கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 24

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 24

"சாரி லாயர் சார் லேட் பண்ணிட்டோமா?" - சந்தியா.

"நோ ப்ரோப் தியா! ஹாய் சூர்யா! காபியா ஜூஸ்ஸா?" சுதாகர் கேட்க,

"எனக்கு எதுவும் வேணாம்! இவளுக்கு குடுங்க கொட்டிப்பா" எரிச்சலோடு கூறினாள் சூர்யா.

"வரும்போது சண்டை போட்டுட்டே வந்திங்களா என்ன? என்னாச்சு சூர்யா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல வக்கீலு! இவ அண்ணனை ஒரு வார்த்தை சொன்னா போதும் மேடம் மூஞ்சி எட்டூருக்கு முன்ன போய்டும்" சந்தியா சொல்ல,

"அண்ணி வேணாம் நான் செம்ம கடுப்புல இருக்கேன்"

"உனக்கும் உன் அண்ணனுக்கும் வேற என்ன தெரியும்" என்ற சந்தியா "சரி லாயர் சார்! நீங்க சொல்ல வேண்டியதை இவகிட்ட சொல்லுங்க.. அநேகமா நாம இங்கேர்ந்து மெண்டல் ஹாஸ்பிடல் தான் போக வேண்டியதிருக்கும்" என்று சொல்ல,

"ஷ்! ஏன் அவளை வெறுப்பேத்துற? விடு நான் பேசிக்குறேன். நீ போய் காபியே வாங்கிட்டு வா"

"அதானே எடுபுடி வேலைனா உங்களுக்கெல்லாம் இந்த சந்தியா தானே ஞாபகம் வருவா. என்னவோ போங்கடா" என்றவள் எழுந்து சென்றுவிட,

"சுதாகர் சார்! எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. என்னால ஒர்க்ல கான்ஸ்ஸன்ட்ரேட் பண்ணவே முடியாமல் தான் லீவ் போட்டேன்.. ஏன்டா சென்னை வந்தோம்னு இருக்கு" மொத்த பாரத்தையும் சுதாகர் மேல் இறக்கிட நினைத்தாள் சூர்யா.

"ஏன் இவ்வளவு டென்ஷன் உனக்கு? இந்த வயசுல டென்ஷனே ஆக கூடாது.. இதுனால எவ்வளவு ப்ரோப்லேம்ஸ் வருது தெரியுமா லேடிஸ்க்கு"

"யோவ்! இப்ப லேடிஸ்க்கு என்ன பிரச்சனைனு உன்னை ஷோவா நடத்த சொன்னாங்க.. ஒழுங்கா வந்த வேலைய பாரு... பத்து நிமிஷத்துல இவ அண்ணன்காரன் போன் பண்ணிடுவான். அதுக்கு முன்னாடி நாங்க கிளம்பனும்" கோல்டு காபி வாங்கி வந்த சந்தியா இவ்வாறு சொல்ல,

"உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் தியா! ப்ரோப்லேம்னா அதுக்கு சொல்யூஷன் யோசிக்கலாம்.. சக்கஷன் கேட்கலாம்.. அதையே நினச்சு டென்ஷன் ஆகி யாருக்கும் எந்த யூஸ்ஸும் இல்லை.. ஓகே! இப்ப ப்ரோப்லேம்க்கு வரலாம்.. சூர்யா உனக்கு என்ன தெரியணும்? ஜீவி யாருன்னு தானே?" என்று நேராய் அவன் கேள்விக்கு வர, ஆம் என்று யோசிக்காமலே தலையாட்டினாள்.

"அவன் என்னோட மாமா பையன் தான்.. அண்ட் அவளோட அக்கா கல்பனா நாம தங்கியிருக்கிற அதே வீட்ல என்கூட தான் தங்கியிருக்காங்க.. அண்ட்.... இம்போர்ட்டண்ட்லி ஜீவா ஆல்சோ கல்பனா பையன் தான்"

எதிர்பார்த்தாள் தானே சூர்யா? அவளுக்கு இருந்த சந்தேகம் இது தானே? கல்பனா அங்கே தான் இருக்கிறாள் என்பதை தவிர இவள் நினைத்து குழம்பிய அனைத்தும் சரி! விடை கிடைத்த பின்பும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அத்தனை கோபம் அவளுக்கு. யார் மேல்? முதலில் கல்பனாமேல் அண்ணனை ஏமாற்றியதற்காய்... அடுத்து அண்ணி என்று அழைத்து வரும் சந்தியா மேல்... அவளால் இப்போது சுதாகர் மேல்... ஏன் அனைத்தையும் தெரிந்தும் தன்னிடம் மறைக்கும் தன் அண்ணன் யுவா மேல்... இவ்வளவு நடந்தும் தன் அன்னையிடம் சொல்லாமல் மறைக்கும் தன் மேல் கூட.

"இப்ப பாரு வக்கீலு! எங்க சூர்யாக்கு கண்ணு சிவக்கும் உதடு துடிக்கும் கை அடிக்க பரபரக்கும்" சூர்யாவை பார்த்துக் கொண்டே சந்தியா சொல்ல,

"ப்ச் தியா! அவளை யோசிக்க விடு.."

"உனக்கு தெரில வக்கீலு அவளை பத்தி.. எவ்வளவு கேவலமா அவ யோசிப்பானு எனக்கு தான் தெரியும்" சந்தியா மீண்டும் சூர்யாவை தான் கடுப்பாக்கிக் கொண்டிருந்தாள்.

"அமைதியா இரு" மெல்லிய குரலில் சுதாகர் சந்தியாவிடம் சொல்ல,.

"சூர்யா! நான் முதல்லயே சொன்னது தான்.. உனக்கு கோபம்னா பேசு... எங்களை திட்ட கூட செய்... யோசிச்சுட்டே இருக்காத" - சுதாகர்.

"என்ன பேசணும்? அதான் எல்லாரும் பிளான் பண்ணி என் அண்ணாவை உயிரோட கொன்னுட்டு இருக்கீங்களே! இவ்வளவு நாள் நிம்மதியா இல்லாட்டியும் அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு லண்டன்ல நிம்மதியா இருந்தான்.. அவனை தேடி நீங்க கொடுமை படுத்திட்டு
இருக்கீங்க.. உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல.. இப்பவே கிளம்புறேன்.. என் அம்மா எப்பவுமே சரியா தான் சொல்லியிருக்காங்க.. நான் தான் புரிஞ்சுக்கல.. போய் என் அம்மாவோட வர்றேன்"

"போடி! போ.. போய் அந்த லூசையும் கூட்டிட்டு வா.. குடும்பமா சேர்ந்து அழுங்க.. கிளம்பு டி" சூர்யாவின் பேச்சில் சந்தியாவிற்கும் கோபம் வந்துவிட,

"ஏய் நான் தான் பேசிட்டு இருக்கேன்ல? கொஞ்சம் பேசாம இரு சந்தியா" என்றான் சுதாகர்.

"உங்களுக்கு புரியல சுதாகர்! இவ குடும்பமே இப்படி தான்.. ஒன்னுக்கும் புத்தியே கிடையாது.. கல்பனா அக்காக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.. இல்ல நீங்களே அவங்களை கல்யாணம் பண்ணி பார்த்துக்கோங்க.. அது தான் பெஸ்ட்.. உங்களை தவிர யாராலயும் அவங்கள புரிஞ்சிக்க முடியாது.. இவ குடும்பத்துக்கு போனா மறுபடியும் இதே நிலமை தான் அவங்களுக்கு.. ஏய் என்ன படமா காட்றாங்க? இன்னும் ஏன் உக்காந்துட்டு இருக்க? போ! போய் உன் அண்ணனை கூட்டிட்டு கிளம்பு.. இவளாம் ஒரு ஆளுன்னு நினச்சு கூட்டிட்டு வந்தேன் பாரு என் புத்திய..."

பேசவே விடாமல் ஆகாத இரு பெண்களும் சேர்ந்தால் என்ன நடக்குமோ அது சரியாய் அங்கே நடக்க தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் சுதாகர்.

கல்பனாவிற்கு வேறு திருமணம் ஆகவில்லை என்பது சந்தியாவின் பேச்சில் புரிந்திருக்க வேண்டும் தானே சூர்யாவிற்கு? கோபத்தை குத்தகைக்கு எடுத்தவளுக்கு அதை கவனிக்க நேரம் இல்லை.

"நீ சொல்லி எல்லாம் நான் போகல.. போறேன்! போய் உன்னை பத்தியும் சொல்றேன் அம்மாகிட்ட.. இதுக்கு மேல நீ என் வீட்டு பக்கம் வந்துடாத!" சந்தியா ஆரம்பித்து வைத்ததை சூர்யா அழகாய் முற்றும் கோணலாய் முடித்து வைக்க, எழுந்து விட்டான் சுதாகர்.

"நில்லு சூர்யா! அப்படியே உன் அம்மாகிட்ட ஜீவானு உங்களுக்கு ஒரு பேரன் இருக்கான்.. ஜீவாக்குள்ள யுவா ரத்தம் மட்டும் தான் ஓடுது.. இப்ப உங்களால பதில் சொல்ல முடியாத கேள்விக்கு ஜீவா வந்து ஒரு நாள் கேட்கும் போது பதிலை தயாரா வச்சுக்கோங்கனு சொல்லு" என்றவன் "தியா வா போகலாம்" என்று சொல்ல,

"நீங்க என்ன உண்மை சொல்லியிருக்கீங்க? இதை மட்டும் நான் எப்படி உண்மைனு நம்புவேன்?" ஒரு நொடி அதிர்ந்தாலும் ஜானகி மகள் இவர்கள் சொல்வதை நம்ப யோசித்தாள்.

"உன்னை நம்ப சொல்லி இங்கே யாரும் தர்ணா பண்ணல.. ஆனா இது தான் நிஜம்.. உனக்கு நிரூபிக்கணும்னு தேவை இல்லை.. ஆனா உன் மூலமா உன் அண்ணாகிட்ட பேசலாம்னு இவருக்கு நான் தான் ஐடியா கொடுத்தேன்.. அதுக்கு என்னை நானே துப்பிக்கணும்.. உன் அண்ணாகிட்ட போய் சொல்லு.. உன்னை ஏமாத்திட்டு போய் கல்பனா உன் குழந்தையை பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து இப்பவரை ரெண்டு வருஷமா அவனை நல்லா வளக்குறாங்கனு சொல்லு.." என்று சொல்லிவிட்டு கிளம்ப தயாரான சந்தியா மீண்டும் சூர்யாவிடம் வந்து

"ஒரே ஒரு பிரீ அட்வைஸ்... உலகத்துல யாரை நம்பினாலும் உன் அம்மா அந்த ஜானகியை மட்டும் நம்பாத! அப்புறம் நான் சொன்னதை நினச்சு பீல் பண்ணுவ" என்றவள் சுதாகரையும் கைப்பிடித்து அழைத்து சென்றுவிட்டாள்.

சூர்யா குழம்பவே இல்லை.. சந்தியாவோடு சுதாகரையும் நம்பவில்லை அவள்.

"சூரி! சூரி!" பலமுறை அழைத்தும் அவள் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் வீடு முழுக்க ஜீவாவோடு அவளை தேடினான் யுவா..

'எங்கே போயிருப்பா' என்ற நினைவோடு அவளுக்கு அழைக்க எடுக்கவே இல்லை அவள்.

இன்னுமே முகம் வாடாமல் அன்னையை தேடாமல் சிரித்த முகமாய் யுவாவிடம் தான் இருந்தான் ஜீவா.

"சுதா! இந்த சந்தியா நம்ம ஜீவாவை மேலே எடுத்துட்டு போனா.. அப்புறம் அவளும் சூர்யாவும் எங்கேயோ வெளில போனாங்க.. ஆனா ஜீவா அவங்க கூட போகல... இன்னும் ஜீவா வீட்டுக்கும் வர்ல.. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்!" கல்பனா சுதாகருக்கு அழைத்து சொல்ல,

"ஒரு நிமிஷம் கல்பனா!" என்றவன் "ப்ச்! இப்ப நீ அங்கேயும் பிரச்சனை பண்ணி வச்சுட்டு வந்திருக்க.. கல்பனா தான் பேசுறா.. என்ன சொல்றது?" சந்தியாவிடம் கேட்டான் சுதாகர்.

"சிம்பிள் லாயர்! மேல போய் பாரு! ஜீவா தனியா இருந்தா பயந்துட போறான்னு சொல்லுங்க" ஈஸியாய் கூறினாள் சந்தியா.

"ஹையோ!" என்றவன் "ஹெலோ கல்பனா! நீ கொஞ்சம் மேல போய் பாரு! நீ பார்க்காத நேரம் சந்தியா வந்திருக்கலாம்ல? நான் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்" என்றான்.

....

"ஓஹ் வரலையா? ஹேய் அவ ஒரு லூசு.. ஜீவாவை தனியா விட்டுட்டு போயிருக்க போறா.. முதல்ல மேல போய் பாரு!" என்றவன் சிக்னல் சரி இல்லாதது போல பேசி வைத்து விட்டான்.

"நான் லூசா?" முறைப்புடன் கேட்டாள் சந்தியா.

"பின்ன! எவ்ளோ சாஃப்டா சொல்ல வேண்டிய விஷயத்தை குழாயடி சண்டை போடுற மாதிரி பேசுற அவளோட.. இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை வர போகுதோ... ஒரு முடிவுக்கு வந்தா சரி" சுதாகரும் என்ன நடக்கும் என புரியாமல் தான் பேசினான்.

"அவ மட்டும் வயசுக்கு தகுந்த பேச்சா பேசினா? நான் பேசினது தான் எல்லாருக்கும் தெரியும்.. ஆனா நான் உண்மையை தான் சொன்னேன் லாயர்.. நிஜமா அந்த குடும்பத்துல ஒரு பொண்ணு வாழறதுலாம் கஷ்டம்.. நீங்களே கல்பனா அக்காவை பாத்துக்குறது தான் சரினு எனக்கு தோணுது" சூர்யாவிடம் சொன்னதையே இப்போது சுதாகரிடமும் கூறினாள் சந்தியா.

"ஹ்ம்ம்! யுவான்ற ஒருத்தனை நான் பார்க்காமலே போயிருந்தா நீ சொல்ற மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கு தியா.. ஆனா இப்ப..."

"ஏன் இப்ப மட்டும் என்னவாம்?"

"இப்ப நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.. என்னால எதையுமே இப்ப யோசிக்க முடியல.. எல்லாம் கையை மீறி நடக்குது..."

"எது வக்கீலு டாவடிக்குதா?" ஆச்சர்யமாய் அவள் கேட்க, அவன் அவளை முறைத்தான்.

"என்ன வக்கீலு இவ்வளவு நாளும் ஒன்னா சேர்ந்து எவ்ளோ பிளான் பண்ணி சொதப்பி ஒன்னா சுத்தி இருக்கோம்.. என்கிட்டயே மறச்சுட்டியே?" அநியாயம் என்பது போல அவள் சொல்ல,

"நான் மறைக்கல.. பொண்ணு பார்த்துட்டு வந்த அப்பவே நான் சொன்னேன்.. உனக்கு தான் புரியல..."

"அது சரி! கொஞ்ச நேரம் முன்னாடி பேசினதையே நான் மறந்துடுவேன்.. என்கிட்ட போய் மாசகணக்குல பின்னாடி போறியே?"

"தியா! இப்ப சொல்றேன்.. நல்லா காதை கொடுத்து கேளு" எனும்போது அவர்களின் காலனி அருகே வந்திருந்தனர் இருவரும்.

"சொல்லு வக்கீலு! யாரு அந்த அன்லக்கி கேர்ள்!" கேட்டு அவள் சிரிக்க,

"வேற யாரு! நீயே தான்" என்று சிரித்தவன் பதிலில் இவள் சிரிப்பு நின்று போனது.

ஆசை தொடரும்..
 
Top