அத்தியாயம் 23
"ஏய் கிளம்பு லாயர் சார் உன்கிட்ட பேசணுமாம்" சந்தியா சூர்யாவிடம் கூறினாள்.
"அவரு என்கிட்ட பேச என்ன இருக்கு.. அதான் பேச கூடாதுன்னு கூட்டிட்டு வந்துட்டீங்கல்ல" என்றவள் குரலில் கோபம் தெரிய,
"வேணாம் சூர்யா! உன் அண்ணாக்காக தேவையில்லாமல் நானும் லாயரும் தலையை பிச்சுட்டு இருக்கோம். எங்களுக்கு மட்டும் வேற வேலை இல்லையா?" என்றவள் பின் சிறிது யோசித்து
"சரி எனக்கு இல்லை தான் ஆனா வக்கீலுக்கு வேலை இருக்கும்ல?.. சும்மா உன் குடும்பத்தோடயே கும்மி அடிச்சுட்டு இருக்க முடியாது.. உனக்கு தேவையான நியூஸ் இன்னைக்கு கிடைச்சுடும்.. ஆனா அங்கே வந்தும் இப்படி தையத்தக்கானு குதிக்காம என்ன சொல்லறாங்கன்னு கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.. அத விட்டுட்டு அடுத்த ஜானகி நான் தான்னு ஆடுனனு வச்சுக்கோயேன்... அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் வாயில வர்ற சாபத்தை குடுத்துட்டு கிளம்பி போயிட்டே இருப்பேன்" மிரட்டியே சூர்யாவை அமைதியாய் கிளம்ப வைத்தாள் சந்தியா.
சூர்யா கிளம்பிக் கொண்டிருக்கவும் யுவாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பேசிவிட்டு வைக்கவும் சந்தியா "என்னவாம்?" என கேட்க,
"அண்ணாக்கு தலை வலிக்குதாம். கிளம்பி வந்துட்டு இருக்காங்க" என்றாள் சூர்யா.
"இவனுக்கென்ன தலைவலி.. இவன் மத்தவங்களுக்கு கொடுக்குறது பத்ததா?" என்றவளை சூர்யா முறைக்க, கிளம்பும் நேரம் சந்தியா மூளை 'நான் இன்னும் கொஞ்சம் உனக்கு இருக்கிறேன்' என வேலை செய்ய ஆரம்பித்தது.
"சூர்யா! ஒரு நிமிஷம் இரு. இப்ப வந்துடுறேன்" என்றவள் வேகமாய் படிகளில் இறங்கி சுதாகர் வீட்டுக்கு காலிங் பெல்லை அழுத்தினாள்.
வெளியே கல்பனா வர அவள் யோசித்து பேசும் முன் "ஹாய் அக்கா! ஜீவா எங்கே?" எனும்போது அவளை பார்த்த ஜீவா ஓடி வந்து சந்தியா கால்களை கட்டிக் கொண்டான்.
"வா டா கண்ணா! லாயர் சார் கூப்பிடாமல் உள்ளே வர மாட்டா இந்த சந்தியானு நீயே வெளில வந்துட்டியா!" என்றவள் "க்கா! நான் ஜீவா கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன்" என்று விட்டு கல்பனா பதிலுக்காக கூட நிற்காமல் ஜீவாவுடன் ஓடி விட்டாள்.
ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்த கல்பனாவிற்கு இது ஆயிரத்தி ஒன்றாவது கவலையானது தான் மிச்சம்.
யார் யார் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் புரியவில்லை அவளுக்கு.
"ஹை கியூட் குட்டி" என ஜீவாவை அள்ளிக் கொண்ட சூர்யாவிற்கு கேள்விகள் எல்லாம் அப்போது மறந்து தான் போயிருந்தது.
"தியா எங்கே இருக்கீங்க?" என சுதாகர் போன் செய்ய,
"கிளம்பிட்டோம்! இன்னும் ஹால்ப் அன் ஹவர்ல வந்துடுவோம்" என்றவள் தன்னுடைய அந்த சின்ன திட்டத்தை அவனிடம் கூற,
"ஹ்ம்ம்! ஆரம்பிச்சுட்டியா? எல்லாத்தையும் ஒரே நாள்ல முடிச்சு என்னை காலி பண்ண பாக்கற நீ! சரி நடக்குறது நடக்கட்டும்... நான் வெயிட் பண்றேன் வாங்க" என்றவன் வைத்து விட்டான்.
"சூரி! எனக்கொரு காபி ப்ளீஸ்" என நெற்றியை பிடித்தபடியே வந்தான் யுவா.
நேற்றைய நினைவு மீட்பு போராட்டம் அவனுக்கு தலைவலியை கொடுத்திருந்தது.
"யுவா... யுவா..." சந்தியா அழைப்பதை பார்த்திருந்த ஜீவாவும் யுவாவை அப்படியே அழைக்க, அழைத்தபின் தான் அவனை பார்த்தான் யுவா.
அவன் தாவுவதையும் இவன் கைகள் தன்னால் அவனை வாங்குவதையும் தடுக்க முடியவில்லை.
"வச்சிரு ண்ணா! நான் உனக்கும் ஜீவாக்கும் சேர்த்தே எடுத்துட்டு வர்றேன்" என உள்ளே சென்றாள் சூர்யா.
சுதாகர்-கல்பனாவின் குழந்தையாய் நினைத்திருக்கும் ஜீவா யுவாவின் தலைவலியை கூட்ட தானே செய்ய வேண்டும்? அவன் கைகளால் வருடவும் இவன் தலைவலி பறந்து போன மாயம் தான் அவனுக்கு இப்போது புதிரானது.
யுவா உள்ளே வந்ததில் இருந்து மறைந்திருந்து அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள் சந்தியா. மறந்தும் அவன்முன் சென்று நின்று நேற்று நடந்ததை நியாபகப்படுத்த விரும்பவில்லை.
'சந்தியா! யுவா ஆழ்மனநிலைக்கு போய்ட்டான்.. இதான் சரியான சந்தர்ப்பம்.. அப்படியே சூர்யாவை கூட்டிட்டு ஓடிடு' மனது சொல்லவும் நேரத்தை விரயம் செய்யாமல் சூர்யாவிடம் ஓடினாள் சந்தியா.
"ஏய் அண்ணனுக்கு தப்பாம தங்கையா பொறந்தவளே! நான் இப்ப சொல்றத ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காமல் பண்ணனும் சரியா?"
"என்ன அண்ணி!"
"கேள்வி கேட்க கூடாதுன்னு சொல்லி ஒரு நிமிஷம் ஆகல! படுத்தாத டி.. இந்த காபிய உன் அண்ணாகிட்ட கொடுத்துட்டு அவன்கிட்ட சொல்லாம.. எப்படி! எதுவும் சொல்லாம முக்கியமா என்னை போட்டுக் குடுக்காம வாசலுக்கு வர்ற... அரை மணி நேரத்துல லாயர் சாரை பார்த்துட்டு வந்துடுறோம் சரியா? மறுபடியும் சொல்றேன்.. அந்த உம்முனா மூஞ்சிகிட்ட என் பேரை எங்கேயும் சொல்லக் கூடாது" என்றவள் சூர்யா கூப்பிட கூப்பிட கேட்காமல் வாசல் நோக்கி ஓடினாள்.
"அப்ப அந்த ஜீவா?" சத்தமாய் சூர்யா கேட்க,
"எனக்கு சங்கு ஊதணும்னு முடிவே பண்ணிட்டியா? ஏண்டி கத்துற... அவனை வச்சு தான் அடுத்த சீன்னே.. அவன் யுவா கூட இருக்கட்டும்.. நான் கீழ கார் பார்க்ல நிக்குறேன் வந்து சேரு" என்றவள் இம்முறை நிற்காமல் ஓடி விட்டாள்.
"இன்னைக்கு யுவா அண்ணாகிட்ட திட்டு வாங்க போறேன்" என நினைத்த சூர்யா காபியை யுவாவிடம் கொடுக்க,
யுவாவோ இன்னும் ஜீவாவின் முகத்தில் தான் ஆழ்ந்திருந்தான். ஜீவா சிரித்த முகமாய் யுவா முகத்தில் கைகளால் வலம் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
இதுவும் சந்தியா சொன்னதற்கு சாதகமாய் தோன்ற அப்படியே அண்ணன் அறியாமல் வாசலை கடந்து வந்து விட்டாள் சூர்யா.
"உன்கூட சேர்ந்து பொய் சொல்லவும் ஊரை சுத்தவும் கத்துக்கிட்டேன். இதுக்கு தான் அண்ணா உன்கூட சேராதனு சொல்லிச்சு போல.. இப்ப அண்ணா வந்ததும் என்னவெல்லாம் சொல்லி திட்ட போகுதோ!" புலம்பலுடன் சூர்யா வர,
"ஆமா இவ பெரிய ரமணிச்சந்திரன் பேமிலி பொய்யே சொல்ல மாட்டா" என்றாள் சந்தியா.
"ரமணிச்சந்திரன் பேமிலியா?"
"ஆமா அவரு தானே பொய் சொல்லமாட்டாரு!"
"அய்யோ லூசு அண்ணி! அது ரமணிச்சந்திரன் இல்ல அரிச்சந்திரன்"
"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்க.. எது தெரியணுமோ அது தெரியாது" என்றபடி சந்தியா அந்த காலனியை தாண்டி சூர்யாவுடன் நடக்க, அதை பார்த்த கல்பனா அழைக்கும் முன் இருவரும் காணாமல் போயினர்.
"இவங்க எங்கே போறாங்க? அப்ப ஜீவா?" கல்பனா கேள்வியுடன் வாசலில் நின்ற காரையும் மாடியையும் பார்த்தாள்.
சுதாகர் இவர்களுக்கு முன் வந்தவன் அன்று தனி ஒருத்தியாய் யுவாவின் வீட்டில் இருந்து விழுப்புரத்தில் இருக்கும் தன் கிராமத்திற்கு வந்த கல்பனாவையும் அந்த நிமிடங்களையும் நினைத்துக் கொண்டிருந்தான்.
உலகமே அழிந்து தனக்கென வாழ்வு முடிந்தது போல வந்து நின்றவளை என்ன நடந்தது என்றெல்லாம் யாரும் கேட்கவே இல்லை.
வாசலில் அவள் ஏறும் முன்பே அவளுக்காக காத்திருந்தது போல அவளை கண்டதும் ஓடி வந்தார் வசந்தா.
"சித்தி..." என அழ இருந்தவளை "இங்கே எதுக்காக டி வந்த? போன இடத்துல ஒழுங்கா வாழ தெரியாம இன்னொருத்தனை தேடி போயிருக்கியே!" என்று சொல்லி முடிக்கும் முன் காதுகளை மூடிக் கொண்டாள் கல்பனா.
கல்பனா வீட்டைவிட்டு கிளம்பியதுமே ஜானகி வசந்தாவிற்கு அழைத்து சொல்லியிருந்ததை அப்படியே தன் தேள் நாக்கினால் கொட்டினார்.
"தயவுசெஞ்சு அப்படியெல்லாம் பேசாதீங்க சித்தி... நான் எந்த தப்பும் பண்ணல"
"ஆமா டி ஒன்னுமே செய்யாம தான் வீட்டைவிட்டு உன்னை விரட்டினாங்க.. அதை நம்பி நானும் உன்னை வீட்டுக்குள்ள விடணும்" மீண்டும் அவர் பேச்சில் இவளுக்கு புரிந்தது என்னவோ இந்த வீட்டிலும் தனக்கு இடம் இல்லை என்பதே!
வசந்தாவிற்கு பின்னால் தான் நின்றிருந்தான் ஜீவிதன். இம்முறை கல்பனாவை பார்த்ததும் முறைக்கவோ வெறுக்கவோ இல்லை. சுதாகரின் பேச்சு செய்த மாயம்.
கல்பனா திருமணம் முடிந்து வந்த ஜீவியை சுதாகர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஜீவியின் வாழ்நாளில் மறக்கமுடியாதே! அதனாலேயே இப்போது அமைதியாய் யோசித்து நின்றான்.
"உன் அப்பன் இன்னும் வீட்டுக்கு வரல.. வர்றதுக்கு முன்னாடி இடத்தை காலி பண்ணு.. இதையே சாக்கா வச்சுட்டு இங்கேயே தங்கிடலாம்னு தானே வந்த? நான் இருக்குற வரை அது நடக்காது" சொல்லியவர் நிற்காமல் உள்சென்று கதவடைத்துக் கொண்டார்.
ஜானகி வீட்டைவிட்டு அனுப்பியதும் யுவாவிடம் செல்லத் துடித்த மனதை பெரும்பாடு பட்டு அடக்கி இங்கே வந்தவளுக்கு யுவாவை இப்போது முழுதாய் தேடினாலும் செல்ல முடியாத நிலைமையை நினைக்கும் பொழுது மொத்தமும் வெறுத்து போனது.
அடுத்து என்ன? அவளுக்கென எப்பொழுதும் தோள் கொடுத்து தோழனாய் இருந்த சுதாகரை தேடி செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. மூன்று மாத கர்ப்பிணி என்பது இப்போது வரை அவளை தவிர யாருக்கும் தெரியாதே!
சுதாகர் வீட்டிற்கு கல்பனா செல்லும்முன் ஜீவி அவனுக்கு போன் செய்து நடந்ததை சொல்லியிருந்தான். கல்பனாவின் நல்ல நேரமாய் சுதாகரும் வீட்டில் தான் இருந்திருந்தான்.
எந்த கேள்வியும் அவளிடம் கேட்கவில்லை சுதாகர். பானுமதியையும் கேட்கவிடவில்லை. ஆனால் அவள் வந்த நாள் முதல் யுவாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். ஜீவியிடம் இருந்த கார்டை அவனே கிழித்து போட்டதாய் குற்ற உணர்ச்சியுடன் சொல்லவும் 'நீயெல்லாம் மனுஷனா?' எனும் பார்வை பார்த்துவிட்டு வந்துவிட்டான் சுதாகர்.
சுதாகர் வீட்டிற்கு வந்த ஐந்தாம் நாள் கல்பனா மயங்கி விழும்வரையுமே அவளினுள் ஓர் உயிர் வாழ்வதை யாரிடமும் அவள் சொல்லியிருக்கவில்லை.
சுதாகருக்கு கல்பனாவிடம் கேட்கவும் முடியவில்லை. அது வீட்டில் அவளை நடத்தும் விதம் ஒரு காரணம் என்றால் அவள் கடந்து வந்த பாதை எப்படியானதோ எனும் கவலை ஒரு காரணம். அதனாலேயே அவளறியாமல் யுவாவினை பற்றியும் எதுவும் தெரியாமல் எங்கே யாரை கேட்பது என புரியாமல் குழம்பி இருந்தான்.
அந்த சமயம் தான் அவள் மயங்கி விழுந்து அவளின் முழு நிலையையும் முழுதாய் தெரிந்தும் கொண்டான்.
இதை சந்தோஷமாய் எடுத்துக் கொள்ளவா கவலை கொள்ளவா என யோசிக்கும் முன்பே வசந்தாவிற்கு கல்பனா பானுமதி வீட்டில் இருக்கும் விஷயம் தெரிந்து அங்கே வந்து பானுமதியிடம் நடக்காததை நடந்ததாய் சொல்ல,
அவ்வளவு தான் பானுமதி பேசிய பேச்சில் அன்று தான் சுதாகர் நினைத்தும் பார்க்காத நாளாக கல்பனாவுடன் வீட்டைவிட்டு வெளியே வந்து சுந்தரத்தின் இந்த காலனிக்கு வந்து சேர்ந்து இதோ இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. கடவுளின் அனுகிரஹத்தால் யுவாவை கண்டும் பிடித்துவிட்டான்.
சூர்யா தன் வழிக்கு வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் எனும் நம்பிக்கையோடு இப்போது காத்திருக்கிறான்.
ஆசை தொடரும்..

Last edited: