்த பொண்ணு சந்தியாவையும் ஜன்னல் வழியா நான் பார்த்தேன்.. உண்மைய சொல்லுங்க.. எதுக்கு காலையிலே அவங்க உங்களை தேடி வரணும்?" என அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாள் கல்பனா.
"அய்யோ கல்பனா! நான் ஒன்னு நினச்சா அது ஒன்னு நடக்குது.. பட் சீரியஸ்லி நான் தப்பா எதுவும் நினைக்கல.. உனக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல?" அவன் கேட்க,
"மாமா நான் இப்ப இல்ல சின்ன வயசுல இருந்தே உங்களை மட்டும் தான் நம்புறேன்... ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் முடிஞ்சு போனதை திரும்ப திரும்ப தோண்டறீங்க? இவ்வளவு காலையில ஏன் அவங்க இங்கே வரணும்.. நீங்க ஏதோ பண்றீங்க.. வேண்டாம் மாமா நான் இப்படியே இருந்துடுறேன்.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிடாதீங்க"
"ஆமா உனக்கு ஆசை தான்.. நானே ஊர்ல இருக்குற கேஸை எல்லாம் முடிச்சு கொடுத்துட்டு முடி கொட்டுற அளவுக்கு உன் கேஸை பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்... நீ வேற எதாவது பேசி வைக்காத.. விடு நடக்குறது நடக்கட்டும்.. ஆல்ரெடி லேட். டிபன் வேண்டாம் கல்ப்" என்றவன் கிளம்பிவிட, ஜீவி எழுந்து வந்தான்.
"குட் மார்னிங் அக்கா!"
"ஜீவி என்ன நடக்குது இங்கே? மாமா எதாவது உன்கிட்ட சொன்னாரா?" குழப்பத்தில் இருந்தவள் அவனிடம் கேட்க,
"எனக்கென்னக்கா தெரியும். நானும் நேத்து தான் அவளை பார்த்தேன்.. ஏன் என்னாச்சு?" ஏதும் தெரியாதவனாய் ஜீவி கேட்க,
"ப்ச்! நீ சொன்ன மாதிரி நான் உன்கூடவே வந்துடுலாமோனு தோணுது ஜீவி.. மாமா எதாவது பிரச்சனையை இழுத்து விட்டுட போறாரோனு பயமா இருக்கு"
"க்கா! என்ன பேசுற நீ? மாமா உன் நல்லதுக்கு தான் எதுனாலும் செய்வாங்க. நீ ரொம்ப யோசிக்காம ஜீவா அழுறான் பாரு.. போய் அவனை பாரு க்கா" என்று சொல்ல, அவனையும் முறைத்துக் கொண்டே சென்றாள் அவள்.
"தோ பாரு வக்கீலு இதெல்லாம் வேலைக்கே ஆகாது.. நான் முடிவு பண்ணிட்டேன்.. என்னால இதுக்கு மேல முடியாது.. யுவா என்னை கழுத்தை புடிச்சி வெளில தள்ளுறதுக்கு முன்ன நானே டீசென்ட்டா இங்கேர்ந்து கிளம்பலாம்னு டிசைட் பண்ணிட்டேன்.. என்னை விட்டுடு" சந்தியா போன் செய்து சுதாகரிடம் புலம்பினாள்.
"தியா! பைக் ஓட்டிட்டு பேச முடில.. அர்ஜென்ட் ஒர்க் வேற.. நீ இப்படிலாம் பேசினா என்னால கான்ஸன்ட்ரேட் பண்ண முடியாது.. இப்ப என்ன? சூர்யா தானே பிரச்சனை? எனக்கு அப்டேர்னுன் கேஸ் முடிஞ்சிடும்.. நீ அவளை நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு வா.. இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்.. அப்ப தான் நானும் உன்கிட்ட கொஞ்சம் பிரீயா பேச முடியும்" ஒரு புளோவில் ஆரம்பித்தவன் மனதில் இருப்பதையும் சேர்த்து இறுதியில் சொல்லிவிட,
"ஹான் இது ஆம்பளைபுள்ளைக்கு அழகு" என்றவளுக்கு சட்டென அவன் கடைசி வார்த்தை ஸ்ட்ரைக் அடிக்க, "ஏய் வக்கீலு என்ன சொன்ன? பிரீயா பேசணுமா?" என்றாள்.
அதற்குள் சுதாரித்து விட்டான் அவன். "அதான் மா.. கல்பனா யுவாவை சேர்த்து வச்சுட்டு பிரீயா பேசலாம்ல.. அதை சொன்னேன்"
"ஓஹ்! சரி சரி! நீ போன் பேசிட்டே போய் எங்கேயாவது முட்டிட்டு நீக்காத! வச்சுட்டு பொழைப்பை பாரு" என்றவள் வைத்து விட,
'ஆண்டவரே! யுவா கல்பனாவோட சேர்த்து இந்த கல் நெஞ்சக்காரியையும் சமாளிக்கணும்.. கொஞ்சம் கருணை காட்டு' என கடவுளிடம் வேண்டிக் கொண்டான் சுதாகர்.
ஆசை தொடரும்..